வானத்தில் பறந்த மானம்,கப்பலிலும் ?


அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தின் உத்தரவாத காப்புத்  தொகையை ரொக்கமாக மாற்றி, இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தேதியில் ரோந்துக் கப்பல்களைத் தயாரித்துக் கொடுக்காத காரணத்திற்காக இந்த நடவடிக்கையில் கடற்படை இறங்கியுள்ளது.

 இச்செயல்  மோடிக்கும்,பாஜகவுக்கும் பேரிடியாக உள்ளது.

5 ரோந்துக் கப்பல்களை ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்க, ‘பிபாவவ்’ என்ற பாதுகாப்பு மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனத்துடன், இந்திய கடற்படை கடந்த 2011-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டிருந்தது.

ஆனால், குறித்த காலத்தில் இந்த நிறுவனம் கப்பல்களை கட்டித் தரவில்லை.
அனால் இந்த நிறுவனத்தை 2016-ஆம் ஆண்டு  அனில் அம்பானி ,முக்கியத்தலைகள் தலையயீடு மூலம் வாங்கி ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ என பெயர் மாற்றியுள்ளார் .

இதனால், கடற்படையின் ஒப்பந்தம் இயல்பாகவே ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ வசம் வந்தது.

‘பிபாவவ்’ ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தப்படி, ரோந்துக் கப்பல்கள், 2015-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், பிபாவவ் நிறுவனம் ரிலையன்ஸ் வசம் சென்றபிறகும் பணிகள் முடித்துத் தரப்படவில்லை.

இதனால் இந்திய கடற்படை ரோந்துக் கப்பல் தயாரித்து அளிப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருந்த வங்கி உத்தரவாதத்தொகையை விதிகளின் படி ரொக்கமாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால்  "ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை" என்றும்  கூறிய  கடற்படைத் தலைவர் அட்மிரல் லான்பா,

"ஒப்பந்தத்தை நீக்கம்  செய்வது பற்றி மத்திய அரசு பாதுகாப்புத்துறை தான் முடிவு செய்ய வேண்டும் .அதற்கு பரிந்துரையை நாங்கள் அனுப்ப மட்டுமே இயலும் "என்று தெரிவித்துள்ளார்.

மோடி அரசுக்கு நெருக்கமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனம் மீதான, கடற்படையின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணிச்சலுக்குப்பின்னால "ரபேல் விவகாரம் உலகநாடுகள் மத்தியில் ராணுவத்துக்கு பெற்றுத்தந்த அசிங்கத்தை கடற்படையும் பெற விரும்பாததே" என்று இருக்கலாம்.

வானத்தில் பறந்த இந்திய ராணுவ மானம்,கப்பலிலும் ரிலையன்ஸ் ஏற்றி விடாமல் தடுத்தவர்களுக்கு ஆன்டி இந்தியர்கள் சார்பில் நன்றிகள்..
 

இந்திய விமானப்படைக்கு ரபேல் ரக போர்விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திலும் ரிலையன்ஸ் டிபென்ஸ் இடம்பெற்றுள்ளது.

59 நிமிடத்தில் தொழில்கடன் திட்டத்தை அண்மையில் மோடி அறிவித்தார்.

 இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கான தகுதியை பரிந்துரைக்கும் நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸூக்கு நெருக்கமானது என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.

 பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இஎஸ்ஐ நிதியை பராமரிக்கும் பொறுப்பு ஆகியவையும் ஏற்கெனவே, ரிலையன்ஸின் காப்பீட்டு நிறுவனத்திடமே  பாஜக மோடி அரசு ஒப்படைத்துள்ளது.

ஆனால் இந்த அனில்  அம்பானி வங்கிகளிடம் பெற்ற 40,000 கோடிகள் கடனை பல ஆண்டுகளாக திருப்பி செலுத்தாமல் உள்ளார்.

இந்தப்பெருங்கடன்காரரிடம்தான் ஸ்டேட் வங்கி தனது கல்விக்கடன் உட்பட்ட தனிநபர்  கடன்களை வசூலித்து தரும் ஒப்பந்தத்தை செய்துள்ளது.

கடுமையான முறையில் அடியாட்களை ஏவி விட்டார் அம்பானி,அவர்கள் அட்டகாசம்,கடனை திரும்ப கட்ட வீட்டில் வந்து அவமானப்படுத்திய கொடுமைகள்  தாங்க முடியாமல் அதனால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பலருக்கு நினைவிருக்கலாம்.
 
 எச்ச.ராஜாவுக்கு ஏன் பெரியார் மீது இவ்வளவு கொலைவெறி?
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.

சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர்.
பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

  இதற்கு பார்ப்பனரகள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பாப்பானர்களை பார்த்து

"தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். 
எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
  இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டு போகாது"
 என்றார்.

இதை கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது. இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியார்_பெயரைக்கேட்டதுமே எச்ச.ராஜா போன்ற  பார்ப்பனர்கள் ஏன் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா??
                                                                                                                                         -கோ மகன்

=====================================================
ன்று,
டிசம்பர்-06.
ஸ்பெயின் அரசியலமைப்பு தினம்
 அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)
பின்லாந்து விடுதலை தினம்(1917)
சட்டமேதை  பி.ஆர்.அம்பேத்கர் இறந்த தினம்(1956)


 சட்ட மேதை அம்பேத்கர்: 
ம.பி., மாநிலம், அம்பாவாதே எனும் கிராமத்தில், 1891 ஏப்., 14ல் பிறந்தார்.
கொலம்பியா பல்கலையில், எம்.ஏ., -பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் படித்தார்.

நாடு திரும்பிய அவர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய ஜாதிய அமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து போராடினார். நாட்டின் விடுதலைக்கு பின், முதலாவது சட்ட அமைச்சரானார்.
இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆக செயல்பட்டார்.
அவரது தலைமையில், இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.

'திராவிட புத்தம்' என்ற பெயரில், பல ஆயிரக்கணக்கான, 'பட்டியல்' ஜாதி மக்களை, புத்த மதத்தை தழுவ செய்தவர்.
1956, டிச., 6ல் காலமானார்.
 நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது, 1990ல் வழங்கப்பட்டது.
=====================================================
 நெல் ஜெயராமன் .

நெல் ஜெயராமன் என்ற  பெயரை தெரியாத விவசாயிகளும் இருக்க முடியாது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தீவிர விசுவாசியாக அவரது கருத்துகளை அப்படியே பின்பற்றி வந்தவர்

 அதனால் தான் விவசாயிகளால் ஓரங்கட்டப்பட்டு அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் விதைகளை தேடிச் சென்று சேகரித்து 169 பழைய ரகங்களை கொண்டுவந்து நெல் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி தமிழகம் கடந்தும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைதவர்

பாரம்பரிய உணவால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்ற உயரிய நோக்கத்தில் சேகரித்து வழங்கினார். ஆனால் நோய் வரக்கூடாது என்று நினைத்தவருக்கு கொடிய புற்றுநோய் சிறுநீரகத்தில் வந்தது நெல் ஜெயராமனுக்கு. கொடிய நோய் வந்த போதும் தனது பணியை செய்து கொண்டே இருந்தார்.


உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்.

 இந்த தகவல் அறிந்து முழு மருத்துவச் செலவையும் நான் ஏற்கிறேன் என்று அதற்காண முன்பணத்தையும் மருத்துவமனைக்கு செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.  

அவரது மகன் படிப்பு செலவையும் ஏற்றார். அதன் பிறகு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்து உதவிகளும் செய்தனர்

கடந்த  2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயரமான், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்

நேற்று மாலை அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. 

ஆனால்  தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாலகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த நலம் விசாரித்தனர், பின்னார் தமிழ அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
 
 இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(06-12-18) காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

====================================================
 'சஞ்சாரம்'
பெற்ற சாகித்ய அகாடமி விருது .
சாகித்ய அகாடமி சார்பில் இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘ ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
தமிழ் நூலுக்குரிய இந்த ஆண்டுக்கான விருது 'சஞ்சாரம்' நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர். 
இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
 இவரது முதல் கதையான 'பழைய தண்டவாளம்' கணையாழி சிற்றிதழில் வெளியானது.
 தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், டச்சு, கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
அட்சரம் என்ற இலக்கிய இதழை சில காலம் நடத்தி வந்தார்.
 சர்வதேச திரைப்படங்கள் மீதும், உலக இலக்கியங்கள் மீதும் தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்து வரும் எஸ்.ரா கரிசல் பூமியில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை வைத்து 'சஞ்சாரம்' நாவலை எழுதினார்.  
 இந்நாவலை எழுதியதற்காக எஸ்.ராவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 மீசையில் மண் ஒட்டவில்லை.
இந்திய வங்கிகளில் வாங்கிய கடன் தொகை முழுவதையும் செலுத்தி விடுகிறேன், அதைப் பெற்றுக்கொண்டு என்னை விட்டுவிடுங்கள் என்று, விஜய் மல்லையாகூறியுள்ளார்.

 ‘யுனைடெட் ப்ரெவெரீஸ் குரூப்ஸ்’ என்ற மதுபான கம்பெனியின் முதலாளிதான் விஜய் மல் லையா. ‘கிங் பிஷர்’ விமான நிறுவனத்தையும் நடத்தி வந்தார். 
இந்தியபொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிகடன்வாங்கியிருந்த இவர், அதனைத் திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பினார். 

இதையடுத்து, அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். 


அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதுடன், அமலாக்கத்துறையானது, மல்லையாவின் ரூ. 13 ஆயிரத்து 900 கோடிசொத்துக்களை முடக்கியும் நடவடிக்கை எடுத்தது.

மேலும், மல்லையாவை, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர லண்டனில் உள்ளவெஸ்ட் மினி ஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் மல்லையாதனது ட்விட்டர் பக்கத்தில் சிலகருத்துக்களைப் பதிவேற்றியுள் ளார். அதில், நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் ஓடிவிட்டதாக, இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூறுகின்றனர்.
 இது தவறு.
 கடனைத் திருப்பிச்செலுத்திவிடுவதாக கர்நாடக நீதிமன்றத்தில் நான் கூறியிருக்கிறேன். அதுபற்றி யாரும் பேசுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், எனது விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின.நஷ்டம் அதிகமானதால், வங்கியில் வாங்கிய கடன் அதற்கு பயன் பட்டது” என்று தெரிவித்துள்ள மல்லையா, தற்போது அசல் தொகை 100 சதவிகிதத்தையும் தந்துவிடுவதாகவும், தயவுசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு நெருங்குவதாலேயே மல்லையா இவ்வாறு கூறுவதாக கருதினால், அது முட்டாள்தனம் என்றும் ஊடகங்களை அவர் சாடியுள்ளார்.

அதாவது  மல்லையா "தாடி,மீசையில் மண் ஒட்டவில்லை"என்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------

குட்கா ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு விசாரணைக்கு வரக்கூறி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 



அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. 
ஆனால் அவர் ஆஜராகவில்லை. 
இதையடுத்து மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. 
 அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

இந்த முறையும் அமைச்சரின் உதவியாளர் ஆஜராகவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையான வீடு புகுந்து கைதை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?