பனையூரில் நிவாரணம்!
மக்களவையில் அதானி பெயரை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு.மசோதாவுக்கு தொடர்பாக மட்டும் எதிர்க்கட்சியினர் பேசுமாறு சபாநாயகர் கூற'இந்திரா காந்தி குறித்து பாஜக எம்.பி. பேசியது மட்டும் மசோதாவுக்குள் வருகிறதா? அதை ஏன் அனுமதித்தீர்கள்?' என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி.
ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி,வங்கதேச பிரதமர் பதவில் இருந்து பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படு வருகின்றன எனக்கூறி சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவர் மீது வங்கதேசக் கொடியை அவமதித்ததாகக் கூறி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.சட்டோகிராம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. அவரது வழக்கறிஞர்கள் உடனடியாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால், அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.
சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கிருஷ்ணதாஸ் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் வழக்குரைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.
சின்மோய் கிருஷ்ண தாசின் வழக்கு சட்டோகிராம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அங்கு, அவருக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகவில்லை . இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தவெக எனப் புதியக் கட்சி ஆரம்பித்து முதல்வராக முயற்சிக்கும் நடிகர் விஜய் இதுவரை சந்திக்கவில்லை ,ஆறுதல் தெரிவிக்கவில்லை என இரு நாட்களுக்கு முன் வருந்தி யிருந்தோம்.நமது வருத்தத்தை அறிந்த நடிகர் விஜய் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்து நேரில் காட்சிதந்து நிவாரணம் வழங்கினார்.
சரி.தேர்தல் பரப்புரைக்கும் எல்லா மக்களையும் பனையூர்தான் வரவழைப்பாரோ?தேர்தல் அன்று வாக்களிப்பது அவரவர் இடத்தில் தானே?
திரையரங்குகளில் படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைவதாகவும், திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது
திரையரங்கில யூடியூப்பர்களை வரவழைத்து திரைப்படம் பற்றி நல்லா இருக்கு,வேற லெவல் என படம்பார்த்துவருபவர்களை சொல்லவைத்து டப்பா படத்தையும் ஓடவைத்தவர்கள்தான் இவர்கள்.ஆனால் சில யூடியூப்பர்கள் உள்ளே புகுந்து அவரவர் சார்ந்து சூப்பர் எனவும்,குப்பை எனவும் சொல்லவைத்து கிட்டையை குழப்ப இப்போது புலம்ப ஆரம்பித்து வழக்கு வரை வந்து விட்டார்கள்.
யூடியூப்பர்களுக்கு திரையரங்கில் வளாகத்தில் ரசிகர்களை படம் பிடிக்க அனுமதி மறுத்தாலே போதுமே.
வளாகத்தைவிட்டு வெளியே செல்பவர்கள் இப்போதெல்லாம் பைக்,காரில் பறக்கிறார்களே.யார் நின்று பேசுகிறார்கள்.பேச வாய்ப்பிருக்கிறது.
இந்த மனு நீதிபதி சவுந்தர் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுவதாகவும், படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறும்போது ஏற்றுக் கொள்ளும் திரைத்துறையினர் எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்தார் நீதிபதி.
படத்தை முதலில் கதையுன் எடுங்கள்.
பிரமாண்டம் என்றபெயரிஇல் சாலை,மலைக்கு கோடிகளை செலவிட்டு பெயிண்ட் அடிப்பது இனி ஏடுபடாது.கதைக்குவதேவையானவ பிரமாண்டம் மட்டுமே பாகுபலி சரிவரும்.மக்களைக்கவரும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன. துப்பாக்கி வர்த்தகம் தொடர்பாக ஒரு வழக்கும், வரி மோசடி தொடர்பாக ஒரு வழக்கும் அவர் மீது, டலாவரே மற்றும் கலிபோர்னியா நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
கடந்த, 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்ற பின், அந்தாண்டு டிசம்பரில் இந்த வழக்குகள் தொடர்பாக ஹண்டர் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி வர்த்தக மோசடி வழக்கில், 17 ஆண்டுகள் வரையும், வரி ஏய்ப்பு வழக்கில், 25 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதைத் தவிர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், பெட்ரோலிய துரப்பண ஒப்பந்தம் மற்றும் சீனாவுடன் சில வர்த்தக ஒப்பந்தங்களும், ஜோ பைடன் பெயரைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அமெரிக்க சட்டங்களின்படி, அதிபராக உள்ள ஒருவர், சிலருக்கு பொது மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது.
அதை நீதிமன்றங்களும் கேள்வி எழுப்ப முடியாது.
ஆனால், தன் மகன் அல்லது குடும்பத்தாருக்கு அதுபோன்ற எந்த ஒரு சலுகையும், மன்னிப்பும் வழங்க மாட்டேன் என, ஜோ பைடன் பலமுறை கூறியுள்ளார். கடந்த ஜூனில் ஹண்டர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், இதை ஜோ பைடன் உறுதிபடுத்தியிருந்தார்.
இந்நிலையில் அதிபர் பதவியில் இருந்து விலக இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தன் மகன் ஹண்டர் பைடனுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான உத்தரவை, அதிபர் ஜோ பைடன் நேற்று பிறப்பித்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்குகளில் ஹண்டர் பைடனுக்கு எந்த தண்டனை விதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட மாட்டார்.
"தனது மகனை விடுவித்ததும் இல்லாமல்
' ஜோ பைடன் நீதி தவறிவிட்டார். தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.கடந்த, 2021 ஜனவரியில் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து தாக்கி,தீவைத்ததாக , என் ஆதரவாளர்கள் பலர் தற்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இதுபோன்ற பொது மன்னிப்பை பைடன் வழங்கவில்லை.நீதி தவறிவிட்டார்
இடதுசாரி முட்டாள்கள் வெட்டியாக மக்கள்நலன் என உழைக்கிறார்கள்.என்றும் டிரம்ப். கூறியுள்ளார்.