ஒன்பதாம் வகுப்பில் சொல்வதென்ன?

CBSE ஒன்பதாம் வகுப்பில் நாடார்கள் பற்றி சொல்வதென்ன? 

CBSE 9 வகுப்பில் நாடார்கள் பற்றி தவறாக எழுதி இருக்கிறார்கள் என்று சமீபத்தில் போராடினார்கள்.

2017 ஆண்டு பதிப்பிக்கப்பட்ட CBSE 9 வகுப்பில் நாடார்கள் பற்றி இருக்கும் பகுதி இது.
அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இதில் சாணார்கள் மேலாடை அணிய அனுமதி கொடுக்காத உயர்சாதி வெறி பற்றி தெளிவாக கொடுத்திருகிறார்கள்.

4.1 Caste Conflict and Dress Change
Though there were no formal sumptuary laws as in Europe, India
had its own strict social codes of food and dress. The caste system clearly defined what subordinate and dominant caste Hindus should wear, eat, etc., and these codes had the force of law. Changes in clothing styles that threatened these norms therefore often created violent social reactions.

( இந்தியாவில் உயர்சாதி இந்துக்கள் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் உடை அணிதலை கூட கட்டுப்படுத்தினார்கள் என்பதை சொல்லும் பத்தி)

In May 1822, women of the Shanar caste were attacked by Nairs in public places in the southern princely state of Travancore, for wearing acloth across their upper bodies. Over subsequent decades, a violent conflict over dress codes ensued.
( மேலாடை அணிந்த காரணத்தால் சாணார்கள் தாக்கப்பட்டதை சொல்லும் பத்தி )


The Shanars (later known as Nadars), many of whom were considered a ‘subordinate caste’ and so were generally prohibited from using umbrellas and wearing shoes or golden ornaments. Men and women were also expected to follow the local custom of never covering their upper bodies before the dominant castes.
(குடை, செருப்பு, தங்க நகை எல்லாம் உபயோகிக்க நாடார்களுக்கு இருந்த தடையை சொல்லும் பத்தி)

Under the influence of Christian missionaries, Shanar women converts began in the 1820s to wear tailored blouses and cloths to cover themselves like the dominant castes.
(கிறிஸ்தவ மிசனரிகள் எவ்வாறு சாணார் சாதி பெண்களின் உடை உயர்வுக்கு உதவி செய்தார்கள் என்று சொல்லும் பத்தி)

Hindu reformers such as Ayya Vaikunder also participated in dress reform.
( அய்யா வைகுண்டரை புகழும் பத்தி )

Soon Nairs, one of the dominant castes of the region, attacked these women in public places and tore off their
upper cloths. Complaints were also filed in court against this dress change, especially since Shanars were also refusing to render free labour for the dominant castes.

(சாணார்கள் ஊதியமில்லாமல் வேலை பார்க்க மாட்டோம் என்று சொன்ன புரட்சி பற்றிய பத்தி)

At first, the Government of Travancore issued a proclamation in
1829 ordering Shanar women ‘to abstain in future from covering the upper parts of the body.’ But this did not prevent Shanar Christian women, and even Shanar Hindus, from adopting the blouse and upper cloth.

( திருவிதாங்கூர் சமஸ்தானம் சாணார்கள் மேலாடை அணியக் கூடாது என்று சொல்ல அதை மதிக்காமல் மேலாடை அணிவோம் என்று அணிந்து போராடிய போராட்டம் பற்றிய பத்தி)

The abolition of slavery in Travancore in 1855 led to even more
frustration among the dominant castes who felt they were losing control.

(அடிமை ஒழிப்பை திருவிதாங்கூர் சமஸ்தானம் பின்பற்ற வேண்டிய சூழலில் இருப்பது பற்றி உயர்சாதி இந்துக்கள் அதிருப்தி அடைவதை சொல்லும் பத்தி)

In October 1859, riots broke out as Shanar women were attacked in the marketplace and stripped of their upper cloths. Houses were looted and chapels burned. Finally, the government issued another proclamation permitting Shanar women, whether Christian or Hindu, to wear a jacket, or cover their upper bodies ‘in any manner whatever, but not like the women of high caste’.
( போராட்டம் மூலம் சாணார்கள் மேலாடை அணியும் உரிமையை வென்றது பத்தி. அப்படி வென்றாலும் உயர்சாதி இந்துக்கள் மாதிரி அணியக் கூடாது என்ற வந்த கட்டளையின் பின்னால் இருக்கும் சாதிவெறி பற்றிய பத்தி)


இதில் எங்கேயாவது வரலாற்றில் நடக்காத ஒன்றை கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. அனைத்துமே நடந்திருக்கிறது.

நாடார் சாதியில் பிறந்த தலைவர்களான குமரி அனந்தனில் அனைவரும் மைக்கைப் பிடித்து பேசினாலே இந்த தோள்சீலை போராட்டத்தை பற்றித்தான் பேசுவார்கள்.
தோள்சீலை போராட்டம் பற்றி நிறைய படைப்புகள் கட்டுரைகள் வந்திருக்கின்றன.

அதை பள்ளி மாணவர்கள் மட்டும் படிக்க கூடாது என்று தடுக்க முயற்சி செய்வதின் காரணமென்ன ? 

மரியாதைக்குரிய  தலைவர் ஒருவர் பேசும் போது “வகுப்பில் மற்ற பிள்ளைகள் நாடார் பிள்ளைகளை கிண்டல் செய்தால் அவர்கள் மனம் வருத்தப்படாதா” என்று கேட்டிருக்கிறார்.

ஒருவர் உலக அறத்துக்கு எதிராக மனிதநேயத்துக்கு எதிராக இன்னொருவரை அவமானப்படுத்தும் போது அதற்காக வெட்கப்பட வேண்டியவர் அவமானப்பட்டவரா ?
அவமானப்படுத்தியவரா?
நிச்சயமாக அவமானப்படுத்தியவர்தான்.

அவமானப்பட்டவரின் உணர்வு என்பது அவர்சார்ந்ததுதான் தானே, அந்த சமயத்தின் அவருக்கான் மனக்கஷ்டம்தானே தவிர அது வரலாற்றில் அவமானமாக எடுத்துக் கொள்ளப்படாது.

என்னை என் கிராமத்தில் செருப்பு போட விடவில்லை என்ற வரலற்றை என் பேரனுக்கு சொல்லும் போது அதில் எனக்கென்ன வெட்கம். வெட்கப்பட வேண்டியவர்கள் என்னை செருப்பு போடக்கூடாது என்று சொன்னவர்கள்தாம்.

அதன் அடிப்படையில் இதில் எந்த இடத்தில் நாடார்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் ?

தஞ்சையில் பண்ணை அடிமை முறை இருக்கும் போது தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் பண்ணையார்கள் சாணியை கரைத்து வாயில் ஊற்றினார்களாம்.

இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?
 அல்லது ”என்னை அவமானபடுத்தியதை மறைக்க வேண்டும்” என்று மக்களிடம் இருந்து மறைப்போமா?

வரலாறு வரலாறுதான்.

நாடார் சங்கங்களின் இந்த போராட்டம் அவர்களுக்கே தீமையாக முடியும் என்று நினைகிறேன்.

கல்வியில் BC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கான இடப்பங்கீட்டை மிக திறமையாக உபயோகித்தவர் அனுபவித்தவர்கள் நாடார்கள் எனலாம். நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் பொறியாளர்களாகவும், டாக்டர்களாகவும் ஆனார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கு இந்த BC இடஒதுக்கீடு மிக உதவியாக இருந்தது.

இந்த BC இடஒதுக்கீடு எப்படி கிடைத்தது?
 நாடார் சாதியினரை உயர் சாதியினர் செய்த அடக்குமுறை காரணமாக, அவர்களுக்கு கல்வி கொடுக்காத காரணமாக கிடைத்த உரிமைதான் இந்த BC இடஒதுக்கீடு.

நீங்கள் இப்படி வரலாறை மறைக்க வேண்டும் என்று போராடும் போது பொது மக்களிடம்
“எல்லாமே நன்றாகத்தானே இருக்கிறது. சாதிக் கொடுமை எல்லாம் சும்மா. அப்படி ஒன்றே கிடையாது” என்ற பொதுப்புத்திதான் வளரும்.

அந்த பொதுப்புத்தியின் உச்சப்பரவலில் இடப்பங்கீடு என்ற ரிசர்வேசனை முழுமையாக நீக்குவார்கள் உயர்சாதி இந்துக்கள்.

இன்னமும் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கல்வியில் முன்னேறவில்லை என்பதுதான் உண்மை. இச்சூழ்நிலையில் சாதியால் அடக்கப்பட்ட வரலாறை மேலும் மேலும் பலருக்கு சொல்லத்தான் வேண்டும்.

நான் நாகர்கோவிலில் பள்ளிப்பருவத்தில் வளரும் போது என் காதால் நாடார் சாதியினரை நா.நா.வெ சாதியினர் ஒருமையில் கூப்பிடுவதை கேட்டிருக்கிறேன்.

என் வாழ்க்கை நெடுக அதை பலரிடமும் சொல்வேன். அதில் எந்த அவமானமும் இல்லை. ஒருமையில் அழைத்தவர்களின் சாதிவெறிக்கு அவர்கள்தான் வெட்கபட வேண்டும். ஏன் அதை அனுபவித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்.

எனக்கு இதில் இந்துத்துவ ஃபாசிச சதி இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
நாடார்களை உயர்சாதியினர் செய்த அடக்குமுறை வரலாறு என்பது அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து பணியாற்றவே தூண்டும் என்ற கவலையில் நாடார் வரலாறை அழிக்க பார்க்கிறார்களோ என்று நினைக்கிறேன்.

இன்னமும் பிளஸ் டூ கூட முடிக்காத நாடார் இளைஞர்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
அவர்களை எல்லாம் கணக்கெடுத்து குறிவைத்து கல்வி கற்க வைத்து முன்னேற்றுவதுதான் நாடார் சங்கங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

வரலாறை திரிக்கவோ அழிக்கவோ மறைக்கவோ செய்வது என்பது சமூகத்துக்கு நல்லதில்லை.
அது சமூகநீதி புரியாமையில் கொண்டு விடும்.

சமூகநீதி புரியாத நாட்டில் நிம்மதி இல்லாமல் போய்விடும்.

இந்த கோணங்களில் எல்லாம் யோசிக்குமாறு அறிவார்ந்த பெரியோர்களை தலை வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

நன்றி:முகநூலில்                                                                              -விஜயபாஸ்கர் விஜய்.(நாடார்)
                                                                                                                                               நாகர்கோவில் .
 ================================
 இன்று,
டிசம்பர்-11.

சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)

யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)

கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)
=============================================================
 ரிசர்வ் வங்கி ஆளுநர் திடீர் ராஜினாமா.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியுள்ளார். 

 ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக உர்ஜித் படேல், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார்.
ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை மத்திய அரசு முடக்கி வந்த பின்னணியில், அவர் பதவி விலகியுள்ளார். 
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணமதிப்புநீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு இல்லை. 

ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ்வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய பாஜக அரசு நியமித்தது.

அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த மோதல் சமீபத்தில் வெளிச்சமானது. 
suran
உர்ஜித் படேல்
தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இந்த சூழலில், ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழக்கமாக வழங்குவது போலஇந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகை ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. 

ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. இது இந்திய மக்களின் சேமிப்புப் பணத்தின் திரட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 19-ம் தேதி நடந்தவாரியக் கூட்டத்தில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரி வித்தன. 

பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வாரியக்கூட்டம் சுமூகமாக நடந்தது.இந்தநிலையில் உர்ஜித் படேல் திங்களன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன்.
 இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். 
பதவி விலகலுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
 அரவிந்த் பனகாரியா - நிதி ஆயோக் தலைவர்..
அரவிந்த் சுப்பிரமணியம் - தலைமை பொருளாதார ஆலோசகர்,..
உர்ஜித்படேல் - RBI கவர்னர் ...
இவர்கள் அனைவரையும் பதவியில் அமர்த்தும் போது, இந்தியாவின் பொருளாதார செயல்படுபவர்களை நேரான பாதைக்கு உயர்த்த இவர்கள் பாடுபடுவார்கள் என்று RSS பிஜேபி கும்பல் கூவினார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் அரசை விமர்சனம் செய்து பதவிகாலம் முடியும் முன்பே வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக பணமதிப்பிழப்பின் பாதிப்புகளை சுட்டி காட்டி வெளியேறியுள்ளனர்.
மோடினாமிக்ஸ் வரும் நாட்களில் மிகப்பெரிய அவலத்தை உருவாக்க போகிறது என்பது மட்டும் உறுதி...!
----------------------------------------------------------------------------------------------------------------
 புதிய பொருளாதார ஆலோசகர் அப்பட்டமான வலதுசாரி?

இந்தியாவின் 16-ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், 2018 ஜூன் 20-ஆம்தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, வராக்கடன் அதிகரிப்பு போன்ற விவகாரங்களில், அரவிந்த் சுப்பிரமணியனுக்கும், மோடி அரசுக்கும் மோதல் நிலவி வந்ததே ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறப்பட்டது. எனினும், வெளிப்படையாக பேசாத அவர், “ஆப் கவுன்சில் : தி சேலஞ்சஸ் ஆப் தி மோடி - ஜெட்லி எக்கானமி” என்றதலைப்பில் அண்மையில் எழுதிய புத்தகத்தில் ‘பண மதிப்பு நீக்கம் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட கொடூரமான பேரதிர்ச்சி’ என்று குறிப்பிட்டு, தனது நிலையைதெளிவுபடுத்தினார்.

“பணமதிப்பு நீக்கத்தால், சுமார் 2 சதவிகிதம் அளவிற்கு நாட்டின் வளர்ச்சி குறைந்து விட்டது. அரசியல் ரீதியாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது எப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை; அண்மையவரலாற்றில் எந்த நாடும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை; தற்போது உயர் வட்டி விகிதம், ஜிஎஸ்டி நடைமுறைமற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெய்விலை ஆகியவையும் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது” என்று விரிவாகவே அவர் எழுதியிருந்தார்.
suran
அரவிந்த் சுப்பிரமணி


இது ஒருபுறமிருக்க, அரவிந்த் சுப்பிரமணியனுக்குப் பிறகு, கடந்த 6 மாதமாக,தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியை நிரப்பாமல் வைத்திருந்த, மோடி அரசு தற்போது கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் என்பவரை தேடிக் கண்டுபிடித்து, நாட்டின் 17-ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக (Chidf Economic Adviser to the Government of India-CEA) நியமித்துள்ளது.

சென்னையில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ஐஐடி கான்பூரில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பிடெக் பட்டம் பெற்றவர்;
 கொல்கத்தா ஐஐஎம்-இல் தங்கப் பதக்கத்துடன் எம்பிஏ பட்டம் பெற்றவர்; அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள பூத் ஸ்கூல் ஆப் பிசினஸில் முனைவர் பட்டம் பெற்றவர்;
40 வயதில் பொருளாதார ஆலோசகராக உயரும் தகுதி பெற்றவர் என்று நிறைய சிறப்புக்கள் கூறப்படுகின்றன.

ஆனால், அவை எல்லாவற்றையும் விட, அமெரிக்காவில் உள்ள ஜேபி மோர்கன்நிறுவனம், ஐசிஐசிஐ ஆராய்ச்சி குழுமம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், 
பொருளாதாரத் துறையில் ஒரு கடைந்தெடுத்த வலதுசாரி, பிற்போக்கு ,முதலாளித்துவ பொருளாதார கொள்கையாளர் மற்றும் பாஜக ஆதரவாளர் என்பதுதான், தற்போது பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. 

பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவுடன் அளித்த முதல் பேட்டியிலேயே, “டிமானிட்டைசேஷன் எனப்படும்பணமதிப்பு நீக்கம் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை” என்று கூறி, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனே அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்போது மட்டுமல்ல, 2016 நவம்பர் 24-ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதிய கட்டுரையிலும், “பணமதிப்பு நீக் கம், வரி ஏய்ப்பாளர்கள் மீதான பிடியை இறுக்கும்; கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்கும்” என்று ஜே! போட்டுள்ளார்.அதே ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் 2016 ஜூலை 2-ஆம் தேதியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அதில், “காந்தி குடும்பம் இந்தியாவுக்கு கடனைத்தான் கொடுத்திருக்கிறது” என்று பாஜககாரரைப் போலவே காங்கிரசை விமர் சித்துள்ளார்.

“இந்தியாவில் பாஜக வந்த பின், அதாவது குடும்ப அரசியல் இல்லாத கட்சி வந்தபின், ஆண்டுக்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து800 கோடி ரூபாய்தான் செலவழித்திருக்கிறது; ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற குடும்ப அரசியல் கட்சிகள் ஆட்சி செய்தபோது ஆண்டுக்கு 6 லட்சத்து 89 ஆயிரத்து 600 கோடி ரூபாயை மானியங்கள் மற்றும்இலவச திட்டங்களுக்கு செலவழித்திருக்கிறார்கள்” என பாஜக பஜனை நடத்தியிருக்கிறார்.

“இந்தியாவின் மொத்த ஜிடிபியில், திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் 9.2 சதவிகிதத் தொகையை மானியங்கள்,இலவசங்கள் என்று வீண் செலவு செய்திருக்கிறார்கள்; பாஜக ஆட்சிக் காலங்களில் இந்திய ஜிடிபி-யில் 5.3 சதவிகிதத்தை மட்டுமே செலவழித்திருக்கிறார்கள்; திமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகள் அறிவித்திருக்கும் மானியங்கள், இலவசங்களின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 13 சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்த செலவுஅதிகரிப்பு 4 சதவிகிதம் என்ற கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது” என்றும் புகழ் பாடியுள்ளார்.

இறுதியாக, “இந்தியாவில் விவசாயம் உட்பட எதற்கும் மானியங்கள் கொடுக்கக் கூடாது; அவ்வாறு கொடுத்தால் நாடு திவாலாகி விடும்” என்று முத்தாய்ப்பாக அந்த கட்டுரையை முடித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவரைத்தான் 6 மாதமாக பாஜக தேடிக் கண்டுபிடித்து, பதவியில் அமர்த்தியுள்ளது.


suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?