பெரிய சிந்தனையாளர்
"பெரியார்!"
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கான போர் உச்சத்தில் இருந்த தருணம் அது. ஆனால்,அப்போதையதமிழ்நாடானமதராசபட்டினத்திலோ மகளிர் உரிமை, சமூக நீதி, கடவுள் மறுப்பு, அறிவியல் சிந்தனை என ஒருவர் பேசி வந்தார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்களுக்காக சுதந்திர வீரர்கள் போராட்டங்களை முன்னெடுத்த போது, சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆண்களால் அடிமைப்படுத்தப்படும் பெண்களுக்கும் ஆதரவாக சிந்தனைகளை வளர்த்து வந்தார் அவர். அவர்தான் ஈரோட்டை சேர்ந்த .ஈ.வெ.ரா.
'பெரியார்'
அந்த வகையில் மகளிர் உரிமைக்காக ஒரு மாநாட்டை நடத்திய போது, உரிமைக்காக போராடிய மகளிர், ராமசாமியை பெரியார் என அழைத்தனர். பின்நாள்களில் அதுவே அவரது பெயராக பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டது. அவரது சிந்தனைகளை முன்வைத்துதான் திராவிட கட்சிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இன்றளவும் இயங்கி வருகின்றன.
பெரியாரின் சிந்தனைகள் பல இன்றைய வாழ்வியலுக்கும் பொருந்தும் என்றால் யாரும் மறுப்பது அரிது. அதற்கு ஓர் உதாரணம் சொல்வதானால், யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத ஒன்றை நம்பாதே என்று பெரியாரே கூறி அனைத்தையும் அறிவின் கண்கொண்டு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
ஈ.வெ.ரா.
ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால், எல்லோருக்கு எல்லாம் கிடைத்து விடும் என்றும் ஆயுதமும், காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய என்று கம்யூனிச சிந்தனையையும் அவர் பேசியுள்ளார்.பொதுவுடமை தத்துவத்தை தமிழக மண்ணின் இயல்புக்கேற்ப வடிவமைத்தவர் பெரியார்.
தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று | “மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும்”
வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம், மனைவிக்கு வேறு சட்டமா என்றும், மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்றும் சமூக நீதியை தனது சிந்தனைகள் மூலம் விதைத்துள்ளார்.
ஈ.வெ.ரா.
பெரியாரை பற்றிய ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவரது சிந்தனைகள் இன்றுவரை தமிழ்நாட்டின் அரசியலில் மட்டுமல்லாது, இந்தியாவின் சனாதன சாதிக் கொடுமைக்காளாகும் ஒவ்வொரு சாமானிய மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது...
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
கேரளா தமிழகத்தில் கட்டிய 450 டன் கழிவுகள் 30 லாரிகளில் அகற்றம்.
ராஜஸ்தான்: பெஹ்ரோரியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சென்ட்டா ( 3 வயது) பெண் குழந்தை தவறி விழுந்தது, குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக நடக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 86வது திருத்தச் சட்டம் 2002, இந்திய அரசியலமைப்பில் 21 -ஏ புதிய பிரிவைச் சேர்த்தது. அதன்படி, 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளித்துள்ளது.
இதற்கிடையே இவ்வாறு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி என்ற முறையால் கல்வியின் தரம் குறைகிறது என விமர்சனங்களும் எழுந்தன. இதனையடுத்து கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது.
அதோடு கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிகள் திருத்தப்பட்டன. அந்த விதிகளின்படி ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் இறுதி ஆண்டு தேர்வு எழுதி மாணவ மாணவிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சி பெறவில்லையெனில், 2 மாதங்கள் கழித்து பிறகு மீண்டும் இந்த தேர்வை எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்படி 2வது தேர்விலும் அந்த மாணவர் தேர்ச்சி பெறவிட்டால் அவர் அதே வகுப்பை மீண்டும் தொடர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.