பதில் சொல்லப்படாத பல கேள்விகள்
ரபேல் ஒப்பந்தம்-உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள போதிலும் நரேந்திர மோடி அரசாங்கம் 36 ரபேல் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்குவது தொடர்பாக மேற்கொண்ட முடிவை அவ்வளவு எளிதாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
இது தொடர்பாக தில்லியிலிருந்து வெளிவரும், தி ஒயர் இணைய இதழ், பல கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறது.
அவற்றில் ஒரு சில :
(1) ரபேல் விமானங்களின் அதிகபட்ச விலை தொடர்பாக உள்ள கருத்துமாறுபாட்டை உதாசீனம் செய்தது, ஏன்?
மத்திய அரசு வாங்க முடிவு செய்த ரபேல்விமானங்களின் உச்சபட்ச விலை (berchmark
price) கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டது.
இப்பிரச்சனை மீது கடந்த சில மாதங்களாகவேகருத்து வேறுபாடு இருந்து வந்தது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் எழுப்பிய ஆட்சேபணைகளே ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்தஅதிகாரி சுதான்சு மோஹண்டி, இவ்வாறு உச்சபட்ச விலையில் மாற்றம் செய்திருப்பது,‘‘விசித்திரமானது மட்டுமல்ல; அரைக்கிறுக்குத் தனமானதுமாகும்’’ (‘‘strange, even queer’’) என்று, எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டிருந்த விமர்சனத்தில் குறிப் பிட்டிருந்தார்.
மேலும், ‘‘பொதுவெளியில் கிடைத்திடும் தகவல்களின்படி, பாதுகாப்பு அமைச்சரின் தலைமையின்கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலோ(Defence Acquisition Council) இதனைப் பரிந்துரைத்திடவில்லை.
மாறாக, பாதுகாப்புக்கான கேபினட் குழுவிற்கு (Cabinet Committee on Security)அது அனுப்பப்பட்டது. இது ஏன்?
இதனைஆய்வு செய்திட வேண்டும்.
இது விசித்திர மானது மட்டுமல்ல; அரைக்கிறுக்குத்தன மானதுமாகும்,’’ என்று மோஹண்டி கூறிய தாக அதில் உள்ளது.
இந்தப் பிரச்சனையை உச்சநீதிமன்றம் ஏன் ஆய்வு செய்யவில்லை?
இந்தப் பிரச்சனையை உச்சநீதிமன்றம் முழுமையாக உதாசீனம் செய்தது, புரியாத புதிராக இருக்கிறது.
(2) 126 விமானங்களுக்காகச் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் 36 ஆக மாறியது எப்படி?
‘‘126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவின் மீது நாங்கள் அமரமுடியாது’’ என்று உச்சநீதிமன்ம் கூறி யிருக்கிறது.
இதன்மூலம் உண்மையான பிரச்சனையிலிருந்து தன்னை அது விலக்கிக் கொண்டிருக்கிறது.
ஐமுகூ ஆட்சிக்காலத்தில் 126 விமானங்கள் வாங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக, புதிதாக 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் எவ்விதமான நடைமுறையையும் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஐமுகூ அரசின் சார்பில் 2015 மார்ச்சில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்வதற்கு எந்தவிதமான நடைமுறை பின்பற்றப்பட்டது?
2015 மார்ச் 28 அன்றே 126 விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் 95 சதவீதம் முழுமையடைந்து விட்டது என்று பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) எரிக் டிராப்பியர் கூறியிருக்கையில், ஏன் அது விலக்கிக் கொள்ளப்பட்டது?
இருநாட்டின் அரசாங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு என்னவிதமான நடைமுறை பின்பற்றப்பட்டது?
யாரைக் கலந்தாலோசித்தீர்கள்?
இவை தொடர்பாக எவ்விதமான விளக்கத்தையும் இந்த அரசாங்கம் ஏன் அளிக்கவில்லை?
இக்கேள்விகளுக்கான பதில்களை அரசிடமிருந்து பெறுவதற்குக்கூட உச்சநீதிமன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வில்லை.
இவற்றின் மூலம் இந்த வழக்கில்விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான நடைமுறையில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் மதிப்பீடு செய்திருப்பதில் குறிப்பிடத்தக்கவிதத்தில் ஓட்டை இருப்பதாகவே தோன்றுகிறது
.உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் மனித உரிமைகளுக்கான ஆர்வலருமான பிரசாந்த் பூஷண், மத்திய முன்னாள் அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா ஆகியோர்மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் முன்தாக்கல் செய்திருந்த முறையீட்டில் சட்டப்படிசொல்வதென்றால் 36 ரபேல் விமானங் களுக்கான ஒப்பந்தம், ஒரு புதிய ஒப்பந்த மாகும் (a new contract) ) என்றும், எனவே புதியஒப்பந்தம் மேற்கொள்வதற்காகக் கட்டாயமாகமேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள்(mandatory procedures)அனைத்தையும் பின்பற்றிட வேண்டும் என்றும் ஆனால் பல நடைமுறைகளை இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளாமல் தாவி இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.
இவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
(3) இறையாண்மை உத்தரவாதம் (sovereign guarantee) ஏன் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது?
பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்து ம்போது சட்டப்படி, ஓர் இறையாண்மை உத்தரவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது தொடர்பாக நீதிமன்றத்தின் முன் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் இது தொடர்பாக இருதரப்பையும் அலசி ஆராய்ந்து தங்கள் முடிவு என்ன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திடவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் இரு அரசுகளுக்கும் இடையே ‘சௌகரிய கடிதம்’ (‘letter of comfort’)தான் பரிமாறிக் கொள்ளப்பட்டி ருக்கிறது என்றும் இதன் அடிப்படையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமாயின் தார்மீகரீதியாக பொறுப்பு எடுத்துக் கொள்ளலாமே யொழிய, இதன் அடிப்படையில் சட்டப்படி எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி சுதான்சு மொகந்தி விமர்சனம் செய்திருக்கிறார்.
இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் எந்த முடிவையும் எடுத்திடவில்லை.
(4) விலை குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனில், அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்று ஏன் கேட்டீர்கள்?
இம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது உச்சநீதிமன்றம், ‘‘விலை சம்பந்தமான பிரச்சனைக்குள்ளோ’’ அல்லது ‘‘விமானத்தின் தொழில்நுட்பரீதியிலான சங்கதிகளுக்குள்ளோ’’ போகப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
எனினும் இவ்வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த சமயத்தில் அது, மோடி அரசாங்கத்திடம் ‘‘விமானங்களின் விலை மற்றும் அனு கூலங்கள் தொடர்பான விவரங்களை’’ ஒரு முத்திரையிட்ட உறையில் அளித்திடுமாறு கட்டளையிட்டிருந்தது.
அவ்வாறு கட்டளை யிட்ட உச்சநீதிமன்றம் இப்போது விலைகள் குறித்து ஒப்பீடு செய்வது உச்சநீதிமன்றத்தின் வேலையில்லை என்று சொல்வது, ஏன்?
(5) இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தின் கருத்துக்கள் ஏன் உதாசீனம் செய்யப்பட்டன?
126 ஜெட் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, 36 விமானங்களை மட்டுமே வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு தடைக்கல்லாக இருந்ததால் அதனை மாற்ற வேண்டியிருந்தது என்று மோடி அரசாங்கம் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், ‘‘முந்தைய ஒப்பந்தம் நடைமுறையில் முடிவுக்கு வந்து விட்டது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.முதலாவதாக, டசால்ட் நிறுவனம், எச்ஏஎல் நிறுவனத்துடனான பிரச்சனைகள் மிகப்பெருமளவில் தீர்க்கப்பட்டுவிட்டன என்றுகூறியிருக்கிறது.
இரண்டாவதாக 2018 செப்டம்பரில் எச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள்தலைவரான டி. சுவர்ண ராஜூ, எச்ஏஎல் நிறுவனத்திற்கும் டசால்ட் நிறுவனத்திற்கும் இடையே வேலை பிரிவினை சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘‘டசால்ட் நிறுவனத்திற்கும் எச்ஏஎல் நிறுவனத்திற்கும் இடையே பரஸ்பரம் வேலை பிரிவினை ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது, அது அரசாங்கத்திற்கும் கொடுக்கப்பட்டுவிட்டது.
அவற்றை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை?
அந்தக் கோப்புகள் அனைத்தையும் பரிசீலித்தீர்களானால் என்ன நடந்திருக்கிறது என்று அவை உங்களுக்குக்கூறும்.
விமானங்களை நான் உருவாக்கு கிறேன் என்கிறபோது அவற்றுக்கான உத்தரவாதத்தையும் நான் கொடுப்பேன்,’’ என்று ராஜூ, இந்துஸ்தான் டைம்ஸ் நாளி தழுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த அறிக்கைகள், உச்ச நீதிமன்றத்தின். ‘‘முந்தைய ஒப்பந்தம் நடை முறையில் முடிவுக்கு வந்து விட்டது’’ என்கிற தீர்ப்புக்கு முற்றிலுமாக முரண்படுகின்றன.
இதேபோன்று எண்ணற்ற கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் சரியான பதில் அளித்திடவில்லை.விசாரணையில் அதை மோடி அரசிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு தீர்ப்பை வழங்கி மனுக்களை தள்ளுபடி செய்யவும் இல்லை.
ஆக தீர்ப்பு ஒருபக்க சார்பாகவே உள்ளது தெளிவாகவே தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
உச்சநீதிமன்றம் எதைப் படித்து தீர்ப்பு கூறியது?
-மல்லிகார்ஜூன கார்கே
ரபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பான, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CAG) அறிக்கை, நாடாளுமன்றத்திற்கே இன்னும் கிடைக்காத போது, உச்சநீதிமன்றம் எந்த அறிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்தது?
என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் (PAC) தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லி கார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பை அளித்து விட்டது என்றும் கார்கே குறிப் பிட்டுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம்
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ்நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடமிருந்து, 126 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், மோடி ஆட்சிக்குவந்தபின் அந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது.
முன்பு ஒரு விமானம், ரூ. 526 கோடி என்ற விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், மோடி அரசு ரூ. 1,670 கோடி கொடுத்து வாங்குவதென்று முடிவு செய்தது.
126 விமானங்களுக்குப் பதில் 36 விமானங்களை மட்டுமேவாங்கினால் போதும் என்றும் தீர்மானித்தது.
மேலும், ரபேல் போர் விமான பாகங்களை தயாரித்து அளிக்கும் ஒப்பந்தம்,முன்பு, நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (HAL) நிறுவனத்திற்கு தரப்படுவதாக இருந்தது.
அது மோடி ஏற்படுத்தியஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ரபேல் ஒப்பந்தத்தில், பல ஆயிரம்கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நேரடித்தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
பிரான்ஸ் நாட்டின் முன் னாள் ஜனாதிபதி ஹாலண்டே அளித்த பேட்டி, பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள்- ஆகியவை அனில் அம்பானிக்கு சாதகமாக மோடி அரசு செய்த தலையீடுகளை வெட்ட வெளிச்சமாக்கின.எனவே, “அதிக விலை கொடுத்து, ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்; முறைகேடுகள் நடக்கவில்லை எனில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு மூலம் விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.
ஆனால் மோடி அரசு அதற்குத் தயாராக இல்லை.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சமூக ஆர்வலரும், மூத்தவழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் ஆகியோர் கூட்டு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங்கும் தனியாக ஒரு மனுதாக்கல் செய்தார்.உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர்அடங்கிய அமர்வு, இந்த மனுக்களை விசாரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.
சந்தேகத்திற்கு உரிய பகுதிகள்
மொத்தம் 29 பக்கங்களைக் கொண்டஅந்த தீர்ப்பில், “மத்திய அரசின் கொள் கைகளில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது” என்று தெரிவித்த நீதிபதிகள், “ரபேல் விவகாரத்தில் அரசின் கொள்கைமுடிவுகள் சரியானவையே” என்றும் தீர்ப்பளித்தனர்.
“ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான விலைப்பட்டியல் அடங்கிய மத்திய கணக்குத் தணிக்கைத்துறையின்அ(Comptroller and Auditor General -CAG) அறிக்கை, பொதுக்கணக்குக் குழுவிடம் வழங்கப்பட்டுள் ளது” என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
“எங்களிடம் மத்திய அரசால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், ‘போர்விமானத்தை எவ்வளவு விலை கொடுத்துவாங்குகிறோம் என்று குறிப்பிடவில்லை;ஆனால் ஒரு போர் விமானத்தின் அடிப்படை விலை எவ்வளவு இருக்கும் என்பதை மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்; நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் தகவல் என்பதால் விலை தொடர்பான விளக்கங்கள் அதில் இடம் பெறவில்லை; ஆனால் மத்திய தணிக்கைத் துறையின் பொதுக்கணக்குக் குழுவிடம் விலைப்பட்டியல் பற்றிய முழுமையான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன” என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 21-ஆவது பக்கம் 25-ஆவது பத்தியில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
அடுத்த பக்கத்தில் “போர் விமானங்களின் விலை தொடர்பாக மிகவும் துல்லியமான ஆய்வுநடத்தப்பட்டுள்ளது” என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இந்த பகுதிகள்தான், தற்போது மல்லிகார்ஜூன கார்கே உள்பட பலரின் கேள்விகளுக்கும்விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.
விடையில்லா கேள்விகள்
பொதுக் கணக்குக்குழுவின் (Public Accounts Committee - PAC) தலைவரே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேதான் எனும்போது, அவருக்கே தெரியாமல் சிஏஜி அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது;
அது எவ்வாறு நீதிமன்றத் திற்கு சென்றது? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
மல்லிகார்ஜூன கார்கேவும் அதையே கேட்டுள்ளார்.
‘மத்திய தணிக்கைக் குழுவிற்கே அறிக்கை வராத போது எப்படி பொதுக்கணக்கு குழுவிடம் அறிக்கை கிடைத்திருக்கும்? என்னுடைய கையெழுத்தை யார் போட்டு இந்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்?” என்று மல்லிகார்ஜூன கார்கே கேட்டுள்ளார்.
“சிஏஜி அறிக்கை வந்திருந்தால் அதுநிச்சயம் நாடாளுமன்றத்திலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்து இந்த அறிக்கை வந்தது, யார் சமர்ப்பித்தார்கள்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
எனவே, இது முழுக்கமுழுக்க தவறானது.” என்றும் தெரிவித்திருக்கும் கார்கே, “அறிக்கை எப்போது நாடாளுமன்றத்துக்கு வந்தது என மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவும், அட்டர்னிஜெனரலும் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்” என்றும் பிடியை இறுக்கியுள்ளார்.
“உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சிஅளிக்கிறது.
இவ்வாறு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரவேண்டும்” என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
“நம்முடைய நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்று பாருங்கள்; ஒரு தீர்ப்பில் மத்திய தணிக்கைக் குழுவினர் யாருமே காணாத ஒரு அறிக்கையை, பொதுக்கணக்குத் துறையின் தலைமை இயக்குநருக்கு வந்து சேராத ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றம் மட்டுமே பார்த்திருக்கிறது; என்னால் இதை புரிந்து கொள்ள இயலவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விமர்சித்துள்ளார்.
“யாராவது அந்த அறிக்கையை பார்த்தால் கொஞ்சம் கண்ணில் காட்டுங்கள்; மத்திய தணிக்கைத் துறையின் தலைவருக்கும் அதைக் காட்டுங் கள்” என்று வேடிக்கையாக கூறியுள்ள ராகுல் காந்தி, “இந்தியாவின் மத்திய கணக்குத் துறை வேறெங்காவது இயங்குகிறதா, இல்லை அது பிரான்சில்தான் இயங்குகிறது என்றாலும் கூறுங்கள்” என்று கிண்டலடித்துள்ளார்.
“ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை வேண்டும் என கேட்டுக்கொண்ட 4 மனுதாரர்களில் ஒருவரான, ஆம் ஆத்மி கட்சியைத் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் “இல்லாதஅறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியடைய வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே-வின் கருத்துதொடர்பாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் என்னால் கூற இயலாது; எங்கே பிரச் சனை என்று வழக்கறிஞர்கள் பார்த்து அதனை சரி செய்வார்கள்” என்று மழுப்பியுள்ளார்.
நன்றி: தி ஒயர் இணைய இதழ்தமிழில்: ச.வீரமணி
=====================================================
இன்று,
டிசம்பர்-16.
தாய்லாந்து ஐநா.,வில் இணைந்தது(1946)
நேபாள அரசியலமைப்பு சட்ட தினம்(1962)
பஹ்ரைன் தேசிய தினம்(1971)
கசக்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
======================================================
தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது பசுமைத் தீர்ப்பாய உத்தரவு குறித்து சிபிஎம் கண்டனம்.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்த தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவுதூத்துக்குடி மக்களுக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
" தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.
கால் நூற்றாண்டு காலமாக தனது சுற்றுப்புறம் அனைத்தையும் நீர், நிலம், காற்று, அனைத்தையும் நஞ்சாக்கிய தூத்துக்குடியை சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்க ளும் நடத்திய போராட்டத்தின் விளைவாகவும், போராட்டத்தை ஒடுக்க வேண்டுமென்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது கொடூரமான முறையில் காவல்துறை நடத்தியதுப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி யின் காரணமாக 13 பேர் கொல்லப் பட்டதையொட்டியும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்த பிறகு, தேசியபசுமைத்தீர்ப்பாயம் மற்றும் அதன் அமைப்புக்குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டது என்ற ஐயமே பல மட்டங்களில் எழுந்தது.
பசுமைத்தீர்ப்பாயக் குழுவின் தலைவரை நியமிக்கும் போது தமிழகத்தைச் சார்ந்த நீதிபதிகள் யாரையும் நியமிக்கக் கூடாது என்று வேதாந்தா நிறுவனம் செய்த அடாவடியை பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது சரியல்ல என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டின.
தருண் அகர்வால் தலைமை யிலான ஆய்வுக்குழு தனது அதிகாரவரம்பை மீறி ஆலை மூடல் செல்லாதுஎன்று பரிந்துரை அளித்தது ஏற்கத்தக்கதல்ல என்பதும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது.
வரம்பு மீறிசெயல்பட்ட குழுவின் வரம்பு மீறியபரிந்துரைகளை பசுமைத்தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல. இது தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்.
பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவை பார்க்கும்போது கடந்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கும், மக்க ளுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு வெளிப் படுகிறது.
ஆனால் அதையும் மீறி ஆலையை திறக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது அப்பட்டமாக வேதாந்தா குழுமத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்ட நிலைப்பாடே.
இப்பின்னணியில் ஆலை மூடலை தொடர்வதற்கான அவசரசட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டுமென்றும், பசுமைத்தீர்ப்பா யத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி மக்கள்நலனுக்காக அரசியல் வித்தியாச மில்லாமல் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, மக்களைத் திரட்டிதொடர்ச்சியான களப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இற ங்கும் என்றும் உறுதி கூறுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவினர், ஸ்டெர்லைட்டை திறக்கப் பரிந்துரை அளித்ததை தமிழக அரசு ஏற்கக் கூடாது, சுற்றுச் சூழல் பாதிப்புகளைக் கண்டறிய தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முடிவு செய்த மக்கள் கூட்டமைப்பினர், நேற்று கருப்புத் துணி வாங்குவதற்காக துணி நகரமான புதியமுத்தூர் சென்ற போது, அவர்களைக் காரில் விரட்டிச் சென்ற புதியமுத்தூர் காவல்துறை, காரை மறித்து, போட்டோ எடுத்து மிரட்டியுள்ளது. பின்பு தூத்துக்குடி நோக்கி வந்த அவர்களை சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்(குட்கா) மற்றும் சார்பு ஆய்வாளர் சதீஸ் நாராயணன் ஆகியோர் கைது செய்து சிப்காட் காவல் நிலையம் அழைத்துச் சென்று இரவு 11.30 மணிவரை வைத்து மிரட்டியுள்ளனர்.
பின்பு எஸ்.பி. முரளி ரம்பாவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரும் உங்களை யாரோ இயக்குகிறார்கள், யார் உங்களுக்குப் பணம் தருவது? எனக் கேட்டுள்ளார்.
கருப்புத் துணிக்கு ரூ.5000/ செலவளிக்க முடியாதா எங்களால்? எல்லா ஊரும் சேர்ந்து பணம்போட்டு வேலைகள் செய்கிறோம், கற்பனையில் பேசாதீர்கள் எனக் கண்டித்துள்ளனர்.
அதன்பின், சுற்றுப்புற கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்பே வெளியே அனுப்பியுள்ளனர். இதற்கிடையே கருப்புத்துணியை விற்ற பிரபல துணிக் கடைக்காரரின் மகன்கள் இருவரையும் கடைக்கே சென்று மிரட்டி அவர்கள் துணி விற்பது குற்றமா என்று கேட்டதற்காக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் சில உதாரணங்கள்தான். ஸ்டெர்லைட் தீர்ப்பு வரப் போவதையொட்டி, 14 பேரை இழந்த மக்கள் கருத்துக் கூட தெரிவிக்கக் கூடாதென மிரட்டி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா? என்ற மக்கள் கேள்விக்கு பதில் அளிக்காத காவல்துறை, காவல்துறையை கேட்காமல் தெருக்களில் நடந்தால் கூட குற்றம் என்கிறது.
கு.வி.ந.ச. பிரிவு 107-ன் கீழ் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்களுக்கு மட்டும் சம்மன் வழங்கப்பட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்படுகின்றனர்.
எங்கும் போலீசார் குவிக்கப்பட்டு, மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
காஷ்மீரின் இராணுவ ஆட்சி போல தூத்துக்குடியில் போலீஸ் ஆட்சி நடக்கிறது.
ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்களை சாதி, மத ரீதியாக பிளப்பதற்கு, பணத்தை வாரியிறைத்து மக்களில் சிலரை விலைக்கு வாங்குவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சி நாதன் உள்ளிட்ட போராட்ட முன்னணியாளர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய முயற்சி நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன.
நடந்துவரும் சம்பவங்கள் தூத்துக்குடியில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் சாட்சிகளை காவல்துறை மிரட்டுவதால், சிபிஐ விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி மற்றும் மே 22,2018 அன்று பணியில் இருந்த அத்தனை காவல்துறை அதிகாரிகளையும் உடனே பணி மாறுதல் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி காவல்துறை அடக்குமுறைக்கு அனைத்துக் கட்சிகளும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது.
இவண்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

மல்லிகார்ஜூன கார்கே |

கே.பால கிருஷ்ணன் |

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா.அ.சீனிவாசன்,ம.லயனல் அந்தோணிராஜ், வழக்கறிஞர் நடராஜன்,
மதுரைக் கிளை நிர்வாகிகள்
முகவரி:384, முதல் தளம், கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20. 9443471003

பத்திரிக்கை செய்தி நாள்: 15.12.2018
- தூத்துக்குடி என்ன காஷ்மீரா? சிபிஐ (CBI) சாட்சிகளை மிரட்டி,அரசியல்சட்ட விரோதமாகச் செயல்படும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை பணி மாறுதல் செய்!