நின்றாவரி! படுத்தா வரி!!

 சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சிப் படை நுழைந்துள்ளதாகவும்,அதிபர் தப்பி ஓடியதாகவும்.தகவல்.

தேசிய பேரிடர் நிதியிலேயே ரூ.1,173 கோடி பாக்கி புயல் நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு.

4 வழிச்சாலை பணிகளே முடியாத நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு.




நின்றாவரி!

படுத்தா வரி!!

ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டமிட்டு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: - மோடி தலைமையிலான அரசு மேலும் ஒரு ஜிஎஸ்டி வரிவிகிதத்தை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

 இந்த அநீதியைகாங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். ஜி.எஸ்.டி.யில் இருந்து வசூல் அதிகரித்து வரும் நிலையில், அரசு புதிய வரி விகிதத்தை அறிமுகப்படுத்தப் போகிறது. அன்றாட தேவைக்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை உயர்த்தும் திட்டம் உள்ளது.

சற்று யோசித்துப் பாருங்கள், தற்போது திருமண சீசன் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் ஒவ்வொரு ஊதியத்தையும் அதற்காக சேமித்து வைத்திருக்க வேண்டும், இதற்கிடையில், 1,500 ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தப் போகிறது. 

இது ஒரு பெரிய அநீதி. கோடீஸ்வரர்களுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதற்காகவும், அவர்களின் பெரிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காகவும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வரி விதிக்கிறார்.

 எங்கள் போராட்டம் இந்த அநீதிக்கு எதிரானது. சாமானிய மக்கள் மீதான வரிச்சுமைக்கு எதிராக நாங்கள் கடுமையாக குரல் எழுப்புவோம், மேலும் இந்த கொள்ளையை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். 

மேலும் ஜிஎஸ்டி வசூல் 2019ல் ரூ.5.98 லட்சம் கோடியிலிருந்து 2024ல் ரூ.10.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

அதே போல் 2019ல் ரூ.4.92 லட்சம் கோடியாக இருந்த வருமான வரி, 2024ல் 11.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் பெருநிறுவனங்களுக்கான வரி 2019ல் ரூ.5.56 லட்சம் கோடியாக இருந்தது. 

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2024ல் ரூ.10.2 லட்சம் கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி அதுதொடர்பான கிராபிக்ஸ் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஆங்கே இடுக்கண் களையும் அரசு

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு - வள்ளுவம்.

அத்தகைய அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. புயல் பாதிப்புகளுக்கு உடனடியாக உதவிப் பணிகளைச் செய்து இது துரிதமான அரசு என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறார்.

ஃபெஞ்சல் புயல் கோரத் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளது. மயிலத்தில் 51 செ.மீ, ஊத்தங்கரையில் 50 செ.மீ, புதுச்சேரியில் 49 செ.மீ, திண்டிவனத்தில் 37 செ.மீ, விழுப்புரத்தில் 27 செ.மீ, கடலூரில் 23 செ.மீ, திருவண்ணாமலையில் 22 செ.மீ, வேலூரில் 11 செ.மீ – மழை கொட்டித் தீர்த்துள்ளது. இத்தகைய இயற்கைப் பேரிடர் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலையில் மக்களைக் காக்கும் பணியில் முதலமைச்சர் அவர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அதிவேகமாகச் செயல்பட்டு மக்களைக் காக்கும் பணியில் இறங்கினார்கள்.


இரண்டே நாட்களில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்து விட்டார்கள்.

வங்கக் கடலில் நவம்பர் 24–ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 27–ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

அது29–ம் தேதி வெள்ளிக்கிழமை ஃபெஞ்சல் புயலாக மாறியது. சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தபடி புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையை நோக்கி சனிக்கிழமை வரத் தொடங்கியது. வெள்ளிக் கிழமை இரவு சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் இருந்த புயல், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு 90 கி.மீ. தொலைவுக்கு நெருங்கியது.


ஆனால், மாலை

5 மணிவரை நகராமல் போக்கு காட்டி புயல் மிரட்டிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், எதிர்பாராத வகையில் மாலை 5 மணிக்கு மேல் புயல், வந்த திசையில் வடக்கு நோக்கிச் செல்லாமல் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியது. மீண்டும் மாமல்லபுரம் கரையை நோக்கி நகர்ந்து, கரைக்கு நெருக்கமானது. இரவு 7 மணியளவில் புயல் மரக்காணம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது.


அப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. மழையும் மிகப் பலமாகக் கொட்டியது.

புயல், நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால்தான் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் மழை பெய்தது. இதனால்தான் சுற்று வட்டாரப் பகுதியிலும் நீர்பிடிப்பு இடங்களிலும் பெய்த மழை நீர், சாத்தனூர் அணைக்கு எதிர்பார்க்க முடியாத வகையில் மிக அதிக அளவில் வந்து சேர்ந்தது.


ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.


சாத்தனூர் அணை நிரம்பிவந்த நிலையில் கரையோர மக்களுக்கு தொடர் எச்சரிக்கை விடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் ‘செம்பரம்பாக்கம் அ.தி.மு.க.’ புகழ் பழனிசாமி தனது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறார்.

உடனடியாக முதலமைச்சர் அவர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார்கள்.

மழைநீரை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் செய்யப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களது முழுத் தேவைகள் செய்து தரப்பட்டன. உணவுப் பொருள்கள், அன்றாட அவசியப் பொருள்கள் அனைத்தும் தரப்பட்டன. சமுதாயக் கூடங்கள் மூலமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. புதிய சமையல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், வீடுகளில் இருக்கும் மக்களுக்கும் தருவதற்கு உணவுப் பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.

தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.


உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவியை வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியது மட்டுமல்ல; முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளை கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து வீடுகள் கட்டவும் உத்தரவிட்டுள்ளார்.


பாசனப் பயிர்கள் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாயும், மரங்களாக இருந்தால் ஹெக்டேருக்கு 22,500 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். எருது, பசு உயிரிழப்புக்கு 37,500 ரூபாய் அறிவித்துள்ளார்கள்.


இவை அனைத்துக்கும் மேலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் வழங்கிடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட மக்கள் இதனைப் பெறுவார்கள்.


SDRF நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்காத நிலையில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.


நடப்பு 2024–25 நிதியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதிக்கு சுமார் ரூ.1,260 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை ஆந்திரா, அசாம், பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கிய முழு நிதியையும் ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களுக்கு முதல் தவணை நிதியையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை.


ஒன்றிய பா.ஜ.க. அரசை நம்பிக் காத்திருந்தால் மக்களைக் காப்பாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?