எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க?

இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி பாஜக,,இந்துத்துவா அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

அந்த புகைப்படத்தில், `இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன` என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் அதில், இம்மாதிரி உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுள்களின் சிலையை நாம் கண்டறியலாம்; இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்தது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அது ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் போல காட்சியளிக்கிறது. 

அங்கு ஆள் ஒருவரும் காணப்படுகிறார். 
மேலும் சில சிலைகளின் பின்புறம் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை கூகுளில் 'ரிவர்ஸ் இமேஜ் தேடல்' ஆய்வு செய்தால் இது ஒரு உண்மையான புகைப்படம் என்பது தெரியவருகிறது.அது கிடைத்திடம் வேறு பகுதி என்பது உண்மை எனத்தெரியவந்தது.

ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் உண்மை அதற்கு பாஜக,இந்துத்துவா அமைப்புகள் தரும் தகவல்கள் பொய்யானவை.

எகிப்தில், அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்ததாக எந்த ஓர் ஆதாரமும் இல்லை. 

கி.மு. 2500 முதல் கி.மு. 2350 வரை எகிப்தை ஆண்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சிலைகள் கிடைத்துள்ளன.

கடந்தவாரம் எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள், அரிய கல்லறை ஒன்றை கண்டறிந்தனர். அது 4,400 ஆண்டுகள் பழமையான இடம் என்றும், மதகுரு ஒருவர் புதைக்கப்பட்ட இடம் என்பதும் கண்டறியப்பட்டது.


கடந்த பல ஆண்டுகளில் இம்மாதிரியான தலம் கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என எகிப்தின் தொல்பொருள் ஆய்வு முதன்மை கவுன்சிலின் பொதுச் செயலர் முஸ்டஃவா வசிரி தெரிவித்துள்ளார்.

இவர்தான் சமூக வலைதளங்களில் வலம் வரும் அந்த புகைப்படங்களிலும் தென்படுகிறார்.

இந்த கல்லறை கெய்ரோவுக்கு அருகில் உள்ள சக்காரா பிரமிட் வளாகத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் பழங்கால எகிப்தின் எழுத்துமுறை, பழம்பெரும் எகிப்து மன்னர்களின் சிலை ஆகியவை கண்டறியப்பட்டன. 

அதில் அலங்கரிக்கப்பட்ட இடங்களில் ராஜ மதகுரு வாதாய் தனது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களுடன் இருப்பது போன்ற சிலைகளும் காணப்பட்டன.

பிபிசி உள்பட, நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் போன்ற செய்தி ஊடகங்களால் உலகம் முழுவதும் இந்த செய்தி வெளியிடப்பட்டது.
எகிப்தின் தொல்பொருளியல் அமைச்சகமும் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்திருந்தது.

இந்த தனியார் சமாதிகள், சக்காராவில் உள்ள பழம்பெரும் கல்லறைகளின் ஒரு பகுதியாகும். 
அங்குதான் பழம்பெரும் எகிப்திய பிரமிடுகளும் இருந்தன.

இந்த சமாதி மண்ணில் புதைந்திருந்ததால் அது திருடர்களிமிருந்து தப்பியது. 
இந்த சமாதியின் சுவர்களில் பழம்பெரும் எகிப்து குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவர்களில் இருந்த அலங்காரங்கள், பழம்பெரும் எகிப்து சமூகத்தில் கடவுளுக்கு நெருக்கமான இந்த மதகுருக்கள் முக்கியமானவர்களாக கருதப்பட்டனர் என்பதை காட்டுகிறது.

போலித் தகவல்களைத் தாங்கிய இந்தப் புகைப்படங்கள் அயோதியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்ட நேரத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இதேபோன்ற மற்றொரு போலிச் செய்தி சமூக ஊடகங்களில் வலம் வருவதை பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு கண்டறிந்தது. 


நவம்பர் 25ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என நடத்தப்பட்ட கூட்டத்தின் புகைப்படம் என பெரிய கூட்டத்தைக்காட்டும் படத்தை இந்துத்துவா அமைப்புகளின் சமூக வலைதளங்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டன. 

ஆனால் அது லிங்காயத்துகள் கூட்டத்தை  காட்டும்  புகைப்படம்.அதை வெட்கமே இல்லாமல் இந்துத்துவா செயல்பாட்டாளர்கள் தங்கள் கூட்டம் என்று காட்டி மாட்டிக்கொண்டார்கள்.

இப்படி போலியாகவும்,போட்டோஷாப் செய்தும் புகைப்படங்களை வெளியிடுவதையே பாஜக ,இந்துத்துவா அமைப்புகள் தங்கள் பரப்புரை கொள்கையாக வைத்துக்கொண்டு பலமுறை மக்கள் மத்தியில் அசிங்கப்பட்டுள்ளனர்.

ஆனால் போலி புகைப்படங்களை சமக வலைத்தளங்களில் வெளியுவதை மட்டும் வலதுசாரி இந்துத்வா,பாஜக அமைப்புகள் கைவிடாமல் இருக்கின்றன.
நன்றி: தமிழோசை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மோடி நிகழ்ச்சி.
3நாட்கள் திருமணம் ,
மரணங்களுக்கு  விடுப்பு.

பிரதமர் நரேந்திர மோடி,மகாராஷ்டிர மாநிலத்தில் செவ்வாயன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறுதிட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் தானே மாவட் டம் கல்யாணில் உள்ள பத்கே மைதானத்தில் மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டுவிழாவிலும் கலந்து கொண்டார்.


இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்ட விழாவிற்காக, சிலநாட்களுக்கு முன்னதாகவே பத்கே மைதானம் அமைந் துள்ள பகுதி போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதால், மக்கள் சொல்லொணா துயரத்தை அடைந்துள்ளனர்.

போலீசார் பிறப்பித்த கட்டுப் பாடுகளால் இங்குள்ள பொதுமக்கள் சித்ரவதையை சந் தித்துள்ளனர்.
பத்கே மைதானத்தின் அருகில் ‘லால்சவுக்கி’ என்ற மயானம் அமைந்துள்ளது.
பிரதமர் கலந்துகொள்ளும் விழா நடப்பதையொட்டி செவ்வாயன்று இந்த மயானத்தில் உடல் அடக்கம் எதுவும் நடைபெறாது என ‘கல்யாண்–டோம்பிவிலி மாநகராட்சி’ திடீரென அறிவித்துள் ளது.

 மாநகராட்சி ஊழியர் களும் விரைந்து வந்த, இந்தமயானத்தை இழுத்து மூடியுள்ளனர்.
யாராவது இறந்தால், அவர்களை அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்துக்குத் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இங்குள்ள வாத்வா மண்டபத்தில் நடைபெறுவதாக 3 திருமண நிகழ்ச்சிகளும், மோடியின் அடிக்கல் நாட்டு விழாவுக் காக ரத்து செய்ய வைக்கப் பட்டுள்ளன.
இது மக்களைக் கொதிப் பில் ஆழ்த்தியுள்ளது.
5 மாநிலத் தேர்தல்களில் தோற்றும்,நரேந்திர மோடியின் எதேச்சதிகாரப் போக்கு குறையவில்லை என்பதையே, இந்த சம்பவங்கள் காட்டுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
 ====================================================
ன்று,
டிசம்பர்-20.
உலக  மனித ஒருமைப்பாட்டு தினம்
சோவியத்தின் முதலாவது ரகசிய காவல்துறையான சேக்கா அமைக்கப்பட்டது(1917)
கார்டிஃப், வேல்சின் தலைநகராக அறிவிக்கப்பட்டது(1955)
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா., உடன்படிக்கை வியென்னாவின் கையெழுத்தானது(1988)
====================================================
சளி மற்றும் இருமல்
குளிர்காலம் நமக்கு  சளி மற்றும் இருமல் போன்றவற்றை உருவாக்கும்.
குளிர் மற்றும் வறண்ட காற்றை சுவாசிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

 வறட்டு இருமல் சிலருக்கு தொடர்ச்சியாக இருக்கும்.

பொதுவாக இருமல்,சளிக்கு தரப்படும் ஆங்கில மருந்துகள் கொடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும்.போதை,மயக்கம்,தூக்கக்கலக்கம் உண்டாக்குவதோடு உடலில் நீர்ச்சத்தை வெகுவாக குறைக்கும்.

எனவே அது போன்ற மருந்து மாத்திரைகள் இன்றி தொல்லைகள்  தராத நாம் அடிக்கடி பயன்படுத்தும் இயற்கை பொருட்களால்இருமல்-சளி தொல்லைகளை ஓரங்கட்டுவது பற்றி பார்ப்போம்.
சுரன் 20181220

 தேன் மற்றும் இஞ்சி எல்லோர் சமையல் அறையிலும் இருக்கக்கூடிய ஒன்று.

 ஒரு மேஜைக்கரண்டி தேனில் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிடலாம்.
 அல்லது அதிமதுரத்தை வாயில் அடங்கி வைத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதன் சாற்றை முழுங்கி வரலாம். 
இவ்வாறு செய்யும் போது வறட்டு இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும் .

தேனும், இஞ்சியும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இஞ்சியில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருக்கிறது.
 ஒவ்வாமையை நீக்கும் தன்மை தேனிற்கு உண்டு.
அதேபோல் அதிமதுரத்திற்கு சளியை கரைக்க கூடிய தன்மை  உண்டு.
 இவை மூன்றுமே சளியை கரைத்து தொண்டைக்கு இதமளிக்கும் குணமிக்கவை .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  "திறந்திடு தீசேம் "
அலிபாபா கதையில் அலிபாபா திருடர்கள் குகையை "திறந்திடு தீசேம் "என்று சொன்னவுடன் குகை திறந்து வழிவிடும்.
அதேபோல் சீனாவைச் சேர்ந்த அலிபாபா இணைய வர்த்தக நிறுவனம் குகையை மன்னிக்கவும் ஸ்மாட்ர் ஓட்டலை உருவாக்கியுள்ளது.

‘அலிபாபா’ நிறுவனம், அதன் முதல் ஸ்மார்ட் ஓட்டலை, ஹாங்சோ நகரில் துவக்கி உள்ளது.

இந்த ஓட்டலில், வாடிக்கையாளர்களுக்கு அறையின் சாவியோ அல்லது கார்டோ கொடுக்கப்படுவதில்லை.

அதற்கு பதிலாக, வாடிக்கையாளரின் முகத்தை வைத்தே அடையாளம் காணப்பட்டு, அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
இதற்காக அவர்களின் முகத்தை, ஒரு முறை, ‘ஸ்கேன்’ செய்தால் போதுமானது.

மேலும் விளக்குகள், திரைச்சீலை, ‘டிவி’ உள்ளிட்டவற்றை, குரல் வழி ஆணையின் மூலம் இயக்கிக் கொள்ள முடியும்.உணவு, காபி, மதுபானங்கள் ஆகியவை, ‘ரோபோ’ மூலமாக வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, இத்தகைய சேவைகள் வழங்கப்படுகின்றன.

அலைபேசி செயலி தரவிறக்கம் மூலம் அலிபாபா "திறந்திடு தீசேம் "என்று அறை எடுப்பது, வாடகையைக்கொடுத்து காலி செய்வது ஆகியவற்றை முடித்துவிடலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நமோ நாராயணா......?
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சூழலில் பிரதமர் மோடி, தேர்தலை எதிர்கொள்வது குறித்து நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன்  நமோ செயலி மூலம் கலந்துரையாடி வருகிறார்.

 அந்த வகையில், புதுச்சேரி  மாநில பாஜக நிர்வாகிகளுடன் நேற்று அவர் கலந்துரையாடினார். 
 அதில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். தொடர்ந்து மக்களை சந்தியுங்கள். கடந்த முறையை விட கூடுதல் இடங்களை பெற பாடுபடுங்கள். 
அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள் என்றார்.


இதனையடுத்து நிர்மல் குமார் ஜெயின் என்ற தொண்டர், மோடியிடம், 
"நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை வசூலிப்பதில் மட்டும் குறியாக உள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு,ஏழை மக்களுக்கு,விவசாயிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் மத்தியில்தான் பாஜகவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.அவர்கள் நிம்மதியாக இருக்க நடவடிக்கை எடுங்கள்"
 என கூறினார். 
இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி சிறிது நேரம் பதில் கூற முடியாமல் முழித்தார்.பின் சமாளித்துக்கொண்டு இறுகிய முகத்துடன் "நீங்கள் வியாபாரி. வர்த்தக ரீதியாக பேசுகிறீர்கள். நடுத்தர மக்களின் நலன் பாதுகாக்கப்படும்"
 என பதிலளித்தார். 
பாஜகவை தொண்டர் ஒருவரே மோடியிடம்  இவ்வாறு கேள்வி எழுப்பியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமோ நாராயணா என்று நாரதர் பாணியில் அவர் செய்த கலகம் நன்மையில் முடியட்டும். சரிந்துவரும் பாஜக செல்வாக்கை தூக்கி விட இது போன்ற கேள்விகள் தேவை.
மோடியம்,அமித்ஷாவும் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பாஜக தொண்டர்கள்தானே மக்களிடம் திட்டுகளை,கிண்டல்களை வாங்க வேண்டியுள்ளது.
தலைவர்கள் மக்களுக்கு நன்மை ஏதாவது ஒன்றாவது செய்தால்தானே தாமரை மலரும் என்று புலம்பியபடியே கலைந்து சென்றனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?