கொள்ளையை தடுத்திட வேண்டும்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழக மக்களில் பெரும்பாலோர்
சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது.
அந்த பேருந்துகளில் இடவசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கிறார்கள்.
அக். 23 அன்று வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட, அக். 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டி கைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி யுள்ளது.
குறிப்பாக சென்னையிலிருந்து சேலத் திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்பட்டது.
ஆனால், வெள்ளிக்கிழமை செல்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது.
இது 214 சதவீதம் அதிகமாகும்.
சென்னையில் இருந்து மதுரைக்கு விமா னத்தில் செல்ல கட்டணம் ரூ.2728 மட்டுமே.
அரசு பேருந்தில் செல்ல கட்டணம் ரூ.450. ஆனால் தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் ரூ.850 முதல் ரூ.1200 வரை வசூலிக்கிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த பட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.2200 வரை வசூலிக்கிறார்கள்.
ஏசிபடுக்கை வசதி உள்ள பேருந் தில் ரூ.3ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது.
பகிரங்க கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. இந்த கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியா ளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப் பதை அறிந்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளை எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்கு முறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்க ளது விருப்பம் போல் இயக்கி வருகிறார்கள்.
இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகை யை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்கு வதாக கூறப்படுகிறது.
மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவது ஒரு அரசின் கடமை.
எனவே உடனடி யாக ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும்.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு மாநி லங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இயக் குவதற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும்.
ஆம்னி பேருந்துகள் வசூலிக்கின்ற கட்டணத்தை யும் முறைப்படுத்தவேண்டும்.
அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் என்று வாய்ச்சவடால் விடாமல் செயலில் காட்ட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
2019 செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில், இந்தியாவில் மதுபான விற்பனை பெருமளவு குறைந்து விட்டதாக மதுபான தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மதுவிற்பனைச் சந்தை, கடந்த 2018-ஆம்ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 12.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.
2019-ஆம் ஆண்டின் இதே காலத்தில்வெறும் 1.4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக விஸ்கி விற்பனை கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலத்தில் 18 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் சுமார்1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
ஓட்கா மற்றும் ஜின் பிரிவிலும் விற்பனை குறைந்துள்ளது. ராயல் ஸ்டாக், மெக்டொவல், பிளெண்டர்ஸ் பிரைட் மற்றும் ஆபீசரின் சாய்ஸ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள்தான் (ஐ.எம்.எப்.எல்) 70 சதவிகித சந்தையைக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உலகின் இரண்டாவது பெரிய மது குழுமமான ‘பெர்னோட் ரிக்கார்ட்’ 2019 செப்டம்பர் வரையிலான காலாண்டில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமேவளர்ச்சி கண்டுள்ளது.
இதே நிறுவனம், கடந்த 2018-ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 34 சதவிகித அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்
முன்னால்
தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
ஹிட்லர், முசோலினி அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)
கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது(2001)
இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
1971 - ஐக்கிய நாடுகள் அவையில் உறுப் பினராகச் சீனா அனுமதிக்கப் பட்டது.
1949இலேயே மக்கள் சீனக் குடியரசு உருவாகி விட்டாலும், சீனாவிலிருந்து தப்பியோடிய சியாங் கே-ஷேக், தைவானிலிருந்து கொண்டு, அதனை சீனக் குடியரசு என்று அழைத்துக் கொண்டார்.
ஐநாவில் இணைவதற்கான மக்கள் சீனத்தின் முயற்சிகள், ஒற்றைச் சீனக் கொள்கையின்படி தோற்கடிக்கப்பட்டன. ஒற்றைச் சீனக் கொள்கை என்பது சீனா என்ற பெயரில் இறையாண்மைகொண்ட ஒரேயொரு நாடுதான் இருக்க முடியும் என்பதுதான் என்றாலும்கூட, பல்வேறு நாடுகளாலும் மாறுபட்ட விதங்களில் கடைப்பிடிக்கப்பட்டது.
மக்கள் சீனக்குடியரசு, சீனக்குடியரசு (தைவான்) ஆகிய இரண்டுமே ஏற்றுக்கொண்டுள்ள ஒற்றைச் சீனக் கருத்தாக்கம் என்பது, தைவானும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சீனா என்பதாகும். தைவானிலிருந்துகொண்டு, சியாங் கே-ஷேக் சீனக்குடியரசு என்று அழைத்துக்கொண்டதாலேயே, ‘சீனாவின் முதன்மை நிலப்பரப்பு (மெயின்லேண்ட் சைனா)’ என்ற சொற்றொடர் உருவாகி, 1990களுக்குப்பின், மக்கள்சீனத்தைக் குறிப்பதாக நிலைபெற்றுவிட்டது.
ஒற்றைச் சீனாவாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்டவை தைவானையும், இடதுசாரி அரசுகளைக்கொண்ட நாடுகள் மக்கள்சீனத்தையும் ஒப்புக்கொண்டன.
இதனால், உலகில் மக்கள்தொகையில் முதலிடமும், பரப்பளவில் மூன்றாமிடமும் வகித்த மிகப்பெரிய நாடான சீனா, ஐநாவின் அங்கமாக ஆகமுடியவில்லை. எதிர்த்த நாடுகளில் பல 1960களில் மக்கள்சீனத்தை ஆதரிக்கத் தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பினைத் திரட்டி முறியடித்தது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் சில ஆகியவை ஆதரவாக மாறி (பாதிக்கும் அதிகமான)பெரும்பான்மை உருவான போதும், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு தேவை என்று, சீனக்குடியரசுக்கு(தைவான்) பதிலாக மக்கள்சீனத்தை இணைக்கும் அல்பேனியாவின் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது. 1971 பிப்ரவரியில், ஐநா பாதுகாப்பு அவையில் சீனக்குடியரசு(தைவான்) இருப்பது முறையற்றது என்று சோமாலியா கண்டித்தது.
1971 அக்டோபர் 25இல் அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைத்ததுடன், ஐநாவில் சட்டவிரோதமாக அங்கம் வகிக்கும் சியாங் கே-ஷேக்கின் பிரதிநிதிகள் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்காவும் ஆதரித்தது.
ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின், வீட்டோ உரிமை யுடன் கூடிய பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடம் மக்கள்சீனத்திற்கு மாற்றப்பட, சீனக்குடியரசு என்று அழைத்துக்கொள்ளும் தைவான், இன்றுவரை ஐநாவில் உறுப்பினராகவே இல்லை.
ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு நிகழ்வுகளிலும், அமைப்புகளிலும் வேறுபடுத்திக்காட்ட, சைனீஸ் தாய்பேய் என்று தைவான் குறிப்பிடப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழனன்று எண்ணப்பட்டன.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில்
புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள்
போட்டியிட்டனர்.
இத்தொகுதியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்கு களைப் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயி ரத்து 842 வாக்குகளைப் பெற்றார்.
நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
66.35 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதில் அதிமுக வேட்பாளர் நாரா யணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், 61 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்றார்.
பாஜகவின் அரியானா குதிரை பேரம்
முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வந்த அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் இந்த இறக்குமதி பொருட் களின் மதிப்பு, நடப்பாண்டில் 10 பில்லியன்டாலரை (சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய்)தாண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனது எரிசக்தித் தேவைக்கு ‘ஒபெக்’ நாடுகள் கூட்டமைப்பின் மேற்கு ஆசிய நாடுகளையே பெருமளவில் (65 சதவிகிதம்) சார்ந்திருந்தது.
தற்போது, அந்நிலையை மாற்றிக் கொண்டுள்ள இந்தியா, தனது தேவைக்கு பெருமளவு அமெரிக்காவைச் சார்ந்திருக்க முடிவு செய்துள்ளது.கடந்த 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 29 வரை, அமெரிக்காவிலிருந்து 260 கோடிடன் அளவிற்கே இந்தியா கச்சா எண் ணெய்யை இறக்குமதி செய்திருந்தது.
அதுவே 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 29 வரையிலான காலத்தில், 450 கோடி டன் அளவாக உயர்ந்தது. இது 72 சதவிகித அதிகரிப்பாகும்.
இதனிடையே, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
2018-19ஆம் ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து 7.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றையே இந்தியாஇறக்குமதி செய்திருந்தது.
தற்போது அதில் 2.8 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என்று அமைச்சர் மதிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இறக்குமதி அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு புதிய உயரத்தை அடைந்துள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பில்தான் அந்தந்த நாட்டு அமைச்சர்கள் மகிழ்ச்சிஅடைவார்கள்.
மாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை அதிகரித்து இருப்பதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய் யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மிக அதிகமான வரிகளை தனது நாட்டில் விதித்தது.
பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் கூடுதல் வரிவிதித்தது.
இதனை எதிர்பார்க்காத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆத்திரத்தின் உச்சிக்கேபோய்விட்டார். நாங்கள் வரி போடலாம்; பதிலுக்கு, இந்தியா எவ்வாறு வரியை உயர்த்தலாம் என்று கொதிப்படைந்த டிரம்ப், வரியைக் குறைக்குமாறு பகிரங்கமாக இந்தியாவை மிரட்டினார்.
ஒருகட்டத்தில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகளுக்கான பட்டியலிலிருந்து இந்தியாவையே அடியோடு நீக்கினார்.மோடி அரசு ஆடிப்போனது.
2016-ஆம்ஆண்டு, புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைஅமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண் டது. அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பதும் அதன் அம்சங்களில் ஒன்றாகும்.
அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையிலான இந்த இறக்குமதி அதிகரிப்பைத்தான் அமைச்சர்தர்மேந்திர பிரதான் பெருமையாகப் பேசியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் கள்ள நோட்டு புழக்கம் இரண்டு மடங்காக உயர்வு!!!
கள்ளநோட்டு புழக்கத்தில் குஜராத் மாநிலம் முன்னிலை!!
குஜராத் மாடல்!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது.
அந்த பேருந்துகளில் இடவசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கிறார்கள்.
அக். 23 அன்று வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட, அக். 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டி கைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி யுள்ளது.
குறிப்பாக சென்னையிலிருந்து சேலத் திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்பட்டது.
ஆனால், வெள்ளிக்கிழமை செல்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது.
இது 214 சதவீதம் அதிகமாகும்.
சென்னையில் இருந்து மதுரைக்கு விமா னத்தில் செல்ல கட்டணம் ரூ.2728 மட்டுமே.
அரசு பேருந்தில் செல்ல கட்டணம் ரூ.450. ஆனால் தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் ரூ.850 முதல் ரூ.1200 வரை வசூலிக்கிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த பட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.2200 வரை வசூலிக்கிறார்கள்.
ஏசிபடுக்கை வசதி உள்ள பேருந் தில் ரூ.3ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது.
பகிரங்க கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. இந்த கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியா ளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப் பதை அறிந்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளை எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்கு முறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்க ளது விருப்பம் போல் இயக்கி வருகிறார்கள்.
இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகை யை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்கு வதாக கூறப்படுகிறது.
மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவது ஒரு அரசின் கடமை.
எனவே உடனடி யாக ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும்.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு மாநி லங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இயக் குவதற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும்.
ஆம்னி பேருந்துகள் வசூலிக்கின்ற கட்டணத்தை யும் முறைப்படுத்தவேண்டும்.
அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் என்று வாய்ச்சவடால் விடாமல் செயலில் காட்ட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பொருளாதார மந்த நிலை மதுபான விற்பனையையும் பாதிப்பு
மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின்
பொருளாதாரத்தைச் சீர் குலைத்து விட்டது.
தொழில்கள் பாதிப்பு,
உற்பத்திமுடக்கம், ஏற்றுமதி சரிவு, வேலையின்மை, வறுமை அதிகரிப்பு
என்றுஇப்போதுவரை பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏழை, எளிய
நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது.
பொருளாதார மந்த நிலை ஏற்
பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார மந்தமானது, மதுபான விற்பனையையும் பாதித்து
இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.2019 செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில், இந்தியாவில் மதுபான விற்பனை பெருமளவு குறைந்து விட்டதாக மதுபான தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மதுவிற்பனைச் சந்தை, கடந்த 2018-ஆம்ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 12.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.
2019-ஆம் ஆண்டின் இதே காலத்தில்வெறும் 1.4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக விஸ்கி விற்பனை கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலத்தில் 18 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் சுமார்1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
ஓட்கா மற்றும் ஜின் பிரிவிலும் விற்பனை குறைந்துள்ளது. ராயல் ஸ்டாக், மெக்டொவல், பிளெண்டர்ஸ் பிரைட் மற்றும் ஆபீசரின் சாய்ஸ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள்தான் (ஐ.எம்.எப்.எல்) 70 சதவிகித சந்தையைக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உலகின் இரண்டாவது பெரிய மது குழுமமான ‘பெர்னோட் ரிக்கார்ட்’ 2019 செப்டம்பர் வரையிலான காலாண்டில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமேவளர்ச்சி கண்டுள்ளது.
இதே நிறுவனம், கடந்த 2018-ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 34 சதவிகித அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்
முன்னால்
தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
ஹிட்லர், முசோலினி அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)
கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது(2001)
இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
1971 - ஐக்கிய நாடுகள் அவையில் உறுப் பினராகச் சீனா அனுமதிக்கப் பட்டது.
1949இலேயே மக்கள் சீனக் குடியரசு உருவாகி விட்டாலும், சீனாவிலிருந்து தப்பியோடிய சியாங் கே-ஷேக், தைவானிலிருந்து கொண்டு, அதனை சீனக் குடியரசு என்று அழைத்துக் கொண்டார்.
ஐநாவில் இணைவதற்கான மக்கள் சீனத்தின் முயற்சிகள், ஒற்றைச் சீனக் கொள்கையின்படி தோற்கடிக்கப்பட்டன. ஒற்றைச் சீனக் கொள்கை என்பது சீனா என்ற பெயரில் இறையாண்மைகொண்ட ஒரேயொரு நாடுதான் இருக்க முடியும் என்பதுதான் என்றாலும்கூட, பல்வேறு நாடுகளாலும் மாறுபட்ட விதங்களில் கடைப்பிடிக்கப்பட்டது.
மக்கள் சீனக்குடியரசு, சீனக்குடியரசு (தைவான்) ஆகிய இரண்டுமே ஏற்றுக்கொண்டுள்ள ஒற்றைச் சீனக் கருத்தாக்கம் என்பது, தைவானும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சீனா என்பதாகும். தைவானிலிருந்துகொண்டு, சியாங் கே-ஷேக் சீனக்குடியரசு என்று அழைத்துக்கொண்டதாலேயே, ‘சீனாவின் முதன்மை நிலப்பரப்பு (மெயின்லேண்ட் சைனா)’ என்ற சொற்றொடர் உருவாகி, 1990களுக்குப்பின், மக்கள்சீனத்தைக் குறிப்பதாக நிலைபெற்றுவிட்டது.
ஒற்றைச் சீனாவாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்டவை தைவானையும், இடதுசாரி அரசுகளைக்கொண்ட நாடுகள் மக்கள்சீனத்தையும் ஒப்புக்கொண்டன.
இதனால், உலகில் மக்கள்தொகையில் முதலிடமும், பரப்பளவில் மூன்றாமிடமும் வகித்த மிகப்பெரிய நாடான சீனா, ஐநாவின் அங்கமாக ஆகமுடியவில்லை. எதிர்த்த நாடுகளில் பல 1960களில் மக்கள்சீனத்தை ஆதரிக்கத் தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பினைத் திரட்டி முறியடித்தது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் சில ஆகியவை ஆதரவாக மாறி (பாதிக்கும் அதிகமான)பெரும்பான்மை உருவான போதும், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு தேவை என்று, சீனக்குடியரசுக்கு(தைவான்) பதிலாக மக்கள்சீனத்தை இணைக்கும் அல்பேனியாவின் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது. 1971 பிப்ரவரியில், ஐநா பாதுகாப்பு அவையில் சீனக்குடியரசு(தைவான்) இருப்பது முறையற்றது என்று சோமாலியா கண்டித்தது.
1971 அக்டோபர் 25இல் அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைத்ததுடன், ஐநாவில் சட்டவிரோதமாக அங்கம் வகிக்கும் சியாங் கே-ஷேக்கின் பிரதிநிதிகள் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்காவும் ஆதரித்தது.
ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின், வீட்டோ உரிமை யுடன் கூடிய பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடம் மக்கள்சீனத்திற்கு மாற்றப்பட, சீனக்குடியரசு என்று அழைத்துக்கொள்ளும் தைவான், இன்றுவரை ஐநாவில் உறுப்பினராகவே இல்லை.
ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு நிகழ்வுகளிலும், அமைப்புகளிலும் வேறுபடுத்திக்காட்ட, சைனீஸ் தாய்பேய் என்று தைவான் குறிப்பிடப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழனன்று எண்ணப்பட்டன.
முத்தமிழ்ச்செல்வன் நாராயணன் |
இத்தொகுதியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்கு களைப் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயி ரத்து 842 வாக்குகளைப் பெற்றார்.
நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
66.35 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதில் அதிமுக வேட்பாளர் நாரா யணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், 61 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்றார்.
பாஜகவின் அரியானா குதிரை பேரம்
முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வந்த அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
கோபால் கன்டா, ரஞ்சித் சிங்,பாஜக எம்.பி. சுனிதா துக்கல் |
அரியானா மாநிலத்தில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி
நடந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் உள்ள 90
இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஆனால் பாரதீய ஜனதா கட்சி
40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் வர முடிந்தது.
தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 31
இடங்களில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த
நிலையில் அரியானாவில் தேர்வன மொத்த சுயேச்சை எம்.எல்.ஏக்கள் எட்டு பேரில் விலை படிந்த சுயேச்சை எம்.எல்.ஏக்களான கோபால் கன்டா, ரஞ்சித்
சிங் ஆகியோரை சிர்சா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சுனிதா துக்கல் தனி
விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மற்ற சுயேச்சை எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் நடக்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கப் பிடியில் இந்தியா?
இந்தியா, அமெரிக்க நாட்டிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பொருட்களின் மதிப்பு 2019 - 20 நிதியாண்டில், சுமார் 42 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.