இதெல்லாம்

 அரசியலில சாதாரணம்ப்பா!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.


சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வின் ஆர்.எம்.பாபுமுருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


இதில்  "ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவது என்பது இயல்பு. அப்படி இருக்கையில் இதில் என்ன அவதூறு உள்ளது. நமது ஜனநாயம், சட்டம் ஒரு உறுப்பினர் மற்றொரு கட்சிக்கு செல்வதை அனுமதிக்கிறது. இதில் அவதூறு ஒன்றும் இல்லை." என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளன. மனுதாரர் கோரிக்கையை ஏற்று மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து அப்பாவுக்கு எதிரான அவதூறு மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு.
அரசியல்ல  இதெல்லாம் சாதாரணம்ப்பா!


கடலூர் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் சாலையில் செல்லும்போது விபத்துள்ளாகி தலை குப்புற கவிழ்ந்த வட்டாட்சியர் வாகனம்.


சாலையில் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த அருகே இருந்த மின்மாற்றியின் மீது மோதி விபத்து. நல்வாய்ப்பாக திட்டக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜ் மற்றும் ஓட்டுநர் பாலமுருகன் உயிர்தப்பினர்.

சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கூரை விழுந்து நேற்றிரவு குலாப் என்ற இளைஞர் உயிரிழந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்.


கலங்கரை விளக்கம் லூப் சாலையில் இருந்து அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசை கட்டி நிற்கின்றன. பலரும் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, அலுவலகங்களுக்கு நடந்தே செல்கின்றனர். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த குலாப் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


கட்டட விபத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.


சென்னை தாம்பரம் அருகே பல்லாவரம் மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை அருந்திய பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.


மக்கள் விரோத திமுகவையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்தி வெற்றி முத்திரையை பதித்திட நாம் அனைவரும் அம்மா நினைவு நாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.


அதிமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய உறுதியேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கும் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய உறுதியேற்போம் என எஸ்.பி.வேலுமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?