போர் சூழ் உலகு!

ஆளுநர்கள் மாற்றம்

* ஒடிசா கவர்னராக இருந்த ரகுபீர் தாசின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு கம்பம்பட்டி ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* மிசோரம் புதிய கவர்னராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் விஜய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
* கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* பீகார் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவுக்கு மாற்றப்படுகிறார்.
* முன்னாள் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செபி தலைவர் மாதபி புரி புச்சிடம் ஜன.28-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது லோக்பால் அமைப்பு.
பாகிஸ்தானில் இருந்து வான்வழியே ஆப்கானிஸ்தான் மீது ஜெட் விமானங்கள் பொழிந்த குண்டுமழை: 15 பேர்கள் உயிரிழப்பு.




போர் சூழ் உலகு!
உலக மக்கள்​தொகையில் 49 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்தலைச் சந்தித்​துள்ளனர். குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பாகிஸ்தான் என 64 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடந்துள்ளது

நவம்பர் 5இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்க இருக்​கிறார்.

அவரது மீள்வருகை சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்​தலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. குடியேற்றக் கொள்கையில் கடும் கட்டுப்​பாடுகள் கொண்டு​வரப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​வ​தால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளி​லிருந்து சட்டவிரோத​மாகக் குடியேறிய​வர்கள் வெளியேற்​றப்​படும் சூழல் உருவாகி​யிருக்​கிறது.


விசா வழங்கு​வதில் கெடுபிடி அதிகரிக்கும் என்று பேசப்​படு​வதால் அமெரிக்​காவில் தங்கி​யிருக்கும் வெளிநாட்​டினரும், கல்விக்​காகவும் பணிவாய்ப்​புக்​காகவும் அமெரிக்கா​வுக்குச் செல்லத் திட்ட​மிட்​டிருப்​பவர்​களும் தவிக்கத் தொடங்கி​யிருக்​கிறார்கள்.

 2025 ஜனவரி 20இல் டிரம்ப் பதவியேற்​க​விருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா​வுக்குத் திரும்​பிவிட வேண்டும் என்று அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும் அளவுக்கு நிலைமை குழப்பமாக இருக்​கிறது.


மற்றபடி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் இப்போதே முயற்சி எடுத்து​வரு​கிறார். ரஷ்யா​வுடன் பேச்சு​வார்த்தை நடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்​கிக்கு அறிவுறுத்​தி​யிருக்​கிறார்.

 காஸா போரைப் பொறுத்​தவரை, ஹமாஸ் பிடியி​லிருக்கும் பிணைக்கை​திகள் விடுவிக்​கப்​பட​வில்லை என்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்​திருக்கும் டிரம்ப், வழக்கமான அமெரிக்க அதிபர் பாணியில் இஸ்ரேலுக்கே ஆதரவளிப்பார் என்றே பேசப்​படு​கிறது. டிரம்ப் அதிபராகப் பொறுப்​பேற்கும் முன்பே காஸாவில் போர் நிறுத்​தத்தைக் கொண்டு​வந்​துவிட வேண்டும் என்று பைடன் அரசு முனைப்பு காட்டு​கிறது. ஆனால், அது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரிய​வில்லை.


காஸாவில் தொடரும் கண்ணீர்: 2023 அக்டோபர் 7இல், இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இன்றுவரை காஸா மீது கடும் தாக்குதல் நடத்திவரு​கிறது இஸ்ரேல் அரசு.

 இதில், இதுவரை 45,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்​பட்​டிருக்​கின்​றனர். ஈரான் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்​லாவும் (லெபனானைச் சேர்ந்த அமைப்பு) ஹமாஸுக்கு ஆதரவாகத் தாக்குதல் நடத்தி​ய​தால், லெபனான் மீதும் கடும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஒருவழியாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்​புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருப்​பதால் லெபனானில் அமைதி திரும்​பிவரு​கிறது. 

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர எகிப்து, கத்தார் போன்ற நாடுகளும் முயற்சி எடுத்து​வரு​கின்றன.

ஆட்சி மாற்றங்கள்: சிரியாவில் 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் அரசியல் பேயாட்டம் முடிவுக்கு வந்திருக்​கிறது. ஹபீஸ் அல்-அசாத் 1971ஆம் ஆண்டு முதல் 2000 வரை ஆட்சி நடத்திக்​கொண்​டிருந்​தார். இவர் சோவியத் ஒன்றி​யத்​துக்கு ஆதரவாகப் பனிப்​போர்க் காலங்​களில் செயல்​பட்டார் என்பது குறிப்​பிடத்​தக்கது.

அவருக்குப் பின்னர் அவரது மகன் பஷார் அல்-அசாத் பதவிக்கு வந்தார். சோஷலிஸ சித்தாந்தம் என்கிற பெயரில் பஷார் நடத்திய ஆட்சி சர்வா​திகார ஆட்சி​யாகவே இருந்தது. ஈரானுக்கும் ரஷ்யா​வுக்கும் ஆதரவான பஷார், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்​சில், மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், துருக்கி நாடுகளுக்கு எதிரியாக இருந்​தவர்.
அல்காய்தா, ஐஎஸ், இதர தீவிரவாத இயக்கங்கள் இவரது ஆட்சிக்கு எதிராக யுத்தம் நடத்திவந்த நிலையில், ஹயாத் தாஹ்ரிர் அல் -ஷாம் (ஹெச்​.டி.எஸ்) அமைப்பு டிசம்பர் 8இல் சிரியாவைக் கைப்பற்றி​யிருக்​கிறது. 

பஷார் தன் குடும்பத்​துடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்​து​விட்​ட​தாகக் கருதப்​படு​கிறது. புதிய பிரதமர் முகமது அல்-பஷீர் சிரியாவில் ஸ்திரத்​தன்​மையைக் கொண்டுவர முயன்று வருகிறார். கூடவே, சிரியா மீதான பொருளா​தாரத் தடைகளை நீக்க பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் கோரிக்கை விடுத்​திருக்​கிறார்.

எதிரி நாடுகளான துருக்​கியையும் இஸ்ரேலையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்​பந்​தமும் சிரியாவின் புதிய அரசுக்கு ஏற்பட்​டிருக்​கிறது. ஆப்ரிக்க நாடுகள் வறுமை, உள்நாட்டுக் கலவரம், அரசியல் சீரற்ற தன்மை​களால் கடும் பாதிப்பை எதிர்​கொள்பவை. அந்த வகையில், மத்திய ஆப்ரிக்க குடியரசு 2012 முதல் உள்நாட்டுப் போரால் சிக்கித் தவிக்​கிறது.

பெண்கள், குழந்தை​களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து​வரு​கின்றன. கனிம வளம் நிறைந்​திருந்​தாலும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாமல் இந்நாடு தடுமாற உள்நாட்டுப் போரும் மதப் பிரச்​சினை​களும்தான் முக்கியக் காரணம்.

முஸ்லிம் செலெகா ஆயுதக் குழுவினருக்​கும், கிறிஸ்துவ ஆன்டி-பலாகா ஆயுதக் குழுவுக்கும் இடையில் நிகழ்ந்​துவந்த சண்டைகள் இந்த ஆண்டில் உச்சமடைந்தன. அதிபர் ஃபாஸ்டின் ட்வாடேராவை ரஷ்யா ஆதரிக்​கிறது.

 அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராகி​யிருப்பதை எதிர்க்​கட்​சிகள் நிராகரித்​துள்ளன. இதற்கிடையே அண்டை நாடான சூடானில் நிகழ்ந்​து​வரும் உள்நாட்டுப் போரின் தாக்கத்​தையும் மத்திய ஆப்ரிக்க குடியரசு எதிர்​கொண்டு​வரு​கிறது.

2015 இல் ஏமன் அரசுப் படைகளுக்கும் ஹூதி போராளி​களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்​கியது. ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று​வரும் உள்நாட்டு யுத்தத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்​பட்​டிருக்​கிறார்கள்.

 45 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். 97 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் வசித்து​வரு​கிறார்கள்.
ஏமனில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக சவுதி அரேபி​யா​வுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெற்றுவந்த மறைமுகப் பேச்சு​வார்த்​தைகளில் முன்னேற்றம் ஏற்பட்​டிருந்த சூழ்நிலையில் இஸ்ரேல்​-ஹமாஸ் போரால் அந்த முயற்சிகள் தடைபட்​டிருக்​கின்றன.

 உலகிலேயே மிக மோசமான வகையில் மனிதாபிமான நெருக்கடி நிலவும் நாடுகளில் ஒன்றான ஏமனில் எப்போது அமைதி திரும்பும் என அந்நாட்டு மக்கள் காத்திருக்​கின்​றனர்.

நகோர்னோ - கார்பாக் பகுதிகள் அசர்பைஜானில் உள்ள நிலப்​பரப்புகள் ஆகும். சமீபகாலம் வரை அவற்றின் பெரும் பகுதிகள் அங்கீகரிக்​கப்படாத அரசால் நிர்வகிக்​கப்​பட்டு வந்தன. இந்தப் பகுதிகளை ஆர்மீனியா தங்கள் நாட்டுடன் இணைக்க முயன்று வந்தது. 

இதை அன்றைய சோவியத் ஒன்றியம் ஏற்கவில்லை. இந்தப் பகுதியில் பெரும்​பான்​மையாக வசித்தவர்கள் ஆர்மீனிய இனத்தவர். மேலும் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் தேர்தல் நடைபெற்று, ஒரு தன்னாட்சி அரசாகச் செயல்​பட்டது சர்வதேச சட்டத்​தின்படி ஏற்கத்​தக்​கதல்ல என்று அஜர்பைஜான் தெளிவுபடுத்​தியது. 

பல ஆண்டுகளாக இருதரப்​பினருக்கும் இடையே ரஷ்யாவின் முயற்​சியால் பல போர் நிறுத்த ஒப்பந்​தங்கள் மேற்கொள்​ளப்​
பட்​டிருந்​தும், அவை சரியாகப் பின்பற்​றப்​பட​வில்லை. இந்தச் சூழ்நிலையில் 2024இல் இந்த விவகாரம் உச்சமடைந்தது.

 அசர்பைஜானின் படைகள் நகோர்னோ - கார்பாக் பகுதி​களைத் தங்கள் கட்டுப்​பாட்டுக்குள் கொண்டு​வந்தன. இதனால் அங்கு வாழ்ந்த பெரும்​பான்​மையான ஆர்மீனிய இனத்தவர் தப்பி ஓடினர். இதன் காரணமாகத் தன்னாட்சிப் பகுதிகள் முறைப்படி கலைக்​கப்​பட்டன.

வங்கதேசத்தில் ஜனநாயகத்​தன்மை குலைந்​து​விட்​ட​தாக​வும், அடக்குமுறை அதிகரித்து​ விட்​ட​தாகவும் கூறி மாணவர்கள் நடத்திய கிளர்ச்​சி​யால், ஆகஸ்ட் 5இல் பிரதமர் பதவியி​லிருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வு​களில் ஒன்று.

 ஆனால், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸின் ஆட்சியில் சிறுபான்​மை​யினர் - குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தது விமர்​சனத்​துக்​குள்​ளானது.

உணவுப் பொருள் நெருக்​கடியும் அந்நாட்டில் அதிகரித்​திருக்​கிறது. இவ்விஷ​யத்தில் இந்தியா​விடம் உதவி கோரி​யிருக்​கிறது வங்​கதேசம். இது​போன்ற நெருக்​கடிகளால், ஆடைத் த​யாரிப்புத் தொழில் நிறு​வனங்​கள் இந்தியா​வுக்கு இட​மாறலாம் என்​றும் பேச்​சுக்​கள் எழுந்​திருக்​கின்றன. 

இப்படி இந்த ஆண்டு ​முழு​வதும் பல உலக ​நாடு​கள் ​போர், நெருக்கடி ​போன்​ற ​கொந்​தளிப்​பான சூழ்​நிலையிலேயே கழித்​திருக்​கின்​றன.


கொலையாளியுடன் பணியாற்ற விருப்பமில்லை!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் அடிப்படையில் கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் புகழேந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து அனைவரும் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது நிலைப்பாட்டை தனித்தனியாக தெரிவித்தனர்.



இதில் கே.சி.பழனிசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கூறியதில், ‘‘அதிமுக என்ற கட்சியை பொறுத்தவரை அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிமுக சட்ட விதிகளை மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது. எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்காலமாக வழங்கபட்ட அதிமுக பொதுச்செயலாளர் என்ற உத்தரவை ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை. அதிமுக என்ற கட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

இதையடுத்து புகழேந்தி கூறியதில், ‘‘எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் இரட்டை இலை விரைவில் மூன்றாவது முறையாக முடக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல்களை கொடுத்து ஏமாற்றி உள்ளார். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அது அப்பட்டமான பொய்யாகும். அப்படியென்றால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஏன் தோல்வி அடைய வேண்டும்.

எனவே அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் கட்சியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உறுப்பினர் மற்றும் பதவிகளை நியமிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவதே எங்களது முக்கிய கொள்கையாக உள்ளது.

குறிப்பாக கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரான எடப்பாடி பழனிசாமிக்கு கீழே நாங்கள் இருந்து பணியாற்ற விரும்பவில்லை.

 அதற்கான அவசியமும் கிடையாது. மேலும் அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவுக்கு யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனக்  கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?