ஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போல

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்க ளைப் பற்றி  இடதுசாரிக் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் எச்சரித்தன.
இதனால் உள்நாட்டு சில்லரை வர்த்தகம் கடும் பாதிப்பை சந்திப்ப தோடு பன்னாட்டு நிறுவனங்கள் வியாபார அறமற்ற கழுத்தறுப்பு போட்டியில் ஈடுபடும் என்று எச்சரிக்கப்பட்டது.

ஆனால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்திருப்ப தாகக் கூறி மோடி அரசு சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய முத லீட்டை தங்கு தடையின்றி அனுமதித்தது.
 ஆனால் தற்போது பிளிப் கார்டு, அமேசான் போன்ற நிறுவனங்களிடமிருந்து விபரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

அமேசான், பிளிப்கார்டு போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுக் கொண்டு ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பிளிப் கார்டும், அமேசானும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிக்கின்றன. பிற நிறுவனங்க ளை சந்தையிலிருந்து ஒழிக்கும் நோக்கத்துடன் பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அறி வித்து வருகின்றன.
 இதன்மூலம் ஓராண்டில் நடை பெறும் விற்பனையில் பாதியை அந்நிறுவனங்கள் எட்டிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிற நிறுவனங்களே இந்த கழுத்தறுப்பு போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றால் நாடு முழு வதும் உள்ள லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு வர்த்தகர்களின் நிலை என்ன என்பதை சொல்லத் தேவையில்லை.

இந்திய மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களை தருவதல்ல, அமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவனங்களின் நோக்கம்.
மாறாக சக போட்டியாளர்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்துவதோடு சில்லரை வர்த்தகத்தை தங்களது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். மோடி அரசும் இதற்கு முற்றாக துணை செல்கிறது.
-அமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவ னங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை களை அறிவிப்பதால் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்குமாறு நுகர்வோர் தூண்டப்படு வதாகவும், உண்மையிலேயே தள்ளுபடி தரப்படு கிறதா என்று கண்டறிவது கடினம்தான் என்றும் பரபரப்பு விற்பனை மூலம் நுகர்வோரை ஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போலத்தான் இதுவும-
என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் விபரீதமாக மாறியிருக்கிற இந்தப் போட்டி அடுத்தடுத்து புதிய அபாயக் கட்டத்தை எட்டும் நிலை உள்ளது.
சில்லரை வர்த்தகத்திலிருந்து பன்னாட்டு நிறுவ னங்களை முற்றாக அகற்றுவதன் மூலமே இந்தியச் சந்தையை மட்டுமல்ல நுகர்வோர்க ளையும் பாதுகாக்க முடியும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 

ரியல் எஸ்டேட் வேலைவாய்ப்பு வளர்ச்சியைத் தராது... 

இந்தியா

சீனா போல உற்பத்தித் துறையில் 

கவனம் செலுத்த வேண்டும்

பொருளாதாரத்துறையில் மேற்கொண்ட ஆய்வுக்காக, தனது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக் கேல் கிரீமர் ஆகியோருடன் இணைந்து, 2019-ஆம் ஆண்டிற்கான ‘நோபல்’ பரிசைப் பெற்றிருப்பவர்- அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி.பணமதிப்பு நீக்கம் துவங்கி, மத்திய பாஜக அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்து வருபவர்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு, அளித்த முதல் பேட்டியில் கூட,“இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது; இப்போதைக்கு உடனடியாக அதுமுன்னேறுவதற்கான வழி தெரிய வில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 
இதற்காகவும், ஏற்கெனவே காங்கிரசின் தேர்தல் அறிவிக்கையில் இடம்பெற்ற ‘நியாய்’ திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் என்பதாலும், 2 நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நேரடியாகவே அபிஜித் பானர்ஜியை கடுமையாக சாடினார்.
அபிஜித் பானர்ஜியின் பொருளாரக் கொள்கை, இந்திய மக்களால் தோற்கடிக்கப்பட்ட கொள்கை என்றும் விமர்சித்தார்.இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி ஒன்றை அபிஜித் பானர்ஜி அளித்துள்ளார்.

அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியிருப்பதாவது:நமது பெரும்பான்மையான தொழில்கள் அந்தந்த மாநில அரசுகளையும் அங்குள்ள கட்சிகளையும் சார்ந்துள்ளது. எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆளும் கட்சியோ அதனை நம் துணையாகக் கொள்ள வேண்டும். அவர்கள் நமக்கு எதிரிகளாக மாட்டார்கள் என்பதேஎனது பார்வை.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், என்னை முற்றிலும் இடதுசாரி ஆதரவாளர் என்று குறிப்பிட்டு, எனது தொழில் தர்மத்தை குறைகூறியுள்ளார்.

ஆனால், எனது பணியில் நான் எப்போதும் தர்மத்தை மீறியது இல்லை. எனது பொருளாதாரக் கருத்துக்கள் ஒருதலையாக இருந்தது இல்லை. நான் பணியாற்றியவற்றில், பலவும் பாஜக அரசுகள்தான்.மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்திற்கும் பணியாற்றியுள்ளேன்.
 எனது அனுபவத்தின் மூலம் பல கொள்கை முடிவுகளை அந்த அரசும் எடுத்துள்ளது.மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்ற குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்துக்கு (நியாய்) எவ்வளவு நிதி தேவைப்படும்? என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டனர்.
இதே கேள்வியை பாஜக கேட்டிருந்தால், அவர்களுக்கும் அந்த திட்டத்தை நான் அளித்திருப்பேன். நல்ல கொள்கை யை அரசியல் காரணங்களுக்காக சுருக்கிக்கொள்வதை நான் கண்டிப்பாக ஏற்கவில்லை.

நான் தனிப்பட்ட முறையில் பல்வேறு விஷயங்களில் பாகுபாடு கொண்டிருக்கலாம். ஆனால் மக்கள் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்பும் பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில், நான் பாகுபாடு அற்றவன். யாராவது என்னிடம்ஒரு கேள்வி கேட்டால், நான் அவரின்நோக்கங்களைக் கேள்வி கேட்கமாட் டேன். இதில் அரசியல் சார்புநிலை வர வேண்டிய அவசியமில்லை.
 தற்போது பொருளாதாரம் கடும் சிக்கலில் உள்ளது. இதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். தேசிய மாதிரி கணக்கெடுப்புக்கும் எனக்கும் உள்ளது ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே. அது இந்தியாவின் சராசரி நுகர்வு ஆகும்.
 கடந்த 2014-15இல் இருந்ததை விட நமதுசராசரி நுகர்வு குறைந்துள்ளது. இது முன்னெப்போதும் நடக்காத ஒரு நிகழ்வு ஆகும்.நாட்டில், அதிக வருவாய்க்கு அதிக வரி விதிக்கலாம். பாகுபாட்டைப் போக்குவதில் வரி விதிப்பு ஓர் பங்காற்ற வேண்டும். ஆனால் இதற்கு சட்டரீதியாக உள்ள குறைகளை முதலில் களையவேண்டும். இந்தியாவில் பணக்காரர் களுக்கு அதிகபட்ச வரி 43.5 சதவிகித மாக உள்ளது. இதை இன்னும் உயர்த்தமுடியுமா? என்றால், கண்டிப்பாக அதை உயர்த்த முடியும்.

அமெரிக்காவில் ஐசனோவர் காலத்தில் 95 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.
நிக்சன் 70 சதவிகிதம் வரி விதித்தார். இதைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. தீவிர வலதுசாரிகள் தான்.வறுமையை ஒரு மந்திரக் கோலை வைத்து முற்றிலும் ஒழித்துவிட முடியாது.
எந்த அரசுமே முற்றிலும் தவறாக செயல்பட்டதாக சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதம் குளறுபடியாக அமைந்துவிடலாம்.
‘ஜன் தன் திட்டம்’ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்தளவிற்கு உதவ முடியும்?
அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பது நல்ல யோசனைதான்.

ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா, என்றால்?
இல்லை என்றுதான் சொல்வேன்.நாம் செய்யத் தவறிய ஒன்றைச் சீனா செய்திருக்கிறது. உற்பத்தித் துறையில் நிறைய தொழிலாளர்களை அந்நாடுஅனுமதித்திருக்கிறது என்பதுதான் அது.நாமோ ரியல் எஸ்டேட் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள் ளோம்.
ஆனால், உற்பத்தித் துறையில் இல்லை. உற்பத்தித் துறையில் பல லட்சம் பேருக்கு வேலை அளிப்பதற்கான இடம் உள்ளது. நாம் அந்த பாதையைத் தவறவிட்டோம். சீனா, வங்கதேச நாடுகள் அந்த வழியில் செல்கின்றன.
எங்களது ஆய்வில் ‘இதுதான் தீர்வு’ என்று எதுவொன்றையும் கூறவில்லை. இந்தக் காரணங்களினால் எல்லாம் தீர்வு வேறு விதமாக இருக்கலாம் என்றுசொல்லியிருக்கிறோம்.
இந்த புத்தகம்தீர்வுகளைப் பற்றியது அல்ல. தீர்வுகளைப் பெறுவதற்கான விவாதங்களைக் கொண்டது. எங்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டதற்கான காரணம் ஓரளவுக்கு நாங்கள் துறை வல்லுநர்கள் என்பதால் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
உலக மாமியார்கள் தினம்
இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)

பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)


1707
‘நிலநிரைக் கோட்டு (தீர்க்கரேகை) சட்டத்தை’
  இங்கிலாந்து இயற்றக் காரணமான, சிலி கடல் பேரழிவு என்றழைக்கப்படும் கப்பல் விபத்து நேரிட்டு, சுமார் 2000 கடற்படையினர்  பலியாயினர்.
 சிலி என்பது தென்மேற்கு இங்கிலாந்தை ஒட்டியுள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். (தென் அமெரிக்காவில் உள்ளது ‘ச்சிலி’!)
ஸ்பெயின் வாரிசுரிமைப் போரின்போது, பிரான்சின் டவ்லான் துறைமுகத்தைத் தாக்கச்சென்ற, இங்கிலாந்து கடற்படையின் 21 கப்பல்கள் அணிவகுத்துத் திரும்பிக்கொண்டிருந்தன.
 மிகமோசமான வானிலை, மாறிமாறி வீசிக்கொண்டிருந்த கடுமையான காற்று ஆகியவற்றால், கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் இடம், திசை ஆகியவற்றை மாலுமிகளால் சரியாகக் கணிக்க முடியவில்லை.
ஆங்கிலக் கால்வாயில் நுழைவதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், சிலி தீவுகளை நெருங்கிய கப்பல்களில், கொடிக்கப்பல் (தலைமைத் தளபதியின் கப்பல்) உள்ளிட்ட 4 கப்பல்கள், பாறைகளில் மோதி மூழ்கின.
இங்கிலாந்தின் கடற்பயண வரலாற்றில் மிகமோசமான விபத்தாகக் குறிப்பிடப்படும் இது, நிலநிரைக்கோடு(தீர்க்கரேகை) கணக்கீட்டுத் தவறுகளாலேயே ஏற்பட்டதாக நம்பப்பட்டது. ஏனென்றால், அக்காலத்தில், வானில் சூரியனின் இடத்தைக்கொண்டு, நிலநேர்க்கோட்டை(அட்சரேகை) எளிதாகக் கணக்கிட்டுக்கொண்டிருந்தனர்.
 இத்தகைய பேரிழப்புகளை எதிர்காலத்தில் தடுக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட ‘நிலநிரைக்கோட்டுச் சட்டம் 1714’, சரியாகக் கணக்கிடும் முறையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள்(தற்போதைய மதிப்பில் ரூ.28 கோடிக்கும் அதிகம்!) பரிசுத்தொகை அறிவித்து, அதை நிர்வகிக்க ‘நிலநிரைக்கோட்டுத் துறை’ என்பதையும் உருவாக்கியது.

ஆனால், நிலநிரைக்கோட்டுப் பிரச்சனைக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு இதுவல்ல. 1567இலேயே ஸ்பெயின் அரசர் இரண்டாம் ஃபிலிப் அறிவித்ததுதான் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு!
1598இல் ஸ்பெயினின் மூன்றாம் ஃபிலிப் 6,000 டுகாட்களும், ஓய்வூதியமும் அளிப்பதாகவும், அதைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசு 10,000 ஃபளோரின்கள் அளிப்பதாகவும் அறிவித்தன.

பல்வேறு தீர்வுகளுக்குப் பரிசுகளும் அளிக்கப்பட்டாலும், தானே கற்றுக்கொண்டு கடிகாரம் செய்பவராக இருந்த இங்கிலாந்தின் ஜான் ஹாரிசன் 31 ஆண்டுகள் உழைத்து 1761இல் உருவாக்கிய கடற்கடிகாரம் மிகப்பெரிய தீர்வாக அமைந்ததுடன், மிகஅதிகப் பரிசுத் தொகையையும் (23,065 பவுண்டுகள்!)அவர் பெற்றார்.

இரண்டரை நூற்றாண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படாத, இக்கப்பல்களின் மூழ்கிய எச்சங்கள், 1969இல் கண்டுபிடிக்கப்பட்டு, தங்க, வெள்ளி நாணயங்கள் எடுக்கப்பட்டதால், புதையல் வேட்டைக்காரர்களிடமிருந்து அவற்றைக் காக்க, மூழ்கிய கப்பல்களின் எச்சங்களைக் காப்பதற்கு ஒரு சட்டத்தையும் 1973இல் இங்கிலாந்து இயற்றவேண்டியதாயிற்று!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சித்ரவதை தாளாமல் ஒளிந்து
தனக்கு போதைமருந்து செலுத்தி, தினமும் சித்ரவதை செய்வதாக, பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது அவரது மகள் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம்போபால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் நாத் சிங். பாஜக தலைவரான இவர் முன்னாள்எம்எல்ஏ-வாகவும் இருந்துள்ளார்.
இவர்மீதுதான், அவரது மகள் பாரதி சிங் மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தனது மகளைக் காணவில்லை என்று சுரேந்தர்நாத் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், “தான் காணாமல் போகவில்லை; சித்ரவதை தாளாமல் ஒளிந்து வாழ்கிறேன்” என்று வீடியோவில் தோன்றி பாரதி சிங்

சுரேந்தர் நாத் சிங்                     பாரதி சிங்
பேசியுள்ளார்.
அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:
“நான் என் விருப்பப்படி வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஒரு எம்எல்ஏ-வின் மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும், என என் வீட்டில் கட்டாயப்படுத்து கிறார்கள். அதை இறுதிவரையில் நான் ஏற்றுக்கொள்ளாத தால் ஊசி மூலம் எனக்குப்போதை மருந்தை ஏற்று கிறார்கள். தினமும் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் எனப் போலியாக மருத்துவச் சான்றிதழ் வாங்கி, வேண்டுமென்றே என்னைத் துன்புறுத்துகிறார்கள்; தற்போது நான் சந்தோசமாக உள்ளேன்.
 தயவு செய்து என்னைத் தொல்லை செய்யாதீர்கள்” என வேதனையுடன் பேசியுள்ளார்.

அத்துடன், தனது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு, மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்திலும் பாரதி சிங் முறையிட்டுள்ளார்.
பாரதி சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதற்கு ஆதாரமாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கூட அவர்3 பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றிருப்ப தற்கான ஆதாரத்தை பாரதி சிங்-கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஃபர்ஸ்ட் வேர்ல்டு ஹோட்டல்.
 28 மாடிகளில் 3,164 தரமான அறைகள்,
2,922 டீலக்ஸ் அறைகள்,
649 டிரிப்பிள் டீலக்ஸ் அறைகள்,
480 சுப்பீரியர் டீலக்ஸ் அறைகள்,
 136 வேர்ல்டு கிளப் அறைகள் என மொத்தமாக 7,351 அறைகளால் மிளிர்கிறது இந்த ஹோட்டல்.
அறைகளின் எண்ணிக்கைக்காகவே உலகின் மிகப்பெரிய ஹோட்டல் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது ஃபர்ஸ்ட் வேர்ல்டு. இதுவரைக்கும் இந்த ஹோட்டலில் சுமார் 3.5 கோடிப் பேர் தங்கியிருக்கின்றனர்.மலேசியாவின் அடையாளமாகவே மாறிவிட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் வேலை
இந்தியன் வங்கியில் செக்யூரிட்டி மற்றும் பியூன் பணிக்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு முடித்த, முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.
காலியிடம்: ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 115 காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 48 பணியிடங்கள் உள்ளன.

தகுதி: முப்படைகளில் ஏதாவது ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக குறைந்தபட்சம் 10ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது: குறைந்தபட்சம் 18. அதிகபட்சம் 26. பொதுப்பிரிவினருக்கு 45, ஓ.பி.சி.,க்கு 48, எஸ்.சி, எஸ்.டி.,க்கு 50 வயது வரை சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாக

தேர்வு செய்யப்படும் முறை:
'ஆன்-லைன்' எழுத்துத்தேர்வு, உள்ளூர் மொழி குறித்து தேர்வு, உடற்தகுதி.

கடைசி தேதி
: 11.11.2019

விவரங்களுக்கு
: https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?