கோடிகளின் நாயகனே...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எந்த மாதமும் இல்லாமல் இந்த மாதம் உண்டியல் காணிக்கைகளில் 9 நாடுகளைச் சேர்ந்த 1,234 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள முதுநிலைக் கோயில்களில் இக்கோயில் முதன்மையானது. இங்கு, பக்தர்களின் காணிக்கை உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், திருக்கோயிலில் உள்ள தெய்வானை யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல் என, 30-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன.
உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.
புதிதாக குடமுழுக்கை முன்னிட்டு கூடுதலாக ஒரு உண்டியலும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இம்மாத உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட இந்த உண்டியல் காணிக்கைகளில் முதல் நாளில் 3,76,38,927 ரூபாய் உண்டியல் காணிக்கையாகவும், இரண்டாம் நாளில் 30,93,985 ரூபாய் என மொத்தம் 4,07,32,912 ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது.
மேலும், 1,908 கிராம் தங்கமும், 21,100 கிராம் வெள்ளியும், 26,100 கிராம் பித்தளையும் கீடைத்தது.
இதில் எந்த மாதமும் இல்லாத அளவுக்கு இந்த மாதம் வெளிநாட்டுக் கரன்சிகள் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
குறிப்பாக இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும், அரபு நாடுகளான சவூதி மற்றும் குவைத் நாடுகளிலிருந்தும் கரன்சிகள் உண்டியலில் வருவாயாகக் கிடைத்துள்ளன. மொத்தமாக 1,234 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
அதைவிட முக்கியம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளன .
ஓடிசா மாநில மதுபான உற்பத்தி நிறுவனமான பவுதா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 நாட்கள் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த பணத்தை எண்ண 36 இயந்திரங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
நாட்டின் வரலாற்றில் ஐடி ரெய்டில் இது மிகப்பெரியது, 10 நாட்கள் நடந்தது. 10 நாட்களில் அதிகாரிகளுக்குக் கிடைத்த பணம் 356 கோடிகள்.
உணவு கழிவு என்பது சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான டன் உணவுகள் வீணாக்கப்படுகின்றன. இது பசுமை இல்ல வாயு வெளியேற்றம், வளங்களை வீணடித்தல் மற்றும் நிதி இழப்பு ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது.
அதிலும் உணவில்லாமல் பலர் வாடுகின்ற சூழலில் இப்படி உணவை வீண்டிப்ப மிகப் பெரிய குற்றம்.இந்தியாவில் பலர் ஒருவேளை உணவிற்கு அல்லாடுகின்றனர். பட்டினி நாடுகள் பட்டியலில் முதல் வரிசையில் இந்தியா இருக்கும்
அடுத்து அமெரிக்கா,ஜப்பான்,ஜெர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து,ரஷ்யா,ஸ்பெயின்,ஆஸ்திரேலியா முதல் பத்து நாடுகளாக உள்ளது.
உணவை வீணாக்குவதற்கு பல காரணங கள் உள்ளது.
பல்வேறு கலாச்சார, பொருளாதார போன்றவை சில நாடுகளில் அதிகளவில் உணவு வீணாகக் காரணமாகிறது..
பணக்கார நாடுகளில், அதிக கொள்முதல், அதிக நுகர்வு விகிதங்கள் மற்றும் கடுமையான உணவுத் தரத் தரநிலைகள் ஆகியவை கணிசமான உணவு வீணாகிறது. வளரும் நாடுகளில், விநியோகம் செய்வதில் உள்ள கறைபாடுகள்,
திறமையற்றபொறுப்பற்ற அரசு,அலுவலர்கள் மற்றும் சரியான சேமிப்பு கட்டமைப்பு இல்லாமை ஆகியவை முக்கிய காரணங்களாக அமைகின்றது. உணவை வீணாக்குவது. முதலிடத்தில் உள்ள சீனாவில்.91 மில்லியன் டனகள் இரண்டாமிடத்தில் உள ள இந்தியாவில்.68மில்லியன் டன்களாகவும் உள்ளது என புள்ளிகள் விபரமளிக்கிறது.
மீனில் ஏராளமான புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
100 கிராம் வேகவைத்த மீனில் 206 கலோரி, 22 கிராம் புரதம், 12 கிராம் கொழுப்பு உள்ளது. மேலும், இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அதிக அளவில் உள்ளது.
அனைத்து மீன்களிலும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் நல்ல ஆதாரங்களாக உள்லன.
, மீனில் உள்ள ஒமேகா 2 மற்றும் பிற ஊட்டசத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மாரடைப்பு பிரச்சனையையும் குறைக்கிறது.என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வாம் இருமுறை உண்டாலே போதும் என்கிறார்கள்.
மீன் நாற்றம் பிடிக்காவிட்டாலிம் மீன் குழம்பு கமகமக்கும்.அப்படியே,அப்போதே சாப்பிடுங்கள்.