பேரம் முடிந்தது ஆட்சி அமைந்தது.
துஷ்யந்த் சவுதாலா
கட்சியின் ஆதரவுடன் ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில்
மீண்டும் பா.ஜ. ஆட்சி அமையவுள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ.வின் கூட்டணி கட்சியான சிவசேனா முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சரவையில் 50:50 விகிதாச்சார ஒதுக்கீடு வேண்டும் என்றும் அடம் பிடிப்பதால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இவற்றில் பதிவான ஓட்டுகள் 24ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஆளும் கட்சியான பா.ஜ. 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இரண்டு கட்சிகளுமே சுயேச்சைகள் மற்றும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி. எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவை பெற முயற்சித்தன.ஆனால் பாஜக பேரம் என்பதால்
பா.ஜ.வுக்கு வெற்றி கிடைத்தது.
ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஜே.ஜே.பி.யும் பா.ஜ. ஆட்சி அமைக்க ஆதரவு தர முன் வந்தனர்.
பெரும்பான்மைக்கு 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது பா.ஜ.வுக்கு 57 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இதையடுத்து மனோகர்லால் கட்டார் ஹரியானா முதல்வராக மீண்டும் இன்று பதவியேற்கவுள்ளார். ஜே.ஜே.பி. தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பதவியேற்கிறார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வராக நீடிப்பார்' என திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதனால் மஹாராஷ்டிராவில் பா.ஜ. ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
கூட்டணி கட்சியால் தேர்தல் அரசியலில் பா.ஜ.வுக்கு சில சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன.
ஆனாலும் மஹாராஷ்டிராவில் பாதகமான சூழல் ஏற்பட்டு இழுபறி நீடிப்பதற்கும் கூட்டணி கட்சியே காரணமாக அமைந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
மனதில் உறுதி வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கம் வாங்கலையோ ,தங்கம்.!
விற்பது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்திய ரிசர்வ் வங்கி, தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தில் 115 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
கடந்த வர்த்தக ஆண்டில் 501 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்கியிருந்த நிலையில், தற்போது திடீரென விற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத முடிவில், ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் மதிப்பு, 1987 கோடி டாலராக இருந்தது.
அக்டோபர் 11-ஆம் தேதி 2670 கோடி டாலராக உயர்ந்திருந்தது.
இந்நிலையிலேயே, 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே ஒரு பகுதி தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்று விட்டதாகவும் ரிசர்வ் வங்கி வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.
1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதிச் சிக்கலின்போது ரிசர்வ் வங்கி சுமார் 67 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனின் மத்திய வங்கிகளிடம் விற்றது.
அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து, இப்போது 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க, ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, பெரும்பாலும் தங்கத்தின் மதிப்பை மட்டுமே அறிக்கைகளில் கூறிவருகிறது.
தங்கத்தின் அளவை பெரும்பாலும் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில் ,
முன்னால் .
பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’?
மகாத்மா காந்தி படுகொலையில், வி.டி. சாவர்க்கர் - குற்றமற்றவர் என்று ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை என காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறியுள்ளார்.
வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், அதற்கு உடனடியாக கடும் எதிர்ப்பு எழுந்தது.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, கடைசிவரை பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசம் காட்டிய சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுப்பதா?
என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
ஆனால், காந்தி கொலையில் வி.டி. சாவர்க்கர் நிரபராதி என்று நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாக பாஜகவினர் பதிலளித்து வந்தனர்.
இந்நிலையில்தான், காந்தி கொலை வழக்கில் வி.டி. சாவர்க்கர்குற்றமற்றவர் என்று நீதிமன்றம் ஒருபோதும் தீர்ப்பில் கூறவில்லை என்றுமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், பத்திரிகையாளருமான துஷார்காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில்பேசியிருக்கும் துஷார் காந்தி,“காந்தி கொலையில், சாவர்க்கருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்பதாலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்; நிரபராதி என்பதால் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
“காந்தியின் கொலையில் உண்மையில் என்ன நடந்தது? என் பதை இந்த நேரத்தில் நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.காந்தி கொலை வழக்கில், சாவர்க்கருக்கு எதிராக நாங்கள் அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.அதனாலேயே அவர் விடுவிக்கப்பட் டார்.
சாவர்க்கரை நிரபராதி என்றுஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை.
ஆனால், அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர சங்-பரிவாரங்கள் முயல் கின்றன” என்று துஷார் காந்தி கூறியுள்ளார்.
தேசத் தந்தையான மகாத்மா காந்தி, 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, நாதுராம் கோட்சே-வால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 பேரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
அவர்களில் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால், 7-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவரும், காந்திகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக, குற்றம் சாட்டப்பட்டவருமான வி.டி. சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வே தற்போது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

பெரும்பான்மை கிடைக்காத ஹரியானாவில் பா.ஜ.வுக்கு சுமுக தீர்வு கிடைத்தாலும்
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அபார வெற்றி பெற்ற மஹாராஷ்டிராவில் ஆட்சி
அமைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இங்கு பெரும்பான்மைக்கு 146 தொகுதிகள்
தேவை. பா.ஜ. 105 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா56
தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் ஆட்சி அமைக்க தேவையானதை விட
அதிகமாக மொத்தம் 161 தொகுதிகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்துஉள்ளது.
ஆனாலும்முதல்வர் பதவி,அமைச்சரை பங்கீடு போன்ற விஷயங்களில் இரு
கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
'முதல்வர் பதவியை தலா 2.5 ஆண்டுகள் என இரு கட்சிகளும் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது அமைச்சரவையில் 50:50 விகிதாச்சாரம் ஒதுக்கீடு' என தேர்தலுக்கு முன் இரு
கட்சிகளுக்கும் இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.தற்போது இந்த விஷயத்தில் சிவசேனா உறுதியாக உள்ளது.

'முதல் 2.5
ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை எங்களுக்குதர வேண்டும். ஆதித்ய தாக்கரே
முதல்வராக இருப்பார். அமைச்சரவையில்
எங்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும்' என சிவசேனா தலைவர்கள் அடம் பிடிக்கின்றனர்.
பா.ஜ.. தரப்போ 'முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்ய முடியாது. எங்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும்' என சிவசேனா தலைவர்கள் அடம் பிடிக்கின்றனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வராக நீடிப்பார்' என திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதனால் மஹாராஷ்டிராவில் பா.ஜ. ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
கூட்டணி கட்சியால் தேர்தல் அரசியலில் பா.ஜ.வுக்கு சில சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன.
ஆனாலும் மஹாராஷ்டிராவில் பாதகமான சூழல் ஏற்பட்டு இழுபறி நீடிப்பதற்கும் கூட்டணி கட்சியே காரணமாக அமைந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
மனதில் உறுதி வேண்டும்.
மூன்று தடகள போட்டிகளில் முதல் பரிசு.
வாழ்த்துகள் !!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கம் வாங்கலையோ ,தங்கம்.!
விற்பது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்திய ரிசர்வ் வங்கி, தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தில் 115 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
கடந்த வர்த்தக ஆண்டில் 501 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்கியிருந்த நிலையில், தற்போது திடீரென விற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத முடிவில், ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் மதிப்பு, 1987 கோடி டாலராக இருந்தது.
அக்டோபர் 11-ஆம் தேதி 2670 கோடி டாலராக உயர்ந்திருந்தது.
இந்நிலையிலேயே, 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே ஒரு பகுதி தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்று விட்டதாகவும் ரிசர்வ் வங்கி வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.
1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதிச் சிக்கலின்போது ரிசர்வ் வங்கி சுமார் 67 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனின் மத்திய வங்கிகளிடம் விற்றது.
அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து, இப்போது 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க, ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, பெரும்பாலும் தங்கத்தின் மதிப்பை மட்டுமே அறிக்கைகளில் கூறிவருகிறது.
தங்கத்தின் அளவை பெரும்பாலும் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில் ,
முன்னால் .
பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
1971 - காங்கோ மக்க ளாட்சிக் குடியரசின் பெயரை
ஸையர் குடியரசு என்று அதன் ஜனாதிபதி மொபுட்டு மாற்றினார்.
பதினோராண்டு களில் நான்காவது பெயர் மாற்றம் என்பதுடன், இது அந்நாட்டின் ஆறாவது பெயராகும்! ஸையர் என்பது, காங்கோ ஆற்றிற்குப் போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெய ராகும்.
ஆப்ரிக்க மொழிகளில் ஒன்றாக கிக்கொங்கோ மொழியில் மற்ற ஆறுகளை விழுங்கும் ஆறு என்ற பொருள்கொண்ட, ன்ஸியர் என்ற சொல்லிலிருந்து ஸையர் என்ற சொல்லைப் போர்ச்சுகீசியர்கள் உருவாக்கினர்.
நொடிக்கு 41,200 கனமீட்டர் நீர் பாய்ந்து, நீர் அளவில் உலகில் இரண்டா வதாக காங்கோ ஆறு திகழ்கிறது(முதலிடத்திலுள்ள அமே சான் நொடிக்கு 2,09,000 கனமீட்டர்!).
அந்நியர் (போர்ச்சு கீசியர்கள்) ஆட்சியின் அடையாளங்களனைத்தையும் நீக்க, மொபுட்டு அறிவித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் பெயர் மட்டுமின்றி, மொபுட்டுவின் பெயர், காங்கோ ஆறு, பல நகரங்கள், உள்ளிட்டவை பெயர் மாற்றப்பட்டதுடன், மேற்கத்திய பாணி உடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. மாவோ-வின் கோட்டைப்போன்ற ஒன்றை ஆண்களுக்கும், அதற்கிணையான ஓர் உடையைப் பெண்களுக்கும் வடிவமைத்து, அதை மட்டுமே உடுத்தவேண்டுமென்று உத்தரவிட்டார் மொபுட்டு.
தொண்ணூராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள பகுதியான காங்கோவில், ஆப்ரிக்காவிலேயே கடைசி யாகத்தான் பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய வற்றின் மேற்கத்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.
1960இல் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற காங்கோ ஃப்ரீ ஸ்டேட், தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொள்ள, அடுத்து பிரான்சிடமிருந்து விடுதலைபெற்ற பகுதியும் தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொண்டது.
அதனால், பெல்ஜியம் அரசரின் பெயராலேயே காங்கோ-லியோல்ட்வில்லி என்றழைக்கப்பட்ட இதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி மொபுட்டு, இத்தகைய மாற்றங்களைச் செய்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிஸ் லுமும்பாவுக்கு சோவியத் ஆதரவளித்ததால், காங்கோ பொதுவுடைமைக்கு மாறிவிடும் என்று அஞ்சி, மொபுட்டுவின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவின.
மொபுட்டுவின் மோசமான ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் போர் இன்றும் தொடர்கிறது. ஸையர் என்ற பெயர் 1997இல் கைவிடப்பட்டு காங்கோ மக்கள் குடியரசு என்று மாற்றப்பட்ட இது, ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாக (முதலாவது அல்ஜீரியா) இருக்கிறது.
பிரான்சிடமிருந்து விடுதலைபெற்றது காங்கோ குடியரசு என்று அழைக்கப்படுகிறது.
போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்பிலிருந்தவை தற்போது அங்கோலாவுடன் உள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------பதினோராண்டு களில் நான்காவது பெயர் மாற்றம் என்பதுடன், இது அந்நாட்டின் ஆறாவது பெயராகும்! ஸையர் என்பது, காங்கோ ஆற்றிற்குப் போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெய ராகும்.
ஆப்ரிக்க மொழிகளில் ஒன்றாக கிக்கொங்கோ மொழியில் மற்ற ஆறுகளை விழுங்கும் ஆறு என்ற பொருள்கொண்ட, ன்ஸியர் என்ற சொல்லிலிருந்து ஸையர் என்ற சொல்லைப் போர்ச்சுகீசியர்கள் உருவாக்கினர்.
நொடிக்கு 41,200 கனமீட்டர் நீர் பாய்ந்து, நீர் அளவில் உலகில் இரண்டா வதாக காங்கோ ஆறு திகழ்கிறது(முதலிடத்திலுள்ள அமே சான் நொடிக்கு 2,09,000 கனமீட்டர்!).
அந்நியர் (போர்ச்சு கீசியர்கள்) ஆட்சியின் அடையாளங்களனைத்தையும் நீக்க, மொபுட்டு அறிவித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் பெயர் மட்டுமின்றி, மொபுட்டுவின் பெயர், காங்கோ ஆறு, பல நகரங்கள், உள்ளிட்டவை பெயர் மாற்றப்பட்டதுடன், மேற்கத்திய பாணி உடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. மாவோ-வின் கோட்டைப்போன்ற ஒன்றை ஆண்களுக்கும், அதற்கிணையான ஓர் உடையைப் பெண்களுக்கும் வடிவமைத்து, அதை மட்டுமே உடுத்தவேண்டுமென்று உத்தரவிட்டார் மொபுட்டு.
தொண்ணூராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள பகுதியான காங்கோவில், ஆப்ரிக்காவிலேயே கடைசி யாகத்தான் பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய வற்றின் மேற்கத்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.
1960இல் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற காங்கோ ஃப்ரீ ஸ்டேட், தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொள்ள, அடுத்து பிரான்சிடமிருந்து விடுதலைபெற்ற பகுதியும் தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொண்டது.
அதனால், பெல்ஜியம் அரசரின் பெயராலேயே காங்கோ-லியோல்ட்வில்லி என்றழைக்கப்பட்ட இதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி மொபுட்டு, இத்தகைய மாற்றங்களைச் செய்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிஸ் லுமும்பாவுக்கு சோவியத் ஆதரவளித்ததால், காங்கோ பொதுவுடைமைக்கு மாறிவிடும் என்று அஞ்சி, மொபுட்டுவின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவின.
மொபுட்டுவின் மோசமான ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் போர் இன்றும் தொடர்கிறது. ஸையர் என்ற பெயர் 1997இல் கைவிடப்பட்டு காங்கோ மக்கள் குடியரசு என்று மாற்றப்பட்ட இது, ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாக (முதலாவது அல்ஜீரியா) இருக்கிறது.
பிரான்சிடமிருந்து விடுதலைபெற்றது காங்கோ குடியரசு என்று அழைக்கப்படுகிறது.
போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்பிலிருந்தவை தற்போது அங்கோலாவுடன் உள்ளன.
சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’?
மகாத்மா காந்தி படுகொலையில், வி.டி. சாவர்க்கர் - குற்றமற்றவர் என்று ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை என காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறியுள்ளார்.
வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், அதற்கு உடனடியாக கடும் எதிர்ப்பு எழுந்தது.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, கடைசிவரை பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசம் காட்டிய சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுப்பதா?
என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
ஆனால், காந்தி கொலையில் வி.டி. சாவர்க்கர் நிரபராதி என்று நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாக பாஜகவினர் பதிலளித்து வந்தனர்.
துஷார் காந்தி |