அமெரிக்க மிரட்டல்.

 பிரிக்ஸ் நாணயம்


பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இதில் இணைய விருப்பம் தெரிவித்தன.

சுரன்
பிரிக்ஸ் டாலர் மாதிரி

கடந்த 2 மாதம் முன்பு பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில்  பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கனா். இந்திய பிரதமர் மோடி இந்தியா சார்பில் கலந்து கொண்டார்


உலக அளவிளான வளர்ச்சி, பாதுகாப்பு ய இஸ்ரேல் , ஈரான் போர் பதற்றம் ,நிறுத்தம் தொடர்பாக பேசப்பட்டது.


மேலும் உலக அளவில் டாலரில் வணிகம் செய்வதற்கு மாற்றாக பிரிக்ஸ் உருவாக்க உள்ள கரன்சியில் வணிகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. டாலரை கொண்டு வணிகம் செய்தால், அமெரிக்காவை நம்பி உலக நாடுகள் இருப்பது போன்று நிலையை மாற்றுவதற்கு  தீர்வு காணபிரிக்ஸ் கரன்சி உதவும் என முடிவு செய்தனர்.

டாலருக்கு மாற்றாக 20  ஐரோப்பிய நாடுகள்  ஒன்றிணைந்து யூரோ கரன்சியை 


அறிமுகப் படுத்தியது அது வேகமாக வளர்ச்சியடைவதைக் கண்ட அமெரிக்கா தனது சூழ்ச்சிகளின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தை குழப்பத்திலாக்கி யூரோவை வீழ்த்தியது.

டாலருக்கு நிகரான மற்ற நாட்டு கரன்சிகள் வலுவிழந்து இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உலக வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்ளாமல் மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.


இதனால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும் எனஅமெரிக்கா  எண்ணுகிறது.அதுதான் உண்மையும் கூட.

 விரைவில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. இன்னும் ஒரு மாதமே மட்டுள்ள நிலையில் அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் டாலரை புறக்கணிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

சுரன்
யூரோ

, டாலரை நிராகரித்தால் அமெரிக்காவில் பொருள்களை விற்பனை செய்ய சில நாடுகள் குட்-பை சொல்ல வேண்டி இருக்கும் என கூறினார். இதனால் ரஷ்யா, இந்தியா, சீனா, வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தற்போதையவநிலைநில் அமெரிக்கா தனது பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதித்தால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும்.


டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கை இந்தியா உடபட பல நாடுகளின்  பொருளாதாரத்தை  பாதிக்கும் ஆபத்தில் உள்ளது.  காரணம் இந்தியா போன்ற உலக நாடுகள் டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய், அன்னிய முதலீடு ஆகியவற்றை பெறுகின்றது தான் ஆகும்.

சுரன்
அமெரிக்க டாலர்

இது போன்று ஒரு நாட்டின் பணமதிப்பில் அமெரிக்க டாலரையே செலவாணியாவைப்பதும் ஒரு ஆபத்தே.்.

அந்நாடு பணவீக்கம் கண்டால்,2000களில்போனது போல் அமெரிக்க வங்கிகள் திவாலானால் நிலைமைமோசமாகிவிடும்.பொருளாதாரப் பள்ளத்தில் மூழ்கும் அமெரிக்கா  டாலர்களில் மட்டும்  வணிகம் செய்வதை வழமையாக்க் கொண்ட மற்ற நாடுகளையும் மூழ்க துணைக்கழைத்துக் கொள்ளும்.

யூரோ,பிரிக்ஸ் என பல நாடுகள்  ஒன்றிணைந்து பயன்பாடு பணங்களை உருவாக்கி வைத்துக் கொள்வதே பின்வரும் காலத்திற்கு நல்லது.


தனது பொருட்களுக்கு100% வரி அமெரிக்கா போட் டால்  அதற்கு  பயப்படாமல்அப்பொருட்களை வேறு நாடுகளில் இருந்து  வாங்கும் நிலை வேண்டும்.அமெரிக்க எண்சரிக்கைக்குப் பயப்படாமல் முன்பு ரஷ்யா,ஈரானில் இருந்து கச்சா எண்ணை வாங்கியது போல் வாங்கும் நிலை வேண்டும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?