இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனையூரில் நிவாரணம்!

படம்
  மக்களவையில் அதானி பெயரை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள்  எதிர்ப்பு.மசோதாவுக்கு தொடர்பாக மட்டும் எதிர்க்கட்சியினர் பேசுமாறு சபாநாயகர் கூற'இந்திரா காந்தி குறித்து பாஜக எம்.பி. பேசியது மட்டும் மசோதாவுக்குள் வருகிறதா? அதை ஏன் அனுமதித்தீர்கள்?' என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி. பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம். ஆந்திரா, தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவு. இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த  ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி,வங்கதேச பிரதமர் பதவில் இருந்து பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக  தாக்குதல்கள் நடத்தப்படு வருகின்றன எனக்கூறி  சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவர் மீது வங்கதேசக் கொடியை அவமதித்ததாகக் கூறி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25ம் தேதி  கைது செய்யப்பட்டார்.  சட்டோகிராம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீ...

பள்ளித் தளமனைத்தும்

படம்
  சோதிடம் செய்வோம்! குஜராத் , சூரத்தில் உள்ளது வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் (Veer Narmad South Gujarat University – VNSGU).  இந்த வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் அடிக்கடிவினாத்தாள் கசிவைத் தடுக்கவுமல, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல முற்சிகளை நிர்வாகத்தினர் செய்தாலும் கிரக கட்டங்கள் சரிவர அமையாமல் தொடர்ந்துகசிவு ஏற்பட்டிக் கொண்டே இருந்த்து. இதற்கு கிரக அமைப்புகள் சரிவர இல்லாத்தே காரணம் என்பதை  நிர்வாகம் பலனா்வு செய்து கண்டுணர்ந்த்து.இதனால் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்ட து. வாஸ்து சாஸ்திரத்தின்படி வகுப்பறைகளை மாற்றினால் வினாத்தாள் கசிவு தடுக்கப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என ஜோதிடர்  கூற,விணாத்தாளை பாதுகாப்பதால் எந்த பயனும் இல்லை. நல்லமுறையில் படிப்பிக்கும் ஆசிரியர்களை அமர்த்தி கற்பிப்பதால் தேர்ச்சி விகிதம் உயர வாய்ப்புள்ளது.ஆனால் அப்படி ஆசிரியர் கிடைப்பதை விட   சோதிட த்தீர்வே சரி ஆகும்.என எண்ணிய நிர்வாகம்  ஜோதிடர் கூறிய வகையில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வுசெய்தனர். அதன்  பின்னர்...

அமெரிக்க மிரட்டல்.

படம்
  பிரிக்ஸ் நாணயம் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இதில் இணைய விருப்பம் தெரிவித்தன. பிரிக்ஸ் டாலர் மாதிரி கடந்த 2 மாதம் முன்பு பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில்  பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கனா். இந்திய பிரதமர் மோடி இந்தியா சார்பில் கலந்து கொண்டார் உலக அளவிளான வளர்ச்சி, பாதுகாப்பு ய இஸ்ரேல் , ஈரான் போர் பதற்றம் ,நிறுத்தம் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் உலக அளவில் டாலரில் வணிகம் செய்வதற்கு மாற்றாக பிரிக்ஸ் உருவாக்க உள்ள கரன்சியில் வணிகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. டாலரை கொண்டு வணிகம் செய்தால், அமெரிக்காவை நம்பி உலக நாடுகள் இருப்பது போன்று நிலையை மாற்றுவதற்கு  தீர்வு காணபிரிக்ஸ் கரன்சி உதவும் என முடிவு செய்தனர். டாலருக்கு மாற்றாக 20  ஐரோப்பிய நாடுகள்...

கோடிகளின் நாயகனே...

படம்
  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எந்த மாதமும் இல்லாமல் இந்த மாதம் உண்டியல் காணிக்கைகளில் 9 நாடுகளைச் சேர்ந்த 1,234 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர்  நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.  தமிழகத்தில் உள்ள முதுநிலைக் கோயில்களில் இக்கோயில் முதன்மையானது.  இங்கு, பக்தர்களின் காணிக்கை உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், திருக்கோயிலில் உள்ள தெய்வானை யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல் என, 30-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன. உண்டியல் வைக்கப் பட்டுள்ளது. புதிதாக குடமுழுக்கை முன்னிட்டு  கூடுதலாக ஒரு உண்டியலும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இம்மாத உண்டியல் எண்ணும் பணி  நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட இந்த உண்டியல் காணிக்கைகளில் முதல் நாளில் 3,76,38,927 ரூபாய் உண்டியல் காணிக்கையாகவும், இரண்டாம் நாளில் 30,93,985 ரூபாய் என மொத்தம் 4,07,32,912 ரூபாய் வருவாயாக...

நியாயம் வேண்டாமா?

படம்
  9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல். சாத்தனுர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை. திரிபலா  திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறிது.  நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம்.  இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அநிகரிக்கிறநு. மோரில் திரிபலா கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி கலாத்திலிருந்தே இருந்துவருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.  நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில்...