கும்ப மேளாவில்

புண்ணிய பலிகள்? மதநம்பிக்கை சார்ந்த பெருங்கூட்டங்களில் பாதுகாப்பு என்பது எப்போதுமே கேள்விக்குறியாக இருக்கிறது. 1992ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் ஏற்பட்ட நெருக்கடியில் 50க்கும் மேற்பட்டவர்கள் குளத்திலேயே பிணமாகக் கிடந்தார்கள். மீட்கப்பட்ட உடல்களைக் கடந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கணக்கில் வராமலேயே போனது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா தனது தோழியுடன் சென்று மகாமகக் குளத்தில் தனி இட வசதியுடன் புனித நீராடினார். இருவரும் நீராடுவதற்கான ஏற்பாடுகளிலும் பாதுகாப்பிலும் போலீசாரும் மற்ற அதிகாரிகளும் அக்கறையாக இருந்ததால், பொதுமக்கள் அந்தப் பக்கம் நீராட முடியாமல் வேறுபக்கம் செல்லவேண்டியிருந்ததால், இதனால் ஏற்பட்ட நெருக்கடியில்தான் உயிர்கள் பலியாயின. அத்திவரதர் தரிசனம், அண்மையில் ஒரு சாமியாரைப் பார்ப்பதற்காக வந்தவர்களிடம் ஏற்பட்ட நெருக்கடி இவற்றால் பலர் உயிரிழந்ததையும் மறக்க முடியாது. இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நடக்கிறது என்றபோதே அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்தன. காரணம், உத்தரபிரதேசத்தில் தி...