பள்ளித் தளமனைத்தும்

 சோதிடம் செய்வோம்!

குஜராத் , சூரத்தில் உள்ளது வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் (Veer Narmad South Gujarat University – VNSGU). 

இந்த வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் அடிக்கடிவினாத்தாள் கசிவைத் தடுக்கவுமல, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல முற்சிகளை நிர்வாகத்தினர் செய்தாலும் கிரக கட்டங்கள் சரிவர அமையாமல் தொடர்ந்துகசிவு ஏற்பட்டிக் கொண்டே இருந்த்து.


இதற்கு கிரக அமைப்புகள் சரிவர இல்லாத்தே காரணம் என்பதை  நிர்வாகம் பலனா்வு செய்து கண்டுணர்ந்த்து.இதனால் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்ட து. வாஸ்து சாஸ்திரத்தின்படி வகுப்பறைகளை மாற்றினால் வினாத்தாள் கசிவு தடுக்கப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என ஜோதிடர்  கூற,விணாத்தாளை பாதுகாப்பதால் எந்த பயனும் இல்லை.

நல்லமுறையில் படிப்பிக்கும் ஆசிரியர்களை அமர்த்தி கற்பிப்பதால் தேர்ச்சி விகிதம் உயர வாய்ப்புள்ளது.ஆனால் அப்படி ஆசிரியர் கிடைப்பதை விட   சோதிட த்தீர்வே சரி ஆகும்.என எண்ணிய நிர்வாகம்

 ஜோதிடர் கூறிய வகையில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வுசெய்தனர்.

அதன்  பின்னர் கட்டுமானப் பணிகளுக்கு முதல் தவணையாக ₹30 கோடியை ஒதுக்கியுள்ளது டபுள் என்ஜின் குஜராத் அரசு.


சர்வதேச சங்கி திரைப்பட விழா

 கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் 55ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா (55th International Film Festival of India) நவம்பர் 20 முதல்28 வரை நடைபெற் றது. “இளம் திரைப்பட இயக்குநர்கள் – எதிர்காலம்” (Young Filmmakers: The Future is Now) என்ற தலைப்பில் நடைபெற்ற  இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 81 நாடுகளிலிருந்து 180 சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 


உலக அளவில் பாராட்டுப் பெற் ற கலைப்படங்களை எதிர்பார்த்தவர்களுக்கு இன்ப அதுர்ச்சி தரும் விதமாக

உலக அளவிலான எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அறிஞர்கள் பங்கேற்றுள்ள இந்த திரைப்பட விழாவை  மோடி அரசு முழுமையாகக் காவிமயமாக்கியது.

 இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (National Film Development Corporation of India – NFDC) தலைமையில் நடக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவை எந்த தொடர்புமற்ற, கலையுலகை சேராத  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் துவங்கி வைத்தார். 

அவர் பல ஆண்டுகளாக ஆன்மீக சாமியாராக நடித்து பலகோடிகளை குவித்த. சாதனையாளர் என்பதற்காக அழைக்கப் பட்டாஆரெனத் தெரிகிறது. விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், அனுமான், விஷ்ணு உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.


கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது.பதேர் பாஞ்சாலி,அகிரா குரோசோவா கலைப்படைப்புகள்  திரையிட்டு போரடித்ததை தவிர்த்து

பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவரும், காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான பல்வேறு சாகசங்களைச் செய்த புல். புல் பறவை மீது பறந்த மர்மயோகி சாவர்க்கரை கதாநாயகனாகச் சித்தரித்த “சுதந்திர வீர் சாவர்க்கர்” (Swatantrya Veer Savarkar) திரைப்படம் இந்திய பனோரமா என்ற பகுதியின் தொடக்கப் படமாக திரையிடப்பட்டுள்ளது.

காந்தியை இழிவுபடுத்தியும், நேதாஜி, அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் சாவர்க்கரின் அறிவுரைப்படியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர் என்றும் கட்டுக்கதையைப் பரப்புரை செய்யும் விதத்திலான காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், வரலாற்றிற்குப் புறம்பான இந்துத்துவா பரப்புரை படமான “ஆர்டிகிள் 370” (Article 370) என்ற இந்தி திரைப்படம், விஷ்ணுவின் அவதாரங்களின் கதையான “மஹாவதார் நரசிம்மா”, கிருஷ்ணனின் அவதாரப் படமான “கல்கி 2898 ஏடி” என்ற தெலுங்கு திரைப்படம், கொங்கனின் விநாயகர் திருவிழாவை மையப்படுத்தும் “கரத் கணபதி” என்ற மராத்தி திரைப்படம் உள்ளிட்ட இந்துத்துவாவை உயர்த்திப் பிடிக்கும் திரைப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன.


சர்வதேச சங்கிதிரைப்பட விழாவை மிகச் சிறப்பாக காவிமயமாக்கி நடத்திய பாஜக மோடி அரசின் செயல்பாட்டிற்கு  உலகெங்கும் உள்ள இந்துத்வ சங்கி கலை ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து அடுத்து வரவிருக்கும் சங்கி திரைப்பட விழாவை எதிர் பார்த்து காத்திருப்பதாக கூறினர்

முதல் குடியரசுத் தலைவர்

டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். இன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்!

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். தொண்டர்கள் இவரை ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைத்தனர். டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார்.


கடந்த 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாவீர சாகி, தாய் கமலேசுவரி தேவி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கினார். 5 வயதில் ஒரு மவுல்வியிடம் பாரசீக மொழி கற்றார். சாப்ரா மாவட்டத்தில் தொடக்கக் கல்வியை முடித்தார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார்.


கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற காரணத்திற்காக மாதம்தோறும் 30 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தார். பணிபுரியும் போதே சட்டக்கல்லூரியில் மேற்படிப்பு படித்து முதல் மாணவனாக தங்க பதக்கம் பெற்று சிறந்து விளங்கியவர் ராஜேந்திர பிரசாத். சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறந்த வழக்கறிஞரகாகவும் பணியாற்றி உள்ளார்.


காந்தியின் அகிம்சை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தனது வழக்கறிஞர் தொழிலை துறந்தார். தரையைத் துடைப்பது, கழிவறையைக் சுத்தம் செய்வது, பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். 1934 ஆம் ஆண்டு பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ ரூ.38 லட்சம் நிதி திரட்டினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராஜேந்திர பிரசாத் . 1962 வரை சுமார் 12 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர்களில் 2-வது முறையாக அந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றவர்.


இந்தியக் குடியரசை திறம்படவும் உறுதியாகவும் வழிநடத்தியவர் என்று போற்றப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?