காய்ச்சல் வரவில்லை!
'தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். நாதக பிரிவினைவாதம் தூண்டும் இயக்கம' ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார்.
6 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்ட மார்ஷல் சட்டம்...
கடந்த 1980 ஆம் ஆண்டு மாணவர்களும் தொழிற்சங்கங்களும் முன்னின்று நடத்திய போராட்டத்தின் போது, மார்ஷல் சட்டம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது.
தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், மார்ஷல் சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
தென் கொரியா ஜனாதிபதி யூன், எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வட கொரியாவுடன் ஒத்துழைப்பதாகவும், எதிர்நிலைச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி, நேற்று (03.12.2024) ‘அவசர மார்ஷல் சட்டத்தை’ அமல்படுத்துவதாக அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாக ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மார்ஷல் சட்டத்தின் கீழ், அதிபர் யூன் ஆர்ப்பாட்டங்களையும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளையும் தடை செய்ய முயற்சித்தார். மேலும், ஊடகங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டார். இது தென் கொரியாவில் மிகப்பெரிய அரசியல் குழப்பமாக மாறியது. யூனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டக்காரர்கள் கூடினர், அங்கு தென் கொரிய இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதியது.
மார்ஷல் சட்டத்தை அறிவித்த பிறகு, நாடாளுமன்றம் உடனடியாக கூடியது. 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் யூனின் முடிவுக்கு எதிராக வாக்களித்தனர். சபாநாயகர் வூ வொன் ஷிக், இந்த சட்டம் “சட்டரீதியாக செல்லாது” என்றும் “மக்களுடன் மக்களாட்சியை காப்போம்” என அறிவித்தார். அந்நாட்டில், அதிகாலை 4:30 மணிக்கு, இந்த மார்ஷல் சட்டத்தை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் அறிவித்தார்.
மார்ஷல் சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவிப்புக்கு பிறகு, போராட்டக்காரர்கள் உற்சாகமாக கைகொட்டி, “நாம் வென்றோம்!” என கோஷமிட்டனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
“ஜனாதிபதி யூன் சுக் யோலின் மார்ஷல் சட்ட அறிவிப்பு அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இது சட்டரீதியான எந்த நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை,” என ஜனநாயக கட்சி தெரிவித்தது. மேலும், “இது மிகப் பெரிய அரசியல் துரோகம். இது அதிபரின் பதவி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது” என்று அவர்கள் கூறினர்.
விளம்பரம்
300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துள்ள ஜனநாயக கட்சி, கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்ற யூனின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது.
கடந்த 1980 ஆம் ஆண்டு மாணவர்களும் தொழிற்சங்கங்களும் முன்னின்று நடத்திய போராட்டத்தின் போது, மார்ஷல் சட்டம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1980-களின் இறுதியில் தென் கொரியா முழுமையான ஜனநாயக நாடாக மாற்றம் கண்டது. தற்போது, அதிபர் யூனின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரசியல் தென் கொரியா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ இன்று மாலை விண்ணில் செலுத்த உள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், புரோபா-3 என்ற திட்டத்தின் கீழ், சிஎஸ்சி மற்றும் ஓஎஸ்சி என்ற இரண்டு விண்கலன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்ய உள்ளன.
சுமார் 550 கிலோ எடை கொண்ட இந்த விண்கலன்கள், இஸ்ரோவின் ஏவுதளமான சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ளன.
இதற்கான கவுன்ட்டவுன் ஏற்கெனவே தொடங்கிய நிலையில், இன்று மாலை 4.08 மணிக்கு PSLV சி-59 ராக்கெட் மூலம் இவை விண்ணில் ஏவப்படவுள்ளன.
இந்த விண்கலன்கள், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும். சூரிய வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு தகவல்களை இந்த ஆராய்ச்சியில் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
PSLV சி-59 விண்ணில் பாய்வதை காண்பதற்கு பெரியவர்கள், சிறியவர்கள் என ஆவலுடன் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலத்தில் காத்திருந்தனர். இந்நிலையில், பிற்பகல் 3.30 மணி அளவில் PSLV சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் பெரும் கவலையடைந்தனர்.
வானிலை காரணமாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நாளை ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
2- ஆம் தேதி பெய்த கனமழையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுவதாகக் கூறினார்.
அவருக்கு காரசாரமாவும் ஆதாரப்பூர்வமாக புள்ளி விபரங்களுன்ந அமைச்சர் எ.வ.வேலு, பதில் கொடுத்துள்ளார் .
திமுக ஆட்சியில் 1,505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதாகவும் மேலும் 328 பாலப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிலுவையில் விடப்பட்ட 38 ரயில்வே மேம்பாலங்களும் திமுக ஆட்சியில் தான் கட்டி முடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ், ஆட்சியின் போது 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்தது எனவும்,, கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் தளவானூர் தடுப்பணை கட்டும்போதே
இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. இதையெல்லாம் மறந்துவிட்டு, ஈரைப் பேனாக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிபடியான நீரால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேல் 4 மீட்டர் உயரத்திற்கு நீர் வேகமாகச் சென்றதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், அதனாலேயே பாலம் பெருமளவில் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்ததாகக் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியைக் குறை கூற எந்தவித தார்மீக உரிமையும் இல்லை எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.