இன்று தடுத்தால்..., நாளை மறுக்கும்!

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வரும் பிரிட்டோ - மேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித்.

நேற்று மாலை 5.40 மணி அளவில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுஜித், எதிர்பாராத விதமாக கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.


இந்தக் ஆழ்துளை கிணறு 7 வருடங்களுக்கு முன்பு பிரிட்டோ தனது வீட்டு குடிநீர் பயன்பாட்டுக்காகத் தோண்டப்பட்டதாகவும், அதில் நீர் இல்லாததால் 5 வருடங்களுக்கு முன்பு அதில் மேல்பகுதியை மட்டும் மண்ணைப் போட்டு நிரப்பி இருக்கிறார்.

அந்தப்பகுதியில் சோளம் விதைத்து விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் மண் இறங்கி துளை மீண்டும் திறந்துள்ளது.
அந்த துளையில் குழந்தை சுஜித் விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்துள்ளான்.

இரவு 1 மணி வரையும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தையின் கையில் சுருக்குப் போட்டு இழுக்கும் திட்டமும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, கோவையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது குழுவும் மீட்புப் பணியில் இணைந்தது. மூன்று குழுக்களும் சேர்ந்து தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குழந்தையின் மற்றொரு கையில் சுருக்குப் போட முயற்சித்த நடவடிக்கை, தொடர் மழைத்தூறலால் தடைப்பட்டது.
களம்பூர் ஆரணி to போளூர் ரோடுமூடப் படாத போர்வெல் 



அதிகாலை 4.30 மணியளவில், மற்றொரு கையில் சுருக்குப் போட்டு மீட்கும்போது, ஏற்பட்ட கோளாறால், குழந்தை 26 அடியில் இருந்து 70 அடிக்கும் கீழாக சரிந்ததால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

தேசியப் பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, நெய்வேலி சுரங்கப் பாதுகாப்புக் குழு ஆகிய குழுக்களுக்குத் தகவல் தரப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
12 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்புப் பணி நடந்தாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அப்பகுதி மக்கள் உட்பட அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.


70க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தீவிரமாகத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 70 அடியில் இருக்கும் குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லாததால், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டது.
தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தையை மீட்க முடிவு செய்துள்ளனர்.
அதுவும் பயன் தராவிட்டால், நிலத்தின் அருகே சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 20 மணி நேரத்தைக் கடந்தும் மீட்புப் பணி நடந்து வருவதால், குழந்தையின் பெற்றோர் பதபதைப்பில் உள்ளனர்.

மீண்டும் குழந்தையின் மணிக்கட்டில் சுருக்குப் போட்டு வெளியே எடுக்க தேசியப் பேரிடர் மீட்புக் குழு திட்டமிட்டு, அதற்கான பணியினைத் துரிதப்படுத்தி உள்ளனர்.

குழந்தையின் கையில் கயிறு கட்டி மேலே இழுக்கும் முறை தோல்வி அடைந்தது. மேலும் அம்முயற்சியில் மண் சரிந்து குழந்தை மேலும் 10 அடி சரிந்து 80 அடிக்கு சென்றது.
இதனால் மீட்பு பணியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஹைட்ராலிக் கருவி மூலம் குழந்தையின் கையை பிடித்து மேலே எடுக்கும் முயற்சி மேற்கொள்ள சோதனைகள் நடந்து வருகிறது.

27 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், பக்கவாட்டில் சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை குழந்தையை மேல்நோக்கி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சுரங்கம் தோண்டுவதன் மூலம் கீழ் பகுதியில் இருந்து குழந்தையை மீட்க புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிறுவன் மயக்க நிலையில் இருப்பதாகவும், சுரங்கம் தோண்டும் பணி சீராக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுவரை 42 அடிகள் தோண்டப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 6 மணி நேரத்தில் மீட்புப் பணி நிறைவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 பயங்கரவாத ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பலி?
சிரியாவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது படையில் பாதியை வாபஸ் பெற்றுக்கொண்டது.
 அதன்பின் சிரியாவில் குர்து படைகளுக்கும் துருக்கி படைக்கும் இடையில் சண்டை நடந்தது. இதனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பு வேகமாக வளரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக சிரியாவில் மறைந்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி சிஐஏ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்.

சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 
அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக 2010ல் அபு பக்கர் அல் பக்தாதி பதவி ஏற்றுக்கொண்டார். 2013ல் இந்த அமைப்பு அல் கொய்தாவின் ஆதரவு பெற்ற மிகப்பெரிய தீவிரவாத அமைப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அந்த அமைப்பின் பெயர் ஐஎஸ்ஐஎஸ் - இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா என்று மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி மட்டும் அமெரிக்க படைகளின் கைகளில் சிக்காமல் இருந்தான். அமெரிக்க படைகள் சிரியா போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே வீழ்த்தியது. ஆனாலும் அபு பக்கர் அல் பக்தாதி மட்டும் சிக்கவில்லை.

இவர்தான் ஐஎஸ் அமைப்பை உலகம் முழுக்க கட்டுப்படுத்தி வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அபு பக்கர் அல் பக்தாதி ஒரு மிரட்டல் வீடியோ வெளியிட்டார். அதுதான் அவரின் கடைசி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அபு பக்கர் அல் பக்தாதி எங்கே சென்றார், எங்கு திட்டங்கள் போடுகிறார் என்று தகவலும் வெளியாகவில்லை.

2017 மற்றும் 2018ல் அமெரிக்க படை நடத்திய தாக்குதல் ஒன்றில் அபு பக்கர் அல் பக்தாதி காயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. இவர் பலமுறை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 2018 ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட தொடங்கியதால், அபு பக்கர் அல் பக்தாதி உயிரோடுதான் இருக்கிறார் என்பது உறுதியானது.

இந்த நிலையில்தான் சிரியாவில் நடந்த அமெரிக்க படையின் தாக்குதலில் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டு விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

சிந்தை தடுத்தால்,

பிரம்மபுத்திரா வராது ?



‘ஹரியானா விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டிய நீர், கடந்த 60 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதை நிறுத்தி, மொத்த தண்ணீரையும் உங்களிடமே சேர்ப்பேன். மோடியாகிய நான், உங்களுக்காகச் சண்டையிடுவேன்’ - ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதுதான் இப்படி உணர்ச்சி பொங்கப் பேசினார் பிரதமர் மோடி.
 தேர்தல்  முடிந்துவிட்டது. ஆனால்  அவரது பேச்சுக்கு  அங்குள்ள விவசாயிகள்  ஏமாறவில்லை என்பதை தேர்தல் தொங்கல் முடிவு உணர்த்தி விட்டது.
 ஆனால் மோடியின் இந்த தேர்தல் வாக்குகளுக்கான பேச்சு எவ்வளவு ஏமாற்றுத்தனமானது, அல்லது பொறுப்பில் உள்ள மோடிக்கு கள நிலவரம் அறிந்து கொள்ளும் தன்மை இல்லை.
பொருளாதாரத்தைப்போலவே உலக சட்டத்த்திட்டங்களிலும் பகுத்தறிவு குறைவு என்பதையே உலகறிய காட்டுகிறது.
பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர இந்தியா மறுத்தால், சிந்து நதிநீர் உடன்படிக் கையை மீறியதாகும்.
 1948-ம் ஆண்டு இங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த சிந்து நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தியது.
அப்போது உலக வங்கி தலையிட்டு, ஒன்பது ஆண்டுகள் இந்த வழக்கை விசாரித்து நியாயமான நீர்ப்பங்கீட்டு முறையைக் கொண்டுவந்தது.
அதுதான், `சிந்து நதிநீர் உடன்படிக்கை’. இது 1960-ம் ஆண்டு கராச்சியில் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் அதில் கையெழுத்திட்டனர்.
இதன்படி, தெற்கு நோக்கிப் பாயும் பியாஸ், ராவி, சட்லெஜ் ஆகிய நதிகளின்மீது இந்தியாவுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் சிந்து, ஜீனாப், ஜீலம் ஆகிய நதிகளின்மீது பாகிஸ்தானுக்கும் உரிமை கிடைத்தது.
 இந்த உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள நதிகளிலிருந்து கிடைக்கும் மொத்த நீரின் அளவு, 7.30 டிரில்லியன் கன அடி.
அதில் 20 சதவிகித நீரை இந்தியாவும், 80 சதவிகித நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். `பாகிஸ்தானுக்கு நீர் கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை’ என உடன்படிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

``இந்த உடன்படிக்கை, இதுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த மூன்று போர்களின்போதும்கூட மீறப்பட வில்லை. 60 ஆண்டுகளாக எத்தனையோ பிரச்னைகள் இருந்தபோதெல்லாம்கூட கைவிடாத இந்த உடன்படிக்கையை மீறுவதற்கான வேலைகள் தற்போது நடைபெறுகின்றன’’ என்கிறனர் இதன் விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘பிரதமர் மோடி, புத்திசாலித்தனமாக `இந்தியாவுடைய பங்கைத்தான் பாகிஸ்தானுக்குக் கொடுக்க மாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், பாகிஸ்தானுக்குப் போகும் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கான திட்டமிடல், 2016-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2016 செப்டம்பரில் நிகழ்ந்த யூரி தாக்குதலின் போது இந்தப் பேச்சு தொடங்கியது.
அப்போது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அதிகாரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தண்ணீர் விநியோகத்தைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும்படி சொல்லியிருந்தார்.
ஆனால், அதைத் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதேசமயம் `அந்த பிரதேசத்தில் ஓடும் நதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறு.
அனைத்து நதிகளின் நீரையும் பாகிஸ்தானுக்குத் தராமல் மொத்தமாகப் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டுவர வேண்டும்’ என்று கட்சிக்குள்ளிருந்து அழுத்தங்கள் வந்தன.
 அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசும் தொடங்கியது.

கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதே பேச்சை மீண்டும் எடுத்தார்.

உடன்படிக்கையில், இந்தியாவுக்கு சாதகமான சில அம்சங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரும் நதிகளின் நீரோட்டத்தைத் தடுக்காத வகையில் அணைகள், நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஜம்மு-காஷ்மீருக்குத் தேவையான நீர்ப்பாசனம் மற்றும் மின்சார உற்பத்தியைப் பூர்த்திசெய்ய இந்தச் சலுகை இந்தியாவுக்குக் கொடுக்கப் பட்டது.
 அதை சாதகமாக்கிக்கொண்டு, ஜீலம் நதியின் கிளை நதியில் கிசன்கங்கா நீர்மின் திட்டத்தை கடந்த ஆண்டு மே 19-ம் தேதி மோடி தொடங்கிவைத்தார்.
 330 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், கிளை நதியிலிருந்து ஜீலம் நதிக்குச் செல்லும் நீரை திசைதிருப்பி, வூலர் ஏரிக்கு அனுப்புவதும் இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும்.
ஜீனாப் நதியின் ஒரு கிளை நதியில் 8,112 கோடி ரூபாய் மதிப்பீட்டில் `பாகுல் டுல்’ என்ற அணை கட்டுவதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இப்படியாக, பாகிஸ்தானுக்குத் தண்ணீர் தரும் மூன்று நதிகளின் நீரைப் பிடித்துவைப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு ஏற்கெனவே தீட்டத் தொடங்கிவிட்டது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று நதிகளான பியாஸ், ராவி, சட்லெஜ் நதிகளின் நீரையே நாம் 95 சதவிகிதம் பயன்படுத்துகிறோம்.
பயன்பாட்டுக்குப்போக மீதி தண்ணீர் பாகிஸ்தானுக்குள்தான் செல்கிறது. இந்த ஐந்து சதவிகித நீரை, ‘கொடுங்கள்’ என்று பாகிஸ்தான் கேட்பதுமில்லை.
 பிறகு ஏன் மோடி இப்படிப் பேச வேண்டும்?
 அரியானா,மராட்டிய மாநிலத்தேர்தல்கள்தான் இதற்கு காரணம் என்பதை புரியாதவர்கள் அல்ல மக்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் பதட்டம் தரும்படியான பயங்கரவாதிகள் தாக்குதல்,துல்லியத்தாக்குதல்,தேசபக்தி,தன்னைக்கொல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்துள்ளனர் என்று மோடி பேசிப் ,பேசி கேட்டு இந்தியமக்கள் சலித்துப்போய் விட்டதால் தற்போது இந்த நதி நீர் விவகாரத்தைக்கையில் எடுத்துள்ளதாக அடிப்படை விவசாயி கூட சொல்கிறார்கள்.
 என்றவர்கள், நீரைத் தடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.


‘‘சிந்து, ஜீனாப், ஜீலம் நதிகளைத்தான் பாகிஸ்தான் மக்கள் அதிகம் நம்பியிருக்கின்றனர்.
 இந்த நதிகள் இந்தியாவில் உற்பத்தியானாலும், இவை பாகிஸ்தான் வழியாகப் பாய்ந்து ஓடினால்தான், அவர்கள் வறட்சியோ பஞ்சமோ இல்லாமல் வாழ முடியும்.

இன்று பாகிஸ்தானுக்கு சிந்துநதியைத் தடுத்தால்...,

 நாளை நமக்கு சீனா பிரம்மபுத்திரா  நீரை மறுக்கும்!

பாகிஸ்தானின் மொத்த விவசாய நிலங்களில் 90 சதவிகிதம் சிந்து வடிகால்களைச் சார்ந்துதான் இருக்கின்றன.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் மட்டுமே 7.30 கோடி பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீர் ஆகியவற்றுக்காக இந்த நதிகளைச் சார்ந்து வாழ்கிறார்கள் என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

சிந்து நதிநீர் உடன்படிக்கைதான் பாகிஸ்தானுக்கான உரிமையை அங்கீகரிக்கிறது.
 ஒருவேளை, அந்த உடன்படிக்கையையே ரத்து செய்து விட்டால், பாகிஸ்தான் இந்தியாவை கேள்வி கேட்க முடியாது. இந்தியாவால் சுயேச்சையாக அதைச் செய்ய முடியுமா என்றால் அதுவும் முடியாது. அப்படி மீறினால், அது 1969-ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் இயற்றப் பட்ட சர்வதேச உடன்படிக்கை களுக்கான சட்டத்தை மீறியதாகும்.
அதனாலேயே போர்க் காலங்களில்கூட, இந்த உடன்படிக்கையை நாம் மீறியது கிடையாது. அவ்வளவு ஏன், இதை மீற வேண்டும் என்றோ ரத்துசெய்ய வேண்டும் என்றோகூட இதுவரை சிந்தித்தது கிடையாது. ஆனால் இப்போது, பா.ஜ.க அந்த நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது மேற்கண்ட மொத்த நதிகளின் நீரைச் சேமித்துவைக்க போதுமான வசதிகள் இந்தியாவிடம் இல்லை.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்களே அவற்றைச் செய்யவல்லவை.

அவை வெற்றிகரமாக முடிந்தால்தான், பாகிஸ்தானுக்கு அனுப்பும் நீரைச் சேமித்துவைத்து மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்க முடியும்.
அத்துடன், 60 ஆண்டுக்கால உடன்படிக்கையை மீறுவது தீவிரவாத சக்திகளை நாமே தூண்டிவிடுவதற்குச் சமம்.

பாகிஸ்தானோடு மட்டுமின்றி, நேபாளம், பங்களாதேசத்துடனும் இந்தியாவுக்கு நதிநீர் பங்கீடு உடன்படிக்கைகள் இருக்கின்றன.

இப்போது இதை மீறுவது, அந்த நாடுகளுக்கும் இந்தியாமீது அச்சத்தைத்தான் ஏற்படுத்தும். ஐ.நா பாதுகாப்புச் சபையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க இந்தியா முயன்றுவரும் சூழலில் இந்தியாவுக்கு இந்த விவகாரம் கெட்டபெயரைத்தான் வாங்கிக்கொடுக்கும்.

 இவை ஒருபுறமிருக்க, இந்தியாவுக்கும்கூட வெளியிலிருந்து தண்ணீர் பெறும் சூழல் உள்ளது. சர்வதேசச் சட்டப்படி, நதியின் அமைப்பில் நீர் பெறும் நிலையில் இருக்கும் ஒரு நாட்டுக்கு, `தண்ணீரைத் தர முடியாது’ என்று கொடுக்கும் நிலையில் இருக்கும் நாடு மறுக்கவே கூடாது.
 இந்த உடன்படிக்கையை மீறி சர்வதேசச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டால், அது எதிர்காலத்தில் நமக்கே வினையாகக்கூட மாறலாம்.
 பிரம்மபுத்திரா நதி, சீனாவிலிருந்து உற்பத்தியாகி இந்தியாவுக்குள் பாய்கிறது. எதிர்காலத்தில் நாம் பாகிஸ்தானுக்குச் செய்ததையே உதாரணமாகக் காட்டி, சீனா நமக்கு தண்ணீர் தர மறுக்கலாம்.

எல்லை கடந்த நீர் மேலாண்மைக்கான சர்வதேசச் சட்டங்களை மோடி அரசு நினைவில் கொள்ளவேண்டும்.
அதில்லாமல் அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வாய்க்கு வந்தபடி உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசுவது பொறுப்புள்ள தலைவனுக்கே அழகில்லை.
 எனும் போது ஆளும் பிரதமர் பொறுப்பில் இருப்பவர் எப்படி நடந்த கொள்ள வேண்டும் என்பதை நாம் மோடிக்கு சொல்ல வேண்டிய நிலை.

பழிக்குப்பழி என்ற செயல்பாட்டுக்கு நாம் கொடுக்கும் விலை உங்களுக்கு வாக்களித்து நல்லவை செய்வார்கள் என்று இன்னமும் பொய்யான நம்பிக்கை வைத்து ஏமாந்திருக்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கையாக இருக்கக் கூடாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் ,
முன்னால்
 ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
 கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)

------------------------------------------------------------------------------------------------------------------------------------

 'மன் கி பாத்' க்கு போட்டி 'தேஷ் கி பாத்'
நரேந்திர மோடி முதல் முறையாக, 2014ல் பிரதமராக பதவியேற்றார்.
அப்போது முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், நாட்டு மக்களுக்காக, வானொலியில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். மனதின் குரல் என பொருள்படும், 'மன் கி பாத்' என்ற தலைப்பில், இந்த உரையை மோடி நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக, காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்துள்ளது.

 'நாட்டின் குரல்' என பொருள்படும் வகையில், 'தேஷ் கி பாத்' என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்ப, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.இது பற்றி, காங்., செய்தி தொடர்பாளர், பவன் கஹீரா கூறியதாவது:

காங்கிரசின் சமூக வலைதள குழுவினர், 'தேஷ் கி பாத் என்ற தொடரை தயாரிக்க உள்ளனர்.
இதில், மக்களின் பிரச்னைகள், அரசின் தோல்விகள் குறித்த விபரங்களும், அரசுக்கு முன்
வைக்கப்படும் கேள்விகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நாட்டின் நிதி நெருக்கடி,
விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயர்வு, உட்பட பல பிரச்னைகள், இடம் பெற்றிருக்கும்.சமீபத்தில் நடந்து முடிந்த, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில், மக்கள் தெளிவாக் ஓட்டளித்துள்ளனர்.

மக்கள், தங்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதை எதிரொலிக்கும் விதமாக, தேஷ் கி பாத் நிகழ்ச்சி அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?