எப்போ இலை கிடைக்கும்?
“ ஒரே நாடு - ஒரே தேர்தல்” திட்டம் பாஜகவின் தோல்விகளை மறைக்கும் முயற்சிநாட்டின்பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும்கொன்றுவிடும்.மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.
2023 மழைவெள்ள நேரத்தில், 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி,க்கு ‘ரயில் சேவா புரஸ்கார்’ விருது.இலங்கைக்கு அதிகனமழை எச்சரிக்கைதென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மெடிசன் நகரில் இயங்கி வரும் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்த சிறுமி, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மயோட்டே தீவை, ‘சிண்டோ’ என்ற புயல் கடுமையாக தாக்கியது. கனமழையுடன் வீசிய புயலால் மயோட்டே தீவில் ஏராளமான வீடுகள், குடிசைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவின் கடல்பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் காரணமாக, வனுவாட்டு தீவு நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த மாத இறுதியில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதியில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்” என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறினாா். போராட்டம் காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுஇந்தியாவில்தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போ இலை கிடைக்கும்?
எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய விவகாரத்தில் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறது. ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே தான் இரட்டை இலை சின்னம், கட்சி கொடியை கைப்பற்றுவது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்திலும் உரிமை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இருப்பினும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கட்சியின் கொடி, சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தான் பயன்படுத்தி வருகிறது.
இதற்கிடையே தான் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கியதில் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை.
தான் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என்று கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு என்பது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்டது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அஜராகி இருந்தார். அவர் கூறுகையில், ‛‛தங்கள் தரப்பை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும் கட்சிக்குதொடர்பில்லாத புகழேந்தி சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------
இதுதான் சனாதனம்
உ.பி,யில் பொது குடிநீரைக் குடித்தக் குற்றத்திற்காக இந்துத்துவாவினரால் த(தாக்க)ண்டிக்கப பட்ட சிறுவர்கள்.அனைவரும் இந்துக்கள்தான் ஆனால் இவர்கள் தீண்டத்தகாதவர்கள்.---------------------------------------------------------------------------
இதனால் மனுவை ஏற்க கூடாது'' என்று ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இதனை உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் ஏற்க மறுத்துவிட்டார்.
அதேபோல் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், ‛‛இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். வரும் 24ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம்'' என்று கூறப்பட்டது. அதற்கு புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக், ‛‛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே விசாரணைக்கு அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுவை விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காலக்கெடுவை வழங்க வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ், ‛‛இரட்டை இலை சின்னம் தொடர்பான மனுக்களை விசாரித்து விரைந்து தீர்வு காண வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
அதேவேளையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எந்த காலக்கெடுவையும் விதிக்க முடியாது'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.