இது எப்படி இருக்கு?
“தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றான அக்டோபர் 2 ஆம் தேதி, மூன்று இந்தி திரைப்படங்கள் அந்த நாளில் ரூ.120 கோடி வசூலித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
“நாட்டில் பொருளாதாரம் சிறப்பாக இல்லாவிட்டால், ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் மட்டும் இவ்வளவு வணிக வசூலை எவ்வாறு பெற முடியும்?” என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இது எப்படி இருக்கு?
இவர் தெரிந்தே சொல்கிறாரா இல்லை உணராமல் பேசுகிறாரா என்பது கேள்விக்குரியது.
சில நாட்களாக இவர் பேசுவதெல்லாம் தேவையற்றவைகளாக,விவாதத்தைக்கிளப்புவதாகவே ள்ளது.மக்களை திசை திருப்பவே பாஜக அமைசசர்கள் இப்படி எட்டிக்குப்போட்டியாக பேசுகிறார்கள் என்றே தெரிகிறது.
திரைப்படத்திற்கு விடுமுறை நாட்களில் கூட்டமும்,டாஸ்மாக் கடைகளில் எப்போதும் கூட்டமும் இருப்பது வாடிக்கை.இதை வைத்து ஒருநாட்டின் பொருளாதாரத்தை அளவிடுவதுதான் பாஜகவின் பொருளாதார குறியீடா.?-
இங்கு வருபவர்கள் அனைவருமே தங்கள் துயரை மறக்க,மறைக்கத்தான் வருகிறார்கள்.சிலர் கொண்டாட்டத்துக்கு வரலாம்.
ஆனால் 90%மக்கள் குடிப்பதை கவலை மறக்க என்றுதான் கூறுகிறார்கள்.
வேலைவெட்டி இல்லாதவர்கள்,குடிப்பழக்கம் இல்லாதவர்கள் பொழுபோக்கு இடமாக கவலைகளை சற்று மறைந்திருக்கும் இடம்தான் திரையரங்கு.அதுவும் விடுமுறை நாட்களில் கோடிகள் வருவது இயல்புதான்.இதுதான் இந்தியாவின் வளர்ச்சியை,பொருளாதாரத்தை தீர்மானிக்கிறதா என்ன-
வெங்காய விலை,பெட்ரோல் விலை எல்லாம் மக்கள் வாழ்க்கையை காட்டவில்லையா.
இந்தியாவில், 2018-19 நிதியாண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக அளவில், கடந்த ஆண்டில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களில் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்காவை விடவும், ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்தோர் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய நேரடிவரிகள் வாரியம், 2012-13 நிதியாண்டிலிருந்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல்குறித்த அறிக்கையை, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி
விவரங்களின்படி, அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து, வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரம் பேர்களாக உயர்ந்துள்ளது.
அதாவதுஓராண்டில் கூடுதலாக 13.8 சதவிகிதம் பேர்வரி செலுத்தியுள்ளார்.வரி செலுத்துவோரில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களாக உள்ளனர். தனிநபர் வருமான வரி செலுத்துவோர் 97 ஆயிரத்து 689 பேர்களாக உள்ளனர்.
இந்த எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 .1 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக 7 தனிநபர்கள் 100 கோடிரூபாய்க்கும் அதிகமாக வரி செலுத்தியுள்ளனர்.
இதுவே 2017-18 நிதியாண்டில்நான்கு தனிநபர்கள் மட்டுமே 100 கோடிக்குஅதிகமாக வரி அளித்துள்ளனர்.50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய்வரை வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16 என்று இருந்தது.அது 2018-19இல் 24 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 5 கோடியே 52 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் படிவங்கள் சமர்ப்பிக் கப்பட்டுள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 849 தனிநபர்கள் 5 கோடி ரூபாய்க்கு அதிகமான சம்பள வருவாயைக் குறிப் பிட்டுள்ளனர். இதுவே முந்தைய ஆண்டில்2 ஆயிரத்து 254 பேர்களாக இருந்துள்ளது.
50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய்வரை வருவாய் பெறுவதாக 30 பேரும், 100 கோடி ரூபாய்க்கு மேல் 500 கோடி ரூபாய்க்குள் வருவாய் ஈட்டுவதாக ஒன் பது பேரும் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு வருமான வரித் தாக்கலில் இந்தஇரு பிரிவுகளிலும் அறியப்பட்ட எண் ணிக்கை முறையே 23 மற்றும் 2 மட்டுமேஆகும்.
5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குபவர்கள் 2 ஆயிரத்து 39 பேர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் ஆயிரத்து 615 ஆக இருந்துள்ளது.
சம்பள வருவாய் ஏதும் இல்லை என்றுகுறிப்பிட்டு வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகபட்சமாக உள்ளது. இந்த வகையைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 62 லட்சம் பேர்களாக உள்ளனர். அடுத்தபடியாக 5.5 லட்சம் ரூபாய் முதல் 9.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் 81 லட்சத்து 55 ஆயிரம் பேர்.
100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் 12.7 சதவிகிதம் வளர்ந்து,525 ஆக அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2013-14 நிதி ஆண்டின் வருமானவரி தாக்கல் புள்ளிவிவரப்படி 446 ஆக இருந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியானது (Index of Industrial Production -IIP), எப்போதும் இல் லாத வகையில், 2019 ஆகஸ்டில் மைனஸ் 1.1 சதவிகிதம் என்று கடும்அடி வாங்கியுள்ளது.
தொழிற்சாலை உற்பத்தி சதவிகிதம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (Ministry of statistics and programme implementation -MOSPI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரங்கள்இடம்பெற்றுள்ளன.
தொழிற்சாலை உற்பத்தி கடந்த2018 ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவிகிதம்என்ற வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்தது. கடந்த 2019 ஜூலையிலும் கூட 4.3 சதவிகிதமாக இருந்தது.
ஆனால், தற்போது 2019 ஆகஸ்டில்மைனஸ் 1.1 சதவிகிதம் என்ற மோசமான நிலைக்கு போயிருக்கிறது.
உற்பத்தித் துறை -1.2 சதவிகிதம், மின்சாரம் -0.9 சதவிகிதம், மூலதனப் பொருட்கள் -21.0 சதவிகிதம், கட்டுமானப் பொருட்கள் -4.5 சதவிகிதம், நுகர்வோர் சாதனங்கள் -9.1 சதவிகிதம் என இழப்பைச் சந்தித்து இருக் கின்றன.நாட்டின் 23 முக்கிய தொழில் துறை குழுமங்களில் 15 குழுமங்களின் தொழிற்சாலை உற்பத்திமைனஸ் நிலைக்கு இறங்கியுள்ளது.
இது முந்தைய ஆண்டுகளின் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்திஎன்று புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை குறிப் பிட்டுள்ளது.தொழில்துறை உற்பத்தி அல்லது தொழிற்சாலை உற்பத்தி என்பது நாட்டின் வணிக நிலப்பரப்பில் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதற்கான மிக நெருக்கமான குறியீடாகும்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார குறியீட்டில்மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.
-/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////----
இந்நாளில்,
முன்னால்.
உலக இயற்கை பேரிடர் தினம்
வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டனில் இடப்பட்டது(1792)
உலக பொது நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
1792 - தற்போது வெள்ளை மாளிகை என்றழைக் கப்படும், அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் இருப்பிடமும், அலுவல கமுமான, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் எக்சிகி யூட்டிவ் மேன்ஷன்’ கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது அயர்லாந்தில் பிறந்த கட்டிடக்கலைஞரான ஜேம்ஸ் ஹோபன் என்பவரால் அயர்லாந்து அரண்மனையான லெய்ன்ஸ்ட்டர் ஹவுஸ் கட்டிடத்தை மாதிரியாகக்கொண்டு, ரோமானியக் கட்டிடக்கலையின் சாயலுடன் கட்டப்பட்டது.
1800 நவம்பர் 1இல், இரண்டாவது குடியரசுத்தலைவரான ஜான் ஆடம்ஸ்-தான் இதில் முதலில் குடியேறினார்.
அடுத்த ஓராண்டிலேயே புதிய குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற தாமஸ் ஜெஃபர்சன், இரண்டு பேரரசர்கள், ஒரு திருத்தந்தை (போப்), ஒரு பெரிய(தலாய்) லாமா ஆகியோர் வசிக்கும ளவுக்குப் பெரியதாக இருப்பதாகக் கூறினாராம்!
இங்கிலாந்து டனான போரில், ஆங்கிலேயர்களால் 1814இல் இது தீக்கிரை யாக்கப்பட்டது. 1817இல் மறுகட்டுமானம் முடியும்வரை, ஆக்டகன் ஹவுஸ், செவன் பில்டிங்ஸ் ஆகியவற்றில் குடி யரசுத்தலைவர்கள் தங்கியிருந்தனர்.
தீக்கிரையான அடை யாளங்களை மறைக்க வெள்ளை நிறம் பூசப்பட்டதால் இது வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு செய்தி உண்டு என்றாலும், 1811இலேயே இது வெள்ளை மாளிகை என்று அழைக்கப்பட்டதற்குப் பதிவுகள் உள்ளன.
ஆனாலும், 1901இல் தனது கடிதத்தாளில் ‘வெள்ளை மாளிகை, வாஷிங்டன்’ என்று தியோடார் ரூஸ்வெல்ட் குறிப்பிடத் தொடங்கும்வரை, ‘பிரெசிடெண்ட்’ஸ் பேலஸ்’, ‘பிரெசி டெண்ட் மேன்ஷன்’, ‘பிரெசிடெண்ட்’ஸ் ஹவுஸ்’ ஆகிய வையே அதிகாரப்பூர்வ பெயர்களாக இருந்தன.
முதல் குடியரசுத்தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் மனைவி மார்த்தாவின் வீட்டின் பெயர் ஒயிட் ஹவுஸ் பிளாண்ட்டேஷன் என்பதால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
உள்நாட்டுப்போர்க் காலத்தில், பல துறைகளும் இங்கேயே செயல்பட்டதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு விரிவாக்கங்கள் செய்யப்பட்டன.
1891இல் குடியரசுத்தலை வராக இருந்த பெஞ்சமின் ஹாரிசனின் மனைவி கரோலின் ஹாரிசன் பரிந்துரைத்த, கிழக்கு, மேற்குக் கட்டிடங்களைக் கட்டுதல் அப்போது ஏற்கப்படாவிட்டாலும், தியோடார் ரூஸ்வெல்ட் பதவிக்குவந்தபின், 1902இல் நிறைவேற்றப்பட்டு, அலுவல்தொடர்பான ஊழியர்கள் மேற்குக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.
அவருக்கு அடுத்த குடியரசுத்தலைவரான வில்லியம் டாஃப்ட், 1909இல்தான் தற்போது அமெரிக்கக் குடி யரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகச் செயல்படும் ஓவல் அலுவலகத்தை மேற்குக் கட்டிடத்தில் உருவாக்கினார்.
பல்வேறு விரிவாக்கங்களைச் சந்தித்த இக்கட்டிடத்தின் மர உத்திரங்கள் தாங்காது என்பதால், 1948இல் கட்டிடத்தின் உட்பகுதி முழுவதும் பிரிக்கப்பட்டு, இரும்பு உத்திரங்களுடன் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ள வெள்ளை மாளிகை, தேசிய பூங்காத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
- அறிவுக்கடல்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
வங்கியில் பணத்தைக் கொட்டி
கணக்கு வைத்திருப்பவர்களைத்
தவிர மற்றவர்கள் கவனத்திற்கு ?
'வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ,பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள்,
வங்கிகளில் கணக்கு துவங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக
அறிந்து கொள்ள, கே.ஒய்.சி., எனப்படும், சுய விபரக் குறிப்புகள் கொண்ட
படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறை, பின்பற்றப்படுகிறது.
இதன்படி,
வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி மற்றும்
'மொபைல்' எண், 'இ - மெயில்' முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை,
வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த, கே.ஒய்.சி., ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த, கே.ஒய்.சி., ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர
தன்மைகளின் அடிப்படையில், கே.ஒய்.சி., புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று
விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள்
மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த, கே.ஒய்.சி., படிவம்,
புதுப்பிக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
'கே.ஒய்.சி.,
படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று, அங்கு
தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க
வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'சுய விபரக்குறிப்பில் மாற்றம்
எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில்,
'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்'செய்வதன் மூலம்,
புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றன.
அதில், வரும், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி.,
விபரங்களை புதுப்பிக்குமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.'ஜனவரி, 1க்குள்
புதுப்பிக்கப்படாத வங்கி கணக்குகள், முடக்கப்படும் என்றும், அந்த கணக்கில்
இருந்து, நேரடியாகவோ அல்லது 'ஆன்லைன்' மூலமோ, பணப் பரிமாற்றம் செய்ய
முடியாது' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
வைத்திருக்கும் இரநதாயிரம் ரூபாயில் சேவை வரி ,அந்தக் கட்டணம்,இந்தக்கட்டணம் என்று வாங்கி கணக்கையே கலையாக்கி வைத்திற்கு இந்த வங்கிகளுக்கு இத்தனை விபரங்கள் எதற்கு?இதையே வராக்கடன் என தள்ளுபடி செய்த 1.40.000/-கோடிகளை தல்ல்லுபடி செய்தீர்களே அவர்களிடம் வாங்கினீர்களா?
வாங்கியிருந்தாலும் அதனடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.கடனைத்தள்ளுபடி செய்ததைத்தவிர?
முகநூலில்
Krishna Kumar
சொம்பு
தூக்கிக் கொண்டு வந்த பார்ப்பனர்களை சீனஅதிபர் ஹைகோர்ட்டாக கூட
மதிக்கவில்லை என்பதை ‘லைவ்’வாகவே நேற்று தொலைக்காட்சிகளில் காணமுடிந்தது.எனினும், ‘தி இந்து’, ‘தினமலர்’ உள்ளிட்ட நாளிதழ்கள் சீன அதிபர் என்னமோ, பார்ப்பனர்களிடம் ஆசி வாங்கிய கணக்காக செய்தியும், படமும் போடுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்பம் பரவிவிட்ட காலத்திலேயே எல்லோரும் நேரடியாக பார்த்தத்தையே மாற்றை எழுதி இப்படி காது குத்துபவர்கள், இத்தனை ஆண்டு காலமாக நாம கல்வியறிவு இல்லாத முன்னோர்களுக்கு,நமக்கு எப்படியெல்லாம் மொட்டை போட்டிருப்பார்கள்?
*உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின்
பதவி பறிபோக வாய்ப்பு.*
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஷி ஜின்பிங் இரு தலைவர்களும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடத்தப் போவதாக தகவல் வந்ததும்,
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது.
ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன பணிகள் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்காக பலகோடி ௹பாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அமைச்சர் வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித் துறை 50 லட்ச ரூபாய் செலவில் மாமல்லபுரத்தில் துப்புரவு பணிகள் செய்துள்ளதாக கணக்கு காட்டினார்கள்.
இதனை, மத்திய உளவுத்துறை மூலமும், தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் மூலமும் அறிந்து கொண்ட பிரதமர் மோடி அதிரடியாக இன்று காலை நேரடி ஆய்வில் இறங்கினார்.
மாமல்லபுரம் கடற்கரையில், தானே தன்னந்தனியாக, யாருடைய உதவியும் இல்லாமல், வரலாறு முக்கியம் என்பதால், ஐந்து கேமராமேன்களை மட்டும் சுற்றி நிக்கவைத்துக்கொண்டு, அரைமணி நேரம் துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.
ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவில் துப்புரவு பணிகளை மேற்கொண்டதாக கணக்கெழுதிய உள்ளாட்சித் துறை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போல, பிரதமர் மோடியின் துப்புரவு பணிகளை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டு ஆடிப்போய் உள்ளது.
எந்தத் துறையில் எப்போது ஆய்வு நடக்குமோ என்று பிற துறைகளின் அமைச்சர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
பிரதமர் மோடியின் அதிரடி கண்டு பாஜகவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்....😃😃😃
பதிவு உதவி Kappikulam J Prabakar
----------------------------------------------------------------------------------------------------------------------------------
“இலவசம் என்றால் இலவசம் தான்"மூன்று வருடங்களுக்கு முன்பு ஜியோவை அறிமுகம் செய்யும் போது அனைத்தும் மூன்று மாதங்களுக்கு இலவசம் என்று கூறியது.
ஆனால் இந்த மாதம் 9ம் தேதி மாலை வெளியிட்ட அறிவிப்பின் படி, இதர நெட்வொர்க் வாடிக்கையாளர்களுடன் பேச ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்று அறிவித்து செய்தி வெளியிட்டது.
ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு பேசும் போது இண்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் என்ற கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பதிலாக இது நாள் வரையில் 13 ஆயிரம் கோடியை ஜியோ கட்டியது.
இந்நிலையில் அதற்கு ஈடாக இந்த கட்டணத்தை அறிமுகம் செய்தது.
தினமும் பேசுவதற்கு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ட்ராய் அமைப்பு இந்த இண்டெர்கனெக்ட் சார்ஜினை முற்றிலுமாக வேண்டாம் என்று மறுத்தால் மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏர்டெல், வோடபோன், அல்லது பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இயங்கும் எண்களுடன் பேசுவதற்காக சிறப்பு டாப்-அப் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.
அதன்படி ரூ.10க்கு ரீசார்ஜ் செய்தால் 124 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 249 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். ரூ. 50க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 1,362 நிமிடங்களுக்கு நீங்கள் பேசிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு இணையாக டேட்டாவை வழங்குகிறது ஜியோ. ரூ. 10க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி, ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி, ரூ. 50க்கு ரீரார்ஜ் செய்தால் 5ஜிபி, ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா இலவசம். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாத பில்லுடன் இந்த கட்டணத்தையும் கட்டும் நிலை தான் உருவாகும்.
ரிலையன்ஸ் ஜியோ இந்த கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளநிலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் “இலவசம் என்றால் இலவசம் தான். அன்லிமிட்டட் ப்ளான்களில் வேறு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்க மாட்டோம்” என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதேநேரம் ஜியோ 6 பைசா கட்டண அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
"ஜியோவின் புதிய கட்டண விதிப்பு பி.எஸ்.என்.எல்க்கு சாதகமாக அமையும் . விரைவில் ‘4ஜி’ அலைவரிசையும் கிடைக்கும் என எண்ணுகிறோம் .
இத்தகைய காரணங்களால், எங்கள் சந்தை பங்களிப்பு, 3 முதல், 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், எங்களுடைய சந்தை பங்களிப்பு, 6 சதவீதமாக உள்ளது. இது, 10 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தேசிய அளவில் 12 சதவீதமாக அதிகரிக்கும் என கருதுகிறோம்.
சமீபத்திய நிகழ்வுகள் எங்களுக்கு வளர்ச்சி வேகத்தை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் சேர்வதற்கு வழிவகுக்கும் என கருதுகிறோம்.என பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவர் கூறினார்.நடக்கட்டும் நல்லவை.
-/////////////////////////---------------------------///////////////////////////////////-----------------------------------------
எலுமிச்சம் பழம்
எலுமிச்சம் பழத்தின் தாயகம், இந்தியா.
தற்போது, எலுமிச்சம் பழத்தில் இருந்து, 'ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு' மற்றும் மதுபானம் போன்றவற்றையும், பெருமளவில் தயாரிக்கின்றனர்.
மேலும், எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், 'கால்சியம், சிட்ரேட்' போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர, உலோகத்தால் செய்த கலசங்களை சுத்தம் செய்ய, உலர வைக்கப்பட்ட எலுமிச்சை தோல்களை அரைத்து, மாவாக்கி பயன்படுத்துகின்றனர்.
எலுமிச்சை தோல், மாடுகளுக்கு, சத்துள்ள தீவனமாகவும் பயன்படுகிறது.
இதன் சாறை, அன்றாட உணவோடு, ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், ஜீரண சக்தி அதிகமாகும். நன்கு பசி எடுக்கும். விரல் முனையில் தோன்றும், 'நகச்சுத்தி' நோய்க்கு, இந்த பழத்தை செருகி வைப்பதுண்டு.
முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு இதன் சாறை தொடர்ந்து பூசி வர, நல்ல குணம் தெரியும்.
மண்ணீரல் வீக்கத்துக்கு, எலுமிச்சை ஊறுகாய் நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும், மருந்தாக உதவுகிறது.
எலுமிச்சையில், பல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பழத்தில், வைட்டமின், 'சி' அதிக அளவில் உள்ளது.
பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம், வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. பச்சை காய்கறிகளுக்கு ருசியூட்ட, எலுமிச்சம் பழச்சாறு பயன்படுகிறது.
நம் நாட்டில், இயற்கை சிகிச்சை மருத்துவ முறையில், இந்த பழம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
இந்த பழச் சாறுடன், தண்ணீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருள் சேர்த்து அருந்தலாம்.
எலுமிச்சம் பழச் சாறில், 'சிட்ரிக்' அமிலம் இருப்பதால் மண், கண்ணாடி மற்றும் பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுமே வைக்க வேண்டும். வேறு பாத்திரங்களில் வைத்தால், அதன் இயல்பு கெட்டு, நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடும்.
எலுமிச்சம் பழம், உடல் வெப்பத்தை குறைக்கும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்க துாண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும், இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய் கசப்பை அகற்றும். கபத்தை கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும்.
இருமல், தொண்டை நோய்களை குணப்படுத்தும். மூலத்தை கரைக்கும். விஷங்களை முறிக்கும்.
உடலின் நரம்பு மண்டலத்திற்கு, வலிமையை ஊட்டமளிக்கக் கூடிய ஆற்றல், இந்த பழத்திலுள்ள, 'பாஸ்பரஸ்' என்ற ரசாயன பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி, நரம்புகளுக்கு புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளிக்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயன பொருளான, 'பொட்டாசியம்' ரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது.
மற்ற எந்த பழத்தையும் விட, எலுமிச்சம் பழம் தான், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பிணிகளுக்கு சரியான மருந்தாக உதவுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவர் ராமதாஸை விடமாட்டார்கள் போலெ?