ஏன் செலவிடனும்

 'ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் 1670ம் ஆண்டு முதல் இதுவரை 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பு' அமைச்சர்கோவி.செழியன்பெருமிதம்.ஆனால் ஆவணங்களைத் மாற்றுவதில்  முதன்மை பாஜக,தானே?

எந்த சட்டத்தின் மூலமாகவும் இந்தி, சமஸ்கிருதத்தை ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்க கூடாது. சொந்த விமானமே இல்லாத ஒன்றிய அரசுக்கு எதற்கு விமானதுத்துறை.- மாநிலங்களவையில் திமுக எம்.பி டாக்டர் @கனிமொழி சோமு .

துறையூர் அடுத்த புளியஞ்சோலை கிராமத்தில் ,நிலத்திற்கு மேல் காய்த்து தொங்கும் வேர்கடலை.

பெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு இன்று சென்னை வருகை.எதற்கு இவர்கள் பார்த்து?நிச்சயமாக மோடி ஒரு பைசா கூட தரப்போவதில்லை.இந்த கிழக்கு உணவு,வாகன வசதி,தங்க வசதின்னு வேண்டிய தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிடனும்?



சபாநாயகர்
அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வின் ஆர்.எம்.பாபுமுருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில்  "ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவது என்பது இயல்பு. அப்படி இருக்கையில் இதில் என்ன அவதூறு உள்ளது. நமது ஜனநாயம், சட்டம் ஒரு உறுப்பினர் மற்றொரு கட்சிக்கு செல்வதை அனுமதிக்கிறது. இதில் அவதூறு ஒன்றும் இல்லை." என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளன. மனுதாரர் கோரிக்கையை ஏற்று மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து அப்பாவுக்கு எதிரான அவதூறு மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு.


தாம்பரத்தில் கழிஙு நீர் குடித்து ஒருவர் பலி எனத்தகவல் வெளியாகி போராட்டம் நடக்கையில் நகராட்சி ஆணையர் சனிக்கிழமையில் இருந்து  தாம்பரம் நகராட்சி குடிநீர் விநியோகமே நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ஏற்படும் அமளி துமளி காரணமாக நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த முடியவில்லை. இதற்கிடையில், முன்னதாக பேசிய நாடாளுமன்ற எதிர்க்ட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கெளதம் அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்றார். 


இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் மற்றும் சம்பல்பூர் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு உள்ளிட்ட விவகாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.இந்த நிலையில், இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அதன்படி இன்று எதிர்க்கட்சிகள், மோடியும் அதானியும் ஒன்றுதான் என்ற பதாகைகளை ஏந்தியப்படி காட்சியளித்தனர். மேலும், அந்த வாசகம் பொறித்த டி-சர்ட்களையும் அணிந்திருந்தனர்.இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியும் கலந்துகொண்டார்.


அப்போது அதானி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்கா அதானியின், அதானி கீரின் எனர்ஜி என்ற நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது சுமார் 2 ஆயிரத்து 239 கோடிகள் வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அதானி மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.இதற்கிடையில் முன்னதாக இது தொடர்பாக அதானி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அதானி மீது அமெரிக்க விசாரணை அமைப்பு குற்றஞ்சாட்டவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்த விளக்க அறிக்கையை தொடர்ந்து, அதானி பங்குகள் மீண்டும் உயர்வு பெற்றன. இந்நிலையில் மீண்டும் இந்தப் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மகன் சிறைக்கு செல்லும் முன், நீதிமன்ற வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த மன்சூர் அலிகான் வேன் அருகில் காவல்துறை வாகனம் அருகில் சென்று மகனுக்கு புத்திமதி கூறியுள்ளார்.

மகன் சிறைக்கு செல்லும் முன், மன்சூர் அலிகான் வேனை சுற்றி வந்து, “கஞ்சா எல்லாம் அடிக்கக் கூடாது. ஏன் தப்பு பண்ணுற. தைரியமா இரு; புத்தகம் எல்லா படி. நிறைய புத்தகங்கள் படி. தெம்பா, தைரியமாக இரு, ஏன் தப்பு பண்ற, கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா? சாப்டியா” என்று கேட்டுள்ளார்.

தொடர்ந்து நிதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கஞ்சா வியாபாரிகளிடம் என் மகன் நம்பர் இருந்ததாக தற்போது என் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். என் தொலைப்பேசியிலும் பல நடிகைகளின் நம்பர் உள்ளது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் எப்படி கிடைக்கிறது. டாஸ்மாக்கை ஒழியுங்கள்.என்று உணர்ச்சிவசப் பட்டார்.


அவரதுமகன் கஞ்சா உபயோகத்தார் என கைதாகவில்லை. மாணவர்களுக்கு கஞ்சா விற்றார் என்று தான் கைது.

டாஸ்மாக் இருக்கும்போதே அதிக போதை,வாசம் வராது,என கஞ்சா,போதை மாத்திரை உபயோகிக்கிறார்கள் டாஸ்மாக்கை மூடினால் அந்த போதைவிரும்பிகளும் கஞ்சா,மாத்திரை என்றுதானே அலைவார்கள்? கள்ளக்குறிச்சி சம்பவம் டாஸ்மாக் இருந்தும் அதிபோதை விரும்பியவர்களால்தானே நடந்தது!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?