5 மாதத்திலேயே


நிதிப் பற்றாக்குறை ரூ.5.54 லட்சம் கோடி


மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையேயான வித்தியாசம்தான் நிதிப்பற்றாக் குறை எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், 2019-20 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறைரூ. 7.02 லட்சம் கோடியாக இருக்கும்என்று பட்ஜெட்டில் கணிக்கப்பட்டு இருந்தது.
உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 3.3 சதவிகிதத்தை, தாண்டிவிடாத வகையில்நிதிப்பற்றாக்குறையை வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 7.02 லட்சம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், திங்கட்கிழமை வெளியான பொதுக்கணக்குத் தணிக்கைஇயக்குநர் வெளியிட்ட அறிக்கை மூலம், நிதியாண்டின் 5 மாதங்களுக்கு உள்ளாகவே, பட்ஜெட்டில்கணிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையில் 78.7 சதவிகிதம் எட்டப்பட்டு விட்டது, தெரியவந்துள்ளது.

அதாவது, 12 மாதங்களுக்கான நிதிப்பற்றாக்குறை மதிப்பீடே ரூ. 7 லட்சத்து 2 ஆயிரம் கோடிதான் என்ற நிலையில், இதில் 5 மாதங்களுக்கு உள்ளாகவே ரூ. 5 லட்சத்து 53 ஆயிரத்து 840 கோடிசெலவிடப்பட்டு உள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டிலும் இதேபோல 5 மாதங்களுக்குள் (ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 30க்குள்),கணிக்கப்பட்ட மொத்த செலவினத்தில் 86.5 சதவிகித செலவினங்கள் நடந்து முடிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அரசு தொடர்ந்து தனது கணிப்பில் உறுதியாக உள்ளது எனவும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில்நிதிப் பற்றாக்குறை ரூ. 2 லட்சத்து68 ஆயிரம் கோடிக்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அதானு சக்ரபோர்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால் ,
உலக வன்முறை எதிர்ப்பு தினம்
காந்தியடிகள் பிறந்த தினம்(1869)
 தியாகி  லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)

பெருந்தலைவர்  காமராஜர் நினைவு தினம்(1975)

1942 - இரண்டாம் உலகப் போரின் போது, 10 ஆயிரம் அமெரிக்க வீரர்களை ஏற்றிச்சென்ற இங்கிலாந்து பயணிகள் கப்பலான குயின் மேரி, அதன் பாதுகாப்புக்குச் சென்ற   போர்க்கப்பலான குரகோவா என்பதை எதிர்பாராமல் மூழ்கடித்தது. 
முதல் உலகப்போர்க் காலத்தில் கட்டப்பட்ட போர்க்கப்பலான குரகோவா, பெரும்பகுதிப் பணிக்காலத்தில் கொடிக் கப்பலாகவே(ஃப்ளாக் ஷிப்) இருந்துள்ளது. கப்பல்களின் அணிக்கு உத்தரவிடும்  தலைமைப் பொறுப்பிலுள்ளவர் ஒரு தனிச்சிறப்பான கொடியைப் பயன்படுத்துவார் என்பதால், ஃப்ளாக் ஆஃபிசர் என்றும், அவர் பயன்படுத்தும் கப்பல் ஃப்ளாக் ஷிப் என்றும் அழைக்கப்படும்.
ஃப்ளாக் ஷிப் என்பது, அந்த அணியிலேயே பெரியதாகவும், வேகமானதாகவும், அதிக ஆயுதபலம் கொண்டதாகவும் இருக்கும் என்பதால், பிற்காலத்தில் பிற துறைகளிலும் முக்கியமானவற்றை அப்பெயரால் அழைக்கும் பழக்கம் உருவாயிற்று.
ஜெர்மனியின் யு-போட் நீர்மூழ்கிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, குவின் மேரியும், அதன் பாதுகாப்புக் கப்பல்களும், எண்.8 ஜிக்ஜாக் முறைப்படி பயணித்தன.

கப்பல் செல்லும் வழிகுறித்து எதிரியைக் குழப்புவதற்காக திசையை மாற்றிமாற்றிப் பயணிப்பது ஜிக்ஜாக் முறை என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திலும் தனிப்பட்ட ஜிக்ஜாக் முறை உருவாக்கப்பட்டு, அந்த அணியிலுள்ள அனைத்துக் கப்பல்களின் தளபதிகளிடமும் தரப்படும்.

அக்காலத்தில் தகவல்தொடர்பு வசதிகள் குறைவாக இருந்ததாலும், எதிரிகள் ஒட்டுக்கேட்க முடியும் என்பதாலும், ஒவ்வொரு முறை திரும்பும்போதும் தெரிவிக்காமல், ஒலியெழுப்பி எச்சரிக்க ஜிக்ஜாக் கடிகாரங்கள் என்பவையும் பயன்படுத்தப்பட்டன.
குறுக்கும், நெடுக்குமாக மாறிமாறிப் பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் குரகோவா குறுக்கே வருவதுபோலத் தோன்றினாலும், போர்க்கப்பல் என்பதால் உரிய நேரத்தில் விலகிச்சென்றுவிடும் என்று குயின் மேரியின் தளபதி கருதிவிட்டார்.
ஆனால், முற்காலத்திய கப்பல்களின் முன்பகுதியின் அடியில், எதிரிக் கப்பல்களைத் தாக்குவதற்காக, 6-12 அடி நீளத்திற்குப் பொருத்தப்படும் (ரேம்) பகுதி மோதியதில், இரண்டு துண்டுகளாக உடைந்து, 6 நிமிடங்களில் மூழ்கிப்போனது குரகோவா. எதிரிகளால் தாக்கப்படலாம் என்பதால், நிறுத்தாமல் சென்ற குவின் மேரி, மற்றொரு பாதுகாப்புக்கப்பலுக்குத் தெரிவித்தது.
 சில மணிநேரம் கழித்து வந்த அக்கப்பலால் 101 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
 337 கடற்படையினர் பலியான இந்நிகழ்வு ரகசியமாக வைக்கப்பட்டதுடன், தப்பியவர்கள் இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
 பின்னாளில்  குவின் மேரி கப்பலின் உரிமையாளர் நிறுவனத்தின்மீது கடற்படை வழக்குத் தொடர, தவறு குரகோவாவினுடையது என்று தீர்ப்பளித்து பிரச்சனை முடிக்கப்பட்டுவிட்டது.
                                                                                                                                  - அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில்  ஒரு குறளை அதற்கான பொருளுடன் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தினம் ஒருவர் கூற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் நாம் இணைப்போம் .
பிரதமர்  மோடி சென்னை வந்தபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தி ருக்கிறார்.

கோதாவரி ஆற்றிலிருந்து நீர் பெறும் மாநிலங்களுடன் பேசி 200 டிஎம்சி தண்ணீரை கட்டளை இணைப்பு வழியாக தமிழகத்திற்கு அனுப்பும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதை இறுதி செய்வதற்கு மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தர விட வேண்டும் என்று கோரியுள்ளார்.


தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழாக இறங்கிவிட்டது.
அதனால் தீபகற்ப நதிகளை இணைப்பதே மாற்று ஏற்பாடாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நீர் இருப்பின் அளவு ஓராண்டுக்கு 860 கனமீட்டராக உள்ளது என்றும், தேசிய சராசரி 1869 கன மீட்டர் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய மானிய நிதிஉதவி ரூ.7825.59 கோடி பாக்கியையும், விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக முதல்வரின் கோரிக்கையை பிரதமர் செவி மடுத்து விரைவில் தமிழகத்திற்கான நிதியை  வழங்க வேண்டுமென்பது தமிழக மக்களின் கோ ரிக்கையாகும்.

ஆனால் நீர் பற்றாக்குறை மற்றும் நீராதார மேம்பாடு குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள யோசனை தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் மேகத்தை காட்டுவது போல் உள்ளது.

தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் உள்ளன.
 அதில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 13,710 ஏரிகள் உள்ளன. தமிழக ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் எண்ணிக்கை 127.
அதில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை 89.
 மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை 38.
இந்த அணைகளை சீரமைப்பது  அவசியம்தான்.
 எனினும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு மழைநீர் சேகரிப்பு, வெள்ளக் காலத்தில் தண்ணீர் வீணாகாமல் சேமிப்பது ஆகியவை மிக முக்கியமானதாகும்.

கடந்த ஆண்டில் 130 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது.

எனவே மழை வெள்ளக் காலங்களில் தண்ணீரை சேமிப்ப தற்கான ஏற்பாடுகளை மாநில அரசு உரிய முன்னேற் பாட்டுடனும் மிகுந்த கவனத்துடனும் அணுகிட வேண்டும்.
காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் தமிழக அரசால் முன்மொழியப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் மாநில அரசு எடுக்கவில்லை. இந்த திட்டத்தில் புங்கா நதி முதல் கிருதுமால் நதி வரை 15 நதிகள் அடங்கி யுள்ளன.
இதனால் 50 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்காக ரூ.5166 கோடி வழங்க வேண்டுமென 2014ஆம் ஆண்டு அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார்.


இப்பொழுது இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு இன்னும் சில ஆயிரம் கோடி கூடுதலாகும்.

நமது மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப் பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கும் எடப்பாடி அரசு மத்திய அமைச்சர் நிதின் கட்கா ரியால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்ட கோதாவரி, காவிரி இணைப்புத்திட்டத்தை செயல் படுத்துவதற்கு வலியுறுத்துவது புண்ணை புனுகு வைத்து மறைப்பதுதான் இது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 பிரிட்டன் BLENHEIM அரண்மனையில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த 35 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தால் ஆன கழிவறையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நினைவில் கொள்ளுங்கள்.

 சுரன் 260919
அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு
நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.
 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.
தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,000
கடைசி நாள்: 2.10.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு
விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------
 ரிசர்வ் வங்கிப் பனி.
ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019
ஆபிசர்ஸ் கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750 (2)-54400-2000 (4)-62400 என்ற முறையில் வழங்கப்படும்.
*--------------------------------------------*---------------------------------------*--------------------* 
ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்
மண்டல வாரியாக பணியிடங்கள்
வடக்கு மண்டலம் – 1544
மத்திய வடக்கு மண்டலம் – 1242
மத்திய கிழக்கு மண்டலம் – 1497
கிழக்கு மண்டலம் – 980
மத்திய மண்டலம் – 472
மத்திய தெற்கு மண்டலம் – 632
தெற்கு மண்டலம் – 400
மேற்கு மண்டலம் – 1104
சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
தேர்வு முறை : முதனிலை தேர்வு,
 முதன்மை தேர்வு மற்றும்
நேர்முகக்காணல்  மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019
விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/
------------------------------------------------------------------------------------------------------------------------------------  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2 தேர்வு முறை
 முற்றிலும் மாற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  
இனி குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மொழிப்பாடம் கிடையாது. 
தவிர, மொழிபெயர்ப்பு புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்க வேண்டும்.
இதுவரை நடந்து வந்த குரூப் 2 தேர்வுகளில் இருந்து வந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டிருக்கிறது. 

அதேமாதிரி, முன்பு மொத்தம் 300 மதிப்பெண்ணில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளாகவும் இருந்தது. 
தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு வினாக்களாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
 அதன்படி, குரூப் 2வில் வரும் முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்களை அதிகரிப்பட்டிருக்கிறது. 

 குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.  
மொழிபெயர்ப்பு பகுதியில் குறைந்தது 25 மதிப்பெண்கள் எடுக்காவிட்டால், அந்தத் தாள்கள் மதிப்பீடே செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குரூப் 2க்கு மட்டும்தான்  முதல்நிலை தேர்வு எழுத வேண்டிய தேவை இருந்தது. 
குரூப் 2 ஏ தேர்வில் ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு நேர்காணலுக்கு செல்லலாம். 
ஆனால், குரூப் 2க்கும் முதல்நிலை தேர்வு எழுதும்படி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------

 தீவிர வயிறு வலியா ?

பித்தப்பை கற்களாகவும் இருக்கலாம்!

சத்தமில்லாமல் கொல்லும் நோய்களைப் போல சத்தமில்லாமல் கொல்லும் உடல் உபாதைகளாக குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே இருந்து வந்த பித்தப்பை கல் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.
ஆய்வு ஒன்றின் புள்ளிவிவரப்படி நூறில் 15% பித்தப்பையால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் என்ற மருத்துவ விழிப்புணர்வு அனைவருக்கும் இருந்தாலும் வயிற் றுக்குள் இருக்கும் உறுப்பில் பித்தப்பையில் கற்கள் உருவாவது அதிகரித்துவருகிறது.

ஆரம்பகட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளையும் காண்பிக்காமல் நாளடைவில் மோசமான பாதிப்பு களையும் தீவிர வலிகளையும் ஏற்படுத்திவிடுகிறது பித்தப்பையில் இருக்கும் கற்கள்.

நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் கொழுப்புச்சத்தை கிரகித்துக்கொள்ளும் வேலைக்கு துணை புரி கிறது.இது வயிற்றுக்குள் கல்லீரலின் கீழ் சிறிய பை போன்று அமைந்திருக்கிறது.கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்து செல்லும் பித்தநாளத்துடன் இணைந்துள்ளது.

இவை இரண்டு வேளை உணவுக்கு வேண்டி செரிமானமாகக்கூடிய பித்தநீரை தேக்கிவைக்கிறது. நாம் உண் ணும் உணவை செரிமானமாக்க பித்தகுழாயிலிருந்து சிறுகுடல் செல்கிறது. நமது உடலின் பித்தநீரை சேமித்து வைக்கும் ஒரு தனி அறை என்றும் சொல்லலாம்.

பித்தநீர் உணவு உட்கொண்ட பிறகு கழிவுபொருள்கள்,பித்த தாதுஉப்புகள்,தேவையற்ற கொழுப்புகளைவெளி யேற்ற உதவுகிறது. தாதுஉப்புகளைக் கரைசல் வடிவில் வைக்க தோல்வி அடையும்போது கல் உருவாகிறது.
பித்தப் பைகற்கள் சிறு சிறு அளவில் மிளகு வடிவில் காணப்படும்.இது பெரும்பாலும் அனைவருக்குமே இருக்கும் என்றாலும் பெரிய பாதிப்புகளை உண்டாக்காது. 
வெகு சிலருக்கு இது வளர்ந்து புளியங்கொட்டை அளவில் எண்ணிக்கையில் சற்று அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இதைவிட பெரியஅளவில் இருக்கலாம். இந்தக் கற்கள் கடினமாக இருப்பதால் இவை எளிதில் கரைவதில்லை. இவை பெரும்பாலும் கொழுப்பு கட்டிகளாக இருக்கிறது. எஞ்சியிருப்பவை நிறக்கற்கள் என்கிறார்கள்மருத்துவர்கள்.

ஒருவரது உடலில் கொழுப்பு அளவு அதிகமாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாக தொடங்கும். குறிப்பாக கொழுப்புகளை கரைப்பதற்கு போதிய பித்தநீர் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்கள் உருவாவது விரைவாகிறது. இதனோடு தாது உப்புகள் மூலமாகவும் பித்தக்கற்கள் உண்டாகிறது.

பித்தப்பையில் கற்கள் இருந்தால் சாப்பிட்டு முடித்து பல மணிநேரம் வரை உணவு செரிக்காமல் இருக்கும். வயிற்றின் மேல் பாகத்தில் தொப்புளுக்கு மேல் ஒரு வித வலி உண்டாகும். சாதாரண வயிற்றுவலி போல் அல் லாமல் கடுமையான வலியை உண்டாக்கும். வலியோடு வாந்தி குமட்டலையும் உண்டாக்கும்.சிலருக்கு வாந்தி எடுத்த பிறகே வயிற்றின் கனமும் வலியையும் குறைக்கும்.

இதனோடு வாயுத்தொல்லையும் தொடர்ந்திருக்கும். வலது நெஞ்சில் வலி, முதுகு பின்னேவலி, தோள் பட்டை யிலிருந்து உள்ளங்கை வரை பரவும் வலி போன்ற அறிகுறிகளை காண்பிக்கும்.மஞ்சள் காமாலை நோயும் இதன் அறி குறிகளில் ஒன்று.

பித்தப்பையில் உள்ள கற்கள் சிறுகுடலுக்கு வரும்போது உண்டாகும் வலியானது அவை மீண்டும் பித்தப்பைக் குள் வந்து அமரும் போது குறைய தொடங்கிவிடும்.வெகு சிலருக்கு மட்டுமே இப்படி ஏற்படும்.

வலி இல்லாமல் வளரும் கற்களின் பாதிப்புகள் அதிக வலியை உண்டாக்கும். தீவிர வயிற்றுவலியை உண் டாக்கும் என்பதோடு வலியானது 5 முதல் 6 மணி நேரம் வரை கூட இருக்கும். கடுமையான காய்ச்சலும் சிறுநீர் மஞ்சளாகவும் மலமானது சாம்பல் நிறத்தில் துர்நாற்றத்துடன் வரக்கூடும். பித்தப்பைகல் உருவாக காரணம் முக்கிய காரணமாக உடல் பருமனைக் கூறலாம். 
உடல் பருமன் இருப்பவர்களுக்கு அதிக கொழுப்பு உண்டாகிறது. கொழுப்பு அளவாக இருக்கும்போது இவை எந்தவிதமான பாதிப்புககளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் கொழுப்பின் செறிவு அதிகமாகும் போது பித்தப்பையில் அதிக கொழுப்புகள் சேர்ந்து கொழுப்புகற்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.பாலின ரீதியாக ஆண்களை விட வயதான பெண்களே பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் கர்ப்பக்காலங்களில் ஹார்மோன் மாற்றங்களில் உண்டாகும் மாற்றங்களால் பித்தப்பையில் கற் கள் வரஅதிக வாய்ப்புண்டு. இவை தவிர குழந்தைப்பேறை கட்டுப்படுத்தும் கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து அதி கம் பயன்படுத்தியவர்கள், ஹார்மோன் சுரப்பு அதிகம் கொண்டவர்களுக்கு கற்கள் உருவாக வாய்ப்பு அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.

  இவை தவிர மரபு ரீதியாகவும் கற்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. பித்தநீர் வெளியேறும் உணவுக் குழாய் களுக்குள் ஏதேனும் அடைப்புகள் இருந்தாலும் பித்தகற்கள் உருவாகலாம். நீரிழிவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்களுக்கும், அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், அதிக மதுப்பழக்கம் உள்ளவர் களுக்கும் கற்கள்வர வாய்ப்புண்டு.

பித்தப்பையில் உண்டாகும் கொழுப்பு கற்கள் அல்லாமல் கால்சியம் கார்பைடு ஆல் வரும் கறுப்பு நிறக் கற் களும் உண்டு. இது எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும்.  
பித்தப்பை கற்கள் 5 அல்லது 6 மி.மி இருக்கும் வரை எவ்வித பிரச்னையையும் உண்டாக்காது. இந்த நிலை இருக்கும் போதே கண்டறிந்துவிட்டால் மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பித்தப்பை கற்களைக் கரைத்து விடலாம்.

மாத்திரைகள் மூலம் பித்தக்கற்களைக் கரைக்கும் போது பித்தப்பை கற்கள் கரைந்தாலும் மீண் டும் உருவாக வாய்ப்புண்டு. மேலும் இது 100% சதவீதம் குணப்படுத்த முடியும் என்றும் சொல்லமுடியாது.அதோடு சிலருக்கு மாத்திரைகள் பக்கவிளைவுகளையும் உண்டாக்கி விடலாம்.

பித்தப்பை கற்களின் அளவு அதன் பாதிப்பு நோய்த்தொற்று பொறுத்து லேப்ராஸ்கோப்பி அல்லது அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றும் சிகிச்சைக்கு பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தப்பை உறுப்பு மனித உடலுக்கு முக்கியமானதல்ல என்பதால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறு கிறார்கள் மருத்துவர்கள்.

பித்தப்பை கற்கள் உண்டாக்கும் வலிக்கும் தொற்று பாதிப்புக்கும் ஆளாகாமல் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கடுமையான வலி உபாதையிலிருந்து தப்பிக்கலாம். 

---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு எறும்பு சைக்கிள்ள வேகமா போய்கிட்டு இருந்துச்சாம்.
அப்ப குறுக்க ஒரு யானை திடீரென வந்துவிட்டதாம்.
*

எறும்பு சைக்கிள்ள வேகமா சடன் பிரேக் போட்டு நிறுத்தி கோபத்தோடு கேட்டுச்சாம் .......................
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஏண்டா ....... நீ சாவதற்கு என் வண்டி தான் கிடச்சுதா ....?????
  --------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?