நியாயம் வேண்டாமா?
9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல்.
சாத்தனுர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை.திரிபலா
திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறிது.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம்.
இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அநிகரிக்கிறநு.
மோரில் திரிபலா கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி கலாத்திலிருந்தே இருந்துவருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வரலாம்.
1 தேக்கரண்டி திரிபலாவை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து இரவில் குடித்து வர, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
இடைவெளினாலும் ஒரு நியாயம் வேண்டாமா?அவ்வளவு பெரிசா?
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் விதமாக உக்கடம் பகுதியில் வழியாகச் செல்லும் கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலம், பாலக்காடு சாலைகளை இணைக்கும் விதமாக உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வரை ரூ. 470 கோடி மதிப்பில் 3.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்கடம் மேம்பாலத்தில் கரும்புக்கடை அருகே இன்று லேசான விரிசல் ஏற்பட்டு சாலையில் மண் துகள்கள் விழுந்துள்ளது. சுமார் இரண்டடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாலம் பயன்பாட்டுக்கு வந்து 4 மாதங்களே ஆகிய நிலையில், மேம்பாலத்தில் விரிசல் காணப்பட்டது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பரபரப்பாகப் பேச்சு பரவியதை யடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் வந்து பார்வையிட்டு அது விரிசல் அல்ல.பாலத்தின் அடுக்குகளுக்கான இடைவெளிதான் ,அவ்வாறு இடைவெளியிடுவது கட்டுமான வழமைதான் என்று விளக்கினர்.
இடைவெளினாலிம் ஒரு நியாயம் வேண்டாமா?அவ்வளவு பெரிசா?
குணா திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் கொண்டாடினாலும் படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.காலம்போனாலும் குணாவை மேலும் கொண்டாட செய்தது மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள படம்தான். இநதப் படத்தில் இடம்பெற்ற குணா குகையையும் க்ளைமாக்சில் சரியாக பயன்படுத்தப்பட்ட கண்மணி அன்போடு பாடலும் சரி, குணா படத்தை சரியாக கொண்டாட தவறிவிட்டோமோ என்ற நினைப்பை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கத்தான் செய்தது.
இந்நிலையில் குணா படம் கடந்த ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ரீ-ரிலீசுக்கு தடைவிதிக்கக்கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் உரிமை வழக்கு தொடர்ந்ததால் அது நிகழாமல் போனது.
இந்த வழக்கு முடிந்து நேற்றைய தினம் படம் ரீ - ரிலீசாகியுள்ளது.
இந்நிலையில் கமலா திரையரங்கில் இந்தப் படத்தை ரோபோ ஷங்கர் , அவரது குடும்பத்தினர், நடிகை ரேகா உள்ளிட்டவர்கள் ரசிகர்களோடு சேர்ந்து பார்த்து ரசித்துள்ளனர்.
ஏராளமானவர்கள் குணாவைக் காண ஆவலுடன் காத்திருந்த போது வரும்,வரும் என தாமதமான பெஞ்சல் புயல் வந்ததால்
திரையரங்குள் காட்சிகளை நிறுத்திவிட்டதால ஏமாற்றமடைந்தனர்.
சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது கலைப்படைப்படைப்புதான் இது. அமெரிக்காவின் நியூயார்க் ஏல மையத்தில் சுவற்றில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் அந்த கலைபடைம்பு. அதுதான் ஏலத்திற்கு வந்துள்ளது.
அந்த கலைபடைப்பிற்கு கட்லென் வைத்தப் பெயர் காமெடியன்.
இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டாலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும்.
அதைவிட பெரிய காமெடி
அந்தக் கண்காட்சிக்கு வந்த பிரபல கலைஞர் டேவிட் டதுனா, கரைபடைப்பான காமெடியனை எடுத்து சாப்பிட்டு விட்டார். அதிர்ந்துபோன கட்லென் அசரவில்லை மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் வாங்கிவந்து
ஒட்டிவைக்கப்பட்டது. அதையும் யாழாவதுவந்து அந்த கலைபடைப்பை தின்று விடக் கூடாது என்று அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே சுவற்றில் வாழைப்பழத்தை டேப் போட்டு ஒட்டுவது [ காமெடியன்] தனது அறிவுசார் உடைமை என்ற உரிமத்தை கட்டெலன் வாங்கி வைத்தார். இதனால் யாரும் வாழைப்பழத்தை டேப் போட்டு ஒட்டாதீர்கள்.அது உரிமை மீறலாகிவிடும். நீங்கள் பலாப்பழத்தில் முயற்சி செய்யுங்களேன்.
தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தந்தை தனது வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், இறுதியாக தனது தாயிடம் இதை கூறியதை அடுத்து குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்றம்போக்சோ, ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றவாளிக்கு மொத்தம் 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். முதலில்
40 ஆண்டுகளும் தொடர்ந்து உயிருடன் இருந்தால் 101ஆண்டுகளும் சிறைதான்.
தன்னை இந்தியக் கப்பல் படையின் மும்பை பிரிவில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் உளவாளி தொடர்ந்து கோட்டியாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கோட்டியா அவரிடமிருந்து கடந்த 8 மாதங்களாக ரூ. 26,000 பணத்தை யுபிஐ செயலி மூலம் பெற்று இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் குறித்தும், கப்பல் தளம் குறித்தும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
அவர் தொடர்பில் இருந்த நபருடைய எண்ணை அதிகாரிகள் சோதனை செய்தபோது அது பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோட்டியாவை பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் இந்திய அரசிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடம் தகவல்களைக் கேட்டறிந்த ரியா என்ற பெயர் கொண்ட பாகிஸ்தான் உளவாளி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.