அப்பாவுவா,இன்பதுரையா
2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, நெல்லை
மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை
69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் அப்பாவு
69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தபால் வாக்குகள் ஓவ்வொரு சுற்றிலும் தொடர்ந்து திமுக வெற்றி முகமாக இருந்ததால் தேர்தல் அலுவலரால் செல்லாது என தள்ளுபடியானது.இதை தட்டிக்கேட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 18 வது சுற்றுவரை அதிமுக வேட்பாளர் இன்பத்துரையை விட பல ஆயிரக்கணக்கான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையிலேயே இருந்தார்.
ஆனால் அப்பாவு தபால் வாக்குகளை பற்றி வாதாடியதால் வலுக்கட்டாயமாக மத்திய காவல் படையினரால் தூக்கி வெறியேற்றபப்ட்டார்.
தொடர்ந்து திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களும் அடித்து விரட்டி வெளியேற்றபப்ட்டனர்.
திமுக ஆதரவாளர்கள் அனைவரும் வெளியேற்றபப்ட்ட பின்னரும் 19,20,21 என இறுதிசுற்றுக்கள் எண்ணப்பட்டு அணைத்து மூன்று இறுதிசுற்றுகளிலும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெரும்பாண்மை பெற்றதாகக்கூறி வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு.எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையிலேயே சான்றும் வழங்கப்பட்டது.
இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளையும் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் எண்ணப்பட்ட 19,20,21 ஆகிய இறுதிச்சுற்று வாக்குகளையும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
அதில், மறு எண்ணிக்கையின் போது செய்யும் வகையில் அந்த தொகுதியின் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4 ம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இதனால் தபால் வாக்குகள் 19,20,21 சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று உயர்நிதிமன்றம் வந்து சேர்ந்தது.
அதைத்தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று 11.30க்கு நடக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.இந்திய ரயில்வே-யின் துணை நிறுவனமான, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம், (Indian Railway Catering and Tourism Corporation- IRCTC)
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக பரிவர்த்தனைகள் செய்யும் நிறுவனமாக உள்ளது.
மாதம்தோறும் சுமார் 2.5 கோடி பரிவர்த்தனை கள் ஐஆர்சிடிசி-யால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, ஐஆர்சிடிசி தொடர்ந்து லாபத்தில் இயங்கக் கூடியஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும் ஆகும்.2018 நிதியாண்டில் 220 கோடியே 60 லட்சம் ரூபாயும் 2019 நிதியாண்டில் 272 கோடியே 60 லட்சம் ரூபாயும் லாபம்ஈட்டியுள்ளது.
2018-இல் ஆயிரத்து 470 கோடியே 46 லட்சம் ரூபாயாக இருந்தஐஆர்சிடிசி-யின் வருவாய், 2019-இல்ஆயிரத்து 867 கோடியே 88 லட்சம் ரூபாய்அளவிற்கு இருமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில்தான், லாபமீட்டும் ஐஆர்சிடிசி நிறுவனத்தில், தனக்கு இருக்கும் 100 சதவிகித பங்குகளில், 12.6 சதவிகித பங்குகளை, ஒரு பங்கு ரூ. 315 முதல் ரூ. 320 என்ற விலையில், மொத்தம் 2 கோடி பங்குகளாக பிரித்து,முதல்நிலை பொதுப் பங்குவெளியீடு அடிப்படையில், தனியாருக்கு விற்பனைசெய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்து,கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி பங்குகளை வெளியிட்டது.
இந்த 2 கோடி பங்குகளில் 1 லட்சத்து60 ஆயிரம் பங்குகள் ரயில்வே பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறிய ரயில்வே, ஐஆர்சிடிசியின் பங்குகளை வாங்கும் சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் சம்பளப் பணியாளர் களுக்கு பங்கின் விலையில் 10 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்றும் கூறியது.
பங்குகள் வாங்கும் வாய்ப்பு அக்டோபர் 3ஆம் தேதியுடன் முடிவடையும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. ஆனால், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனம் என்பதால், அக்டோபர் 1-ஆம் தேதியே 81 சதவிகித பங்குகளை முதலீட்டாளர்கள் அள்ளி விட்டனர்.
1 கோடியே 63 ஆயிரம்பங்குகள் விற்பனையாகி விட்டன
.இதன் அடுத்தகட்டமாக, அக்டோபர் 9ஆம் தேதி பங்குகள் ஒதுக்கப்படலாம் என்றும், அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் ஐஆர்சிடிசி பங்குகள் மும்பை பங்குச் சந்தை (BSE SENSEX) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE NIFTY)பட்டியலிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பங்கு 315 ரூபாய்க்கு விற்கப் பட்டால் 635 கோடியே 40 லட்சம் ரூபாய்நிதி திரட்ட முடியும் எனவும் 320 ரூபாய்க்குவிற்றால் 645 கோடியே 12 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுள்ள ரயில்வே, இதை வைத்தே ரயில்வே விரிவாக்கத் திட்டங்களை மேற்ள்ளப்போவதாக கூறியுள்ளது.
ஏற்கெனவே, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல் - RVNL), ரயில்இந்தியா டெக்னிக்கல் மற்றும் எகனாமிக்சர்வீஸ் (ஆர்ஐடிஇஎஸ் - RITES) மற்றும்ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (ஐஆர்சிஓஎன் - IRCON) ஆகியவற்றின் பங்குகளையும் பங்குச் சந்தையில் ரயில்வே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333
உலகின் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் கூட ரயில் போக்குவரத்தை அரசுகள் தான் மேற்கொள்கின்றன.
இந்தியாவிலும்கூட இன்றுவரை ரயில்களை அரசு சார்பாக வாரியம்தான் இயக்குகிறது. ரயில்வே நம் தேசத்தின் மிகப்பெரிய ஒரு போக்குவரத்து கட்டமைப்பு.
இதில் தனியார்களை ரயில்கள் இயக்க வைக்க இப்போது அரசு பெரும் முனைப்பு காட்டுகிறது.
இந்த நோக்கத்திற்காக முதலில் நூறு நாட்கள் செயல் திட்டம் வகுத்தது.
இரண்டு தனியார் ரயில்கள் என அறிவித்தது. நாடு தழுவிய எதிர்ப்புகளால் அதை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வசம் கைமாற்றி விட்டது.
இந்நிறுவனம் வாரிய கட்டுப்பாடுக்கு வெளியே இரண்டு ரயில்களை தில்லி –லக்னோ, மும்பை – அகமதாபாத் இடையே இயக்க தயாராகி விட்டது.
இது ஒருபுறம் இருக்க, வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கடந்த வாரம் அளித்த பேட்டியில் 150 தனியார் ரயில்கள் இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்தார்.
பெரும்பாலான தனியார் ரயில்கள் தில்லி-மும்பை, தில்லி-ஹவுரா பாதைகளில் இயக்கப்
படும் என்றும், இந்த பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேக ரயில்களுக்கான கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருகிறது என்றும், மேலும் சில முக்கிய பாதைகள் பரிசீலனையில் இருக்கின்றன என்றும் அவர் கூறிய கருத்து, ரயில்வே தனியார் மயத்திற்கான வரைவுத்திட்டம் அரசின் கைவசம் உள்ளது என்பதை தெளிவாக்கியது. கடந்த செப்டம்பர் 23 அன்று அரசின் சூழ்ச்சித் திட்டம் முழுமையாக வெளிப்பட்டது.
அன்றைய தினம் மண்டலங்களின் இயக்க மேலாளர்களுக்கு தனியார் ரயில்கள் இயக்க ஏதுவான பாதைகள் மற்றும் ரயில்கள் கண்டறிய உத்தரவுகள் வந்தன.
சென்னை- மதுரை, சென்னை- கோவை, சென்னை- மும்பை, சென்னை- பெங்களூரு என வணிக முக்கியத்துவம் வாய்ந்த 24 பாதைகள் தேர்வும் ஆயின. அதிக பயணத்தேவை உள்ள லாபகரமான இந்த பாதைகளில் லாபகரமான ரயில்களை தேர்வு செய்து விற்க செப்டம்பர் 27அன்று புதுதில்லியில் வாரியம் கூட்டம் கூட்டியது.
திட்ட அவசரம் - பின்புலம் மிக்கதுதான் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி ஒரு சூழல் உருவானால் ரயில்களுக்கு பெட்டிகளை இறக்குமதி செய்வதும், இந்திய தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்வதும், வாரியத்திடம் குத்தகைக்கு பெறுவதும் தனியார்கள் விருப்பமே. இவர்களின் நிபந்தனைகளும், வர்த்தக சூழ்ச்சிகளும் வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளைப் போல் தேசிய ரயில்பாதைகளில் தனியார் ரயில்களுக்கு கட்டணம் வசூல் என்பதே இன்றைய திட்ட நோக்கம். தனியாருக்கு தாரை வார்க்கப் போகும் தங்க நாற்கரப் பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க கட்டமைப்புகள் பலப்படுத்தப் படுகின்றன.
இதற்கு அரசு செலவிடும் தொகை ரூ.13491.25 கோடி. (கடந்த 2017-18 நிதியாண்டு ஒதுக்கீடு). அரசு ரயில்களை விட தனியார் ரயில்கள் வேகமானவை என்று செயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டு தனியார்களின் சந்தர்ப்பவாத கொள்ளை லாப கட்டணங்களுக்கு இது நாளடைவில் வழிவகுக்கும்.
பெரும் மூலதனத்திலான அதிவேக ரயில்கள் கட்டமைப்பும், வந்தே பாரத், தேஜஸ் போன்ற நவீன ரயில் பெட்டிகள் உற்பத்தியும் அதிவேக சொகுசு ரயில்களை வாரியம் இயக்க போதுமானதே.
கட்டிமான் ரயில் இதற்கு சாட்சி.
அரசுப் பாதைகளில் அரசு ரயில்களுக்கு வேகம், தரம், லாபம் இருக்கும் போது வலிந்து தனியாருக்கு லாபத்தை பங்கு தரும் நடவடிக்கை இது. இது நாட்டிற்கான வருவாய் இழப்பாகும்.
தனியார் ரயில்களில் பயணச்சீட்டுகள் விற்க ஊழியர்கள் தேவையில்லை.
வலைதளங்கள் போதும். அதிலும்கூட கார்ப்பரேட் விளம்பரங்கள் வருவாயை அள்ளிக்குவிக்கும்.
பயணச்சீட்டு பரிசோதனைகள் கிடையாது. வேலை வாய்ப்புகளை தரும் ரயில்வேகுவார்டுகள், குளிர்சாதன மெக்கானிக்குகள் நியமனங்கள் இருக்காது. இந்த காரணிகள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வரும் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக வேலை இழக்கச் செய்துவிடும்.
எனவே ஒட்டுமொத்தமாக இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் இதை நிராகரிக்கிறார்கள்.
தனியார்களுக்கு கைமாறப்போகும் முக்கிய பாதைகள் தேசத்தை புவியியல் ரீதியாக இணைப்பவை. எளிய மக்கள், சிறுகுறுவர்த்தகர்கள், நாடோடிகள், யாத்ரிகர்கள் எனபலதரப்பட்ட மக்களின் பயணப் போக்குவரத்தை இவைகள் ஈடு செய்கின்றன.
இந்தபாதைகளில் தனியார் இயக்கப் போகும் ரயில்கள் குளிர்சாதனம், நவீனம், ஆடம்பரம் நிறைந்தவை. இவைகள் ஏழை எளியநடுத்தர மக்களுக்கான வாழ்க்கை வாய்ப்பு கதவுகளை நிரந்தரமாக மூடிவிடும். ரயில்வேத்துறைக்கான அரசின் இப்போதைய நோக்கம் சரக்கு ரயில்கள் இயக்குவது மட்டுமே.
1856 கிமீ கிழக்கு சரக்கு பாதையும் 1502 கிமீ மேற்கு சரக்குபாதையும் திறந்துவிடப்பட்ட பிறகு சரக்கு ரயில்களில் ஏறத்தாழஎண்பது சதவீதம் தனியார் வசமாகிவிடும்.
எனவே புதுதில்லியின் ரயில் பவன்ரயில்களை விற்கும் இடமாக மாறிக்கொண்டி ருக்கிறதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
- டி. மனோகரன்
டிஆர்இயு உதவி பொதுச்செயலாளர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்,
முன்னால்
உலக வன விலங்குகள் தினம்
மெக்சிகோ குடியரசானது (1824)
இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)
விலங்குகள் ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான 'பிரான்சிஸ் ஆப்
அசிசி' என்பவரின் நினைவுநாளை குறிப்பிடும் வகையில் இத்தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
1931ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.
உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன.
இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்.,4ம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வீடு மற்றும் காட்டு விலங்குகள் என இரண்டு வகையாக விலங்குகள் பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை. நாம் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனை, மீன் ஆகியவை வீட்டு விலங்குகள் என அழைக்கப்படுகின்றன. இதே போல சிங்கம், புலி, யானை, ஒட்டகம், காட்டு மாடு, குதிரை, குரங்கு, கரடி, மான் உள்ளிட்டவை காட்டு விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
சில விலங்குகள் உணவுக்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இவை 'ஊன் உண்ணிகள்' என அழைக்கப்படுகின்றன.
புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் சமநிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி காடுகளின் வளம் குறையும். மழை குறையும்.
வறட்சி ஏற்படும். இதற்காக தான், புலிகளை பாதுகாக்க வேண்டும் என பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. சில விலங்குகள் கடல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ளது.
இயற்கை அழிக்கப்படுவதால், பல விலங்குகள்அழியும் நிலையில் உள்ளன.
இவற்றை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தபால் வாக்குகள் ஓவ்வொரு சுற்றிலும் தொடர்ந்து திமுக வெற்றி முகமாக இருந்ததால் தேர்தல் அலுவலரால் செல்லாது என தள்ளுபடியானது.இதை தட்டிக்கேட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 18 வது சுற்றுவரை அதிமுக வேட்பாளர் இன்பத்துரையை விட பல ஆயிரக்கணக்கான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையிலேயே இருந்தார்.
ஆனால் அப்பாவு தபால் வாக்குகளை பற்றி வாதாடியதால் வலுக்கட்டாயமாக மத்திய காவல் படையினரால் தூக்கி வெறியேற்றபப்ட்டார்.
தொடர்ந்து திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களும் அடித்து விரட்டி வெளியேற்றபப்ட்டனர்.
திமுக ஆதரவாளர்கள் அனைவரும் வெளியேற்றபப்ட்ட பின்னரும் 19,20,21 என இறுதிசுற்றுக்கள் எண்ணப்பட்டு அணைத்து மூன்று இறுதிசுற்றுகளிலும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெரும்பாண்மை பெற்றதாகக்கூறி வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு.எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையிலேயே சான்றும் வழங்கப்பட்டது.
இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளையும் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் எண்ணப்பட்ட 19,20,21 ஆகிய இறுதிச்சுற்று வாக்குகளையும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
அதில், மறு எண்ணிக்கையின் போது செய்யும் வகையில் அந்த தொகுதியின் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4 ம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இதனால் தபால் வாக்குகள் 19,20,21 சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று உயர்நிதிமன்றம் வந்து சேர்ந்தது.
அதைத்தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று 11.30க்கு நடக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரெயில்கள் வாங்க விற்க
எங்ககிட்டே வாங்க"
-ரெயில் பவன்.
லாபத்தில் இயங்கும், பொதுத்துறையை சேர்ந்த ஐஆர்சிடிசி (IRCTC) - நிறுவனம், முதல் நிலை பங்கு வெளியீடு அடிப்படையில், (Initial Public Offering) தனது 12.6 சதவிகித பங்குகளை, இந்திய பங்குச் சந்தைகளில் விற்பனை செய்துள்ளது.இந்திய ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.இந்திய ரயில்வே-யின் துணை நிறுவனமான, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம், (Indian Railway Catering and Tourism Corporation- IRCTC)
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக பரிவர்த்தனைகள் செய்யும் நிறுவனமாக உள்ளது.
மாதம்தோறும் சுமார் 2.5 கோடி பரிவர்த்தனை கள் ஐஆர்சிடிசி-யால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, ஐஆர்சிடிசி தொடர்ந்து லாபத்தில் இயங்கக் கூடியஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும் ஆகும்.2018 நிதியாண்டில் 220 கோடியே 60 லட்சம் ரூபாயும் 2019 நிதியாண்டில் 272 கோடியே 60 லட்சம் ரூபாயும் லாபம்ஈட்டியுள்ளது.
2018-இல் ஆயிரத்து 470 கோடியே 46 லட்சம் ரூபாயாக இருந்தஐஆர்சிடிசி-யின் வருவாய், 2019-இல்ஆயிரத்து 867 கோடியே 88 லட்சம் ரூபாய்அளவிற்கு இருமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில்தான், லாபமீட்டும் ஐஆர்சிடிசி நிறுவனத்தில், தனக்கு இருக்கும் 100 சதவிகித பங்குகளில், 12.6 சதவிகித பங்குகளை, ஒரு பங்கு ரூ. 315 முதல் ரூ. 320 என்ற விலையில், மொத்தம் 2 கோடி பங்குகளாக பிரித்து,முதல்நிலை பொதுப் பங்குவெளியீடு அடிப்படையில், தனியாருக்கு விற்பனைசெய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்து,கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி பங்குகளை வெளியிட்டது.
இந்த 2 கோடி பங்குகளில் 1 லட்சத்து60 ஆயிரம் பங்குகள் ரயில்வே பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறிய ரயில்வே, ஐஆர்சிடிசியின் பங்குகளை வாங்கும் சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் சம்பளப் பணியாளர் களுக்கு பங்கின் விலையில் 10 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்றும் கூறியது.
பங்குகள் வாங்கும் வாய்ப்பு அக்டோபர் 3ஆம் தேதியுடன் முடிவடையும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. ஆனால், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனம் என்பதால், அக்டோபர் 1-ஆம் தேதியே 81 சதவிகித பங்குகளை முதலீட்டாளர்கள் அள்ளி விட்டனர்.
1 கோடியே 63 ஆயிரம்பங்குகள் விற்பனையாகி விட்டன
.இதன் அடுத்தகட்டமாக, அக்டோபர் 9ஆம் தேதி பங்குகள் ஒதுக்கப்படலாம் என்றும், அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் ஐஆர்சிடிசி பங்குகள் மும்பை பங்குச் சந்தை (BSE SENSEX) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE NIFTY)பட்டியலிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பங்கு 315 ரூபாய்க்கு விற்கப் பட்டால் 635 கோடியே 40 லட்சம் ரூபாய்நிதி திரட்ட முடியும் எனவும் 320 ரூபாய்க்குவிற்றால் 645 கோடியே 12 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுள்ள ரயில்வே, இதை வைத்தே ரயில்வே விரிவாக்கத் திட்டங்களை மேற்ள்ளப்போவதாக கூறியுள்ளது.
ஏற்கெனவே, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல் - RVNL), ரயில்இந்தியா டெக்னிக்கல் மற்றும் எகனாமிக்சர்வீஸ் (ஆர்ஐடிஇஎஸ் - RITES) மற்றும்ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (ஐஆர்சிஓஎன் - IRCON) ஆகியவற்றின் பங்குகளையும் பங்குச் சந்தையில் ரயில்வே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333
உலகின் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் கூட ரயில் போக்குவரத்தை அரசுகள் தான் மேற்கொள்கின்றன.
இந்தியாவிலும்கூட இன்றுவரை ரயில்களை அரசு சார்பாக வாரியம்தான் இயக்குகிறது. ரயில்வே நம் தேசத்தின் மிகப்பெரிய ஒரு போக்குவரத்து கட்டமைப்பு.
இதில் தனியார்களை ரயில்கள் இயக்க வைக்க இப்போது அரசு பெரும் முனைப்பு காட்டுகிறது.
இந்த நோக்கத்திற்காக முதலில் நூறு நாட்கள் செயல் திட்டம் வகுத்தது.
இரண்டு தனியார் ரயில்கள் என அறிவித்தது. நாடு தழுவிய எதிர்ப்புகளால் அதை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வசம் கைமாற்றி விட்டது.
இந்நிறுவனம் வாரிய கட்டுப்பாடுக்கு வெளியே இரண்டு ரயில்களை தில்லி –லக்னோ, மும்பை – அகமதாபாத் இடையே இயக்க தயாராகி விட்டது.
இது ஒருபுறம் இருக்க, வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கடந்த வாரம் அளித்த பேட்டியில் 150 தனியார் ரயில்கள் இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்தார்.
பெரும்பாலான தனியார் ரயில்கள் தில்லி-மும்பை, தில்லி-ஹவுரா பாதைகளில் இயக்கப்
படும் என்றும், இந்த பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேக ரயில்களுக்கான கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருகிறது என்றும், மேலும் சில முக்கிய பாதைகள் பரிசீலனையில் இருக்கின்றன என்றும் அவர் கூறிய கருத்து, ரயில்வே தனியார் மயத்திற்கான வரைவுத்திட்டம் அரசின் கைவசம் உள்ளது என்பதை தெளிவாக்கியது. கடந்த செப்டம்பர் 23 அன்று அரசின் சூழ்ச்சித் திட்டம் முழுமையாக வெளிப்பட்டது.
அன்றைய தினம் மண்டலங்களின் இயக்க மேலாளர்களுக்கு தனியார் ரயில்கள் இயக்க ஏதுவான பாதைகள் மற்றும் ரயில்கள் கண்டறிய உத்தரவுகள் வந்தன.
சென்னை- மதுரை, சென்னை- கோவை, சென்னை- மும்பை, சென்னை- பெங்களூரு என வணிக முக்கியத்துவம் வாய்ந்த 24 பாதைகள் தேர்வும் ஆயின. அதிக பயணத்தேவை உள்ள லாபகரமான இந்த பாதைகளில் லாபகரமான ரயில்களை தேர்வு செய்து விற்க செப்டம்பர் 27அன்று புதுதில்லியில் வாரியம் கூட்டம் கூட்டியது.
திட்ட அவசரம் - பின்புலம் மிக்கதுதான் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி ஒரு சூழல் உருவானால் ரயில்களுக்கு பெட்டிகளை இறக்குமதி செய்வதும், இந்திய தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்வதும், வாரியத்திடம் குத்தகைக்கு பெறுவதும் தனியார்கள் விருப்பமே. இவர்களின் நிபந்தனைகளும், வர்த்தக சூழ்ச்சிகளும் வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளைப் போல் தேசிய ரயில்பாதைகளில் தனியார் ரயில்களுக்கு கட்டணம் வசூல் என்பதே இன்றைய திட்ட நோக்கம். தனியாருக்கு தாரை வார்க்கப் போகும் தங்க நாற்கரப் பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க கட்டமைப்புகள் பலப்படுத்தப் படுகின்றன.
இதற்கு அரசு செலவிடும் தொகை ரூ.13491.25 கோடி. (கடந்த 2017-18 நிதியாண்டு ஒதுக்கீடு). அரசு ரயில்களை விட தனியார் ரயில்கள் வேகமானவை என்று செயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டு தனியார்களின் சந்தர்ப்பவாத கொள்ளை லாப கட்டணங்களுக்கு இது நாளடைவில் வழிவகுக்கும்.
பெரும் மூலதனத்திலான அதிவேக ரயில்கள் கட்டமைப்பும், வந்தே பாரத், தேஜஸ் போன்ற நவீன ரயில் பெட்டிகள் உற்பத்தியும் அதிவேக சொகுசு ரயில்களை வாரியம் இயக்க போதுமானதே.
கட்டிமான் ரயில் இதற்கு சாட்சி.
அரசுப் பாதைகளில் அரசு ரயில்களுக்கு வேகம், தரம், லாபம் இருக்கும் போது வலிந்து தனியாருக்கு லாபத்தை பங்கு தரும் நடவடிக்கை இது. இது நாட்டிற்கான வருவாய் இழப்பாகும்.
தனியார் ரயில்களில் பயணச்சீட்டுகள் விற்க ஊழியர்கள் தேவையில்லை.
வலைதளங்கள் போதும். அதிலும்கூட கார்ப்பரேட் விளம்பரங்கள் வருவாயை அள்ளிக்குவிக்கும்.
பயணச்சீட்டு பரிசோதனைகள் கிடையாது. வேலை வாய்ப்புகளை தரும் ரயில்வேகுவார்டுகள், குளிர்சாதன மெக்கானிக்குகள் நியமனங்கள் இருக்காது. இந்த காரணிகள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வரும் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக வேலை இழக்கச் செய்துவிடும்.
எனவே ஒட்டுமொத்தமாக இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் இதை நிராகரிக்கிறார்கள்.
தனியார்களுக்கு கைமாறப்போகும் முக்கிய பாதைகள் தேசத்தை புவியியல் ரீதியாக இணைப்பவை. எளிய மக்கள், சிறுகுறுவர்த்தகர்கள், நாடோடிகள், யாத்ரிகர்கள் எனபலதரப்பட்ட மக்களின் பயணப் போக்குவரத்தை இவைகள் ஈடு செய்கின்றன.
இந்தபாதைகளில் தனியார் இயக்கப் போகும் ரயில்கள் குளிர்சாதனம், நவீனம், ஆடம்பரம் நிறைந்தவை. இவைகள் ஏழை எளியநடுத்தர மக்களுக்கான வாழ்க்கை வாய்ப்பு கதவுகளை நிரந்தரமாக மூடிவிடும். ரயில்வேத்துறைக்கான அரசின் இப்போதைய நோக்கம் சரக்கு ரயில்கள் இயக்குவது மட்டுமே.
1856 கிமீ கிழக்கு சரக்கு பாதையும் 1502 கிமீ மேற்கு சரக்குபாதையும் திறந்துவிடப்பட்ட பிறகு சரக்கு ரயில்களில் ஏறத்தாழஎண்பது சதவீதம் தனியார் வசமாகிவிடும்.
எனவே புதுதில்லியின் ரயில் பவன்ரயில்களை விற்கும் இடமாக மாறிக்கொண்டி ருக்கிறதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
- டி. மனோகரன்
டிஆர்இயு உதவி பொதுச்செயலாளர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காந்திக்கு ஒரு கும்பிடு.காந்தியை சுட்டுக்கொன்றவனுக்கு குருவணக்கம் . |
இந்நாளில்,
முன்னால்
உலக வன விலங்குகள் தினம்
மெக்சிகோ குடியரசானது (1824)
இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)
23 - விவசாயிகள் கலகங்களின் தொகுப்பாகக்
குறிப்பிடப்படும் லூலின் கலகத்தின் ஒரு பகுதியாக, ஸின் அரச மரபைத்
தோற்றுவித்த பேரரசர் வாங் மாங்-கின் அரண்மனை கலகக்காரர்களால்
தாக்கப்பட்டது.
ஹான் மரபின் உயர் அலுவலரும், பட்டத்தரசியின் தந்தையுமான வாங் மாங், ஆட்சியைக் கைப்பற்றி ஸின் மரபைத் தோற்றுவித்தார். வஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டவர் என்றும், தொலைநோக்குடைய சமூக சீர்திருத்தவாதி என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் இவரைப் பற்றி வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன.
இவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அனைத்து நிலங்களும் அரசுக்குச் சொந்தமானவை என்று அறிவிக்கப்பட்டு, நிலப் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டாலும், நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை தாங்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், எட்டு பேருக்குக் குறைவான உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 150 ஏக்கருக்குமேல் நிலமிருந்தால், கூடுதலாக இருப்பதை ஏழை களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடவேண்டும். எட்டு என்ற எண்ணிக்கை, சீனாவின் மிகச்சிறந்த ஆட்சிக்காலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ஸாங் மரபின் ஆட்சியிலிருந்த நல்-நில முறையைப் பின்பற்றியதாகும். சீனாவில் மிக நீண்ட காலம் (790 ஆண்டுகள்) ஆட்சியை நடத்திய மரபான ஸாங் காலத்தில், சீனா பலவிதங்களிலும் செழித்தோங்கி யிருந்ததால், அதைப்போன்று மாற்ற வாங் மாங் விரும்பினார்.
நல்ல என்பதற்கான சீன எழுத்து # வடிவத்திலிருக்கும்.
அதைப்போன்று நிலம் நிர்வகிக்கப்பட்டதால் நல்-நில முறை என்ற பெயர் ஏற்பட்டது.
எல்லா நிலங்களும் 9 சம சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, சுற்றியுள்ள 8 சதுரங்கள் குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
அவற்றின் விளைச்சலை முழுமையாக அவர்களே எடுத்துக்கொள்ளலாம். நடுவிலுள்ள சதுரத்தில் 8 பேரும் இணைந்து உற்பத்தியில் ஈடுபடுவார்கள்.
அதன் விளைச்சல் நிலவுடைமையாளருக்கு வழங்கப்பட்டு, அதிலிருந்தே அரசுக்கு வரியும் செலுத்தப்படும். நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி, ஆயுதம், மது ஆகியவற்றின் உற்பத்தியை அரசுடைமையாக்கியது,
சீன வரலாற்றில் முதன்முறையாக வருமானவரி விதித்தது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 28 வகை நாணயங்களையும் அறிமுகப்படுத்தினார்.
பலவகை நாணயங்களைப் பயன்படுத்த மக்களுக்குத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பங்கள், பேரரசர் முற்போக்காளராக இருந்தாலும், அலுவலர்களின் ஊழல்கள் ஆகியவை கருவூலத்தைக் காலியாக்கியதுடன், பஞ்சமும் ஏற்பட்டதால், நிலத்தை இழந்த பெருநிலவுடைமையாளர்களும், எளிய மக்களும் லூலின் கலகத்தில் இணைந்தனர்.
கலகக்காரர்கள் லூலின் மலைப்பகுதியில் தங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது.
கலகத்தில் பேரரசர் வாங் மாங்-கும், மகளும்(முன்னாள் பேரரசி!) கொல்லப்பட, 14 ஆண்டுகளில் ஸின் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, மீண்டும் ஹான் மரபு ஆட்சியைக் கைப்பற்றியது.
ஹான் மரபின் உயர் அலுவலரும், பட்டத்தரசியின் தந்தையுமான வாங் மாங், ஆட்சியைக் கைப்பற்றி ஸின் மரபைத் தோற்றுவித்தார். வஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டவர் என்றும், தொலைநோக்குடைய சமூக சீர்திருத்தவாதி என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் இவரைப் பற்றி வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன.
இவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அனைத்து நிலங்களும் அரசுக்குச் சொந்தமானவை என்று அறிவிக்கப்பட்டு, நிலப் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டாலும், நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை தாங்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், எட்டு பேருக்குக் குறைவான உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 150 ஏக்கருக்குமேல் நிலமிருந்தால், கூடுதலாக இருப்பதை ஏழை களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடவேண்டும். எட்டு என்ற எண்ணிக்கை, சீனாவின் மிகச்சிறந்த ஆட்சிக்காலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ஸாங் மரபின் ஆட்சியிலிருந்த நல்-நில முறையைப் பின்பற்றியதாகும். சீனாவில் மிக நீண்ட காலம் (790 ஆண்டுகள்) ஆட்சியை நடத்திய மரபான ஸாங் காலத்தில், சீனா பலவிதங்களிலும் செழித்தோங்கி யிருந்ததால், அதைப்போன்று மாற்ற வாங் மாங் விரும்பினார்.
நல்ல என்பதற்கான சீன எழுத்து # வடிவத்திலிருக்கும்.
அதைப்போன்று நிலம் நிர்வகிக்கப்பட்டதால் நல்-நில முறை என்ற பெயர் ஏற்பட்டது.
எல்லா நிலங்களும் 9 சம சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, சுற்றியுள்ள 8 சதுரங்கள் குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
அவற்றின் விளைச்சலை முழுமையாக அவர்களே எடுத்துக்கொள்ளலாம். நடுவிலுள்ள சதுரத்தில் 8 பேரும் இணைந்து உற்பத்தியில் ஈடுபடுவார்கள்.
அதன் விளைச்சல் நிலவுடைமையாளருக்கு வழங்கப்பட்டு, அதிலிருந்தே அரசுக்கு வரியும் செலுத்தப்படும். நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி, ஆயுதம், மது ஆகியவற்றின் உற்பத்தியை அரசுடைமையாக்கியது,
சீன வரலாற்றில் முதன்முறையாக வருமானவரி விதித்தது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 28 வகை நாணயங்களையும் அறிமுகப்படுத்தினார்.
பலவகை நாணயங்களைப் பயன்படுத்த மக்களுக்குத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பங்கள், பேரரசர் முற்போக்காளராக இருந்தாலும், அலுவலர்களின் ஊழல்கள் ஆகியவை கருவூலத்தைக் காலியாக்கியதுடன், பஞ்சமும் ஏற்பட்டதால், நிலத்தை இழந்த பெருநிலவுடைமையாளர்களும், எளிய மக்களும் லூலின் கலகத்தில் இணைந்தனர்.
கலகக்காரர்கள் லூலின் மலைப்பகுதியில் தங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது.
கலகத்தில் பேரரசர் வாங் மாங்-கும், மகளும்(முன்னாள் பேரரசி!) கொல்லப்பட, 14 ஆண்டுகளில் ஸின் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, மீண்டும் ஹான் மரபு ஆட்சியைக் கைப்பற்றியது.
1931ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.
உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன.
இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்.,4ம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வீடு மற்றும் காட்டு விலங்குகள் என இரண்டு வகையாக விலங்குகள் பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை. நாம் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனை, மீன் ஆகியவை வீட்டு விலங்குகள் என அழைக்கப்படுகின்றன. இதே போல சிங்கம், புலி, யானை, ஒட்டகம், காட்டு மாடு, குதிரை, குரங்கு, கரடி, மான் உள்ளிட்டவை காட்டு விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
சில விலங்குகள் உணவுக்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இவை 'ஊன் உண்ணிகள்' என அழைக்கப்படுகின்றன.
புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் சமநிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி காடுகளின் வளம் குறையும். மழை குறையும்.
வறட்சி ஏற்படும். இதற்காக தான், புலிகளை பாதுகாக்க வேண்டும் என பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. சில விலங்குகள் கடல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ளது.
இயற்கை அழிக்கப்படுவதால், பல விலங்குகள்அழியும் நிலையில் உள்ளன.
இவற்றை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் .
மோடியின் தமிழ்ப் பாசத்தின் உண்மை ?
ஐ.நா. சபையிலும் சென்னை ஐஐடி மாண வர்களிடையேயும் தமிழின் சிறப்பு பற்றி
பிரதமர் மோடி பேசியது பொதுவாக மகிழ்ச்சிக்குரியதுதான்.
வரவேற்கத்தக்கது.
ஆனால், பேச்சு மட்டுமே ஒரு பிரதமரின் தகுதி என்றால் நமக்கு இதுவரையில்
கிடைத்த பிரதமர்களிலேயே மிகச்சிறந்த பிரதமர் கிடைத்திருக்கிறார் என்றும்
சேர்த்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. வலுவாகப் பேசுவதில் மட்டுமல்ல, இட
மறிந்து பேசுவதிலும் வல்லவர் அவர். ஒரு இடத்தில் வளர்ச்சி பற்றிப்
பேசுவார், ஒரு இடத்தில் மத உணர்வு சார்ந்து பேசுவார். அப்படித்தான்
இப்போது தமிழின் சிறப்பைப் பேசுவதும். உள்துறை அமைச்சரும் பாஜக தலை வருமான
அமித் ஷா, இந்திதான் இந்தியா வின் அடையாளம் என்று பேசியது கடும்
எதிர்ப்புக்குள்ளானது. தமிழகத்தில் ஒரு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பலரும் எதற்காக இப்படி வம்பை விலைக்கு வாங்கு கிறார் என்று அறிவுரை
கூறினார்கள். பின்னர் தான் அமித் ஷா விளக்கம் அளித்தார். அதைக்கூட அவர்
பின்வாங்கிவிட்டார் என்று சொல்ல முடியாது.
தான் பேசியது தவறு என்று
சொல்லியிருந்தால் அதுதான் பின்வாங்கல், அவரோ தான் பேசியது தவ றாகப்
புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்று மற்றவர்கள் மீதுதான் பழியைப் போட்டார்.
இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தணிக்கிற உத்தியும் பிரதமரின் தமிழ்ப் புகழ்
மாலையில் இருக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன்
பூங்குன்றனார் பாடல் வரிகளை ஐ.நா. சபையில் மோடி மேற்கோள் காட்டி யது
பெருமைக்குரியதுதான். ஆனால், அந்த வரிகள் தமிழ் மொழியின் சிறப்பை
அடையாளப்படுத்துபவை மட்டுமல்ல, அனைவரையும் உறவுகளாக நேசிக்கச் சொல்லும்
பண்பாட்டை அடையாளப் படுத்துகிற வரிகளுமாகும்.
ஆனால், இங்கே மக்களைக்
கூறுபோடுகிற மதவாத அரசிய லைச் செய்துகொண்டு, அங்கே போய் யாவரும் கேளிர்
என்று பேசுவதில் என்ன பொருளிருக்கிறது?
ஐஐடி வளாகத்துக்கு அருகில்தான்
அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறது. அங்கே தத்துவம் என்று பகவத் கீதையை யும்,
தொழில்நுட்பப் படிப்புக்கு சமஸ்கிரு தத்தையும் திணிக்கிற வேலை நடக்கிறதே.
அதுவும் இங்கே கடும் எதிர்ப்புக்கும் விமர்ச னத்திற்கும் உள்ளாகியுள்ளதே?
அது பற்றி எதையும் சொல்லாமல் தமிழின் சிறப்பை உலகமே பார்க்கிறது என்றெல்
லாம் பேசுகிறார் பிரதமர். அண்ணா பொறியி யல் பல்கலைக்கழக விவகாரம் பற்றிய
செய்தி அவருக்குப் போய்ச்சேரவில்லையா என்ன? தேசியக் கல்விக் கொள்கை என்று
ஒரு வரைவறிக்கை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.
அது இன்னும் முறையான சட்ட
வடிவம் பெறாமலிருக்கிறபோதே பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படு கின்றன.
அதில் சமஸ்கிருதத்திற்கு தரப் பட்டிருக்கிற முக்கியத்துவம் தமிழ்
உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் தரப் படவில்லை.
தமிழ் ஒரு தொன்மையான மொழி
என்பதில் பிரதமருக்கு உண்மை யிலேயே மதிப்பும் மரியாதையும் இருக்கு மானால்,
மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தி ஆசிரியர்கள் பயிற்சிக்கு மட்டும் நிதி
ஒதுக்கீடு செய்திருப்பது ஏன்?
அஞ்சல் துறை உள்பட ஒவ்வொரு பிரிவிலும்
பணிநிய மனத் தேர்வுகளில் தமிழ் கேள்வித்தாள் களை சத்தமில்லாமல்
விலக்கிவிட்டு, எதிர்ப்புக் குரல் உரக்க ஒலித்தபின் பின்வாங்குகிற
கண்ணாமூச்சி ஏன்?
ஆகவேதான், தமிழின் பெருமை பற்றிய பிரதமரின் சொற்கள்
அவருடைய நெஞ்சி லிருந்து வந்தவை அல்ல, தங்களைக் கவர்வ தற்கான ஒரு மேடைத்
தந்திரமாக வந்த வையே என்பதைத் தமிழ் மக்கள் நன்றா கவே
புரிந்துவைத்திருக்கிறார்கள்.
இதனா லெல்லாம் கவரப்பட்டுவிட மாட்டார்கள்.
-அ. குமரேசன்