தமிழகத்தில் காலூன்றும் பயங்கரவாதிகள்.?
''ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் காலுான்றும் முயற்சி முளையிலேயே முறியடிக்கப்பட்டுள்ளது''
பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவுகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இதில் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறியவை:
"அண்டை நாடான வங்கதேசத்தை மையமாக வைத்து ஜமாதுல் முஜாகிதீன் பங்ளாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது.
இந்த அமைப்பினர் வங்கதேசத்தில் ஏற்கனவே சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த அமைப்பினர் நம் நாடு முழுவதும் தங்கள் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்ட், பீஹார், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் இவர்களின் நடவடிக்கைகள் உள்ளன.
நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 125 பேர் இந்த அமைப்பின் தலைவர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர்; அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அவர்களை கண்காணித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் இவர்களை பற்றிய தகவல்களை அளித்துள்ளோம்.
ஜமாதுல் முஜாகிதீன் பங்ளாதேஷ் அமைப்பினர் 2007ல் மேற்கு வங்க மாநிலத்தில் தான் முதலில் கால் பதித்தனர்.
இதன் பின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கள் நடவடிக்கைகளை துவக்கினர். கடந்த 2014 - 18ம் ஆண்டுகளில் 130 மறைவிடங்களை பெங்களூருவில் ஏற்படுத்தினர். இதன் பின் தென் மாநிலங்கள் முழுவதும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர்.
இந்த அமைப்பினர் தமிழகம் - கர்நாடகா எல்லை பகுதியில் கிருஷ்ணகிரில் ராக்கெட் லாஞ்சரை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு பழிவாங்கும் வகையில் புத்த வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இந்த அமைப்பினர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த 33 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேரும் கேரளாவைச் சேர்ந்த 17 பேரும் தெலுங்கானாவைச் சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.
ஐ.ஜி. அலோக் மிட்டல் |
ஏற்கனவே செயல்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் பஞ்சாபில் மீண்டும் தங்கள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்களுக்கு எல்லை பகுதியிலிருந்தும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் நிதி உதவி கிடைக்கிறது.
பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி அமைதியற்ற சூழலை உருவாக்குவது தான் இவர்களது நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சீமான் போன்றவர்கள் மற்றவர்களைக்கவர ஏகப்பட்ட கற்பனை வீரதீர செயல்களை மேடையில் வாய்க்கூசாமல் சொல்வதை தவிர்க்க வேண்டும்.
அவரிடம் சரக்கு ஒன்றும் கிடையாது.வெறும் வாய்தான் என்பது மக்களுக்குத் தெரியும்.
ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வை சேர்ந்தவர்களுக்கு ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வளரும் தொழில் நுட்பம்,
தொழல் நுட்பம் அதுவும் (மின்னணு,நானோ ) இல்லாமல் உலகமே இல்லை என்று கூறும் அளவுக்கு புதுப்புது தொழில்நுட்ப அம்சங்கள் அன்றாடம் முளைத்து வருகின்றன.அவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களுக்காகக் கூடுதலாக செலவிடவேண்டி இருந்தாலும் அவற்றால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தனிநபர் பயன்பாட்டுக்கும் தொழில் சார்ந்தும் தொழில்நுட்ப வசதிகள் பேருதவியாக இருக்கின்றன.
மனித சக்தியை மிஞ்சும் அளவுக்குத் தொழில்நுட்பங்கள் இப்போது வளர்ந்துவிட்டன.
வீட்டு உபயோகப் பொருட்கள், கைக்கடிகாரம்,ஸ்மார்ட்போன், ஹெட்செட் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள், ரோபோட் போன்ற டெக்னாலஜிகளுக்காக செலவிடும் தொகை 2019ஆம் ஆண்டில் 1.69 லட்சம் கோடி டாலராக உயரும் என்று சர்வதேச டேட்டா கார்பரேஷன் (IDC) நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இது 2018ஆம் ஆண்டின் மதிப்பை விட 5.3 சதவீதம் கூடுதலாகும்.
2019ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்பச் செலவுகள் 2.06 லட்சம் கோடி டாலராக உயரும் எனவும் சர்வதேச டேட்டா கார்பரேஷன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தொலைத் தொடர்பு உள்ளிட்ட பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கு மொத்தச் செலவில் நான்கில் மூன்று பங்கு செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மொபைல் போன், தனிநபர் கணினி உபகரணங்களுக்கு அதிக அளவில் செலவிடப்படும்.
உலக நாடுகளிலேயே தொழில்நுட்ப அம்சங்களுக்காக அதிகம் செலவிடும் நாடாக அமெரிக்கா இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்னாலஜி செலவுகள் 412 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா (328 பில்லியன் டாலர்) இரண்டாம் இடத்தில் உள்ளது. மேற்கு ஐரோப்பாவின் தொழில்நுட்பச் செலவுகள் 227 பில்லியன் டாலராக இருக்கும்.
வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்களுக்காக நுகர்வோர் செலவிடும் தொகை 13.2 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்நாளில்,
முன்னால்
இந்திய இளைஞர் எழுச்சி தினம்
உலக கிராமப்புற பெண்கள் தினம்
இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)
மருதநாயகம் என்றழைக்கப்பட்ட முகமது யூசுப்கான் ஆர்க்காட்டுப் படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்தியப் படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார்.
1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார். அக்காலத்தில் பனையூரில் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின. அவற்றுள் மருதநாயகம் குடும்பமும் ஒன்று.
மருதநாயகம் என்ற தனது பெயரை முகமது யூசுப்கான் என்று மாற்றிக்கொண்டார்.
ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தைப் போரில் ஈடுபடச் செய்தனர்.
பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.
தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டார்.
அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசுப் கான் எனும் மருதநாயகம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமான் என்ற தமிழர் விரோதி?
சீமான் பேசியதில் கண்டிப்பாக உள்குத்து உள்ளது.இது தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு,விடுதலைப்புலிகளுக்கு கேடு விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் பேசப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர்களுக்கும் தொடர்பில்லை விடுதலை செய்யுங்கள் என்று அனைத்துக்கட்சியினரும் போராடிக்கொண்டிருக்கையில்,விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் போது உண்மையிலேயே அவர்கள் மீது பற்று இருந்தால் ,இப்படி ஒருவரும், சுயநினைவில்லா மனநிலை பாதிக்கப்பட்டவன் கூட பேச மாட்டான்.இதனால் 7 பேர்கள் விடுதலை விட்டுப்போகும்.விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கும்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சீமான் .?
ஆனால் சீமான் பேசுகிறார் என்றால் இதுவரை கேள்விப்பட்ட இந்திய ரா முகவர்தான் அவர் என்பது உறுதியாகிறது.
சாதி சான்றிதழ் கொண்டுபோகணுமா? |
தமிழக மின்வாரியத்தின் சார்பில் அப்ரென்டிஸ் பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இன்ஜினியரிங் படிப்பில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இந்த ஒரு ஆண்டு பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணி: அப்ரென்டிஸ் காலியிடங்கள்: 500
பணி விவரம்: தமிழகம் முழுவதும்
தகுதி: டிகிரி, டிப்ளமோ
உதவித் தொகை: டிகிரி-ரூ. 4,984
டிப்ளமோ-ரூ. 3,542
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 5.11.2019
தேர்வுமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விபரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2019/10/TANGEDCO-Notification.pdf
=======================================================
நினைவில் உள்ளதா?
அக்.19 மற்றும் 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு
நவ.17 - என்.டி.ஏ., தேர்வு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7,8,14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
டிச., 7, 8, 14, 15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச., 28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடம் புரளும் (மோடி அரசு.)ரெயில்.
உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவ னங்களில்
ஒன்றான இந்திய ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை மோடி
அரசு துவக்கியுள்ளது.
முதல் கட்டமான 150 பயணி கள் ரயிலை இயக்கும் பொறுப்பையும், நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இதை நடை முறைப்படுத்த குழு ஒன்றை யும் மோடி அரசு அமைத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக லக்னோ, தில்லி இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் பொறுப்பு தனியாருக்கு தரப்பட்டு, மிகுந்த ஆரவா ரத்துடனும், விளம்பரத்துடனும் அந்த ரயில் இயக்கப்பட்டது.
ஆனால் இந்த ரயிலில் ரயில்வேத் துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட இந்திய ரயில் கட்டணத்தை மீறி கூடுதலாக கட்டணம் வசூ லிக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது.
இந்த ரயிலுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் பெற முடியும் என்றும், ரயில்வே விதிக ளுக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டப்படு கிறது.
தனியார் ரயிலில் ஏசி, உயர்தர வகுப்புக்கு ரூ.2450ம், ஏசி வகுப்புக்கு ரூ.1565ம் வசூலிக்கப்படு கிறது. ஆனால் இதே தடத்தில் செல்லும் இந்திய ரயில்வே இயக்கும் ரயிலில் ஏசி உயர்தர வகுப்புக்கு ரூ.1855ம், ஏசி வகுப்புக்கு ரூ.1165 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதே தளத்தில் இயங் கும் காரிப் ரத எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி முதல்தர வகுப்புக்கு ரூ.645ம், ஏசி வகுப்புக்கு ரூ.489 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை ரயில்வேத் துறை மட்டுமே நிர்ணயிக்க முடியும் என ரயில்வே உயரதிகாரிகள் கூறும் நிலையில் தனியார் முதலாளிகள் தங்கள் வேலையை காட்டத்துவங்கி விட்டனர். ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படுவது போன்று விழாக் காலங்களில் இன்னும் கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் நடந்தது போல பொதுத்துறையில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கட்டமைப்பை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலைகள் விழுங்கிக் கொள் ளையடிக்கவே ரயில்வே துறையை மோடி அரசு தனியார்மயமாக்கி வருகிறது.
இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த போதே ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கு வதற்கான அபாய சங்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊதி விட்டார். ரயில்வே துறையில் முதலீடு செய்வதற்கான சக்தி அரசுக்கு இல்லை என்பதால் கார்ப்பரேட்டுகளின் உதவி நாடப் படுகிறது என்று அவர் தனியார்மயத்தை நியாயப் படுத்தினார்.
பயணிகள் ரயில் மற்றும் ரயில் நிலையங்க ளை மட்டுமின்றி, ரயில்பெட்டி, எஞ்சின் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் உற்பத்தி தொழிற்சாலை களையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மொத்த சுமையும் பயணிகள் தலையிலேயே விழும். இது அப்பட்டமான அயோக்கியத்தனம். சேவைத் துறையான ரயில்வேயை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடி அரசு சீரழிக்கத் துவங்கிவிட்டது.
இதன் முதல் அடிதான் தனியார் ரயிலில் நடக்கும் கட்டணக் கொள்ளை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------