தப்­புத் தாளங்­கள்

 புற்றுநோய்க்கு எதிரான புதிய தடுப்பூசி ரஷ்யஅறிவியலார்கண்டறிந்துள்ளனர்.இந்த தடுப்பூசி2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நோயாளிகளுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

”நான் ஒரு கிறிஸ்தவன், நான்  ஒரு  முஸ்லீம், நான் ஒரு இந்து. நீங்கள் நீங்கள் எப்படி நினைத்தாலும் அப்படியே இருப்பேன். நான் எல்லாருக்கும் பொதுவானவன். ” - துணை முதலமைச்சர் உதயநிதி.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. டுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்: இந்திய வானிலை மையம்..
ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடுநெல்லையைச் சேர்ந்தவிக்னேஷ் உயிரிழப்பு - 2 பேர் காயம்.






பழ­னி­சா­மி­யின் 

தப்­புத் தாளங்­கள்

பேசத் தெரி­யா­த­வர் கூட்­டத்­தில் உள­று­ப­வர் கெட்­டிக்­கா­ரர் என்ற நினைப்­பில் அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் உள­றிக் கொட்டி இருக்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி. அவர் சொல்­லும் புள்­ளி­வி­ப­ரங்­க­ளைப் பார்த்­தால் புல்­ல­ரிக்­கி­றது. அவர் பேசும் லாஜிக்­கு­க­ளைப் படித்­தால் சிரிப்பு  வரு­கி­றது.

இப்­போது நாம் பார்க்­கும் பழ­னி­சாமி, அனைத்­தி­லும் தோற்ற தோல்­வி­சாமி ஆவார்.

2019 – நாடா­ளு­மன்­றத் தேர்­தல், சட்­ட­மன்ற இடைத் தேர்­தல், 9 மாவட்ட

ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல்­கள்

2021 - – ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல்

2022 - – நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல்

2023 - – ஈரோடு இடைத்­தேர்­தல்

2024 – நாடா­ளு­மன்­றத் தேர்­தல் - – ஆகிய அனைத்­துத் தேர்­த­லி­லும் தோற்­ற­வர். இதன் மூல­மாக மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­தான் இந்த பழ­னி­சாமி. விக்­கி­ர­வாண்டி இடைத்­தேர்­த­லில் நிற்­கா­மல்   ஓடி­ய­வர் பழ­னி­சாமி.

பெரிய கூட்­டணி அமை­யா­த­தால் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­றா­ராம் பழ­னி­சாமி. நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. கூட்­டணி 47 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது. 

அ.தி.மு.க. கூட்­டணி 23 விழுக்­காட்­டை­யும், பா.ஜ.க. கூட்­டணி 18 விழுக்­காட்­டை­யும் பெற்­றுள்­ளது.

அ.தி.மு.க.வின் விழுக்­காட்­டை­யும் பா.ஜ.க. விழுக்­காட்­டை­யும் கூட்­டி­னால் 41 விழுக்­கா­டு­தான் வரு­கி­றது. 47 ஐ தாண்­ட­வில்லை. எனவே, பழ­னி­சாமி எந்­தக் கூட்­டணி அமைத்­தி­ருந்­தா­லும் தோற்­றுத்­தான் போயி­ருப்­பார்.

நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 40 தொகு­தி­யி­லும் தோற்­ற­வர் மட்­டு­மல்ல; 7 தொகு­தி­யில் டெபா­சிட் போய்­விட்­டது பழ­னி­சாமி கட்­சிக்கு. 12 தொகு­தி­யில் மூன்­றா­வது இடத்­துக்கு பழ­னி­சா­மி­யின் கட்சி போனது.

 கன்­னி­யா­கு­மரி தொகு­தி­யில் நான்­கா­வது இடம் போனது பழ­னி­சா­மி­யின் கட்சி. நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தலை 234 சட்­ட­மன்­றத் தொகுதி வாரி­யாக பகுத்­துப் பார்த்­தால் 222 தொகு­தி­க­ளில் தி.மு.க. கூட்­டணி அதிக வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது.

“222 சட்­ட­மன்­றத் தொகுதி வாரி­யாக தி.மு.க. கூட்­டணி அதிக வாக்­கு­கள் பெற்­றுள்­ளது” என்று ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் செய்­திக் கட்­டுரை வெளி­யிட்­டது பழ­னி­சா­மிக்­குத் தெரி­யுமா?

 32 மக்­க­ள­வைத் தொகு­தி­களை உள்­ள­டக்­கிய 192 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் முழு­மை­யாக தி.மு.க. கூட்­ட­ணியே அதிக வாக்­கு­க­ளைப் பெற்று சாதனை படைத்­துள்­ளது என்­றும், திரு­வள்­ளூர், தென்­சென்னை, அரக்­கோ­ணம், பெரம்­ப­லூர், கரூர், திருச்சி, கோவை, நாமக்­கல், நீல­கிரி, மதுரை, தென்­காசி, தூத்­துக்­குடி மக்­க­ளவை தொகு­தி­ க­ளில் அனைத்து சட்­ட­மன்­றத் தொகு­தி ­க­ளி­லும் அதிக வாக்­கு­க­ளைத் தி.மு.க. கூட்­டணி பெற்­றுள்­ளது .

மக்­க­ள­வைத் தேர்­தல் வாக்கு விவ­ரங்­க­ளின் படி 8 சட்­ட­ச­பைத் தொகு­தி க­ளில் மட்­டுமே அ.தி.மு.க. முன்­ன­ணி­யில் இருக்­கி­றது. 3 தொகு­தி­க­ளில் மட்­டுமே பா.ம.க. அதிக வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது.

 2 தொகு­தி­க­ளில் மட்­டுமே தே.மு.தி.க. வேட்­பா­ளர்­கள் கூடு­தல் வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ள­னர். பா.ஜ.க. எந்த சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும் கூடு­தல் வாக்­கு­களை வாங்­க­ வில்லை என்­றும் ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் சொல்லி இருந்­தது.

பழ­னி­சா­மிக்­குப் புரி­யுமானால், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடக்­கும் போது சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்­தி­ருந்­தால் பழ­னி­சாமி கட்­சிக்கு 8 சீட்­தான் கிடைத்­தி­ருக்­கும். இது எது­வும் புரி­யா­மல், கத்­திக் கொண்­டி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.

இவ்­வ­ளவு தைரி­ய­சாலி என்­றால் விக்­கி­ர­வாண்­டி­யில் பழ­னி­சாமி போட்­டி­ யிட்­டி­ருக்­க­லாமே? 

ஏன் ஓடிப் பதுங்­கி­னார்? 

திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட்ட அன்­னி­யூர் சிவா என்­கிற சிவ சண்­மு­கம், தனக்கு அடுத்­த­தாக வந்த பா.ம.க. வேட்­பா­ளரை விட 67 ஆயி­ரத்து 575 வாக்­கு­க­ளைக் கூடு­த­லா­கப் பெற்று வெற்றி பெற்­றார். 

1 லட்­சத்து 95 ஆயி­ரம் வாக்­கு­கள் பதி­வா­னது என்­றால் அதில் 1 லட்­சத்து 24 ஆயி­ரம் வாக்­கு­கள் உத­ய­சூ­ரி­ய­னுக்­குக் கிடைத்­துள்­ளது. மூன்­றில் இரண்டு பங்கு வாக்­கு­களை தி.மு.க. பெற்­றுள்­ளது. இது தெரிந்­து­தான் பழ­னி­சாமி தலை­ம­றைவு ஆனார்.

2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு பிறகு, 2022 ஆம் ஆண்டு உள்­ளாட்­சித் தேர்­தல் நடந்­தது. 21 மாந­க­ராட்­சி­கள் -132 நக­ராட்­சி­கள் --- 435 பேரூ­ராட்­சி­கள் ---- என அனைத்­தை­யும் மொத்­த­மாக கழ­கக் கூட்­டணி கைப்­பற்­றி­யது.

கோவை, திருப்­பூர், சேலம், ஈரோடு ஆகிய மாந­க­ராட்­சி­க­ளைக் குறி வைத்து களம் இறங்­கி­யது அ.தி.மு.க. பழ­னி­சாமி கட்­சிக்கு மரண அடி­தான் கிடைத்­தது.

கோவை­யில் மொத்த வார்­டு­கள் 100. இதில் 3 இடங்­கள் அ.தி.மு.க. பிடித்­தது.

சேலத்­தில் மொத்த வார்­டு­கள் 60. இதில் 7 இடங்­க­ளைஅ.தி.மு.க. பிடித்­தது.

ஈரோட்­டில் மொத்த வார்­டு­கள் 60. இதில் 6 இடங்­க­ளைஅ.தி.மு.க. பிடித்­தது.

திருப்­பூ­ரில் மொத்த வார்­டு­கள் 60. இதில் 19 வார்­டு­களை அ.தி.மு.க. கைப்­பற்­றி­யது. இது­தான் அ.தி.மு.க.வின் கோட்­டை­யாக இவர்­கள் சொல்­லிக் கொண்ட மேற்கு மண்­ட­லத்­தின் நிலைமை ஆகும்.

சென்­னை­யில் மொத்­த­முள்ள 200 வார்­டு­க­ளில் 15 வார்­டு­க­ளும், 
மது­ரை­யில் 100 வார்­டு­க­ளில் 15 வார்­டு­க­ளும், 
திருச்­சி­யில் 65 வார்­டு­க­ளில் 3 வார்­டு­க­ளும், நெல்­லை­யில் 44 வார்­டு­க­ளில் 4 வார்­டு­க­ளும், 
கரூ­ரில் 48 வார்­டு­க­ளில் 2 வார்­டு­க­ளும், 
கட­லூ­ரில் 45 வார்­டு­க­ளில் 6 வார்­டு­க­ளும் ---- மட்­டுமே அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடிந்­துள்­ளது. 
தி.மு.க. வாக்­கு­களை மட்­டு­மல்ல, அ.தி.மு.க. ஆத­ரவு வாக்­கு­க­ளை­யும் சேர்த்து தி.மு.க. வாங்­கி­விட்­டது. 
இது­தான் உண்மை.

எனவே, தொண்டர்களை ஏமாற்றப் பொய்க் கணக்­கு­கள் சொல்­வதை விட்­டு­விட்டு மக்­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மான செயல்­க­ளைச் செய்­வ­தில் பழ­னி­சாமி கவ­னம் செலுத்த வேண்­டும்.

அதிமுக தொண்டர்கள் அடிமுட்டாள்கள் அல்ல!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?