வளர்ச்சி பெயரில் ரூ.2ஆயிரம் கோடி ஊழல்-‘


பொன். ராதாகிருஷ்ணன் ரூ.2ஆயிரம் கோடி ஊழல்!

‘மீண்டெழும் குமரி’ இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் 2ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.

 இந்த ஊழலில் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் அவருக்கு வேண்டிய ஒப்பந்தகாரர்களுக்கும் தொடர்பு உண்டு என ‘மீண்டெழும் குமரி’ இயக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

 குமரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நடை பெறும் நிகழ்வுகள் தொடர்பாக ‘மீண்டெழும் குமரி’ இயக்கத்தின் தலைவர் தாமஸ் பிராங்கோ தலைமை யில் அதன் நிர்வாகிகள் செய்தியாளர் களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறியதாவது:-

"குமரி மாவட்டத்திலிருந்து திரு வனந்தபுரத்திற்கு, கடற்கரை வழியாக வும், மலைப்பகுதி வழியாகவும், ராஜபாதை எனவும் 3 சாலைகள் உள்ளன.
திருவனந்தபுரத்திலிருந்து மார்த்தாண்டம் வழியாக வரும் ராஜபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவு படுத்த 2009 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
அந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் குமரி மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவை பூர்த்தியாகியிருக்கும்.

போக்குவரத்தை பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை.
 ஆனால் மாவட்டம் முழுவதும் சாலைகள் வாகனங்கள் சொல்லமுடியாத அளவுக்குமோசமான நிலையில் உள்ளது. அதை பற்றி மத்திய அமைச்சர் கவலைப்படாமல், மக்களுக்கு தேவையற்ற 70 கிமீ தொலைவுக்கு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சீரழித்து, நீரா தாரங்களை அழித்து நான்கு வழிச்சாலை அமைக்கின்றனர்.

தேவை யற்ற இந்த 4 வழிச்சாலை அமைக்க 1500 கோடி ரூபாய் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஊழல் நடந்துள்ளது.
குமரி மாவட்டத்தின் முக்கிய தேவை மின்சாரம்.
அதுகுறித்து மத்திய அமைச்சர் ராதா கிருஷ்ணன் ஒரு வார்த்தை பேசியிருக்கிறாரா?
 தண்ணீர் வசதிகள் குறித்து பேசியுள்ளாரா?
ஏனென்றால் இந்த 2 திட்டங்கள் மூலம் அவர் களுக்கு கமிஷன் கிடைக்காது. எனவே அவர் இதுகுறித்து பேசமாட்டார்.

குளச்சலில் உள்ள சிறிய துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கு பதிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கமிஷனுக்காக நடைமுறைசாத்தியமற்ற பெட்டக துறைமுகத் திட்டத்தை கொண்டுவர துடிக்கிறார்.
இது ஒரு ஏமாற்று திட்டம்.
 4 வழிச்சாலைக்கு அரசு போட்ட உத்தரவு ஒன்று;
 இவர்கள் நடைமுறைப் படுத்தும் திட்டம் ஒன்று.

 இந்த திட்டத்திற்காக சட்டவிரோதமாக மலைகளை உடைக்கிறார்கள்.
 மண் எடுக்கிறார்கள்.
 இவற்றை செய்வது இங்கு ள்ள மத்திய அமைச்சர்; அவருக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்கள்.
அவர்கள் இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.
அவர்கள்  இந்த கொள்ளைகளை மறைக்க தேசத்துரோகம், அந்நிய கைக்கூலிகள் என வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தைஉருவாக்குகிறார்கள். கொடும்பா விகளை எரிக்கிறார்கள்.

குமரிமாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் 2000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதை சிபிஐயிடம் ஒப்படைக்க உள்ளோம்.
பிரான்ஸ் செய்தியாளர்கள்.

மற்ற நாடுகளை விட இந்தியா வுடன் மிகவும் நட்புள்ள நாடு பிரான்ஸ்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சர்வதேச செய்தி நிறுவனத்தின் இரண்டு ஊடகவியலாளர்கள் இயற்கை வளச்சுரண்டல், கனிம கொள்ளை, மக்கள் பிரச்சனைகள் குறித்து செய்தி சேகரிக்க அவர்கள் இங்கு வந்தனர்.

அவர்கள் போட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ இங்கு வரவில்லை.
அதற்கான தேவையும் இல்லை.
எல்லாமே இன்று கூகுளில் கிடைக்கிறது.
கடற்கரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேட்டி எடுக்க வேண்டும் என என்னிடம் கேட்டபோது, நான் பாதிரியார் ஹில்டஸை அவர்களுடன் தொடர்புபடுத்தினேன்.
அவர்கள் அவ்வாறு மக்களை பேட்டி எடுக்க சென்றபோது, மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையில் உள்ள பாதிரியாரின் நண்பரை சந்திக்க சென்றனர்.
அங்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.
அவர்கள் கேமரா எதுவும் கொண்டு செல்லவில்லை. மணல் ஆலையில் செய்தி எடுக்க வேண்டிய அளவுக்கு ஒன்றும் அங்கு இல்லை.
அவர்கள் முக்கியமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டெர்லைட், கனிமகொள்ளை குறித்து செய்தி சேகரிக்கவே வந்தனர்.
வேறு எதற்காகவும் வரவில்லை.
 அவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்காக இந்தியாவுக்கு வர தயார் என கூறியுள்ளனர்.இதை வைத்து பாஜகவினர் அவர்கள் ‘பிரெஞ்சு உளவாளிகள்’ வந்துவிட்டனர்; நாட்டுக்கு ஆபத்து;
18 பேரை கொல்ல வந்தனர் எனபொய்க்கூச்சலிடுகின்றனர்.

தற்போது காவல்துறையையே ‘தேசதுரோகி யாக்கி’விட்டார்கள்.
ஆர்எஸ்எஸ் கும்பல் வட இந்தியாவில் செய்து வருவதைப்போல் இங்கும் செய்ய முயற்சிக்கின்றனர்.

அறிவியல்பூர்வ மாக கூறுவதனால், சரக்கு பெட்டக மாற்று முனையம் குமரி மாவட்டத் தில் வந்தால் குமரி மாவட்டம் அழியும்வாய்ப்பு உள்ளது.
இது சாத்திய மற்ற திட்டம். இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டால் பாதி குமரி மாவட்டம் கடலுக்குள் போய்விடும்."
                                                                                          -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 "2020க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு"...மோடி.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கார்ப்பரேட்களுக்கு "வெண்ணெய்".
 விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’


தமிழ்நாட்டின் மொத்த தென்னை சாகுபடி பரப்பளவு 4,34,875(2015) ஹெக்டேர் என அரசு புள்ளி விபரம் கூறுகிறது. இதில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையின் சாகுபடி பரப்புமட்டும் 53,000 ஹெக்டேர் என புள்ளி விபரங்கள்கூறுகின்றன.
 இதில் கணிசமான பரப்பளவு 2005-க்கு முன் நெல் பயிரிட்டு வந்த நிலங்களாகும்.
உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்களின் விலை உயர்வு, கட்டுப்படியாகாத நெல்லுக் கான விலை, தொடர்ந்து பொய்த்து வந்த மழை, ஆண்ட மற்றும் ஆளும் தேசிய கட்சிகளின் குறுகியமாநில நல அரசியல், சட்டவியல் நுட்பங்களால் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்த வழக்கு கள் போன்ற காரணங்களால் காவிரியில் தமிழ்நாட்டின் பங்கீட்டு நீர் கிடைக்காததால் வெறுத்துப் போன விவசாயிகள் ’குறிப்பாக கடைமடை விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறினர்.
உ.பி. கும்பமேளாவுக்கு 2500 கோடி
கஜா புயல் நிவாரணத்துக்கு 300 கோடி


நெல் சாகுபடியின் போது கடன்பட்டு தத்த ளித்த இந்தக் குடும்பங்கள் தென்னைக்கு மாறியபிறகு ஓரளவிற்கு நிறைவான வருமானத்தைப் பெற்றன. அந்த குடும்பங்கள் ஓரளவு நிமிரத் துவங்கின.
இப்பகுதிகளில் தொடர்ந்து பல்லாயிர க்கணக்கான விவசாயக் குடும்பங்களை வாழவைத்த பல மில்லியன் மடங்கு தென்னை மரங்கள்கஜா புயலால் அழிந்து வார்த்தைகளில் விவரிக்கமுடியாத சோகம் - ‘பொருளாதார நட்டம் ஏற்பட்டிருக்கிறது.
முதலமைச்சருக்கு இது உறைக்கவில்லை.

இந்த மாவட்டங்களின் அதிமுக அமைச்சர்களுக்காவது இது உறைத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இதுதான் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுகோட்டைக்கு அனுப்பிய இப்பகுதி மக்களின் சோகம்.
அதிமுக வை சேர்ந்த விவசாயிகளே கடும் கோபத்தில் உள்ளனர்.

கடந்த ஜுன்(2018) மாதம் எட்டு வழிச்சாலைக் கான நிலம் கையகப்படுத்தும் போது எழுந்த எதிர்ப்பு போராட்டங்களை அமைதிப்படுத்த ஒரு தென்னை மரத்திற்கு நிவாரணமாக ரூ.50 ஆயிரம்எடப்பாடி அரசு அறிவித்தது.

ரூ.50 ஆயிரம் எனஎவ்வாறு கணக்கிடப்பட்டிருக்கக் கூடும் என்பதை டெல்டா பகுதியின் தென்னை விவசாயிகளில் ஒருவரும் முன்னாள் சிபிஎம் ஒன்றிய செயலாளரு மான ஆவிக்கோட்டை சா.சாம்பசிவம் விளக்குகிறார்:

‘நாகை, திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு ஆறு வெட்டு; ஒரு வெட்டிற்கு பத்தாண்டுகளான நெட்டை குட்டை ரகத்தின் நியாயமான சராசரி 40 காய்கள்;
 ஒரு ஆண்டிற்கு 240 தேங்காய்கள்;
 மட்டை காயின் தோப்படி கொள்முதல் விலை சராசரிரூ.12 என வைத்துக் கொண்டால் 20 ஆண்டு களில் ஒரு மரத்தின் மூலம் கிடைக்கவிருந்த சராசரிவருவாய்(பராமரிப்பு செலவு நீங்கலாக) சுமார் ரூ. 58 ஆயிரமாகும்.

இதைத்தான் ஆளும் வர்க்கம் தனது மூளையிலிருந்தும் அதிகார வர்க்கம் தனதுமேசையிலிருந்தும் முற்றிலும் கார்ப்பரேட் வளர்ச்சியின் 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக அப்படி இப்படி கணக்கு போட்டு ரூ.50 ஆயிரம் என எடப்பாடி அரசு அறிவித்தது.

ஆனால், கஜாவில் வீழ்ந்த ஒரு தென்னை மரத்திற்கு அரசு வெறும் ரூ.1100 அரசு மட்டுமே அறிவித்துள்ளது.

அந்த விவசாயிகளின் இழப்பீடாக குடும்ப வாழ்வு நிவாரணமாக. ஒரு மரத்திற்கு ரூ.20 ஆயிரம் தமிழக அரசு தர வேண்டும்.

நிதி இல்லையென்றால் மத்திய அரசிடம் வற்புறுத்தி இதற்குத் தேவையான நிதியை பெற வேண்டும்.
                                                                                                              - நீடா சுப்பையா
=====================================================
ன்று,
டிசம்பர்-10.
மனித உரிமைகள் தினம்
தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
நோபல் பரிசு வழங்கப்படும் தினம்
இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
 ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)
=====================================================
தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது.

 இந்திய பெருங்கடலை ஓட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியம் 5.30 மணி நிலவரப்படி(நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் (12-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


அதன் பின்னரே, அது புயலாக மாறுமா? என்பது தான் தெரிய வரும். 

தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில் 12-ந்தேதி முதல் சென்னை உள்பட வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்.

 இது  புயலானால் உருவானால் புயலுக்கு ‘பெய்ட்டி’ என்று பெயரிடப்படும்.இப்பெயர் தாயலாந்து நாடு தேர்வு செய்தது ஆகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பணிந்து போன பேரரசு..,!

ஜி20 உச்சி மாநாடு கடந்த வாரம் அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில்நடந்து முடிந்திருக்கிறது.

வழக்கமாக இத்தகையமாநாடுகளின் முடிவில், உலகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பரஸ்பரம் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ளவும் உறுதியேற்றதாக உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை கையில் வைத்துள்ள நாடுகளின் தலைவர்கள் பேட்டியளிப்பார்கள்.

ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை.இந்த முறை வேறொன்று நடந்துள்ளது.

ஆனால் வெளியில் சொல்லப்படவில்லை. பிரகடனம் எதுவும் செய்யாமல் மாநாடு அறிவித்த செய்தி என்னவென்றால், "அமெரிக்கப் பேரரசே,உனக்கு விடை கொடுக்கிறோம்" என்பது தான்.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான வர்த்தக யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தயுத்தம், இந்த மாநாட்டில் உச்சக்கட்டத்தை எட்டும்என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பைஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் உருவாக்கியிருந்தார். சீனா தனது சொல்படி கேட்கவில்லை என்றால்; அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு உதவும் வகையில் செயல்படவில்லை என்றால், மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்; சீனாவின் ஏற்றுமதி பொருட்களின் மீது கடுமையான வரிகளை விதிக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உச்சகட்ட மிரட்டல் விடுத்திருந்தார்.



ஜி20 உச்சி மாநாட்டில் இது மிகப் பெரிய பிரச்சனையாக மாறும் என்றும், சீனாவுக்கு அது நெருக்கடியை தரும் என்றும் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் ஊதித் தள்ளின.

ஆனால், அர்ஜெண்டினா மாநாட்டில் நடந்ததோ வேறு.
வர்த்தக யுத்தம் தொடருமானால், அது அடுத்த கட்ட அழிவு யுத்தத்தைநோக்கியே செல்லும் என்று அமெரிக்க நிர்வாகத்தை எச்சரித்தது மக்கள் சீனம்.

இன்றைய நிலைமையில், ஆசியா - ஆப்பிரிக்கா- ஐரோப்பா - லத்தீன் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் அமெரிக்காவை விடவும் சீனா மிக நுணுக்கமான முறையில் தனது வர்த்தக தளத்தை விரிவுபடுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
பல நாடுகளோடு டாலரில் அல்ல,உள்ளூர் நாணயத்தில் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்வதென்றால், உலகின் பெருவாரியான பகுதியின்உற்பத்திச் சக்கரங்கள் சீனாவால் சுழற்றப்படுகிறது என்ற நிலைமை மேலோங்கி வருகிறது.அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை.

ஒன்று,வர்த்தக யுத்தத்தை முடித்து கொண்டு சீனாவோடு சமாதானமாக செல்ல வேண்டும்; அல்லதுஉலக சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கவேண்டும்.

 ஏனென்றால் உலகப் பொருளாதாரம் கட்டமைப்பு ரீதியாக அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து கைமாறிவிட்டது என்பதே உண்மை.வீராவேசத்தோடு பியூனஸ் அயர்ஸ் மாநாட்டிற்கு சென்ற டொனால்டு டிரம்ப், மாநாட்டின் முடிவில் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்.
வர்த்தக யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி கொள்வோம் என்று ஒப்புக் கொண்டார்.
அந்த செய்தி வெளிவந்தது.
மாநாட்டிற்குள் உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை எந்தவிதத்திலும் காவு கொடுக்க முடியாது என்ற நிலையை எடுத்தாததால் அமெரிக்கப் பேரரசு பணிந்து போனது.
 ====================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?