தீராத விளையாட்டுப்பிள்ளை .

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் இதுவரையில் மூன்று முறை நேரில் சந்தித்துவிட்டார் கமல்ஹாசன். 

இரண்டு முறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே நேரில் சென்று நின்று ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகள் தந்தார். 
நேற்று சென்னை ரயில் நிலையத்தில் போராடிய விவசாயிகளை சந்தித்தபோதும் இந்த கஜா பிரச்னை,நிவாரணம்  பற்றி பேசினார். 

அரசாங்கமே போகாத புயல் பதித்த இடங்களைப்பார்த்து மக்களுக்கு ஆறுதல்,நிவாரணம் அளித்து அதிமுக அரசு கடுப்பாகுமளவுக்கு செயல்பட்டும், அறிக்கைகள் விட்டும்எடப்பாடி பழனிச்சாமி அரசின் வெப்பத்தை அதிகரித்து வருகிறார்.

 ஆனால் ரஜினிகாந்தோ தமிழகத்தை சேர்ந்த ஏழெட்டு மாவட்டங்கள் கஜா புயலால் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகியும், குறிப்பாக டெல்டாவானது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுவிட்ட நிலையிலும் இதுவரையில் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. 

வெறும் அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார். 

ஆனால் அந்த நேரத்தில் 2.0 ப்ரமோஷனுக்காக ஆந்திராவுக்கும், கன்னட நடிகர் அம்பரிஷ் மரணத்துக்காக கர்நாடகாவுக்கும் அவர் பறந்தது டெல்டா மக்களை பெரும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. 

இந்த சூழலில் பேட்ட படத்துக்கு அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறாராம் ரஜினி. 

இந்நிலையில் தன் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்துப் பேசியிருப்பவர், “ நடிப்பை பொழுதுபோக்காகதான் நான் நினைக்கிறேன். 
தொழிலாக அல்ல. 
தொழிலாக நினைத்தால் நடிப்பு எனக்கு சுமையாகிவிடும். " என்று பொன்மொழி உதிர்த்தோடு

"அரசியல் என்பதும் மிகப்பெரிய விளையாட்டு, ஆபத்தானதும் கூட. அதனால் மிக கவனமாகவும், நிதானமாகவும் அரசியலை விளையாடி வருகிறேன்.” என்றுதத்துவமும் பேசியுள்ளார்.

அரசியலை விளையாட்டு என்று ரஜினி உருவகப்படுத்தி இருப்பது அவரின் மனதில் உள்ள முதல்வர் பதவி ஒட்டப்பந்தயத்தைத்தான் காட்டுகிறது.மக்களிடம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. 
"தீராத விளையாட்டுப்பிள்ளை "பாடலை நடித்தவர் ரஜினி.உண்மையிலும் அதையே செய்கிறார்.அதற்காகத்தான் அரசியலில் இதுவரை பல வாய்ஸ்களை கொடுத்து விளையாடி இருக்கிறார் போல.

விளையாட்டாய் நினைப்பதால்தான் ஸ்டெர்லைட் மக்களின் சோகம் , டெல்டா மக்களின் சோகம்  ரஜினிக்குஒரு பொருட்டாக்கப்படவில்லை. 


ஆனால் தமிழ்நாட்டில் தலைமைக்கு பெரும் வெற்றிடம் உள்ளதாகவும் தான் அதை நிரப்பப் போவதாகவும் கனவு காண்கிறார்.அதை வெளியேயும் சொல்கிறார்.

இப்படி எடப்பாடி பழனிச்சாமி அளவு கூட மக்கள் பிரச்னையில் பொறுப்பின்றி நடந்து கொள்ளும் இவர் தங்கள் வாழ்வாதார உரிமைக்குப் போராடும் மக்களை சமூக விரோதிகள் என்று பட்டம் வேறு கொடுக்கிறார்.

ஆன்மிக அரசியல் செய்யப்போவதாகக்கூறும் நடிகர்  ரஜினிகாந்த் "மக்கள் பிரச்ச்னையில் எதற்காகவும் போராடக்கூடாது.அதற்கு வேற ஆட்கள் இருக்கிறார்கள்.நாம் தேர்தலில் நின்று வெல்ல வேண்டும் '
என்று முதல் கூட்டத்திலேயே தனது ரசிககுஞ்சுகளுக்கு கட்டளையிட்டவர் அல்லவா?

ரஜினிக்குத் தேவை முதல்வர் நாற்காலி.மக்கள் நலன் என்பதெல்லாம் தேவையற்றது என்பதை அவரது இந்த பிரகடனமே பறைசாற்றி விட்டதே.

ஆனால் அவரது கொள்கை முடிவுதான் அவரை தூத்துக்குடியில்' நீ யார்?"என்று மக்கள் மூலம் கேட்க வைத்தது. காரணம் தமிழ் நட்டு மக்கள் புத்திசாலிகள்.

இதற்கிடையில்,
 ’சாவின் விளிம்பை தொட்டு, அநாதைகளாகவும், சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும் ஆகிவிட்ட எங்களை சந்திக்க வராத நீயா  எங்களை ஆள முயல்வது?
 உன்  கனவிலும் பலிக்காது அந்த நினைப்பு.’ 
என்று டெல்டாவிலிருந்து ரஜினிக்கு எதிராக  குரல்கள் எழுகின்றன.

அதுதான் ஒட்டு மொத்த தமிழகக் குரல்.ஓட்டுப்போடுகிற மக்கள் குரல்


 ==================================================
 ன்று,
டிசம்பர்-04.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்
இந்திய கடற்படை தினம்
தாய்லாந்து தேசிய சுற்றுசூழல் தினம்
உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி அப்சர்வர்-ன் முதலாவது இதழ் வெளிவந்தது(1791)
இந்தியாவில் சதி முறையை ஒழிக்க கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829) 


 ==================================================
 

எரியும் பிரான்ஸ்  மோடிக்கு கூறும் செய்தி

பிரான்சில் பெருமளவில் கிளர்ச்சி நடந்துவருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி கடுமையாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பொருட்களின் விலையும் ஒரு சுற்று உயர்ந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உட்பட நாட்டின்பல்வேறு இடங்களில் கிளர்ச்சி வெடித்துள்ளது. முக்கியமான இடங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கமுடியாது என்றும் கடந்த காலத்தைப்போலபோராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு அரசு அடிபணியப் போவதில்லை என்று மிரட்டியுள்ளது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அவசர நிலையை அறிவிப்பதன் மூலம்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்று பிரான்ஸ் அரசு கருதுவது பிரச்சனையை தீர்க்க உதவாது.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகஇருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தபோது விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராகயில்லை.பிரான்சில் நடைபெறும் கிளர்ச்சி தனித்த ஒன்றல்ல. முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியின் விளைவேயாகும்.

2018 அக்டோபரில் ஐஎம்எப் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை 180 நாடுகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது என்றும் 2008 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையே தொடர்கிறது என்றும் கூறியுள்ளது.

பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் ஓய்வூதியம் வெட்டப்பட்டதை கண்டித்தும் கிரேக்கத்தில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்தும் ருமேனியாவில் ஊதியக் குறைப்பை எதிர்த்தும் போராட்டங்கள் வெடித்தன.
ஜெர்மனி உள்ளிட்டநாடுகளிலும் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். பிரான்சில் நடைபெற்று வரும் கிளர்ச்சியிலும் முதலாளித்துவத்திற்கெதிரான முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

பிரான்சில் கடந்த ஓராண்டுகாலத்தில் பெட்ரோல், டீசல் விலை 23 சதவீதம்அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்ட வரியும் குமுறிக் கொண்டிருந்த மக்களின் கோபத்தை விசிறி விட்டு பெரும் போராட்டமாக உருவெடுக்க வைத்துள்ளது.
பிரான்சில் நடைபெறும் இந்த போராட்டம் முதலாளித்துவ நாடுகள் அனைத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.
நெருக்கடி முற்றி வெடிப்பு ஏற்பட துவங்கியுள்ளதன் வெளிப்பாடே இந்த கிளர்ச்சியாகும்.மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமின்றி நவீன தாராளமய பொருளாதார கொள்கையை கண்மூடித்தனமாக திணிக்கும் மோடி அரசு உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் அனைத்தையும்சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதையே பிரான்ஸ் போராட்டம் உணர்த்துகிறது.


Manohar Rs சென்னைலேர்ந்து திருச்சி செல்லும் போதும், வரும் போதும் வழி ல உள்ள நிறைய "மோட்டல்" களின் நுழைவு ல,சீருடை அணிந்த சீனியர் சிட்டிசன் ஒருவர் ஏதேனும் ஒரு கலர் கொடியுடன் விசில் ஊதி போகிற வருகிற வாகனங்களை வழி மறித்து தங்களது மோட்டல்களில் சாப்பிட அழைப்பதை நீங்களனைவரும் நிறையவே பாத்திருக்கக் கூடும்.

அதுபோலவே தற்போது எந்திரன் 2.O படமோடும் தியேட்டர் ஊழியர்களும், எழுபதை கடந்த ஏழெட்டு கிழங்களும் ரஜினி மக்கள் மன்ற கொடியுடன் விசில் ஊசி கையை பிடித்து இழுக்காத குறையாக சாலையில் பயணிப்போரை எந்திரன் 2.O படம் பார்க்க வருமாறு வற்புறுத்தி அழைப்பதெல்லாம் அதீதம்.

அதிலும் ₹120 டிக்கெட் ₹60 எனவும், இடைவேளை வரை படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் ,பாப்கார்ன் இலவசமெனவும், பார்க்கிங் கட்டணம் கிடையாது என்றெல்லாம் கூவுவது கொடுமையிலும் கொடுமை.

அதால, எந்திரன் 2.O படமோடும் தியேட்டர்களின் வழியே பயணிப்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுகிறேன்.

இம் முன்னெச்சரிக்கையை மீறுபவர்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதமில்லை என்ற உண்மை உணர வேண்டுகிறேன்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?