உண்மை வெளிவரக்கூடாது ...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற
கிளர்ச்சியின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய
புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது
வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடுக்க முயல்வதன் உள்நோக்கம் என்ன என்பது தெளிவு.
உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதே அவர்களது நோக்கம்.
இந்தப் பிரச்சனையில் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅயராத போராட்டத்தை நடத்தி வருகிறது.
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை மத்தியப் புலனாய்வுத்துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துசிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்
துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறைமற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றச்சதி, சட்டத்தை மதிக்காதபோக்கு, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல்,காயம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை உருவாக்குதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது தவறு என்று நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை அளித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅந்தக் குழு கூறியது அப்பட்டமான அத்துமீறல்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கை அசைவுக்கு ஏற்ப இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது அநீதியானது.
பல்வேறு அவக்கேடான குற்றச்சாட்டுகளுக்குஉள்ளான நீதிபதி தருண் அகர்வால் இந்தக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை தமிழகஅரசு வலுவாக எதிர்த்திருக்க வேண்டும் என்றுஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன்கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த வழக்கில், பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்டவர்களுக்கு அகர்வால் குழுவின் அறிக்கை நகலை அளிக்க மறுப்பதும், அந்த குழுவின் அறிக்கையை இணையத்தில் வெளியிட மறுப்பதும் அப்பட்டமான அத்துமீறலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எப்படியாவது ஆலையை இயங்க வைத்திட வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் துடிக்கிறது.
அதற்காக அனைத்து திருகுதாள வேலையிலும் ஈடுபடுகிறது.
மறுபுறத்தில் தமிழக அரசு, துப்பாக்கிச்சூட்டை மூடி மறைக்க முயல்கிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
===================================================
இன்று,
டிசம்பர்-08.
இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது(1864)
சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது(1949)
ருமேனியா அரசியலமைப்பு தினம்

மோடி ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இந்தியப் பொருளாதாரம் மீதான, நுகர்வோர் நம்பிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டு வருவது, ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, 2014-ஆம் ஆண்டில் மே மாதம், பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார்.
அதற்கு அடுத்த ஜூன் மாதம் சரிந்த, இந்திய பொருளாதாரத்தின் மீதான நுகர்வோரின் நம்பிக்கை, இப்போது வரை மீண்டெழவில்லை. மாறாக, மேலும் மேலும் சரிவையே சந்தித்து வருவதை ரிசர்வ் வங்கி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய பொது பொருளாதார நிலைமை பற்றி நுகர்வோர் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை, ‘தற்போதைய சூழ்நிலைக் குறியீடு (Customer Sensitive Information-CSI) மூலம் அளவிடுகிறார்கள். இதன்படி மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘சிஎஸ்ஐ’ குறியீடு, 111 ஆக இருந்தது.
இது 2016 நவம்பரில் 109 என்பதாக சரிந்து, தற்போது வரை தொடர்ந்து சரிவையே கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 செப்டம்பரில் 94.8 என்ற அளவிற்கு இறங்கிய சிஎஸ்ஐ குறியீடானது, அடுத்த ஒரு மாதத்தில், மேலும் சரிந்து, 2018 நவம்பரில் 93.9 புள்ளிகள் என்ற மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, வேலைவாய்ப்பு, விலைவாசி, தனிநபர் வருமானம், செலவு ஆகியவை குறித்து, நாட்டின் 13 நகரங்களில், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தி ரிசர்வ் வங்கி, இந்த முடிவுக்கு வந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட மக்களில் சுமார் 45.2 சதவிகிதம் பேர், தற்போதைய பொதுப் பொருளாதார நிலைமையானது, ஓராண்டுக்கும் மேலாகவே மோசமான நிலையில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்பிருந்தே வேலைவாய்ப்புக்கள் குறைந்து விட்டது என்று 47.2 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதாவது 2014 மார்ச் மாதத்தில் 28.7 சதவிகிதம் பேர் மட்டுமே, தங்களின் வேலைவாய்ப்புக்கள் குறைந்து விட்டதாக தெரிவித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் நாட்டின் பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளதாக 33.2 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
அடுத்த ஆண்டு பொருளாதாரம் மேம்படுமா?
என்ற கேள்விக்கும் 53.6 சதவிகிதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
29%பேர்கள் மட்டுமே 2018 நவம்பரில் தங்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
‘புதிய ஜனநாயகம்’ மாத இதழுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகள்!
34ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ‘புதிய ஜனநாயகம்'. மார்க்சிய - லெனினியத்தின் அடிப்படையில் வெளிவரும் ஓர் அரசியல் இதழ், வெள்ளிவிழாவைக் கடந்து பொன்விழாவை நோக்கி நடைபோடுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை.
மட்டுமல்ல கட்டடம் - கட்டடம் எழுப்புவதற்கான சாரம்... என கட்சியையும் பத்திரிகையையும் லெனின் ஒப்பிட்டதை; அறிவுறுத்தியதை இன்று வரை கடைப்பிடிப்பதும் ‘புதிய ஜனநாயகம்’ மட்டுமே.

ஆரம்பிக்கப்பட்ட நாள்
முதல் இன்றுவரை தனது கோட்பாடுகளில் இம்மியும் பிசகாமல், அழுத்தமாக தடம்
பதித்து வரும் இந்த இதழ் குறித்து ஒரு மத்திய தர வர்க்கத்து வாசகன் என்ற
அடிப்படையில் சிலவற்றை சொல்லலாம் என்றுத் தோன்றுகிறது.
முழுக்க முழுக்க இது தனிப்பட்ட ஒரு குட்டி முதலாளித்துவ பூர்ஷ்வாவின் / நுனிப்புல் மேய்பவனின் / அப்பட்டமான பிழைப்புவாதியின் / சூழலுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு பச்சோந்தியின் பார்வையில் அமைந்த நிலைத்தகவல். பக்க சார்பாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தகவல் பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.
‘புதிய ஜனநாயகம்‘ பத்திரிகை தொடங்கப்பட்ட காலகட்டம் வரலாற்றில் முக்கியமானது. நக்சல்பாரிகளின் எழுச்சி, அதனை தொடர்ந்து தோழர் சாரு மஜும்தார் தலைமையிலான அழித்தொழிப்பு நடவடிக்கைகள், அதனை இரும்பு கரம் கொண்டு நசுக்கிய மைய அரசின் நடவடிக்கைகள், மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அவர்களது ஆதரவு இல்லாமலும் தலைமைக் குழுவின் வழிகாட்டுதல் இல்லாமலும் நிர்கதியாக நின்ற தோழர்கள்...
ஆகியவற்றை முன்வைத்து எழுந்த விவாதங்கள், விமர்சனங்கள், உரையாடல்கள், மறுபரிசீலனை... என நீளும் வரலாற்றில் -
அழித்தொழிப்பு மற்றும் சாகச நடவடிக்கைகள் மூலம் புரட்சி வராது. மக்கள் ஆதரவுடன், மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் நடைபெறும் மக்கள்திரள் புரட்சி மட்டுமே வெற்றியை தரும். எனவே மக்களிடமிருந்து அந்நியப்படாமல், மக்களுடன் இணைந்து அவர்களை புரட்சிக்கு தயார்படுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் ‘புதிய ஜனநாயகம்’ செயல்படத் தொடங்கியது.
அரசியல் இதழ் மலர்ந்த போதே, கலை இலக்கிய இதழும் பூத்தது. அது ‘மன ஓசை'. பிறகு அந்த மா லெ இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக பிரிந்து சென்றவர்களின் கைக்கு ‘மன ஓசை' சென்று விட, ‘புதிய ஜனநாயகம்' சார்பில் ‘புதிய கலாச்சாரம்' என்னும் கலை இலக்கிய இதழ் மக்கள் மத்தியில் அறிமுகமானது.
அதேநேரத்தில் பிரிந்து சென்றவர்களின் சார்பில் ‘கேடயம்' என்னும் அரசியல் இதழ் வெளிவர ஆரம்பித்தது. இந்நிகழ்வு ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம். அல்லது முன் பின் நடந்திருக்கலாம்.
ஆண்டு அடிப்படையில் விவரங்களை துல்லியமாக சொல்ல முடியவில்லை.
தேவாரம் தலைமையிலான போலீசு படையால், புரட்சியாளர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் மக்கள் மனதில் அடையாளம் காட்டப்பட்ட தருணத்தில் ‘புதிய ஜனநாயகம்' இதழ் செயல்படத் தொடங்கியது.
எனவே இதழை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பெரிய சவாலாக இருந்தது.
மத்திய அரசில் இந்திரா காந்தியின் மரணத்தை அடுத்து ராஜீவ் காந்தி பொறுப்புக்கு வந்திருந்தார். சீக்கியர்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. தேசிய சுய நிர்ணய உரிமை குறித்த உரையாடல்கள் மீண்டும் பரவலாக எழுந்தன. தமிழகத்தில் எம்ஜிஆர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.
கறுப்பு ஜூலையை தொடர்ந்து ஈழப் பிரச்னை தமிழகத்திலும் கொழுந்துவிட்டு எரிந்தது. ஈழத்தில் இருந்த பல போராளிக் குழுக்கள் தமிழகத்தில் தங்களுக்கான ஆதரவை வேண்டி வருகை தந்திருந்தன.
சர்வதேச அளவில் ‘மார்க்சியம்' கொஞ்சம் கொஞ்சமாக தன் சக்தியை இழந்து வந்தது.
இந்த சூழலில் மார்க்சிய - லெனினிய அரசியல் இதழாக அறிமுகமான, ‘புதிய ஜனநாயகம்' மக்கள் மத்தியில் செல்வதற்காக தன் உயிரையும் பணயம் வைக்க வேண்டி வந்தது.
‘ஒடுகாலிகள்' மற்றும் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த மார்க்சிய கட்சிகளின் துர் பிரச்சாரத்தை எதிர் கொள்வது பெரிய சவாலாக இருந்தது. தவிர புரட்சிகர நடவடிக்கை குறித்து ‘புதிய ஜனநாயகம்' முன்வைத்த கருத்துகளை ஏற்காத பிற மா - லெ குழுக்களும் இதற்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கின.
அனைத்தையும் எதிர்கொண்டதுடன், அனைவரது கேள்விக்கும் தயங்காமல் விடையளித்ததன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மன்றத்தில் தனக்கான இடத்தை ‘புதிய ஜனநாயகம்' தக்க வைத்துக் கொண்டது.
மாதம் இருமுறையாக வெளிவர ஆரம்பித்த இதழ், பிறகு மாதப் பத்திரிகையானது.
கறுப்பு - வெள்ளையில் மட்டுமே அட்டை உட்பட அனைத்து பக்கங்களையும் நிரப்பிய இதழ், பிறகு அட்டைக்கு மட்டும் இரு வண்ணங்களை பயன்படுத்தி, இப்போது மல்டி கலர் அட்டையை தாங்கி வருகிறது.
உள்ளூர், தேச, சர்வதேச பிரச்னைகளை மார்க்சிய - லெனினிய அடிப்படையில் ஒவ்வொரு இதழிலும் ஆராய்வது என்ற அடிப்படையிலேயே முதல் இதழிலிருந்து இன்று வரை அனைத்துக் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன.
தொடக்கத்தில் பிரிந்து சென்றவர்கள் நடத்திய ‘கேடயம்’ இதழுக்கு பதில் சொல்வதற்காக சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன.
பிறகு அவை நிறுத்தப்பட்டன.
ஆரம்பம் முதலே, ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களை ஒவ்வொரு குழுக்கள் எதிர்த்திருக்கிறார்கள். எதிர்த்தும் வருகிறார்கள். ஆனால், உணர்சிவசப்படாமல் ஒவ்வொருவருக்கும் உரிய பதில்களை சொல்வதன் மூலம் இன்றுவரை இயங்கி வருகிறார்கள்.
அதனால்தான் எதிர்த்த குழுக்கள் காலவெள்ளத்தில் கரைந்திருக்கிறார்கள். ‘புதிய ஜனநாயகம்' மட்டும் எதிர் நீச்சல் போட்டபடி 34வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
தன் இதழின் வாசகர்கள் யார் என்பதில் ‘புதிய ஜனநாயகம்' தெளிவாக இருந்தது.
ஆலைகள், தொழிற்பேட்டைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவ - இளைஞர்கள், உதிரி பாட்டாளிகள் ஆகியவர்களை, அவர்கள் இடத்திலேயே தோழர்கள் சந்தித்தார்கள். இதழ்களை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆங்காங்கே வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு இதழ் வெளியானதும் அது குறித்து விவாதித்தார்கள். பேசியதை, ஆசிரியர் குழுவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள். தேவையானதை ஆசிரியர் குழுவும் ஏற்றுக் கொண்டது.
இதழும் வளர்ந்தது.
தலித் இயக்கங்கள் வீறு கொண்டு எழுந்த காலகட்டமும் இதுதான் என்பதால் இவர்கள் பெருமளவு இதழ் குறித்த பிரச்சாரத்தை முடுக்க வேண்டி வந்தது. தேர்தல் பாதையை திருடர் பாதை என அறிவித்த இவர்களுடன் தலித் சக்திகள் ஒன்றிணைய மறுத்தன.
வர்க்கமா? சாதியா? என்ற உரையாடல் வீச்சுடன் எழுந்தது.
காலம்தோறும் இவர்கள் மீது சுமத்தப்பட்டு வரும் ‘பார்ப்பனீய தலைமை' என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
தொடர்ந்து வந்த காலகட்டத்தில் சோவியத் யூனியன் சரிந்தது. மார்க்சியத்தின் எதிர்காலம் அவ்வளவுதான் என்ற மனநிலை மக்கள் மனதில் விதைக்கப்பட்டன. இந்திய அளவில் உலகமயமாக்கல் அறிமுகமானது. மக்கள் பண்டமாகி நுகர்வோராக மாற்றப்பட்டார்கள்.
இந்த மாற்றங்கள் அனைத்தையும் எதிர் கொண்ட பக்குவத்திலேயே ‘புதிய ஜனநாயகத்தின்' வெற்றி அடங்கியிருக்கிறது.
சிறுபத்திரிகை சூழலில் எழுந்த ‘பரிணாமம்’, ‘நிகழ்’ மற்றும் ‘நிறப்பிரிகையின்' கூட்டு விவாதம், ‘புதிய ஜனநாயக' தோழர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்திய போது அதற்கும் பதில் சொன்னார்கள்.
தங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் விலகாதபடி அமைப்பை, பத்திரிகையை காப்பாற்றினார்கள்.
தொடக்கம் முதலே ஈழப் பிரச்னையில் ‘விடுதலைப் புலிகளின்' பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து வந்த இவர்கள்தான், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ‘அது சரிதான்' என்ற தொனியில் ‘புதிய ஜனநாயக’த்தில் தலையங்கம் தீட்டினார்கள்.
‘புதிய கலாச்சாரத்தில்’ கட்டுரை எழுதினார்கள்.
தமிழகத்தில் அப்போது இருந்த பல ஈழ ஆதரவு குழுக்கள், ராஜீவின் மரணத்தை அடுத்து பம்மிப் பதுங்கியிருந்தன என்பதை நினைவில் கொள்வது நல்லது.
இந்த காலகட்டத்தில், அந்த மரணத்தை ஆதரித்து எழுதிய ஒரே இதழ், ‘புதிய ஜனநாயகம்'தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
மண்டல் கமிஷன் கொழுந்துவிட்டு எரிந்தபோது இட ஒதுக்கீடு தொடர்பான உரையாடல்களில் முக்கிய பங்கு வகித்தது ‘புதிய ஜனநாயகம்'. இதுகுறித்து தொடர்ந்து இதழ்களில் வெளியான கட்டுரைகள், பிறகு சிறு பிரசுரமாகவும் வந்தன.
இந்த 34 ஆண்டுகளை பின்னோக்கி பார்த்தால், சூழலுடன் தொடர்ந்து ‘புதிய ஜனநாயகம்' உரையாடல் நிகழ்த்தி வருவது புரியும். இந்த உரையாடல்களின் வழியே தன்னையும் மறுபரிசீலனை செய்து வளர்த்துக் கொண்டிருக்கிறது, இயக்கத்தையும் வளர்த்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயிலின் கருவறை நுழைவுப் போராட்டம், இறால் பண்ணை அழிப்பு போராட்டம், தமிழிசை இயக்கம், ரத யாத்திரை / ராம ஜென்ம பூமி எதிர்ப்பு, கோடம்பாக்கத்தில் ஃபெப்சி - படைப்பாளி பிரச்னை எழுந்தபோது தொழிலாளர்கள் பக்கம் நின்று அவர்களை ஒன்று திரட்டியது, தாமிரபரணி போராட்டம், டைட்டானியம் ஆலை எதிர்ப்பு, கோலா எதிர்ப்பு, மாங்கொல்லை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை, ஸ்டெர்லைட், மீத்தேன், மதவாத பாசிச எதிர்ப்பு... என தொடர்ந்து இயங்கியும், மக்களுடன் ஒன்றிணைந்து போராடியும் வருகிறது.
போராட்டத்துக்கான ஆயுதமாக ‘புதிய ஜனநாயகம்' திகழ்கிறது.
33 ஆண்டுகள் தொடர்ந்து இதழில் விளம்பரங்களை வெளியிடாமல், மக்களை சார்ந்து, மக்களுக்காக இயங்கி வரும் ‘புதிய ஜனநாயக' இதழ், மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.
இதழை தொடர்ந்து நடத்த பேருந்துகளிலும், ரயிலிலும் வியர்வை சிந்தி பிரச்சாரம் செய்து விற்கும் அனைத்து தோழர்களுக்கும் வணக்கங்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய உழைப்பிலும்தான் இதழ் வளர்கிறது, வளரும்.
துளிர்விடும் தனித் தமிழ் இயக்கங்களின் எழுச்சி, வர்க்க நலனை கணக்கில் கொள்ளாமல் சாதியை முன்னிறுத்தும் சாதி சங்கங்கள், கோட்பாடுகள் இல்லாமல் தடுமாறும் தலித் இயக்கங்கள், சர்வதேச அளவில் நடைபெற்று வரும் மாற்றங்கள், இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் இன அழிப்பு, பெருகி வரும் இணையதள பயன்பாடுகள், ஸ்மார்ட்போன் அதிகரிப்புகள், சிந்தனைகளை மாற்றும் appகள், ஆக்டோபாசாக விரிந்திருக்கும் நுகர்வு கலாசாரம் / மனப்பான்மை... என இப்போது ‘புதிய ஜனநாயகம்' இதழ் முன்னால் நிற்கும் சவால்கள் ஏராளம்.
உண்மையில் ‘புதிய ஜனநாயகம்’ தொடங்கப்பட்ட காலத்தை விட இப்போதுதான் அரசியல், கலாச்சாரம், பண்பாடு என சகல மட்டங்களிலும் நெருக்கடி அதிகம்.
அனைத்தையும் மார்க்சிய - லெனினிய அடிப்படையில் எதிர்கொண்டு மக்களை அணிதிரட்டும் வேலையில் ‘புதிய ஜனநாயகம்' எப்படி தொடர்ந்து இயங்கப் போகிறது என்பது இனிவரும் காலங்களில் தெரிய வரும்.
‘புதிய ஜனநாயகம்' இதழ் 34ம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு பின்னால் ரத்தத்தை வியர்வையாக சிந்தியிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.