வழி இருக்கிறதா பாருங்கள் ?
உடல் உறுப்பு தானத்தில் நடைபெற்ற மோசடி
நோயாளிகளை அழைத்து வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியானதை அடுத்து,சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதார திட்ட இயக்குன ரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த மருத்துவமனை பல சர்ச்சைக ளுக்கு பெயர்போனது .
தமிழ்நாட்டில் உடல் உறுப்புதான முறைகேட்டில் இந்த மருத்துவ மனைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகள் வெளிநாட்டு நோயாளிக ளுக்கு பொருத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
கடந்தாண்டு விபத்தில் காயமடைந்த கேரளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சேலம் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்பு கள் குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவம் பெற்று வந்த வெளி நாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
இது பற்றி தமிழக முதலமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் கூட எழுதியிருந்தார். ஆனால் விசாரணை என்ற பெயரில் அனைத்தும் மூடி மறைக்கப் பட்டது.
உடல் உறுப்பு தானத்தில் நடைபெற்ற மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, அந்த மோசடியை நியாயப் படுத்தி ஊழலே நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்திருந்தது.
இந்த நிலையில் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வால் தரமான மருத்துவக் கல்வி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய பாஜக அரசு பீற்றிக்கொண்டிருந்தது.
இது எவ்வளவு மோசடியானது என்பதை நீட்தேர்வில் நடை பெற்ற ஆள்மாறாட்டம் வெட்ட வெளிச்சமாக்கி யது.
விசாரிக்க விசாரிக்க மேலும் மேலும் பல மாண வர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் மிகப் பெரிய அளவில் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது.
நாமக்கல் கிரீன் பார்க் என்ற தனியார் பள்ளி யில் முக்கியமான பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் அறை ஒன்றின் லாக்கரில் இருந்து கணக்கில் காட்டப்படாத 30 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
அதேபோல், சட்ட விரோத வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்து களுக்கான ஆவணங்கள், தனிப்பட்ட முதலீடு கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருக்கின் றன.
இதனை மத்திய நேரடி வரிகள் வாரியமே அறிவித்துவிட்டது.
நீட்தேர்வு மோசடிகள் தொ டர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடத் தப்படவேண்டும். அதில் தனியார் பள்ளி தவறி ழைத்திருப்பது தெரியவந்தால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு தயங்கக் கூடாது, மேலும் நிர்வாகிகள் மீதும் குற்றவியல் வழக்கும் தொடர வேண்டும்.
தேசிய நுழைவுத்தேர்வு மருத்துவக்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் என்ற வாதமெல்லாம் வெறும் வெத்துவேட்டுதான்.
அடுத்தவர்கள் பற்றி குறை கூறுவதை நிறுத்தி விட்டு,
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான
வழி இருக்கிறதா?
என்று பார்க்குமாறு, மத்திய பாஜக அரசு , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளாசி எடுத் துள்ளார்.
தற்போதைய நிலையில் நாட்டு மக்கள் கடும் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருப்பதாகவும் மன்மோகன் சிங்தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கித் துறையில் சமீப காலமாகவே மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
கடன் பெற்றுவிட்டு நாட்டை விட்டே தப்பியோடுவதும், போலியான ஆவணங்களைக் காட்டி, கடன் வாங்கிஏமாற்றுவதும் வாடிக்கையாகி விட்டது. அண்மையில் பஞ்சாப் - மகாராஷ்டிர வங்கியில் (பிஎம்சி) ரூ. 2500கோடி அளவிற்கு மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்தவங்கியின் நடவடிக்கைகளையே ரிசர்வ்வங்கி முடக்க வேண்டியதானது.
பாரதஸ்டேட் வங்கி போன்ற நாட்டின் பெரிய
வங்கிகளிலும் அதிகளவில் கடன்மோசடிகள் நடந்திருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக பாஜக அரசை நோக்கி, கேள்விகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்பிரதமராக இருந்தபோதுதான் வங்கித் துறை வீழ்ச்சியைச் சந்தித்ததாக, தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழியைத் தூக்கிப் போட்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“2018ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராகஇருந்தது.
இதை 2024-ஆம் ஆண்டுக் குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்தஇலக்கு வைத்துள்ளனர். ஆனால், அந்தஇலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும்.
மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில், வீழ்ச்சியைத் தான் சந்தித்து வருகிறது.பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சனை என்ன என்பதே இந்த அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார் களே, தவிர பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவில்லை.
பிரச்சனைகள் என்னவென்றே தெரியாமல் இவர்களால் தீர்வு காணவும் முடியாது.
அப்படியிருக்கையில், 2024-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை அடையச் சாத்தியமே இல்லை.தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு, பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியான தொழிற்சாலைகள் மூடப்பட்டமாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேல் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. நாசிக், அவுரங்காபாத், நாக்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும், சீன இறக்குமதி அதிகரிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களில் மூன் றில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, இதனால்குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று நமது இளைஞர்கள் கிடைத்த வேலையில் சேர்ந்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் வேலைஇல்லாத் திண்டாட்டம் காரணமாக,ஊர்களைக் காலி செய்து மக்கள் வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது.
ஒருகாலகட்டத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருந்தது. இப்போதுவிவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்தான் முதலிடத்தில் உள் ளது. மத்திய அரசின் இறக்குமதி - ஏற்றுமதி கொள்கைகளாலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்.
இந்த பிரச்சனைகளை சீக்கிரம், சரி செய்யாவிட்டால், நாட்டு மக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.”
இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இந்நாளில் .
முன்னால்
பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகமானது(1954)
நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வானிலை.
தென்கிழக்கு அரபிக்கடலில்
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் கேரளா, மாலத்தீவு உள்ளிட்ட
பகுதிகளுக்கு குமரிக்கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் .
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி எட்டயபுரத்தில் 14 செ.மீ, கொடைக்கானலில் 13 செ.மீ, மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது .
தற்போது பெய்துவரும் மழை நாளை வரை நீடிக்கும் என்றும், 2 நாட்களுக்குள் படிப்படியாக மழைப்பொழிவு குறையும் .
அதன் பின்னர் மீண்டும் தீவிரமான மழை பெய்யக்கூடும்.

தொலைத்தொடர்பு முடக்க சேவை
ஜம்மு காஷ்மீரில் 72 நாட்களுக்குப் பின்னர் தொலைத்தொடர்பு சேவை மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக முறை தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு பிரிவை ரத்து செய்தது.
ஆகஸ்ட் 5ம் தேதி மாநிலங்களவையில் சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதற்கு முந்தைய நாள் நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது.
72 நாட்களுக்குப் பின்னர் தற்போது தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.
2016ம் ஆண்டு முதல் இப்போது வரை அதிகப்படியாக ஜம்மு காஷ்மீரில் 183 முறையும், ராஜஸ்தான் மாநிலந்தில் 43 முறையும் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

2019ம் ஆண்டு
மட்டும் 67 முறை ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு
இருக்கிறது. பொது பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக அதிக
முறை தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
தேசிய பாதுகாப்புக்காக 26 முறை துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,108 முறை எந்தக் காரணத்திற்காக முடக்கப்பட்டது என்று சொல்லப்படவில்லை.
எத்தியோப்பியாவில் 2017 டிசம்பர் தொடங்கி 2018 ஏப்ரல் வரை 110 நாட்கள் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டு இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் புர்கான் வாணி கொல்லப்பட்டபோது அதிகபட்சமாக 2016 ஜூலை முதல் ஜனவரி 2017 வரை தொலைத்தொடர்பு சேவைகள் 6 மாத காலம் துண்டிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அகவிலைப்படி
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 12% அகவிலைப்படியானது 17% ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரிமாதம் அகவிலைப்படி 9%-ல் இருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டது. அந்த அகவிலைப்படி உயர்வானது மே மாதம் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் தமிழக அரசும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த உயர்வானது ஜூலை மாதத்திற்க்கான உயர்வு ஆகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
305 கோடி ரூபாய் ஆண்டு வருமானம்
மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, சத்யா நாதெள்ளா, 2019 நிதியாண்டில், 66 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு பெற்றுள்ளார்.
அடிப்படை சம்பளம்,
7.1 கோடி ரூபாய் அதிகரிப்பு, பங்குகளின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை
காரணமாக, 2019ம் நிதியாண்டில் நாதெள்ளாவின் வருமானம் 305 கோடி ரூபாயாக
உயர்ந்து உள்ளது.
இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 66 சதவீதம் அதிகமாகும்.மைக்ரோசாப்டின் நிதி ஆண்டு ஜூலை 1ல் துவங்கி, ஜூன் 30ல் முடிவடையும் காலகட்டமாகும்.
2014ம் நிதியாண்டில், அதிகபட்ச ஊதியமாக, 599 கோடி ரூபாயை நாதெள்ளா பெற்றுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களின் ஊதியம் சராசரி, 2019ம் நிதியாண்டில், 1.2 கோடி ரூபாய்.
கடந்த நிதியாண்டில், நிறுவன பங்குதாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது.
பங்குகளின் மறுகொள்முதல் மற்றும் ஈவுத் தொகை ஆகியவற்றின் மூலம், 2.19 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.
நாதெள்ளாவின் தலைமை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகள் நிறுவனத்தின் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.
இவ்வாறு மைக்ரோசாப்ட்தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் இருவர்
'எங்களுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடாட்டி காஷ்மீர் மக்களை போல் அவங்களையும் ஒதுக்கி வைக்கணும்'
-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
Charles Stoinis
காலம் செய்த கோலம் .
-----------------------------------------------------------------------------------------------------------
305 கோடி ரூபாய் ஆண்டு வருமானம்
மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, சத்யா நாதெள்ளா, 2019 நிதியாண்டில், 66 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு பெற்றுள்ளார்.
நிதியாண்டில்305 கோடி ரூபாய் வருமானம் |
இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 66 சதவீதம் அதிகமாகும்.மைக்ரோசாப்டின் நிதி ஆண்டு ஜூலை 1ல் துவங்கி, ஜூன் 30ல் முடிவடையும் காலகட்டமாகும்.
2014ம் நிதியாண்டில், அதிகபட்ச ஊதியமாக, 599 கோடி ரூபாயை நாதெள்ளா பெற்றுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களின் ஊதியம் சராசரி, 2019ம் நிதியாண்டில், 1.2 கோடி ரூபாய்.
கடந்த நிதியாண்டில், நிறுவன பங்குதாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது.
பங்குகளின் மறுகொள்முதல் மற்றும் ஈவுத் தொகை ஆகியவற்றின் மூலம், 2.19 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.
நாதெள்ளாவின் தலைமை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகள் நிறுவனத்தின் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.
இவ்வாறு மைக்ரோசாப்ட்தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் இருவர்
'எங்களுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடாட்டி காஷ்மீர் மக்களை போல் அவங்களையும் ஒதுக்கி வைக்கணும்'
-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
Charles Stoinis
ராஜிவ்காந்தியை
எதிர்த்து பேசியதற்காக நீங்கள் என்னை கைது செய்தால் .
நீங்கள் ராஜிவ்காந்தியை ஆதரித்து பேசியதற்காக உங்களை கைது செய்வேன்?
- சீமான்..
#இப்படியே லூசுப் பைய மாதிரி பேசிக்கிட்டே இரு..
---------------------------------------------------------------------------------------------------------------------------------நீங்கள் ராஜிவ்காந்தியை ஆதரித்து பேசியதற்காக உங்களை கைது செய்வேன்?
- சீமான்..
#இப்படியே லூசுப் பைய மாதிரி பேசிக்கிட்டே இரு..
-----------------------------------------------------------------------------------------------------------