“கோடம்பாக்கம் கொழுப்பு”


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு :-
" காவல்துறை, வருவாய்த்துறையினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு"                                                                                                                                                                    

                                        அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கொலைக்குற்றம் செய்கிறோம் எனத்தெரிந்தே போலி ஆவணங்கள் தயாரித்து துப்பாக்கிச்சூடு நடத்தியவருவாய்த்துறையினர், காவல்துறையினர் மீது மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இதற்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதன் மூலம் சிபிஐக்கு நீதிமன்றம் மூலம் தரப்பட்ட அழுத்தமும் மனித நேயத்தின் உயிர்ப்பான முன்னுதாரணமாக உள்ளது. 


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-
" சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாகதூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின்ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. நீர், நிலம், காற்று மாசுபட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 
ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டனர். 

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்
ராண்டித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், அன்று மாலை திரேஸ்புரத்திலும், மறுநாள்அண்ணாநகரிலும் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் மொத்தம் 13பேர் கொல்லப்ப ட்டனர். 
50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 200க்கும் மேற்பட்டோர் தடியடி தாக்குதலுக்கு உள்ளானார்கள். தெருக்களில் சென்றவர்களை -கண்ணில்பட்டவர்களை எல்லாம் இழுத்துச் சென்று தூத்துக்குடி தெற்கு, புதுக்கோட்டை காவல் நிலையங்களிலும், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்திலும் வைத்து கடுமையாக தாக்கி, சித்ரவதை செய்து மனித உரிமை மீறல்களில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
கொலைக் குற்றம் என்று தெரிந்தே...
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லாத வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டவிதிகளை மீறி, ஒருகொலைக் குற்றத்தில் ஈடுபடுகிறோம் என்பதைத் தெரிந்தே காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் சீருடை அணியாத நபர்கள் ஈடுபட்டனர். 
அவர்கள் காவல்துறையின் துப்பாக்கிகளையும், வாகனங்களையும் பயன்படுத்தினர். 
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட நகைகள், செல்பேசிகளை காவல்துறையினர் பறித்துள்ளனர். 


ஒரே புகார்...சிபிஎம் அளித்தது தான்...
துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மீதான குற்றங்களை தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளியே வராது எனவும், இதை சிபிஐவிசாரிக்க வேண்டும் எனவும் மே 29 அன்று சிபிஐ இணை இயக்குநரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இதுதான்துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐயிடம் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அளிக்கப்பட்ட ஒரே புகாராகும். ஆனால்,இப்புகார் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.
 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி பஷீர் அகமது அமர்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. 
அதில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர்மீது புகார் இருந்தால் அதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இழுத்தடித்த சிபிஐ
ஆனால், ஏற்கனவே தமிழக காவல்துறையினர் பதிவு செய்திருந்த குற்ற எண் 191இன் அடிப்படையில் விசாரணையை சிபிஐ துவக்கியது. 
கொலைக்குற்றம் செய்கிறோம் எனத்தெரிந்தே போலி ஆவணங்களின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 31ஆம் தேதி வழக்கறிஞர்கள் சுப்பு முத்துராமலிங்கம், ஷாஜி செல்லன் ஆகியோருடன் சென்று அளிக்கப்பட்ட இந்த மனுவுடன் உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டதன் நகல் இணைக்கப்பட்டிருந்தது.

 அப்படியும் புதிய வழக்கு பதிவு செய்யாமல் சிபிஐ காலதாமதம் செய்தது. 

இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தாமதம் நீடித்தது. அதைத்தொடர்ந்து சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துப்பாக்கிச்சூடு நடத்தியகாவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு இணை இயக்குநர் பிரவீன் சின்காவுக்கு உத்தரவிட்டது. 

அதன்பிறகே வியாழனன்று (நவ.29) துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி 166, 167, 392, 395, 506, 120(பி) உள்ளிட்ட 7 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் 13 மனித உயிர்களைப் பறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியோர் மீது கொலைக் குற்றம் (302) உள்ளிட்ட பிரிவுகளும் சேர்க்கப்பட வேண்டும். "
என்கிறார்.

 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 அமித்ஷா வழக்கை விசாரிக்க மறுக்கும் நீதிபதிகள்!
மிரட்டல்களே காரணம்?
பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியாது என்று, கடந்த 3 நாட்களில் 3 நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகியுள்ளனர்.

 வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விருப்பமில்லை என்று 2 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அமர்வே அறிவித்துள்ளது. மற்றொரு அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டபோது, அந்த அமர்விலிருந்தும் ஒரு நீதிபதி விசாரணை நடத்த முடியாது என்று விலகிக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வுகள் நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குஜராத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு, சொராபுதீன் மற்றும் அவருடைய மனைவி கௌசர் பீ ஆகியோர் மர்மமான முறையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதுதொடர்பாக, அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய பாஜக தலைவருமான அமித்ஷா உட்பட 23 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

 மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி பி.எச். லோயா வழக்கை விசாரித்து வந்தார். இந்த விசாரணை முடிந்தது, 2014-ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று லோயா அறிவித்திருந்தார்.

 ஆனால், டிசம்பர் 1-ஆம் தேதியே நீதிபதி லோயா, நாக்பூர் சென்ற இடத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் காவல்துறையானது, லோயா மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தது.

இந்நிலையில், லோயாவின் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை செய்து, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. 
அதில், லோயா மரணம் இயற்கையானதுதான் என்றும், ஆகவே, இதுகுறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக்குழு வேண்டியதில்லை என்றும் அதிரடியாக கூறியது.

எனினும், லோயா மரணம் தொடர்பாக வழக்கறிஞர் சதீஷ் உகே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதியன்று, இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.பி. சுக்ரே, எஸ்.எம். மோடக் அமர்வு முன்பு வந்தது.

 ஆனால், தாங்கள் இந்த வழக்கை எடுக்கப் போவதில்லை என்று தெரிவித்து, அந்த அமர்விலிருந்த 2 நீதிபதிகளும் ஒதுங்கிக் கொண்டனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பி.என். தேஷ்முக், ஸ்வப்னா ஜோஷி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 28-ஆம் தேதியன்று, தேஷ்முக், ஜோஷி அமர்வு முன்பு வழக்கு சென்றபோது, ‘இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்’ என்று நீதிபதி ஸ்வப்னா ஜோஷியும் கேட்டுக் கொண்டுள்ளார். 

விசாரணை நடத்துவதிலிருந்தும் விலகிக் கொண்டுள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான இந்த வழக்கில், 2 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அமர்வும், மற்றொரு அமர்வில் நீதிபதி ஒருவரும் திடீரென விலகிக் கொண்டது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 
நீதிபதிகளின் இந்த விலகல் பின்னணியில், மத்திய ஆட்சியதிகாரத்தின் நெருக்குதல் எதுவும் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்பு உச்ச நீதிமன்றம் அமித்ஷாவை விடுதலை செய்தபோதும் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டு இருந்தது. 

மும்பை வழக்கறிஞர் சங்கம் சார்பில், லோயா வழக்கில் ஆஜரான துஷ்யந்த் துபே, “அமித்ஷாவைக் காப்பாற்ற முயல்கிறீர்களா?” என்று பகிரங்கமாகவே, தலைமை நீதிபதியைப் பார்த்துக் கேட்டார். 

மற்றொரு வழக்கறிஞர் இந்திரா ஜெசிங்கும், “வருங்காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக மீடியாக்கள் செய்தி வெளியிடக் கூடாது என்றுகூட நீதிபதிகள் உத்தரவிடலாம்தானே” என்று உச்ச நீதிமன்றத்தில் கிண்டலாக கேட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர்களின் சந்தேகத்திற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

வழக்கறிஞர்களை பணியவைத்தனர்.ஆனாலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என்று கூறி, எதிர்க்கட்சிகள் அவர் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தன. 
ஆனால், அதனை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தள்ளுபடி செய்தார்.

எனவே, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதிகள், வழக்கை விசாரிக்க மறுப்பதன் பின்னணியிலும் மோடி அரசின் நெருக்கடி இருக்கலாம் என்று மீண்டும் வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.


=====================================================
ன்று,
டிசம்பர்-01.
உலக எய்ட்ஸ் தினம்
மியான்மர் தேசிய தினம்
பனாமா ஆசிரியர் தினம்
 நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)
இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
  ====================================================
மோ(ச)டி  அரசின் தில்லாங்கடி திருத்தம்.
தனது ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி எதையும் காட்ட முடியாத மோடி அரசு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கால வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துக் காட்டும் வேலையை செய்துள்ளது.

2004-05ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில்2010-11ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 10.3 சதவிகிதமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில், 2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தமதிப்பீடுகளை மத்திய புள்ளியியல்அலுவலகம் மீண்டும் வெளி யிட்டுள்ளது. 

ஆனால், தற்போதைய அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2005-06ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 9.3 சதவிகிதம் என்று இருந்ததை 7.9 சதவிகிதமாகவும், 2006-07ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியை 9.3 சதவிகிதம் என்று இருந்ததை8.1 சதவிகிதமாகவும், 2007-08ஆம்ஆண்டுக்கான வளர்ச்சி 9.8 சதவிகிதம் என்று இருந்ததை 7.7 சதவிகித மாகவும் மோடி அரசு திருத்தியுள்ளது.
அதில் மோடி கையுங்களவுமாக மாட்டிக்கொண்டார்.
மோடி செய்த  திருத்தத்தை அரசு அதிகாரிகளே வெளிப்படுத்திவிட்டார்கள்.
 
“கோடம்பாக்கம் கொழுப்பு”
நேற்று உலகம் முழுவதும் சுமார் 10000  தியேட்டரில் பிரமாண்டமாக வெளியான ரஜினி ஷங்கர் கூட்டணியில் உருவான ஹாலிவுட்டை மிரட்டவைக்கும் பழங்காலத்து விட்டலாச்சார்யா படம் தான்.

பேய் படமா இல்ல சயின்ஸ் பிக்ஷன் படமா என ஒரு நிமிஷம் தலை சுற்றவைக்கும்  இது.

காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை விவரிக்கும் இப்படம் ஒரு இறந்தவரின் ஆவி என்கின்ற பூ சுத்துகிறது.

சரி அது இருக்கட்டும் கோடிகளை கொட்டி எடுத்த இந்த படம் வெளியாவதற்கு முன்பே அவ்வளவு கொட்டுச்சி, இவ்வளவு அள்ளுச்சு என செய்திகள் வந்தாலும் பெரும்பாலான திரையரங்கம் ஈ ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

 சிறுவர்களளை 3டியில் இப்படம் பிரமிப்பாய் கவர வாய்ப்புள்ளது.
ஆனால் அதற்கு அவர்கள் விடுமுறை தினங்களான ஏப்ரல்,மே மாதங்களில் வெளியானால் ஒரு வசூல் இருந்திற்கும்.


ரஜினி,அஜித்,விஜய் என்று எந்தப்  பெரிய நடிகர் நடித்தப் படம் வந்தாலும் வரலாறு காணாத ஹிட், பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று அவிழ்த்து விட வேண்டியது.

ஆனால்  ஒரு மாதம் கழித்து நட்டம். படம் ஓடவில்லை நட்டத்தில் பங்கு தா  என்று விநியோகத்தர்கள்,திரையரங்கு காரர்கள் கிளம்புவது. . . . இது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.
ஆனால் 2.0 க்கு இரண்டாவது நாளே இந்த முணுமுணுப்பு தொடங்கிவிட்டது.

600 கோடி ரூபாயை எடுக்க வேண்டுமானால் 6 கோடிப் பேர் 100 ரூபாய் கொடுக்க வேண்டும்.
 மற்ற வருமானம் எல்லாம் லாபம் என்று வைத்துக் கொள்ளலாம்.
இது சாத்தியமா?
எதற்கு இத்தனை செலவு?
அப்படி என்ன சாதனைப்படம்  . . . .?
முன்பு ஜீன்ஸ் படம் வந்த போது புதிய ஜனநாயகத்தில் ஒரு கமெண்ட் அடித்திருந்தார்கள்.
அது இன்றைக்கும் பொருந்துகிறது.
“கோடம்பாக்கம் கொழுப்பு”
ஆனால் படத் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு  இது எல்லாம் தோல்வியே கிடையாது
ராஜபக்சே பினாமி அவர் படங்களைத்தயாரிப்பதே கருப்பை வெள்ளையாக்குவதற்காகத்தானே.
இவர் முறைகேடாக பணத்தை சாக்குப்பையில் கட்டி வேறு பொருள் இருப்பதாக இங்கிலாந்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு தினசரி   அனுப்பி அரசால் எச்சரிக்கப்படுமளவு பண மலையை கொண்டவர்..
இன்னும் இரண்டு ரஜினி படங்களை நட்டத்தை பாராமல் ஷங்கரை வைத்தே தயாரிக்க முடியும் அவரால்.


தகவல்  ஆசியாநெட்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?