நீ(சனா)திபதி

 கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் வினேஷ் போகத் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அறிவிப்பு.

எல்லாவற்றையும் 

விற்றுத் தீர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோவே வளாகத்தில் 2,929 சதுர மீட்டர் நிலம், சூலூரில் திருச்சி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திறகு சொந்தமான தொலைபேசி நிலையம் மற்றும் பணியாளர் குடியிருப்பு என 1,990 சதுர மீட்டர் நிலம் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழனிசாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான தொலைபேசி நிலைய நிலம் மற்றும் பணியாளர் குடியிருப்பிற்கு இடையில் உள்ள 4,267 சதுர மீட்டர் நிலம் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏலம் மின்னணு முறையில் நடைபெற உள்ளதாக பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் ஏலம் நடைமுறைகள் எம்எஸ்டிசி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக இம்மாதம் 17ம்தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நிலங்களின் தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு https://www.mstcecommerce.com/auctionhome/propertysale/index.jsp இணைய தளங்களில் பார்வையிடலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதார விலை மற்றும் ஏல ஆவணங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் https://assetmonetization.bsnl.co.in/auction_property.php என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் ஊழியர்களை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

நீ(சனா)திபதி

நீதிமன்ற வளாகத்தில் வி.எச்.பி-யின் சட்டப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய நீதிபதி குமார் யாதவ், “நமது சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களில் தெய்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெண்ணை நீங்கள் அவமதிக்க முடியாது.


நான்கு மனைவிகளை வைத்திருக்கவோ, ஹலாலா செய்யவோ அல்லது முத்தலாக்கை நடைமுறைப்படுத்தவோ நீங்கள் உரிமை கோர முடியாது. ‘முத்தலாக்’ சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு, பெண்களுக்குப் ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது என்கிறீர்கள்.” என்று கூறினார்.

வி.எச்.பி வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீதிபதி -பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார் என்று குறிப்பிட்டுள்ளது. . “ஒரு நாட்டில் வெவ்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு அரசியலமைப்புகள் இருப்பது தேசத்திற்கு ஆபத்திற்கு குறைவு இல்லை.

மனித எழுச்சியைப் பற்றி நாம் பேசும்போது, ​​அது மதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் அரசியலமைப்பின் வரம்பிற்குள் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


அவரது பேச்சின் உள்ளடக்கம் குறித்து சில வழக்கறிஞர் அமைப்புகள் எழுப்பிய ஆட்சேபனைகளின் பின்னணியில்

நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான என்.ஜி.ஓ குடிமக்கள் அமைப்பு செவ்வாய்க்கிழமை, இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு எழுதிய கடிதத்தில், “நீதித்துறைக்கு பொருத்தமில்லாத செயல், ஒரு நீதிபதி தனது உறுதிமொழியை மீறுதல் மற்றும் நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளை மீறியதற்காக நீதிபதி யாதவ் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்நாட்டில் விசாரணை நடத்த வேண்டும்.” என்று கோரியுள்ளனர்.


அந்த கடிதத்தில், “டிசம்பர் 8-ம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர்நீதிமன்ற பார் நூலக அரங்கில் நடைபெற்ற வி.எச்.பி-யின் சட்டப் பிரிவின் (காசி மாகாணம்) மாகாண மாநாட்டில் நீதிபதி சேகர் யாதவ் பங்கேற்று பேசினார். இந்தியாவின் முஸ்லீம்களுக்கு எதிரான நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள்..." என்று குறிப்பிட்டுள்ளது.


இது, "ஒரு நீதிபதி உறுதிமொழி ஏற்கும் அரசியலமைப்பு லட்சியங்களுக்கு எதிரானது மற்றும் ஒரு எதிர்-பெரும்பான்மைவாத நிறுவனமாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முக்கிய பங்கு" என்று அது மேலும் கூறியது.

“நீதிபதி யாதவ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மற்றும் மனசாட்சியற்ற அவதூறுகளைப் பயன்படுத்தினார்,


அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் உயர் பதவிக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தினார், மேலும், சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பிட உட்படுத்துவது மட்டுமல்லாமல், அவர் அதை அவர் உறுதிப்படுத்துகிறார்’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


மேலும், நீதிபதி யாதவின் நடத்தை, "வகுப்புவாதத்துடனும் மற்றும் பாரபட்சமாகவும் இருப்பது மட்டுமில்லாமல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தும் வகையில், 1997 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதித்துறையின் மதிப்புகளின் மறுசீரமைப்பை மீறுவதாகும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


1300 ஆண்டான கோயில்.

 கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ள இக்கோவிலானது ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

தொடர்ந்து குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோவில் புனரமைக்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.


இந்து சமய அறநிலையத் துறையாலும் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு செப். 3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.


மிகவும் நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்ட இந்த கோயில், உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ   ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு, தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக கோவிலுக்கு சிறப்பு விருதை அறிவித்தது.


 யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டின் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மறுமலர்ச்சி ஆகும். ஒரு காலத்தில் கைவிடப்பட்ட சமயத் தளத்திற்கு புதிய உயிர் கொடுத்துள்ளது இந்த கோவில். நவீன பாதுகாப்பு அறிவியலைப் பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளுடன் இணைக்கும் ஒரு இடைநிலைமுறையையேபயன்படுத்தப்பட்டுள்ள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?