தலை அல்லது மார்பில் குண்டு

தூத்துக்குடி நாசகார  ஸ்டெர்லைட்  ஆலையை மூடக்கோரி மக்கள் போராடியபோது காவல்துறையினர் அத்துமீறி கண்முடித்தனமாக் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில், 12 பேருக்கு தலை அல்லது மார்பில் குண்டு பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், உயிரிழந்தவர்களில் பாதிப் பேர் பின்பக்கம் இருந்து சுடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஸ்னோலினின் பின்மண்டையில் துளைத்த குண்டு வாய் வழியாக வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 40 வயதான ஜான்சியின் காதிலும், 34 வயதான மணி ரஞ்சனின் நெற்றியிலும் குண்டு பாய்ந்துள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------- 
 பொருளாதாரத்தை உடைத்த மோடி.

“இந்தியா அன்மேட்: ஹவ் தி மோடி கவர்மெண்ட் புரோக் தி இகானமி?” என்ற தலைப்பில் நூல் ஒன்றை யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“நான் எப்போதும் மோடியைப் பற்றி விமர்சித்து வருபவன் அல்ல.
மோடியின் தவறான பொருளாதார கொள்கைகள் ஏற்பட்ட விளைவுகளைத்தான் அவ்வப்போது நான் கூறி வருகிறேன்.
பிரதமர் மோடி மீது எனக்கு எந்த விதத்திலும் தனிப்பட்ட கோபம் இல்லை.
என்னை அமைச்சராக்கவில்லை என்பதற்காகவெல்லாம் நான் விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான்தான் 2014-ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோது, பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தலாம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தேன்.


எனவே, மோடியின் பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி, மேக் இன் இந்தியா உள்ளிட்ட பொருளாதார கொள்கைகள், திட்டங்கள் சார்ந்தே அவரை விமர்சிக்கிறேன்.
எந்த விதமான முதலீடும், தொழில்துறை வளர்ச்சியும், வேளாண்வளர்ச்சியும் இல்லாமலேயே 7.35 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி கண்டது, உலகிலேயே இந்தியப் பொருளாதாரம் மட்டும்தான். இது ஒரு மாயஜாலம்தான்.
அப்படிப்பட்ட இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு, மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அதனை மோடி தவறவிட்டுவிட்டார்.

 கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டது,
ஊழல்வாதிகளைப் பணக்காரர்களாகிவிட்டது.
பணமதிப்பு நீக்க முடிவை சாதகமாகக் காட்டி உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றியும் பெற்றது பாஜக.
ஆனால், பணமதிப்பு நீக்கத்தின் நோக்கத்தையும், முடிவையும் பார்த்தால் அது பூஜ்யமாக இருந்தது.

மோடி கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகப்பெரியத் தோல்வியாகும்.
 கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தேசிய உற்பத்தி போட்டித்திறன் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கியது. அந்த கவுன்சிலுக்கு தலைவராக வி. கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.
அதைத் தூசுதட்டி வைத்த மோடி வைத்த புதிய பெயர்தான் ‘மேக் இன் இந்தியா’.
எனவே, ‘மேக் இன் இந்தியா’ பாஜகவின் உண்மையான சிந்தனையில் உருவானது அல்ல.

மோடி 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக கூறினார். ஆனால், அவர் கூறியவை அனைத்தும், பக்கோடா விற்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், டீ விற்பவர்கள், செய்தித்தாள் விற்பவர்கள் ஆகியோரை மனத்தில் கொண்டு கூறியவையாகவும், படித்து முடித்த இளைஞர்களின் ‘கனவுவேலை’யைப் பற்றியதாக அல்லாமலும் போய்விட்டது.

இந்தியாவின் ஜிடிபி புள்ளிவிவரங்கள் இந்தியாவின் தகுதிக்கு குறைவாக இருக்கிறது.
ஜிஎஸ்டி சிறப்பான திட்டம்தான்.
பெரும்பாலான பொருட்களின் விலை குறைய இந்த வரி உதவியாக இருக்கும்.
ஆனால், மோடியும், ஜெட்லியும் தொடக்கத்திலிருந்தே, அதனை நடைமுறைப்படுத்திய விதம் சரியானதாக இல்லை.
அதனால்தான் இதுவரை 400 வகையான அறிவிக்கைகளும், 100 சுற்றறிக்கைகளும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரை மோடி அரசு என்பது ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்  போன்றது.
அதாவது, தவறான எண்ணங்களை சிறப்பாக காட்டியுள்ளது. சராசரி மக்களுக்கு எதிராக,கார்பரேட்களின் சொற்படி ஆட்சி செய்கிறார் மோடி.”இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகமீண்டும் ஆட்சிக்கு வராது என்பதில், எதிர்க்கட்சிகளை விட, பாஜக தலைவர்களே ஒரு உறுதியான முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதியவேலைகளை உருவாக்குவோம்;
 விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவோம்;
கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சத்தை செலுத்துவோம்; ஊழலை ஒழிப்போம்
என்று 2014 தேர்தலில் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

அப்படியிருக்கும்போது, மக்கள் நம்மைத் தோற்கடிக்காமல், பாராட்டு விழாவா நடத்துவார்கள்?
 என்ற அடிப்படையிலும், தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு இப்போதிருந்தே மனத்தை பழக்கிவிட்டால், ஏமாற்றம் அதிகம் இருக்காதுஎன்ற வகையிலும், பாஜகவினர் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரதமர் மோடியும் இதில் அடக்கம்.2019-இல் தொங்கு நாடாளுமன்றம்தான் அமையப் போகிறது என்றுஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப் பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ கூறி விட்டது.
பாஜகவுக்கு பல இடங்களில் தோல்வி உறுதி என்றும் வருத்தமே இல்லாமல் எழுதுகிறது.தோல்வியைத் தவிர்க்க, மோடிக்குப் பதில் நிதின் கட்காரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்றுஆர்எஸ்எஸ் விவசாயப் பிரிவு தலைவர் கிஷோர் திவாரி யோசனை கூறுகிறார்.

ஆனால், பாஜக வெற்றி பிரகாசமாக இருந்தபோது, நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர்;
இப்போது தோல்வி உறுதியான கட்டத்தில் நான் பிரதமர் வேட்பாளரா? என்று கட்காரி வெருண்டுஓடுகிறார்.

எப்போதுமே மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று தப்பிக்க முயலுகிறார்.
அதுமட்டுமல்ல, தன்னைப் போட்டியில் இழுத்துவிடும் பாஜக தலைவர்களைப் பார்த்து கடுப்படைந்துள்ள கட்காரி, ‘1972-ஆம் ஆண்டு வெளியான‘பாம்பே ஆப் கோவா’ திரைப்படத்தில் உணவு கேட்டு அழும் குழந்தையைக் கட்டுப்படுத்த, அதன் வாயில் துணியை வைத்துக் கட்டுவார்கள்.
 அதுபோல பாஜகவினர் வாயிலும் துணியை வைத்து அடைக்க வேண்டும்’ என்று கொந்தளித்துள்ளார்.


அனுமன் தலித்தாக இருந்தால் என்ன; ராகுல் காந்தியும் கோத்திரம்தான்எதுவாகவும் இருக்கட்டுமே, இதுவாபிரச்சனை..
இப்படி தேவையில்லாதவற்றை பேசுவதாலேயே பாஜக மீதுமக்கள் வெறுப்படைந்து வருகிறார்கள்என்பது இன்னுமா பாஜக தலைவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் காட்டமாக பேசியுள்ளார்.

பாஜக மீது மக்கள் வெறுப் பில் இருக்கிறார்கள் என்பதை போகிற போக்கில் ஒப்புக் கொண்டுள்ளார்.இவ்வாறு எல்லோருக்குமே தெரிந்ததோல்வி, பிரதமர் மோடிக்கு மட்டும் தெரியாமல் போகுமா?
அதுவும் 56 இன்ச் மார்பகலம் கொண்டவருக்கு..பாஜக-வினர் எல்லோரும் 2019 தேர்தல் தோல்வியைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பிரதமர் மோடி அதையும் தாண்டி, 2019 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், பிரதமர் இல்லத்தை காலி செய்வது தொடர்பாகவும், அந்தநேரத்தில் வேறு எங்கே குடியேறுவது? என்பது வரை இப்போதே திட்டமிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
 மறைந்த முன்னாள் பிரதமர்வாஜ்பாயியின் இல்லம் தற்போதுபுனரமைக்கப்பட்டு வருகிறது.
இதுமோடிக்காகவே புனரமைக்கப்படுவதாக காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.

தன்தோல்வியை உணர்ந்துவிட்ட மோடி, பதவி போனபின் தில்லியிலுள்ள இந்தஇல்லத்தில்தான் மோடி குடியேறப் போகிறார் என்று அவர்கள் தெரிவிக் கின்றனர்.
பாஜக தொண்டர்களும் அதைமறுப்பதாக இல்லை.மற்றொரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது.
 அது என்னவென்றால், மத்தியஅரசு அலுவலகங்களுக்கு வழங்கப் படும் பிரதமர் படம்பொறித்த காலண் டர்கள் சம்பந்தப்பட்டதாகும்.
பொதுவாக ஒவ்வோரண்டும் பிரதமர் படம்பொறித்த புத்தாண்டு காலண்டர்கள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும்.
 ஆனால், வருமாண்டில் புதிய பிரதமர் தேர்வாகி விடுவார் என்பதால், தற்போதைய பிரதமரான மோடி படம் போட்டு,காலண்டர்கள் அச்சிடுவதில் பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகளுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
 குறிப்பாக வடமாநிலங்களில்.
இந்த மாநிலங்களின் எண்ணங்களை மத்திய அதிகாரிகளின் தயக்கத்தைபிரதமர் அலுவலகமும்எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது அவர்கள் ஒப்புக்கொண்டதாகவே அர்த்தமாகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. 

இந்த பேரிடரில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரகடோவா எரிமலை வெடிப்பை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் 43 பேர் பலியானதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் 

காயமடைந்துள்ளதாகவும் இந்தோனேசிய பேரிடர்  முகமை இன்று  தகவல் வெளியிட்டுள்ளது.
===================================================
ன்று,
டிசம்பர்-23.
 இந்திய விவசாயிகள் தினம்
 விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1921)
முதல் டிரான்சிஸ்டர் பெல், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1947)
 முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது(1954)
உலகின் மிகப் பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது(1958)

விவசாயிகள் தினம்


டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day – Farmers Day, December 23 ) கொண்டாப்படுகிறது.
இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார்.
இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் 5,33,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்கும், மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் பல்லாயிரம்; கோடி ரூபாய் வரிச் சலுகையாகக் கிடைக்கிறது.
இது நமது பட்ஜெட் பற்றாக்குறை தொகையைக் காட்டிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கூடுதலானதாகும்.
எனவே, செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தினார்கள் என்றாலே இந்தியாவில் எந்த நெருக்கடியும் இருக்காது.

நடப்பு பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவிலான சலுகை (அதாவது 66000 கோடி ரூபாய்கள்) இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தரப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் பார்த்தால் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான தொகை இறக்குமதி செய்யப்படும் தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 ருத்தி விவசாயிகளின் தற்போதைய வாழ்நிலையை 60-70-களிலான வாழ்நிலையோடு நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம். அப்போது அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மும்பையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு படிக்க அனுப்பி வந்தனர். அன்றைய காலகட்டத்தில் பருத்தி விற்றால் விவசாயிக்கு கிடைக்கும் தொகையானது தங்கத்தின் மதிப்பை விட கூடுதலாக இருந்தது. எனவேதான், பருத்தியை வெள்ளைத் தங்கம் என அழைக்கலாயினர்.

1974-ல் ஒரு குவிண்டால் பருத்தியின் மதிப்பு 10 கிராம் தங்கத்தின் மதிப்பை விட கூடுதலாக இருந்தது. ஆனால், இன்று 6 அல்லது 7 குவிண்டால் பருத்தியைக் கொடுத் தால்தான் 10 கிராம் தங்கம் கிடைக்கும். இதுவே 10 கிராம் தங்கத்தின் விலை 3,, என உயர்ந்தபோது 10 குவிண்டால் பருத்தியை கொடுக்க வேண்டியிருந்தது. ஆக, தங்கம் இறக்குமதி செய்யப்படுவது, தங்கத்தின் மதிப்பு விவசாயியின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து புரிந்து கொண்டுள்ளீர்கள்.
இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக அதிகரித்திட சமீபத்தில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவு இந்திய விவசாயத்துறையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்திட உள்ளது. ஏனெனில், இந்த விலையேற்றத்தின் காரணமாக மின்சாரக் கட்டணமும், உர விலையும் கடுமையாக உயர்ந்திடும் அபாயம் உள்ளது.



இந்திய விவசாய நெருக்கடியை ஒரு வரியில் சொல்வதானால், இந்திய விவசாயத்தை சிறு விவசாயிகளின் கைகளிலிருந்து பறித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவே நெருக்கடியின் உள்ளடக்கம் எனக் குறிப்பிடலாம்.
உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் எவரெல்லாம் விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனப் பார்க்கலாம்.
விவசாயத் துறையில் அளிக்கப்படும் கடன், கிராமப்புறக் கடன் ஆகியனவற்றின் கீழ் விநியோகிக்கப்படும் தொகையானது நாட்டிலுள்ள பெருநிறுவனங்களுக்கு கிடைத்திடும் வகையில் இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் 2010-ம் ஆண்டில் அனைத்து வங்கிகளாலும் விநியோகிக்கப்பட்டுள்ள கடன் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் படி, விநியோகிக்கப்பட்ட மொத்த கடனில் 53 சதம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
வெறும் 38 சதம் மட்டுமே அம்மாநிலத்தின் ஒட்டு மொத்த கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

 மும்பை நகரில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் அமிதாப் பச்சனும் தாங்கள் அடிப்படையில் விவசாயிகள் .உத்தரபிரதேசத்தில் தங்களுக்கு  நிலம் இருப்பதால் தனக்கு விவசாயக் கடன் ,அல்லது அந்த வட்டியில் கடன் அளிக்கப்பட வேண்டும் என மகாராஷ்டிராவில் அமிதாப்பச்சநும்,உ.பி.யில் முகேஷ் அம்பானியும் விண்ணப்பித்ததைப் பார்த்தோம்.

  ஒட்டுமொத்த நாட்டிலும் விவசாயிகள் கடன்களை பெருமுதலாளிகள் வாங்கி ஏமாற்றுவத் நடக்கிறது.

===================================================
  ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில் தில்லியில்  நடந்தது.
பல்வேறு மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில் 23 பொருட்களுக் கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத உயர் ஜிஎஸ்டிவரி பிரிவில் இருந்து 7 பொருட்கள் 18 சதவீத வரி பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன.
32 இஞ்ச் டிவி, கியர் பாக்ஸ், டிஜிட்டல்கேமரா, வீடியோ கேம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 28 சதவீதத்தில்இருந்து 18 சதவீதமாக குறைக்கப் பட்டது.
இதுபோலவே சினிமா டிக்கெட்டுக் கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. 100ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக் கப்படும் நிலையில் இது 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 

இந்த புதிய வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?