ஒரு சங்கி நீதி வழங்கி.

 பூணூல் விகடன்,போலி டிக்கெட்,போலி லாட்டரி  சங்கிகள் கூட்டிய மாநாட்டில் சங்கிகளையே பொழந்து கட்டிய நீதியரசர் சந்துரு அவர்கள்..

 "தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்க மாட்டோம்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி.
அதிகாலையில்சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை.

 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும்.
ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் முன்னிலையில் சரக்கை ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் அறிவிப்பு .
 'இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதும் தமிழகம்தான்' செந்தில்பாலாஜி .

ஒரு சங்கி நீதி வழங்கி.

இந்திய நாடானது இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி தான் இயங்கும் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியிருப்பது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தார்.


அவர் தனது உரையின்போது, “ Uniform Civil Code (UCC) என்ற தலைப்பில் சில விஷயங்களை தெரிவித்தார். அதன்படி, “ இஸ்லாமியர்கள் தங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் அதை அவமரியாதை செய்யக்கூடாது என்று விரும்புகிறார்கள்” என கூறினார்.


பிறந்ததிலிருந்தே சகிப்புத்தன்மையையும் கருணையையும் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். விலங்குகள், இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுக்கிறோம். மற்றவர்களின் வலியால் நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் நீங்கள் அப்படி உணரவில்லை.

குழந்தைகளுக்கு முன்னால் நீங்கள் விலங்குகளை வெட்டும்போது உங்கள் குழந்தை சகிப்புத்தன்மையையும் கருணையையும் எவ்வாறு கற்றுக் கொள்ளும்? என இஸ்லாமிய மக்கள் குறித்து பேசினார்.


 வேதங்களில் தெய்வமாக கருதப்படும் பெண்ணை நீங்கள் அவமரியாதை செய்ய முடியாது. நான்கு மனைவிகளைப் பெறுவதற்கான உரிமையை நீங்கள் கோர முடியாது, ஹலாலா அல்லது மும்முறை தலாக் செய்ய முடியாது.

அதுமட்டுமின்றி, பெண்களுக்கான பராமரிப்பு மறுக்கப்படக் கூடாது. அவர்கள் மீதான வன்முறை செயல்களை செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி அவர் கூறினார்.


இது இந்தியா என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும், இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படியே இந்த நாடு இயங்கும். ஒரு இந்துவாக இருப்பதால், நாங்கள் எங்கள் மதத்தை மதிக்கிறோம், ஆனால் பிற மதங்கள் அல்லது நம்பிக்கைகள் மீது எங்களுக்கு  தீய எண்ணம் இருக்கிறது என்று அர்த்தமல்ல. மற்ற மதத்தை பின்பற்றுபவர்களும் இதே பாதையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


திருமணம் செய்து கொள்ளும்போது நீங்கள் நெருப்பை ஏழு முறை சுற்றி வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கங்கையில் நீராடுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆனால், நாட்டின் கலாச்சாரம், கடவுள்கள் மற்றும் பெரிய தலைவர்களை நீங்கள் அவமதிக்க மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


ஷா பானோ வழக்கை நினைவுகூர்ந்த நீதிபதி யாதவ், பாதிக்கப்பட்ட விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அப்போதைய மத்திய அரசு சிலருக்கு பணிந்ததாகவும் சேகர் குமார் யாதவ் குற்றம் சாட்டினார்.

பராமரிப்பு உரிமைக்கான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மற்றொரு சட்டம் கொண்டுவர அப்போதைய மத்திய அரசு தள்ளப்பட்டது என்றார்.

சதி, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல தீய பழக்க வழக்கங்களை இந்து சமுதாயம் ஒழித்துள்ளது என கூறிய சேகர் குமார் யாதவ்,  தவறுகளை ஏற்று சரியான நேரத்தில் திருத்திக் கொள்வதில் தவறில்லை என தெரிவித்தார்.


மேலும் நான் தெரிவித்த கருத்து எந்த குறிப்பிட்ட மதத்திற்காகவும் இல்லை. இது நம் அனைவருக்கும் பொருந்தும். எல்லா மதங்களும் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், நாடு தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டுவரும்.


ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) 2025 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ், சங்பரிவாரும் அதன் கிளையான விஹெச்பியும் நாட்டுக்கான முக்கியமான பிரச்சினைகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்று கூறினார்.


இந்நிகழ்ச்சியில் நீதிபதி தினேஷ் பதக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தாலும் அங்கு எதுவும் பேசவில்லை. இந்த சங்கி நீதபதி சேகர் குமார் யாதவ் தான் 2021 ஆம் ஆண்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் எல்லோருக்கும் பொதுவானவன் எச்சார்பும் இல்லாமல் பொறுப்புடன் நீதிவழங்கும் பணியில் உள்ளவன் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சங்கி,இந்துத்வா ஆதரவு திட்டத்துடன் செயல்படும் இவரைப் போன்றவர்களால் தான் தற்போது இந்திய நீதித்துறையே 90%ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்ற உண்மைதான் தற்போதைய சோக நிலை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?