எவ்வளவு உண்மை

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் எப்போதுமே நேரு வெறுப்பைக் கையாண்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் நேருவின் நடவடிக்கைகளைக் குறை சொல்வதை அக்கட்சியைச் சேர்ந்த பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பா.ஜ.க அரசின் குறைபாடுகளை மறைக்க நேருவை விமர்சிப்பது அக்கட்சியினரின் வழக்கம்.

 நேரு, பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக எதிர்த்ததன் காரணமாகவே அவர்கள் நேரு வெறுப்பைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், பா.ஜ.க-வினரின் நேரு மீதான இத்தகைய வன்மத்திற்குக் காரணம் என்ன என்கிற ரீதியில், ஃப்ரன்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜயசங்கர் ஃபேஸ்புக் பதிவொன்றை எழுதியுள்ளார்.
அதில், ஏ.ஜி. நூரானியின் புத்தகத்திலிருந்து தமிழில் தான் மொழிபெயர்த்த புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியைப் பகிர்ந்துள்ளார் விஜயசங்கர்.

அது பின்வருமாறு :
“டிசம்பர் 7, 1947 அன்று மாகாணங்களின் பிரதம அமைச்சர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் நேரு பின்வரும் எச்சரிக்கையை விடுத்தார்:

ஆர்.எஸ்.எஸ். ஒரு தனி ராணுவத்தின் தன்மை கொண்டதென்றும், நாஜி அமைப்புகளின் செயல்முறைகளையே பின்பற்றும் அளவுக்கு நாஜிய வழிகளில் நிச்சயமாகச் செல்கிறது என்றும் காட்டுவதற்கு நம்மிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. 
குடியுரிமைகளில் தலையிடுவதில் நமக்கு விருப்பமில்லை. 
ஆனால் ஆயுதங்களைப் பயன்படுத்தும் நோக்கில் பெருமளவிலான ஆட்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுப்பதை நாம் ஊக்குவிக்க முடியாது.

 “ஜெர்மனியில் நாஜி இயக்கம் எப்படி வளர்ந்தது எனக்கு ஓரளவு தெரியும். 

பொதுவாக அதிக புத்திசாலித்தனம் இல்லாத, வாழ்க்கையில் எதுவும் கிடைக்காதது போன்ற நிலையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்களையும், பெண்களையும் மேலோட்டமான அலங்காரங்களைக் காட்டியும், கறாரான கட்டுப்பாட்டை வளர்ப்பதாகச் சொல்லியும் நாஜி அமைப்பு ஈர்த்தது.

 நாஜி அமைப்பின் கொள்கைகளும் செயல்பாடுகளும் எளிமையாகவும், எதிர்மறையாகவும், அதிகமாக மூளையைப் பயன்படுத்தத் தேவையில்லாதவையாகவும் இருப்பதால் அந்த இளைஞர்களும் நாஜிக் கட்சியை நோக்கி நகர்ந்தனர். 

நாஜிக் கட்சி ஜெர்மனியை அழிவுக்கு இட்டுச் சென்றது.

இத்தைகைய சிந்தனைப் போக்குகள் இந்தியாவில் பரவி, வளர நாம் அனுமதித்தால், அவை நாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவிக்குமென்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

நிச்சயமாக இதிலிருந்து இந்தியா தப்பிப் பிழைத்து விடும். 
ஆனால் அது மோசமாகக் காயப்பட்டு விடும். அதிலிருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும்.”

எவ்வளவு  உண்மையான வார்த்தைகள்.

 சுயநினைவு இல்லாமல் கைரேகை
 ஜெயலலிதாவின் கைரேகை  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்கக் கோரி, திருப்ப ரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவ லகத்தில் மனு அளித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு திருப்ப ரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது, அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்பு மனுவின், பி வடிவத்தில், ஏ.கே. போஸ் வேட்பாளராக முன்மொழி யப்பட்டு, அதில் ஜெயலலிதா கைரேகை இடப்பட்டிருந்தது.

 சுயநினைவு இல்லாமல் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைத்திருக்க முடியும் என்று திமுக வேட்பாளர் சர வணன் தொடர்ந்த வழக்கை விசா ரித்த உயர்நீதிமன்றம், ஜெய லலிதாவின் கைரேகை சந்தேகத் திற்குரியதாக இருப்பதாகவும், சட்டவிரோதமானது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தில்லி யில் உள்ள சிபிஐ தலைமை  அலுவலகத்தில் அளிக்கப் பட்டுள்ள மனுவில்,

'முறைகேடாக பெறப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகையை அங்கீகரிக்கச் செய்த அப்போதைய தலைமை  தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மதுரை மாவட்ட தேர்தல்  அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்திய அதிகாரி ஜீவா மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க  வேண்டும் '
என திமுக எம்எல்ஏ  சரவணன் கேட்டுக்கொண்டுள் ளார்.

அரசு மருத்துவர் பாலாஜி,
அப்பல்லோ மருத்துவர்கள் பாபு, ஆப்ரஹாம்,
மற்றும் சசிகலா,
அதிமுக அவைத் தலை வர் மதுசூதனன்
உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ன்னாளில்,
முன்னால்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)

 நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
117 பட்டினி நாடுகளில் இந்தியா112 
இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.
ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பெருளாதாரம் சந்தித்து வருகிறது.
இதனை மூடிமறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன.

குறிப்பாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் சார்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர்
அதில், “இந்த இரண்டு பொருளாதார அறிகுறிகள் குறித்து தெரியப்படுத்தினால் மக்களே ஒரு முடிவுக்கு வருவார்கள் என குறியிப்பிட்டுள்ளாவர்.

முதலாவதாக, நாட்டின் ஏற்றுமதி சுமார் 6.6 சதவிகிதமும், இறக்குமதியில் சுமார் 13.9 சதவிகிதமும் குறைந்துள்ளது. இந்த விழ்ச்சியின் அர்த்தம் என்னவெனில், மாதம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இரண்டாவதாக, வங்கிகளில் கடன் வாங்குவது குறைந்துள்ளது.
அதனால் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், தற்போது எந்த புதிய முதலீடும் வரவில்லை என்பதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் நகர மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர்களின் நுகர்வு குறைந்துவிட்டது. அதாவது ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.
 அதனால் குறைவான அளவே நுகர்வு நடைபெறுகிறது.
அதனால் நாட்டு மக்கள் அதிகமானோர் தீவிரமான பசியோடு இருக்கிறார்கள்.

அதன்வெளிப்பாடே பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா117 நாடுகளில் 112-வது இடத்திற்குச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


P. Chidambaram @PChidambaram_IN
I have asked my family to tweet the following on my behalf:

Two more economic indicators for you to draw your own conclusions-

1. Imports are down by 13.9%, exports are down by 6.6%. Meaning, thousands of jobs are lost every month.
4,992

---------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
சீன-தமிழகத் தொடர்பு
 சீன நாட்டிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, மிகத் தொன்மையானது. சீனர்கள் மேலை நாடுகளுக்கு தங்களது வணிகப் பொருள்களை ஏற்றி வந்த சீனக் கப்பல்கள், தமிழகத்தின் கடற்கரை துறைமுகங்களை வந்தடைந்தன. 
அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் குடிநீரையும் ஏற்றிக்கொண்டு மேலை நாடுகளுக்குச் சென்றன.

சீனர்களின் மரக்கலங்கள் மிகப் பெரியவை. 'ஜுங்' என இதை அழைக்கின்றனர். இக்கப்பல்களை இன்றளவும் சீனர்கள் பயன்படுத்துகின்றனர். சீனக் கப்பல்கள் தமிழகத்தின் கடற்கரை துறைமுகங்களில் நங்கூரம் இட்டிருந்ததை, பிற்கால சங்க இலக்கியமான பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

காஞ்சிபுரம் பல்லவர் தலைநகரமாக விளங்கியிருந்தாலும், மாமல்லபுரம் அவர்களது கடற்கரைத் துறைமுகமாக அக்காலத்தில் சிறப்புற விளங்கியது. இந்தியாவிற்கு சீன நாட்டிலிருந்து பல புத்தப் பயணியர் வந்துள்ளனர்.

பாஹியான் என்ற சுற்றுலா பயணி, குப்தர்களின் காலத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். இவர் தன் குறிப்புகளில் தென்னிந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிடுகிறார்.

இவரை அடுத்து, கி.பி., 7ம் நுாற்றாண்டில் சீனப் பயணி, யுவாங் சுவாங் மாமல்லபுரம் துறைமுக
நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கி, ஆற்று வழியாக படகில், பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தை அடைந்தார் என்பதை, அவர் எழுதிய, 'சியூக்கி' என்னும் நூல் குறிப்பிடுகிறது.

காஞ்சிபுரத்தில் ஆட்சி புரிந்த அரசர்களுக்கு, சீன அரசர், தமிழகத்தின் பரிசுப் பொருள்களை துாதர்கள் மூலம் கொடுத்து அனுப்புகிறார் என்பதை, சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 
இதே போல, சீன அரசுக்கு, தங்களது துாதர்களை அனுப்பியதாக, பல்லவர் ஆவணங்கள்
குறிப்பிடுகின்றன.

ராஜசிம்ம பல்லவ மன்னர் சீனாவிற்கு சிறப்பான துாதுக்குழு ஒன்றை அனுப்பி வைக்கிறார். வணிகத்தில் ஆளுமை செய்து வந்த அரேபியர்களையும், திபெத்தியர்களையும் அடக்குவதற்கு, தான் படை அனுப்புவதாகவும், அப்படைக்கு ஒரு பெயர் இடுமாறும், சீன அரசரைக்
கேட்டுள்ளார். இதே போன்று, தமிழகத்தில் சீன அரசர் தாம் கட்டும் பவுத்த பள்ளிக்குத் தம் பெயரை வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுகிறார். சீன மன்னர் பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு, மாமல்லை வழியாக கப்பலில் வந்திருக்க வேண்டும்.
இவ்வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தபெருமாள் கோவிலில் சீன அரசனின் புடைப்புச்சிற்பம் உள்ளது. இச்சிற்பம் நின்ற நிலையில், சீன அரசரின் உருவத்துடன் அவரது தலைக்கு மேல், வெண்கொற்றக் குடையைப் பிடித்த நிலையில் காணப்படுகிறது.

நீண்ட அங்கியும், தொங்கும் மீசை, தாடியுடன் விளங்கும் இவ்வுருவம், ஓர் அரசருக்குரிய ஆடை அணிகலன்களுடன் விளங்குகிறது. இவரது வலக்கையில், அறிக்கை ஒன்றை குழல் அமைப்பில் இட்டு அவர் வைத்திருப்பது போன்றும், இடக்கையில் வெண்கொற்றக் குடையைத் தாங்கிய நிலையிலும் இவ்வுருவம் உள்ளது.

இவரது இடப்பக்கம் பிறிதொரு உருவம் மிகுந்த அழிந்த நிலையில் உள்ளது. 
பல்லவர்களுக்கும் சீனர்களுக்கும் இருந்த அரசியல் தொடர்பை விளக்கும் அரிய சிற்பமாக இது விளங்குகிறது.

மாமல்லபுரம் அருகிலுள்ள வாயலுார் என்ற ஊரிலுள்ள பல்லவ மன்னன் ராஜ சிம்மனின் கல்வெட்டில், பல நாடுகளுடன், குறிப்பாக சீனர்களுக்கான தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. சீனர்களிடமிருந்து பட்டு நெசவுத் தொழிலை தமிழர்கள் கற்றுக் கொள்கின்றனர். காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியில் மிகச்சிறந்த நகரமாக விளங்கத் தொடங்கியது. காஞ்சிபுரம் பவுத்த மதத்தின் மடாலயங்களைக் கொண்டிருந்தது.
 பவுத்த காஞ்சி என, வரலாற்றில் காஞ்சி குறிப்பிடப்படுகிறது.

காஞ்சியில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் பவுத்த மதத்தின் சில அடையாளங்கள் கிடைத்து உள்ளன. மேலும், புத்தரின் சிற்பங்கள் பல, காஞ்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் திருச்சுற்று வெளிச்சுவர்களில் இன்றளவும் பல புத்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரத்திற்கு அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள திருமால்பூர் அருகே, அழகு வாய்ந்த பல்லவர் கால பவுத்த பள்ளி ஒன்று இருந்துள்ளது. இப்போது இவ்வூருக்கு அருகில் மூன்று பவுத்த சிற்பங்கள் உள்ளன. திருமாலின் ஓர் அவதாரமாகவே, புத்தரை பல்லவர்கள்
ஏற்றுக்கொண்டனர்.

மாமல்லபுரத்திலுள்ள கல்வெட்டு, திருமாலின் ஓர் அவதராம் என, புத்தரைக் குறிப்பிடுகிறது.
பல்லவர் கால காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தில், பல அயல் நாட்டினர் படித்தனர். காஞ்சிபுரத்தைச் சார்ந்த தர்ம பாலர் என்பவர், நாளாந்தா பல்கலைக்கழகத்தின் முதல் துணை
வேந்தராக நியமனம் பெற்றார். இப்பல்கலைக்கழகத்திற்கு, சீனர்கள் வருகை புரிந்தனர். காஞ்சி
புரத்தைச் சார்ந்த போதி தர்மர், சீனாவிற்குச் சென்று வர்மக் கலையை சீனர்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியக் கலைகள் பல, இக்காலத்தில் சீனாவிற்குச் சென்றன.

பல்லவர்கள் காலத்தில் வணிகர்களும், சீனாவின் பல நகரங்களில் கோவில்கள் பலவற்றை கட்டினர். சீனாவிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, சோழர்கள் காலத்திலும் நீடித்தது.
தமிழ் வணிகக் குழுக்களான, திசை ஆயிரத்து ஐநுாற்றுவர், அய்யப்பொழில், மணிக்கிராமத்தார், நானாதேசிகள் போன்றோர், சீனாவிலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் கடல் கடந்து வாணிகம் மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் தமிழர்களின் குடியேற்றங்களை நிரந்தரமாக ஏற்படுத்தி வாழ்ந்தனர். 'சுங்ஷிஹ்சுங்ஹுய்யவோ' எனும் சீன ஆவணக் குறிப்பில், சோழர்கள் தங்களது துாதர்களை அனுப்பியுள்ளது குறிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக, மாமன்னன் ராஜராஜ சோழன், அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோர், சீனாவிற்கு நல்லுறவு துாதர்களை அனுப்பினர்.

சோழர்களின் படைகளில் சீனர்களும் பணியாற்றி இருக்க வேண்டும். 
சீனத்தரையன் என்ற பெயர் சோழர் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. 
சீனக்கானம் என்னும் நாணயமும் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது.
பல்லவர் காலத்தைச் சார்ந்த சீனர்களின், பவுத்த விகாரை ஒன்று, நாகப்பட்டினத்தில் அழிந்த நிலையில் இருந்ததை, சீன அரசர் சியான்சுன் என்பவர், கி.பி., 1267ம் ஆண்டு புதுப்பிக்கிறார். இது, மிக உயர்ந்த மாடங்களை உடையது. 
நாகப்பட்டினத்தில் நீதிமன்ற வளாகப் பகுதியில் இவ்விகாரை இருந்ததது.
 இதன் ஸ்துாபி செங்கல்லாலும், சுதையாலும் கட்டப்பட்டது. 'பிரமிடு' அமைப்பில் இருந்த இந்த ஸ்துாபியை, 1846ம் ஆண்டு வால்டர் எலியட் என்ற ஆங்கிலேயர் பார்வையிட்டு, அதன் சிறப்பை விளக்குகிறார்.

இந்த விகாரையின் அமைப்பை, வரைபடமாகவும் அவர் வரைந்துள்ளார். எனவே, ஆங்கிலேயர் காலம் வரை சீனர்களின், பவுத்த விகாரை, நாகப்பட்டினத்தில் இருந்துள்ளது. இது, 'சீன பகோடா' எனப்பட்டது.

இதே போல, சீனாவில் தமிழர்கள் கட்டிய பல கோவில்கள் இருந்துள்ளன. சீன நகரமான குவாங்சூ (சைடோன்) என்ற இடத்தில், மிகப்பெரிய சிவன் கோவில் இருந்து, பின் அழிந்துள்ளது. தமிழ் மற்றும் சீன மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோவிலில் கிடைத்துள்ளன.

கடந்த, 1281ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இக்கோவில் குப்ளாய்கான் என்ற மன்னருக்காக கட்டப்பட்டதாகக் கூறுகிறது. இவர், 1260 முதல், 1294 வரை ஆட்சி செய்தவர். இக்கால கட்டத்தில், இந்த மன்னர் நோய் வாய்ப்பட்டிருக்க வேண்டும். எனவே, அவரது உடல் நலம் வேண்டி இக்கோவிலுக்கு நிலங்களை தமிழ் வணிகர்கள் அளித்துள்ளனர். இக்கோவிலும் இம்மன்னரின் பெயரால், தமிழில், செகசய்கான் ஈஸ்வரம் என, வழங்கப்படுகிறது.

சீனாவிலிருந்த தமிழர்கள், தம் தாய் மொழியான தமிழிலும், சீன மொழியை நன்கு அறிந்தவர்களாக இருந்துள்ளனர். இக்கல்வெட்டுகள், தமிழ் மற்றும் சீன மொழிகளில் எழுதப்பட்டு உள்ளன. இக்கோவிலில் மூலவராக சிவன், லிங்க வடிவில் இருந்துள்ளார். இக் கோவிலிலும் பிற கோவில்களிலும் இருந்து பல சிற்பத் திருமேனிகளை சீன அரசு எடுத்து பாதுகாத்து வருகிறது. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை திருமால், நரசிம்மர், கங்காதரர், புல்லாங்குழலுடன் உள்ள கிருஷ்ணர், காலியமர்த்தனர், கொற்றவை ஆகியவை ஆகும்.

திராவிடக்கலை அமைப்புடன் சீனக் கட்டடக்கலைக் கூறுகளுடன் இணைத்து, இக்கோவில்கள் கட்டப்பட்டன. சீனர்களும் இந்தியர்களுக்குமான தொடர்பு, நீண்ட நெடிய பாரம்பரியமானது. அதை புதுப்பிக்கும் வகையிலும், நினைவுக்கூரத்தக்க வகையிலும் சீன அதிபரும், இந்திய பிரதமரும் மாமல்லபுரத்தைத் தெரிவு செய்து, நல்லுறவு ஒப்பந்தம் செய்ததை உலகமே பாராட்டுகிறது.
                                                                                                                                    -சு. ராசவேலு,

வருகைப் பேராசிரியர் ,அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி மொபைல் போன்:94442 61503
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 "காஷ்மீரைப் போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும் "
                                                                                                                                  -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேவையா?
டாடியை குஷி படுத்த பேசி இப்போ சேரூப்படி 
-------------/---------------------------------------------------------------------------------------------------------------------
Shabeer Sumaiya

இந்தியாவில் தமிழ் நாடுதான் முன்மாதிரியாக திகழ்கிறது....
Now in Maharashtra
இப்போ #GoBackModi மராத்தியர்கள் தொடங்கியுள்ளனர்.

விதை நாம போட்டது.

/-------/----------------------------------------------------------------------------------- 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?