.இது நவீன தீண்டாமை!
தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல்
பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந்தே சமத்துவ உணர்வை வளர்க்கவும், யாரையும் சாதி ரீதியாகவோ, நிற ரீதியாகவே பிரித்துப்பார்க்கக் கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தவும்தான்.
21வது நூற்றாண்டிலும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை நீடிப்பதை அறிந்து நாகரீக சமுதாயம் வெட்கி தலைகுனியவேண்டும்.
நவீன தீண்டாமைக் கொடுமைக்கு சமீபத்திய உதாரணம்;
"சென்னையின் அடையாளமாகத் திகழும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐஐடி. நாட்டிலேய சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் கல்வி நிறுவனம்தான், மாணவர்களின் சுதந்திரத்தை நசுக்குவதிலும் பன்முக கலாச்சாரத்தை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ளது.
இங்குள்ள மாணவர் விடுதி உணவகத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, தனி வழியும்,
சைவம் சாப்பிடுவோருக்கு மற்றொரு வழியும் அமைக்கப்பட்டதுதான் சமீபத்திய சர்ச்சை.
இதற்கான புகைப்பட ஆதாரங்கள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவின.
அம்பேத்கர் பெரியார்படிப்பு வட்டம், தனது முகநூல் பக்கத்திலும்இது குறித்த தகவலை வெளியிட்டது.
சுத்தமான சைவம் என்று ஒரு பிரிவும், சைவம் சாப்பிடுபவர்கள், அதாவது, வெஜிடேரியன் என்ற மற்றொரு பிரிவும்,அசைவம் சாப்பிடுவோர் நான்வெஜிடேரியன் என்று மற்றொரு பிரிவுமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வகையான உணவுகளுக்கும் தனித்தனி பாத்திரங்கள், மாணவர்களுக்கும் தனித்தனியான இடங்கள், மாணவர்கள் எந்த வழியாக வரவேண்டும்,எந்த வழியாகச் செல்லவேண்டும்,
எங்கு கை கழுவவேண்டும் என தனித்தனியான ஏற்பாடுகள். இதற்காக விடுதி வாசலில் நோட்டீசும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.
பூண்டு வெங்காயம் சேர்க்காத உணவைச் சாப்பிடும் மாணவர்களுக்காக தனி வழி, தனி கைகழுவும் இடம், தனி பாத்திரங்கள் என்ற ஏற்பாடு செய்யப்பட்டதாக விடுதி செயலர் கூறுகிறார்.
வெங்காயம், பூண்டு ஆகியவை சேர்க்கப்படாத உணவு சுத்த சைவமாகவும், வெங்காயம், பூண்டு ஆகியவற்றோடு இதர காய்கறிகளையும் சேர்த்து சமைக்கப்படும் உணவு பாதி சைவம் என்றும் பிரித்து வைத்துள்ளனர்.
இதுதவிர இந்த விடுதியில் அசைவ உணவுகளும் பரிமாறப்படுகின்றன.
தனித்தனி நுழைவாயில்கள், தனித்தனியாகச் சாப்பிடும்இடம், தனித்தனி வாஷ் பேஷின்கள் என்றுமாணவர்களைப் பிரித்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து ஐஐடிநிர்வாகம் மன்னிப்பு கோரியது.
இதுயாருடைய வேலை என்று விசாரிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறது.
மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்காகவே தனி வழி அமைக்கப்பட்டதே தவிர, சாதி வேறுபாட்டிற்கு அல்ல எனவிடுதி செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வளவு நாள் சிரமம் இல்லாமல் இருந்ததே ,திடீரென என்ன சிரமம் என்றால் அதற்கு பதில் இல்லை.
விடுதி உணவு வழங்கும் தனியார் நிறுவனம் கேட்டதாலேயே, இத்தகைய முடிவில் ஈடுபட்டதாகவும், விடுதி கண்காணிப்புக் குழு எந்த அறிவுறுத்தலையும் இது தொடர்பாக வழங்கவில்லை எனவும் அவர் சமாளித்துள்ளார்.
சென்னை ஐஐடி இப்போது மட்டுமல்ல, ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குப் பெயர்போனதாகும்.
சுதந்திரமாக கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முற்போக்கான மாணவர்கள் இணைந்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் ஏற்படுத்தியபோது அதற்கு எதிராக தடைவிதிக்கப்பட்டது.
மாணவர்களிடம் எழுந்த கொந்தளிப்பை அடுத்து ஐஐடி நிர்வாகம் பின்வாங்கியது.
பின்னர் ஒருமுறை மாட்டிறைச்சி திருவிழா நடத்தியதாகக் கூறி சூரஜ் என்றமாணவர் மீது பாஜக ஆதரவு மாணவர்கள் கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்.
அவரது ஒரு கண்பார்வை பறிபோகும் அளவுக்கு அந்தத் தாக்குதலின் தீவிரம்இருந்தது. இதுமட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேசிய கீதத்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலை ஒலிபரப்பினார்கள்.
தேசிய கீதத்திற்கே இந்த நிலை என்றால்தமிழ்த்தாய் வாழ்த்தெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இதன் தொடர்ச்சியாக தற்போது உணவு சாப்பிட தனித்தனி வழி. கைகழுவ தனித்தனிபேஷின்கள்.
நவீன தீண்டாமை.
இதுகுறித்து பேராசிரியர் அருணன் கூறுகையில், பொதுவாகக் கல்வி நிறுவனங்களில் சைவ, அசைவ உணவுவிடுதிகள் தனித் தனியாக இருக்கும். மாணவர்கள் ஒரு மாதம் சைவம், மற்றொரு மாதம் அசைவம் என்றுமாறிக்கொள்வதும் இயல்பாக நடக்கும்.
இரண்டுக்கும் கட்டணம் கூட வித்தியாசமாக இருக்கும்.
நானே கல்லூரி காலத்தில் பார்த்திருக்கிறேன்.
உணவுப்பழக்கத்தில் யாரும் தலையிடக்கூடாது, இதைத்தான் சாப்பிடவேண்டும் என்று யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது, ஆனால் எதைச் சாப்பிடவேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று நாட்டில் ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு திரிகிறது.
உதாரணமாக மாட்டுக்கறி விஷயம்.இது நவீன தீண்டாமைதான்.
உணவுப்பழக்க வழக்க அடிப்படையில் பிரிக்கப்படவில்லை.
தீண்டாமை அடிப்படை யில்தான் பிரிக்கப்பட்டுள்ளது.
எனவேதான் ஐஐடி நிர்வாகம் அவசர அவசரமாக இப்பிரச்சனையில் தலையிட்டு தனது உத்தரவை ரத்து செய்து விட்டது.
இதற்கு அடிப்படையான காரணம் பார்ப்பன சாதியமனப்பான்மைதான். அதுதான் முன்பு குற்றாலம் அய்யரின் ஆசிரமத்தில் நடந்தது.இவர்களுக்குத்தான் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்,நவீன நந்தன் பா.ரஞ்சித்தும் வக்காலத்து வாங்கிக்கொண்டு தன இந மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
அது தான் ஐஐடியில் தற்காலத்தில் எதிரொலித்துள்ளது. சற்று பதுங்கிப் பாய்வதுதான் சாணக்கிய (ஆரிய) தந்திரம்.
மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் தீண்டாமை கொடுமையை எதிர்த்துதந்தை பெரியார்,,சீனிவாசராவ் உட்பட இந்தியா முழுவதும் எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள்.
இதுபோன்ற தலைவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றைய தலைமுறையினரிடம் மேலும் போய் சேரவேண்டியதன் அவசியம் ஒருபுறம் இருந்தாலும் நவீன தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் ,பெரியாருக்கும் இன்னும் தேவை உள்ளது என்பதைத்தான் சென்னை ஐஐடி நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
=======================================================
இன்று,
டிசம்பர்-17.
பூட்டான் தேசிய தினம்
அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது(1834)
கோவாவை இந்தியா, போர்ச்சுகலிடம் இருந்து கைப்பற்றியது(1961)
பிரேசிலில் 25 ஆண்டுகளுக்கு பின் முதலாவதுபொதுத்தேர்தல் நடைபெற்றது(1989)

முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
----------------------------------------------------------------------------------------------------
மோடி_ஒரு_சாடிஸ்ட்தான்
திமுக தலைவர் இந்திய பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று சொல்லிவிட்டதில் நடுநிலை என்ற பெயரில் நடமாடும் பார்ப்பனர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்..!
அவர் அவ்வாறு சொன்னதில் என்ன தவறு கண்டு விட்டார்கள் காவிகள்..?
ஏன் அளறுகிறார்கள்..?
குஜராத் மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களைப் பார்த்து என் கார் டயரில் அடிப்பட்ட நாய்குட்டிகளை பார்ப்பது போல இருக்கிறது என்றும்,
பணமதிப்பிழப்பின் போது உயிரிழந்த மக்களைப் பற்றி பேசும் போது எல்லையில் காவலிருக்கும் ராணுவ வீரர்களின் மரணத்துடன் ஒப்பிட்டு பேசியதும்,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பலியான பிறகும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க இசைந்திருப்பதும்,
காவிரியில் நடத்திய நாடகங்களும்,
டெல்டாவை பாலைவனமாக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதிலும் மோடி என்ன மக்கள் ஆதரவு பெற்ற தலைவராகவா அறியப்படுகிறார் ?
மோடி என்று அரசியலில் ஒரு ஆளுமையாகப் பார்க்கப்பட்டாரோ அன்று முதல் இன்று வரை அவரின் நடவடிக்கைகள் ஒரு சாட்டிஸ்ட்டின் நடவடிக்கையை ஒத்துதான் இருக்கிறது.
அரசியலில் தன்னை ஒரு மதத் திவிரவாதியாகத்தான் மோடி இதுவரை அடையாளம் காட்டி வருகிறார். ஒரு கணவனாக கூட தன் கடமையை நிறைவேற்றாத கெடுமதியாளர் மோடி..!
அதை அவரின் மனைவி யசோதா பென் சொல்லக்கேட்டுக் கொள்ளலாம்.
நாங்கள் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துதான் ஆட்சியைக் கைப்பற்றினோம் என்று ஒரு பாஜக தலைவரே வெட்கமில்லாமல் சொன்ன காட்சியை நாம் பார்க்கத்தானே செய்தோம்..?
மோடியின் ஐந்தாண்டு ஆட்சி முடியப்போகிறது, காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என்று நெஞ்சு நிமிர்த்தி பேசி ஆட்சியைப் பிடித்தவர் தன் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகள் என்ன..?
எல்லாத் திட்டங்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கம் மட்டுமே பிரதானமாக முன்வைக்கப் பட்டுள்ளது. கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.
மக்களுக்கு எது வேண்டுமோ அதை கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு எது ஆகாயமோ அதைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் கைக்கூலி தானே மோடி ?
ஏழகளுக்கான , விவசாயிகளுக்கான மானியங்கள் விலக்கப்பட்டு நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்துவதாக சொல்லி அனைவருக்கும் வங்கிக்கணக்கை திறந்து கொடுத்து குறைந்த பட்ச பண இருப்பில்லை
என்ற காரணத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மானங்கெட்ட செயலுக்கு பிரதமர் என்றொரு நபர் தேவையா ?
மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரசாயன தொழிற்சாலைகளை ஊக்குவிப்பது , அதை எதிர்க்கும் மக்கள் அமைப்புகளை தேசவிரோத சட்டத்தில் கைது செய்வதும் ஒரு மக்கள் பிரதமர் செய்யும் காரியமா..?
இரு மாநிலங்களிடையே பகையை உருவாக்கி அதில் அரசியல் செய்யும் மகோன்னதமான தேசியத் தலைவராக விளங்கும் மோடியை சாடிஸ்ட் என்று சொல்லாமல் சமாதானப்புறா என்றா சொல்ல முடியும்.?
காவிப்பொறுக்கிகளுக்கு வேண்டுமானால் மோடி காவியத் தலைவனாக இருக்கலாம்.
சாதி வெறியர்களுக்கு வேண்டுமானால் மோடி சரித்திர நாயகனாக தெரியலாம்.
ஊழல் குற்றவாளிகளுக்கு வேண்டுமானால் மோடி உத்தமனாகத் தெரியலாம்.
கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு வேண்டுமானால் மோடி காவலனாக தெரியலாம்.
எச்சை ஊடகங்களுக்கு வேண்டுமானால் மோடி எழுச்சிமிகு தலைவனாக தெரியலாம்...!
உண்மையான ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவர் பார்வையிலும்மோடி_ஒரு_சாடிஸ்ட்தான்.
அடேய் உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
பாசிஸ்ட்கள் எல்லாம் சாடிஸ்ட் களாத்தான் இருப்பார்கள்.
உங்களுக்கு ரோஷம் பாசிஸ்ட என்று சொன்ன போதே வந்திருக்கணும்.
இது ரொம்ப லேட்டு..!
-வனத்தையன் தமிழரிமா
முகநூலில்
மனைவியை பார்த்து திட்டுங்கள்.
அபுதாபியை சேர்ந்த நபர் ஒருவர் தனது வருங்கால மனைவியை ‘முட்டாள்' என விளையாட்டாக அழைத்ததற்க்காக அரபு நாடுகளுக்கான நீதிமன்றம் 20,000 திர்ஹம்ஸ் அபராதமும் 60 நாட்கள் கடுங்கால சிறை தண்டணையும் விதித்துள்ளது.
பெயரிடப்படாத நபர் தனது வாட்ஸ் அப் செயலியில், தனது வருங்கால மனைவியை செல்லமாக முட்டாள் (அரபி மொழியில் ஹாப்லா ) என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைதொடர்ந்து அப்பெண் சற்றும் தயங்காமல் அந்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அந்நபருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் நகைச்சுவையாக ஒரு விசஷயத்தை சொல்லி அது தப்பாக புரிந்து கொண்ட வகையில் அந்நாட்டில் இதுவரை பல வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவம் ஒன்றில், கார் விற்பனையாளர் ஒருவரை பிரிட்டிஷ் நபர் ஒருவர் கோபமாக திட்டியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
வாட்ஸ் ஆப் -இல் இச்சம்பவம் நடந்ததால் அது சைபர் குற்றம் கருதப்பட்டு தண்டணை வழங்கப்பட்டது.

மனைவியை திட்டுவதானால் தனியாக நின்னு திட்டிக்கொள்ளுங்கள்.நேரில் என்றால் அக்கம்பக்கம் சாட்சியின்றி திட்டங்கள்.
அவர் அடித்தாலும் கூட வாயைத்திறக்காமல் ஏற்றுக்கொள்வதே அனைத்திலும் சிறந்த வழி.
இதைப்போல் முகநூல்,டுவிட்டர்,வாட்ஸப் பில் ஆதாரத்துடன் சிக்கி சைபர் கிரைமில் மாட்டினால் தண்டனை அதிகம்.
பார்த்து குணமா நடந்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------