துள்ளும் பணம்?

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பலத்த போராட்டத்துக்குப்பின் 23ஆண்டுகள் கழித்து நீதிமன்ற ஆணைப்படி நடை பெற்றத் தேர்தலில் நீதிக்கான அணி  அனைத்து பதவிகளையும்வென்றது.

போலிஊடகர்சவுக்குசங்கர்கூட்டாளிகளான25 வருடமாக தேர்தல் நடத்தாத அசதுல்லா,பாரதி தமிழன் என்கிறRSS பெருமாள், குபேந்திரன், ஆதரவு பெற்ற RK,shabeer, Sp Lakshmanan, Viswa (a) viswanathஆகியோர் தோற்றார்கள்.
மயோட் தீவை உருக்குலைத்தது சிடோ புயல்.குடியிருப்புகளை குப்பைமேடுகளாக மாற்றிய சூறாவளி காற்று 1000 பேர் #பலி என தகவல்.
நம் பலம் நமக்கு தெரியவில்லை தமிழ்நாட்டில் பாஜ வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி 
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி.

துள்ளும் பணம்? மோசடி!

தற்போது இணையதளத்தில் குங்குமப்பூ மோசடி, ஜம்ப்டு டெபாசிட் (ஜேடி) ஆகியவை புதுசாக அறிமுகமாகி உள்ளது.


இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சப்ரான் முதலீடு மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது.


சமூக வலைதளமான பேஸ்புக் வாயிலாக உலக வங்கியில் வேலை பார்ப்பதாக கூறி அறிமுகமாகும் நபர், பொதுமக்களிடம் குங்குமப்பூ உலகில் பல மருத்துவ தேவைக்காக பயன்படுகிறது என்றும் அதை மொத்தமாக உலக வங்கிக்கு சப்ளை செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறுவர்.


அமெரிக்காவில் உள்ள மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடம் குங்குமப்பூவை வாங்கி உலக வங்கிக்கு சப்ளை செய்தால் அதில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விடுவர்.


சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த பெயர்களில் வரும் மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட நபரிடம் நேரில் சென்று (அ) மொபைல் போன் மூலமாக விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரில் அணுகி உறுதி செய்து கொள்ள வேண்டும். இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்து ஜம்ப்டு டெபாசிட் (ஜேடி), சைபர் குற்றங்களில் இது லேட்டஸ்ட் ரிலீஸ். கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.

யுபிஐ வாடிக்கையாளர்களை குறி வைத்து நடத்தப்படும் சைபர் கிரைம் இது.


முதலில் உங்கள் கணக்கில் ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்படும். நிஜமாகவே, அவ்வாறு வரவு வைக்கப்பட்டதற்காக ஒரு எஸ்எம்எஸ் வரும். நாமும் ஆர்வமாக எங்கிருந்து பணம் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முற்படுவோம்.


இதற்கிடையில், உங்களுக்குப் பணம் அனுப்பியவர் ஒரு வித்ட்ராவல் ரெகியுஸ்ட்-ம் அனுப்பி இருப்பார். அவசரமாக நீங்கள் யுபிஐ செயலியை திறந்து பின் என்டர் செய்து விட்டால் மேட்டர் ஓவர். அவர் அனுப்பிய வித் ட்ராவல் ரெகியுஸ்ட் அக்செப்ட் ஆகிவிடும்.


இதன் மூலம் ஒரு பெரிய தொகை கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து காணாமல் போய்விடும். என்ன நடக்கிறதென்று புரிவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.


கொத்துக் கொத்தாக இந்த ஜே.டி கிரைமில் மக்கள் ஏமாந்து வருகின்றனர்.

இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?


பணம் வந்து இருக்கிறது என எஸ்எம்எஸ் வந்தால், உடனே யுபிஐ செயலியை திறக்கக் கூடாது. குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது பொறுமை காக்க வேண்டும்.


எந்தவொரு வித்ட்ராவல் ரெக்யுஸ்ட்-ம் “வேலிடிட்டி டைம்” என்று ஒன்றுள்ளது. நீங்கள் அரை மணி நேரம் காத்திருப்பதால், அவர்கள் அனுப்பியுள்ள ரெக்யுஸ்ட் காலாவதி ஆகிவிடும். எனவே, பணம் வந்து இருக்கிறது என்று தெரிந்தபின், “யார், என்ன, ஏன்” என்று தெரியாமல் காத்திருப்பது கடினம், பலராலும் முடியாது. சாதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்கள் வந்தாலே பார்க்காமல் இருப்பது சிரமம்.

அதிலும் பணம் வந்திருக்கிறது என்றால் ?

இந்த உளவியல் தந்திரம் தான் ஜம்ப்டு டெபாசிட் கிரைமின் தூண்டில்.

இதில் சிக்காமல் இருக்க வேண்டும். “ஒரு பொய் சொன்னா, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்” என்று சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.


ஏமாற்றுபவர்களின் ஆயுதம் பொய் மட்டுமல்ல. அதில் கலந்திருக்கும் சிறுதுளி உண்மையும். ஜம்ப்டு டெபாசிட்டுக்கும் இது பொருந்தும். எனவே, இந்த புதுவகையான சைபர் குற்றங்களில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.


இது பற்றி சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, இந்த புதுவகையான ஜம்ப்டு டெபாசிட் பற்றிஇது வரை எந்த புகாரும் வரவில்லை.

இருப்பினும், இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அப்பகுதியில் இன்று (டிச.,16) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும். குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி நகரும்.

தமிழகத்தில் டிச., 17 மற்றும் 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?