முக்கிய நோக்கம் ‘வடிகட்டுகிற' பணிதான்
‘தேர்வு செய்வது' அல்ல.
இளைஞர்கள் மத்தியில் இன்று பரவ லாகப் பேசப்படுகிற செய்தி - குரூப் 2 தேர்வுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கும் புதிய பாடத் திட்டம்.தேர்வாணையம் ‘தெளிவான' விளக் கம் அளித்த பின்னரும் இந்த நிலை நீடிப்பது ஒரு வகையில் மன வருத்தம் தருவதாகத்தான் இருக்கிறது. அமைப்பு முறை மீது, ஆணையம் மீது, முழு நம் பிக்கை வையுங்கள் என்றுதான் இளை ஞர்களை நாம் வலியுறுத்துகிறோம்.
சரி... புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது...? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை.
தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான்.
தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுது வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது.
இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, அநேகமாக, தமிழ் வழிப் பயின்ற கிராமத்து இளைஞர்கள்தாம்.
இதுதான், மறுபக்க உண்மை.
இவ்விரு உண்மைகளையும் சமன் செய்து பார்த்து, பாடத் திட்ட மாற்றம் குறித்த தீர்ப்புக்கு வருவதுதான் நியாயம் ஆகும்.
பயிற்சி மையங்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கிற ஒருவரின் அன்றாட வழிகாட்டுதல் பெறக்கூடிய ‘வசதி' கொண்டவர்கள், புதிய மாற்றத்தால் பெரிதும் பலன் அடையலாம்.
முதல் தலைமுறைப் பட்டதாரிகள், கிராமத்து எல்லைகளைத் தாண்டிச்
செல்லாதவர்கள், கோரிக்கை மனுக்க ளுடன் அரசு அலுவலக வாசற் கதவு களில்
கால்கடுக்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிற சாமான்யர்களின் பிள் ளைகள்,
கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம்.
இது, மாற்றம் அன்று; மிகப் பெரிய ஏமாற்றம்.
பொது அறிவு (முதல் நிலைத்தேர்வு) - 10 அலகுகள் கொண்டுள்ளது.
பொது அறிவியல் பகுதியில், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் - கடைசி இடம் பிடித்து இருக்கிறது.
கேள்வித்தாளில் ஒருவேளை, முதலிடம் பிடிக்கலாம்.

இந்தியாவின் புவியியல் - போக்கு வரத்து - தகவல் தொடர்பு; சமூகப்
புவியியல் - குறிப்பாக, இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப்
பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் -
பசுமை ஆற்றல் என்று பயனுள்ள பல தலைப்புகள் வரவேற்கத் தக்கதாய் உள்ளன.
இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
இந்திய தேசிய இயக்கம் - என்று வழக்கமான பகுதிகள் உள்ளன.
அலகு VIII தமிழகத்தின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள் பகுதி
உலகப் பொதுமறை திருக்குறள் - முக்கியத்துவம் பெறுகிறது.

IX - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். கவனிக்கவும் - வெறுமனே
‘நிர்வாகம்' அன்று; ‘வளர்ச்சி நிர்வாகம்'! ஆணையம், தன்னிச்சையாகத் தந்த
தலைப்பு என்று நம்புகிறோம்.
இதில் ஒரு தலைப்பு - ‘தமிழகத்தில் மின்னாளுகை'! தவறு இல்லை. ஆனாலும்..... நிறைவாக அலகு X - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்.
இடையே, அலகு II நடப்பு நிகழ்வு கள், ஆட்சியியல் பகுதியில், பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், நலன்சார் அரசுத் திட்டங்கள் முதலானவை, முறை யான பள்ளிப்பாடத்தை விட்டு விலகி நிற்பவை.
கிராமப்புற சாமான்ய இளை ஞர்கள், ‘அனுபவரீதியாக' மட்டுமே கற்றுக்கொள்ள முடிகிற கசப்பான சங்கதிகள் இவை.
அலகு V இந்திய ஆட்சியியல் - லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள், மனித உரிமைகள் சாசனம் ஆகியன மிக நல்ல, ஆரோக்கியமான பகுதிகள்தாம். ஆனால் இவை எல்லாம், எமது கிராமப்புற இளைஞர்களுக்கு ‘அறிமுகம்' ஆகாதவை.
இவை எல்லாம் கூடப் பரவாயில்லை.
‘விரிவான எழுத்து தேர்வு' பகுதியின் தொடக்கமே அதிர்ச்சி தருகிறது. ‘தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்', ‘ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்' எந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு சாதகமான பகுதியாக இருக்கும்..?

தமிழகத்தில், தமிழக அரசுப் பணியில் சேர, ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன் என்ன அத்தனை அடிப்படைத் தகுதியா...?
சத்தியமாகப் புரியவில்லை.
தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசு வதும் எழுவதும் தண்டனைக்கு உரிய குற்றமா என்ன...?
பக்கத்தில் ஒரு தமிழ் - ஆங்கில அகராதி வைத்துக் கொண்டால் போகிறது. தேர்வின் போது, அகராதி தரப்படுமா..?
இல்லைதானே...?
பிறகு...?
நம்முடைய பார்வையில், தமி ழக அரசுப் பணிக்கான போட்டித் தேர் வில், ஆங்கிலப் புலமை மிகவும் அத்தியா வசியம் ஆகிறது.
ஒருவகையில், தமிழ் இளைஞர்கள் மீது ஆங்கிலம் திணிக்கப் படுகிறது. நம்முடைய கிராமத்து இளை ஞர்கள் இதனால் பலன் பெறுவார்கள் என்று நம்ப முடிகிறதா?
சுருக்கி வரைதல், பொருள் உணர் திறன், சுருக்கக் குறிப்பில் இருந்து விரிவாக் கம் செய்தல் ஆகியன, பொதுவாய் எல்லோருக்குமே சற்றே கடினமானதாக இருக்கலாம். தரப்படும் கேள்வியைப் பொறுத்து, கடினத் தன்மை மாறுபட லாம்.
தமிழகத்தின் இசை மரபு, நாடகக் கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய பகுதிகள் உண்மையிலேயே ‘சபாஷ்' போட வைக்கின்றன.

ஆனாலும், ஏற்கெனவே தனியாக இருந்த மொழித்தாளைத் தக்க வைத்து இருக்கலாம்.
மேலும், தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி' மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்' அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.
‘உள்ளூர் மொழியில் உலக அறிவு' என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்' திசையில் பயணித்து இருக்கிறது.
கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது.
பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத் திட்டம் இல்லை.
‘வழிகாட்டுதல்' தேவைப் படும் பகுதிகள், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் அதிகம் உள்ளன. இது, ஆரோக்கியமான மாற்றம் இல்லை.
புதிய பாடத் திட்டம் சொல்லும் செய்தி....?
ஆணையத் தேர்வுகளின் முக்கிய நோக்கம் ‘வடிகட்டுகிற' பணிதான் .மேலும், தரமானதாக நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இருக்கலாம். மொழி அறிவு, அதிலும் ‘உள்ளூர் மொழி' மாநில அரசுப் பணிகளில் மிக முக்கிய இடம் வகித்தாக வேண்டும். மாறாக, ‘உள்ளூர் அரசியல்' அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது.
‘உள்ளூர் மொழியில் உலக அறிவு' என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டிய ஆணையம், ‘உலக மொழியில் உள்ளூர் அரசியல்' திசையில் பயணித்து இருக்கிறது.
கேள்வித் தாள் தயாரிப்பு இனி முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது.
பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக் கும்போல்தான் தோன்றுகிறது. காரணம், சுயமாகத் தாமே வீட்டில் இருந்தபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் இளைஞர்களை ஊக்குவிப்பதாக மாற்றப்பட்ட பாடத் திட்டம் இல்லை.
‘வழிகாட்டுதல்' தேவைப் படும் பகுதிகள், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் அதிகம் உள்ளன. இது, ஆரோக்கியமான மாற்றம் இல்லை.
புதிய பாடத் திட்டம் சொல்லும் செய்தி....?
‘தேர்வு செய்வது' அல்ல.
-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
தமிழ் திசை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ஒரே நாடு; ஒரே சுங்க கட்டணம்’
நாடு
முழுவதும் பல டோல்கேட்கள் சேவைக்கட்டணம் என்ற பெயரில் அதிகக் கட்டணம்
வசூலிப்பதாகக் கூறி அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க தற்போது, ‘ஒரே நாடு; ஒரே சுங்க கட்டணம்’ திட்டத்தை ‘FasTag' என்ற முறையில் கொண்டுவரவுள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் ‘FasTag' முறையில் சுங்கக் கட்டண வசூலிப்பு அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “FasTag சிப் மூலம் பணம் வசூலிக்கப்படுவது தமிழகத்தில் இப்போதே செயல்பட்டு வருகிறது. இந்த முறை டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும்.
இதன் மூலம் டோல்கேட்களில் வாகன நெரிசல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சில்லறை பிரச்னை, டோல்கேட் ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையேயான வாக்குவாதங்கள் இனி ஏற்பட வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
FasTag-களை எப்படி பெறுவது எனவும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கும் வகையிலான விளம்பரம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

டோல்கேட்
பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் சில வங்கிகளிலும்
FasTag-களை பெற்றுக் கொள்ளலாம்.
FasTag பெறுவதுக்கு வாகனத்தின் RC புக், உரிமையாளரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரியை உறுதி செய்யும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று உள்ளிட்டவை கட்டாயம்.
வாகனத்தில் FasTag ஒட்டப்பட்டபின், சுங்கச்சாவடிகளை கடக்க யாருடைய உதவியும் தேவைப்படாது. டோல்கட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் FasTag சிப்களில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து, உரிமையாளரின் FasTag கணக்கிலிருந்து பணத்தை வசூல் செய்து கொள்ளும்.
FasTag-ஐ ரீசார்ஜ் செய்வதற்கு, GPay, PayTM போன்ற செயலிகள் உதவி புரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

102 ஆண்டுகளில் இல்லாத மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்,
முன்னால்
உலக முதியோர் தினம்
உலக சைவ உணவாளர்கள் தினம்
இந்தியாவில் அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது(1854)
இடைத்தேர்தல் .வேட்புமனுத் தாக்கல் முடிவு .
விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவுபெற்றது.
தி.மு.க., அ.தி.மு.க.,வேட்பாளர்கள் உட்பட, பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டியில் தி.மு.க. சார்பில் புகழேந்தி,அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அ.தி.மு.க.சார்பில் நாராயணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாங்குநேரியில், மொத்தம் 43 பேர் கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவுகள்,
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில்
சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு அந்தப்
பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கவும்,
அறிவுறுத்தவும் செய்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், விருதுநகர் வத்திராயிருப்பில் 15 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ., நீலகிரி குந்தா அணைக்கட்டில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 7 முதல் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 247.1 மி.மீ., மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 48 % அதிகம் என்றும் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், விருதுநகர் வத்திராயிருப்பில் 15 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ., நீலகிரி குந்தா அணைக்கட்டில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 7 முதல் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 247.1 மி.மீ., மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 48 % அதிகம் என்றும் கூறியுள்ளது.
இந்நாளில்,
முன்னால்
உலக முதியோர் தினம்
உலக சைவ உணவாளர்கள் தினம்
இந்தியாவில் அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது(1854)
கி.மு.331
பாரசீக அக மானீயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட, (தற்போதைய இராக்கிய குர்திஸ்தான் பகுதியின்) கவுகமேலா(ஆர்பேலா) யுத்தத்தில், அகாமனீயப் பேரரசர் மூன்றாம் டேரியசை, கிரேக்கத்தின் மகா அலெக்சாண்டர் தோற்கடித்தார்.
சுமார் 10 லட்சம் வீரர் களைக்கொண்டிருந்த (தற்காலத்திய வரலாற்றாசிரி யர்கள் குறைவாக மதிப்பிட்டாலும்) மாபெரும் படை யான மூன்றாம் டேரியஸின் படையை, சாதுரியமான வியூகங்கள், காலாட்படையின் சிறப்பான பயன்பாடு ஆகியவற்றின்மூலம் அலெக்சாண்டர் மிக எளிதாகத் தோற்கடித்தார்.
பாரசீகத்துக்கு எதிரான போர்களில் ராணுவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் நோக்கத் தோடு, இரண்டாம் பிலிப் அரசரால் கி.மு.338இல் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஹெல்லனிக் லீக் (‘கோரின்த்’-தின் லீக்) என்ற கிரேக்க நாடுகளின் கூட்டணிப்படையைத் தலைமையேற்றுப் போரிட்டு அலெக்சாண்டர் இந்த வெற்றியை ஈட்டினார்.
அலெக்சாண்டரின் ஆசியப் படை யெடுப்பின் இரண்டாவது பெரிய யுத்தமாகக் குறிப் பிடப்படும் (தற்போதைய துருக்கியிலுள்ள) இஸ்ஸோஸ் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில், ஏற்கெனவே இதே அணியிடம் தோற்ற டேரியசின் தாயார், மனைவி, மகள்கள் அலெக்சாண்டரிடம் பிடிபட்டிருந்ததுடன், ஆசியா மைனரின் தென்பகுதியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
அத்தோல்விக்குப்பின் கைதிகளுக்குப் பதிலாகப் பணயத்தொகை தருவதான டேரியசின் வேண்டுகோள் அலெக்சாண்டரால் நிராகரிக்கப்பட்டது.
இதன்பின் டைர் பகுதியை அலெக்சாண்டர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டேரியசின் இரண்டாவது கடிதத்தில் அதிகாரத் தோரணை மறைந்துவிட்டதுடன், ஒரு மகளை அலெக்சாண்டருக்குத் திருமணம் செய்து தருவதுடன், ஹேலிஸ் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதிகளையும் தருவதாக டேரியஸ் கோரியதையும் அலெக்சாண்டர் நிராகரித்தார்.
மூன்றாவது கடிதத்தில், தாயாரை நன்றாகப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து, பெரும் பணயத்தொகை, யூப்ரடிஸ் நதிக்கு மேற்கிலுள்ள அனைத்துப்பகுதிகள் ஆகியவற்றை அளிப்பதுடன், அகாமனீயப் பேரரசின் ஆட்சியிலும் பங்கு அளிப்பதாக டேரியஸ் கூறியிருந்தாலும், டேரியஸ் சரணடையவேண்டும் என்று கூறிவிட்டார் அலெக்சாண்டர்.
டேரியசின் பிரமாண்டமான படையை, அலெக்சாண்டரே நேரடியாகத் தலைமையேற்று நடத்திய மாசிடோனியக் குதிரைப்படை உடைத்து, உட்புகுந்து தாக்கியதில் டேரியஸ் தப்பிச்செல்ல, அவரது படைகளும் சிதறின. சுமார் ஆயிரம் வீரர்களை அலெக்சா ண்டரின் படை இழக்க, டேரியசின் படையில் 40-90 ஆயிரம் வீரர்கள் பலியாகி, சுமார் 3 லட்சம் வீரர்கள் பிடிபட்டனர்.
மீண்டும் படைதிரட்டி அலெக்சாண்டரை எதிர்க்கும் நோக்கத்துடன் பயணித்த டேரியசை, அவரது மாநில ஆளுநர்களில் ஒருவரான பெசஸ் என்பவரே கொலை செய்தார். தன் மரியாதைக்குரிய எதிரியான டேரியசின் உடலை, முறைப்படி அடக்கம் செய்ததுடன், பெசசுக்கு மரணதண்டனையும் அளித்தார் அலெக்சாண்டர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------பாரசீக அக மானீயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட, (தற்போதைய இராக்கிய குர்திஸ்தான் பகுதியின்) கவுகமேலா(ஆர்பேலா) யுத்தத்தில், அகாமனீயப் பேரரசர் மூன்றாம் டேரியசை, கிரேக்கத்தின் மகா அலெக்சாண்டர் தோற்கடித்தார்.
சுமார் 10 லட்சம் வீரர் களைக்கொண்டிருந்த (தற்காலத்திய வரலாற்றாசிரி யர்கள் குறைவாக மதிப்பிட்டாலும்) மாபெரும் படை யான மூன்றாம் டேரியஸின் படையை, சாதுரியமான வியூகங்கள், காலாட்படையின் சிறப்பான பயன்பாடு ஆகியவற்றின்மூலம் அலெக்சாண்டர் மிக எளிதாகத் தோற்கடித்தார்.
பாரசீகத்துக்கு எதிரான போர்களில் ராணுவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் நோக்கத் தோடு, இரண்டாம் பிலிப் அரசரால் கி.மு.338இல் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஹெல்லனிக் லீக் (‘கோரின்த்’-தின் லீக்) என்ற கிரேக்க நாடுகளின் கூட்டணிப்படையைத் தலைமையேற்றுப் போரிட்டு அலெக்சாண்டர் இந்த வெற்றியை ஈட்டினார்.
அலெக்சாண்டரின் ஆசியப் படை யெடுப்பின் இரண்டாவது பெரிய யுத்தமாகக் குறிப் பிடப்படும் (தற்போதைய துருக்கியிலுள்ள) இஸ்ஸோஸ் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில், ஏற்கெனவே இதே அணியிடம் தோற்ற டேரியசின் தாயார், மனைவி, மகள்கள் அலெக்சாண்டரிடம் பிடிபட்டிருந்ததுடன், ஆசியா மைனரின் தென்பகுதியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
அத்தோல்விக்குப்பின் கைதிகளுக்குப் பதிலாகப் பணயத்தொகை தருவதான டேரியசின் வேண்டுகோள் அலெக்சாண்டரால் நிராகரிக்கப்பட்டது.
இதன்பின் டைர் பகுதியை அலெக்சாண்டர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டேரியசின் இரண்டாவது கடிதத்தில் அதிகாரத் தோரணை மறைந்துவிட்டதுடன், ஒரு மகளை அலெக்சாண்டருக்குத் திருமணம் செய்து தருவதுடன், ஹேலிஸ் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதிகளையும் தருவதாக டேரியஸ் கோரியதையும் அலெக்சாண்டர் நிராகரித்தார்.
மூன்றாவது கடிதத்தில், தாயாரை நன்றாகப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து, பெரும் பணயத்தொகை, யூப்ரடிஸ் நதிக்கு மேற்கிலுள்ள அனைத்துப்பகுதிகள் ஆகியவற்றை அளிப்பதுடன், அகாமனீயப் பேரரசின் ஆட்சியிலும் பங்கு அளிப்பதாக டேரியஸ் கூறியிருந்தாலும், டேரியஸ் சரணடையவேண்டும் என்று கூறிவிட்டார் அலெக்சாண்டர்.
டேரியசின் பிரமாண்டமான படையை, அலெக்சாண்டரே நேரடியாகத் தலைமையேற்று நடத்திய மாசிடோனியக் குதிரைப்படை உடைத்து, உட்புகுந்து தாக்கியதில் டேரியஸ் தப்பிச்செல்ல, அவரது படைகளும் சிதறின. சுமார் ஆயிரம் வீரர்களை அலெக்சா ண்டரின் படை இழக்க, டேரியசின் படையில் 40-90 ஆயிரம் வீரர்கள் பலியாகி, சுமார் 3 லட்சம் வீரர்கள் பிடிபட்டனர்.
மீண்டும் படைதிரட்டி அலெக்சாண்டரை எதிர்க்கும் நோக்கத்துடன் பயணித்த டேரியசை, அவரது மாநில ஆளுநர்களில் ஒருவரான பெசஸ் என்பவரே கொலை செய்தார். தன் மரியாதைக்குரிய எதிரியான டேரியசின் உடலை, முறைப்படி அடக்கம் செய்ததுடன், பெசசுக்கு மரணதண்டனையும் அளித்தார் அலெக்சாண்டர்.
இடைத்தேர்தல் .வேட்புமனுத் தாக்கல் முடிவு .
விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவுபெற்றது.
தி.மு.க., அ.தி.மு.க.,வேட்பாளர்கள் உட்பட, பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டியில் தி.மு.க. சார்பில் புகழேந்தி,அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அ.தி.மு.க.சார்பில் நாராயணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாங்குநேரியில், மொத்தம் 43 பேர் கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐயம்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கடந்த மாதம் கொலீஜியம் உத்தரவிட்டது.
இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்துக்கு தஹில் ரமாணி கோரிக்கை விடுத்திருந்தது
நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார் ரமாணி.
பின்னர், கடந்த 21ம் தேதி தஹில் ரமாணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி.
இந்நிலையில், மத்திய உளவுத்துறை தஹில் ரமாணிக்கு 5 பக்க அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 கோடியே 18 லட்சத்துக்கு 2 வீடுகளை வாங்கியுள்ளது தொடர்பாகவும், தலைமை நீதிபதி பொறுப்பு வகித்த போது சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வை தள்ளுபடி செய்தது குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்திருப்பதாக, பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொலீஜியத்தின் முடிவை ஏற்காமல் தஹில் ரமாணி ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, அவர் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, திட்டமிட்ட சதியா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை ஐ ஐ டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மோடி சென்னை வந்தடைந்தார்.
அதற்கு முன்னதாக, நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ ஐ டி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருப்பதாகவும், தான் வழங்கவிருக்கும் உரைக்கு யோசனைகள் வழங்குமாறும் மோடி பதிவிட்டிருந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த உடனே அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்னிலையில் உற்சாகமாக உரையாற்றினார் மோடி.
'வணக்கம்' என்று பேசத் தொடங்கிய மோடிசென்னை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தமிழில் தெரிவித்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பிறகு, முதன்முதலாக சென்னைக்கு வருகைத் தரும் ''இங்கே நீங்கள் பெருமளவில் வந்திருப்பதால் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.
2019 தேர்தலுக்கு முன்பு, பலமுறை சென்னைக்கு வருகைத்தந்த நரேந்திர மோதிக்கு, ''GO BACK MODI'' பதாகைகள் காட்டப்பட்டு, பல இடங்களில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வெடித்தன.
சமூக ஊடகமான ட்விட்டரிலும், #gobackmodi என்ற ஹாஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும்.
ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
அதனால் #gobackmodi வராது என்றே தமிழ்நாட்டு மக்கள் எண்ணுமளவு நிலை இருந்தது.
ஆனால் சிலரால் காலை சுமார் 10,000 ட்விட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi,
பிற்பகலில் லடசங்களைத்தொட்டு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
மோடி சென்னையை விட்டு சென்ற பிறகும் ட்விட்டரில் #gobackmodi ட்ரெண்டிங்கிலேயே இருந்தது, முன்பு இருந்ததை போல போராட்டங்களும் முழக்கங்களும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்பதுமட்டுமே மோடி ஆதரவாளர்களுக்கு அமைதியை தந்தது.

சென்னைக்கு
வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக இணையத்தில் பதிவு
செய்யப்பட்ட #gobackmodi என்ற ஹாஷ்டேக் சுமார் ஒருலட்சம் ட்வீட்களை கடந்து
உலகளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.
அதற்கு முன்னதாக, நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ ஐ டி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருப்பதாகவும், தான் வழங்கவிருக்கும் உரைக்கு யோசனைகள் வழங்குமாறும் மோடி பதிவிட்டிருந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த உடனே அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்னிலையில் உற்சாகமாக உரையாற்றினார் மோடி.
'வணக்கம்' என்று பேசத் தொடங்கிய மோடிசென்னை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தமிழில் தெரிவித்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பிறகு, முதன்முதலாக சென்னைக்கு வருகைத் தரும் ''இங்கே நீங்கள் பெருமளவில் வந்திருப்பதால் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.
2019 தேர்தலுக்கு முன்பு, பலமுறை சென்னைக்கு வருகைத்தந்த நரேந்திர மோதிக்கு, ''GO BACK MODI'' பதாகைகள் காட்டப்பட்டு, பல இடங்களில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வெடித்தன.
சமூக ஊடகமான ட்விட்டரிலும், #gobackmodi என்ற ஹாஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும்.
கடலலைபோல் கூட்டம் னு சொன்னிங்க? |
அதனால் #gobackmodi வராது என்றே தமிழ்நாட்டு மக்கள் எண்ணுமளவு நிலை இருந்தது.
ஆனால் சிலரால் காலை சுமார் 10,000 ட்விட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi,
பிற்பகலில் லடசங்களைத்தொட்டு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
மோடி சென்னையை விட்டு சென்ற பிறகும் ட்விட்டரில் #gobackmodi ட்ரெண்டிங்கிலேயே இருந்தது, முன்பு இருந்ததை போல போராட்டங்களும் முழக்கங்களும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்பதுமட்டுமே மோடி ஆதரவாளர்களுக்கு அமைதியை தந்தது.
நினைவில் கொள்ளுங்கள்.
அக்டோபர்
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு
நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிசம்பர்
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.
மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு
'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91
காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.
தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
*
இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில
பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,000
கடைசி நாள்: 2.10.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு
விபரங்களுக்கு: https://www.nabard.org.
--------------------------------------------------------------------------------
ரிசர்வ் வங்கிப் பனி.
ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019
ஆபிசர்ஸ்
கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/
கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ்
ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150
ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750
(2)-54400-2000 (4)-62400 என்ற
முறையில் வழங்கப்படும்.
*--------------------------------------------*---------------------------------------*--------------------*
ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC)
நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்
பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே
போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்
மண்டல வாரியாக பணியிடங்கள்
மத்திய வடக்கு மண்டலம் – 1242
மத்திய கிழக்கு மண்டலம் – 1497
கிழக்கு மண்டலம் – 980
மத்திய மண்டலம் – 472
மத்திய தெற்கு மண்டலம் – 632
தெற்கு மண்டலம் – 400
மேற்கு மண்டலம் – 1104
சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
தேர்வு முறை : முதனிலை தேர்வு,
முதன்மை தேர்வு மற்றும்
நேர்முகக்காணல் மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019
விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/
---------------------------------------------------------------------------------------------------------------------------------