யாருக்காக?,இது யாருக்காக??

 இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவு.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத் திட்டப் பணிகளைத் தொடங்காதது ஏன்?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி.

அசாம் மாநிலம் அடுத்து ஒடிசா மாநிலத்திலும் பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு தடை. வதித்தது.

தமிழகத்தில் மழை தொடரும்.இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது .
டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பலர் படுகாயம்; போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் - 

யாருக்காக?,இது யாருக்காக??

பிரச்சினைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம் கூடுகிறது. பிரச்சினைகளை விவாதிக்க மறுக்கும் இடமாக நாடாளுமன்றம் இருக்குமானால் நாடாளுமன்றம் எதற்கு?

கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் கலவரம் ஆகியவற்றை விவாதிக்க முதல் நாளில் இருந்து கோரிக்கை வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.

அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் முடங்கின. அவை நடவடிக்கைகள் முடங்கினாலும் பரவாயில்லை என்று பிரச்சினைகளை விவாதிக்க மறுக்கிறார் அவைத்தலைவர்.

மணிப்பூர் கலவரம் குறித்து கூட அவையில் விவாதிக்க மறுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? 2023 மே மாதத்தில் இருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 என அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படுகிறது. 

ஆனால் 500 பேருக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளாக எரிகிறது மணிப்பூர். அங்கே ஒரே ஒருமுறை உள்துறை அமைச்சர் அமித்ஷா போய்விட்டு வந்தார். ஒரு முறை கூட பிரதமர் போகவில்லை. மணிப்பூரை ஆளும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களே, அந்த மாநில அரசை விமர்சிக்கிறார்கள். 

கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி விட்டன. இப்படி ஒரு கேவலமான ஆட்சியை மணிப்பூருக்குக் கொடுத்து வருகிறது பா.ஜ.க.. ஆனால் அதனைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி விவாதிக்கும் வாய்ப்பை கூட பா.ஜ.க. தரமறுக்கிறது.

அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. தரப்பு. அதானி மீது அமெரிக்க நீதித்துறை கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. 

அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு, ஊழல் தடுப்பு சட்டங்களை மீறி ரூ.6,300 கோடி அளவுக்கு மோசடிகள் செய்யப்பட்டதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 2,029 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 

முதலீடுகளைத் திரட்டுவதற்காக லஞ்சம் தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதானிக்கு. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது. அதானி விவகாரம் என்பது தனிப்பட்ட ஒரு தொழிலதிபரின், தொழில் நிறுவனத்தின் விவகாரம் அல்ல. அதானியின் வளர்ச்சி என்பது மோடியின் அரசியல் வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.

 எனவே, அதானி விவகாரத்தை இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பதில் நியாயம் இருக்கிறது.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோருகின்றன எதிர்க்கட்சிகள். அந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க மறுக்கிறது ஆளும் தரப்பு. 

நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தின் வாயில் படிக்கட்டுகளில் நின்று போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்துக்கு உள்ளே பேச அனுமதி மறுக்கப்படும் போது, வெளியே போராடும் அவசியம் ஏற்படத்தான் செய்யும்.

“அதானி தொடர்புடையவர்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் விசாரணையில் இந்தியாவுக்கு பங்கில்லை” என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் சொல்லி இருக்கிறார்.

 இவ்வளவு பெரிய விவகாரம் குறித்து, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ பதில் அளித்திருக்க வேண்டாமா? அதுவும் நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருக்க வேண்டாமா?

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்ட ராகுல்காந்தி, “அதானியால் பலனடைந்தது யார்? பிரதமர் மோடியா என்ற உண்மையான கேள்வி நாடாளுமன்ற மகர வாயிலில் எழுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் அமைதி பல விஷயங்களை உரக்கப் பேசுகிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

பேச மறுப்பதன், பதில் சொல்ல மறுப்பதுதான் மர்மங்களை அதிகப்படுத்துகிறது.

இந்திய – சீன உறவுகள் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றினார். இந்த உரை மீது விளக்கம் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்க முயன்றார்கள். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மாநிலங்கள் அவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒத்திவைப்பு நோட்டீஸை அவைத்தலைவர் தன்கர் நிராகரித்தார். ‘வெற்று முழக்கங்கள் எழுப்புவதாலும், முதலைக் கண்ணீர் வடிப்பதாலும் விவசாயிகளுக்குச் சேவையாற்ற முடியாது’ என்று ஊருக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். 

‘நீங்கள் அரசியலாக்குகிறீர்கள்’ என்று எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டி இருக்கிறார். பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லி விட்டால், எதற்காக இதை திரும்பத் திரும்ப கேட்கப் போகிறார்கள்?

மாநிலங்களவையில் கடந்த 3 ஆம் தேதியன்று அவை கூடியதும் விதி எண் 267 இன் கீழ் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி 42 நோட்டீஸ்கள் அவைத்தலைவர் தன்கர் முன் கொடுக்கப்பட்டன. 42 நோட்டீஸ் களையும் தன்கர், நிராகரித்தார். 

‘அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆயுதமாக இந்த நோட்டீஸ்களை பயன்படுத்தக் கூடாது’ என்று தன்கர் சொல்லி இருக்கிறார். அவையை மட்டுமல்ல; நாட்டையும் அமைதியாக நடத்தவே இதுபோன்ற நோட்டீஸ்கள் தரப்படுகின்றன என்பதை மாண்புமிகு துணை குடியரசுத் தலைவர் தன்கர் உணர வேண்டும்.

‘கடந்த 25 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான நோட்டீஸ்கள் தரப்பட்டது இதுவே முதல் முறை’ என்று தன்கர் சொல்லி இருக்கிறார். 

இதில் இருந்து என்ன தெரிகிறது? கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இப்போதுதான் ‘கலவர’ காலமாக இருக்கிறது என்பதைச் சொல்வதற்கு வேறு எடுத்துக்காட்டு ஏதும் வேண்டுமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?