அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணலாம்
அழகன்குளம் அகழாய்வு
உலகையோ திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. அந்த வரிசையில் சேர வேண்டிய அழகன்குளம் அகழாய்வுப் பணிகளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது எனப் பொருமுகிறார்கள் அழகன் குளம் ஆர்வலர்கள்.
சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மருங்கூர் பட்டினம்தான் இன்றைய அழகன்குளம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இராமநாதபுரத்திலிருந்து கிழக்கு நோக்கி 17 கி.மீ தூரம் பயணித்தால், வைகை ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது அழகன்குளம். இங்கு 1986 முதல் 2017ஆம் ஆண்டு வரை எட்டு கட்டங்களாக அகழாய்வை மேற் கொண்டது தமிழக தொல்லியல் துறை.
இதன்மூலம், கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை இந்த ஊர் மிகச் சிறப்பாக விளங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அகழாய்வின் போது கிடைத்த பாசிகள், மணி செய்யும் கற்கள், சிப்பி, சங்கு வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கறுப்பு- சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், ‘தமிழி’ எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன அழகன் குளத்தின் பழமையை உலகுக்குப் பறை சாற்றின.
இங்கு இதுவரை 13,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. ‘அகழாய்வைத் தொடர்ந்தால் நிச்சயம் இன்னும் பல அபூர்வ தவல்கள் கிடைக்கும்.
ஆனால் ஏனோ தமிழக அரசு அகழாய்வுப் பணிகளைக் கிடப்பிலேயே போட்டு வைத்தி ருக்கிறது’ என்று குற்றச்சாட்டு எழுந்தி ருக்கிறது.
இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு விடம் பேசினோம். “இங்கு 1986-87 கால கட்டத்தில் இரண்டு குழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர்.
இங்கு கிடைத்த பொருட்கள் 2,360 ஆண்டுகள் பழை மையானவை என கார்பன் சோதனையில் அறியப்பட்டது.
1986ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் (மீன், நட்சத்திரன், மனித உருவங்கள் போன்ற வை) உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. ரோமானிய ஓடுகளும், ரோமானிய மன்னர்க ளின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ள தால், இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கின்றன என்பதையும், இங்கு உள்ள மக்களுடன் அவர்கள் வாணிபம் செய்து வந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.
அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை ஓட்டில் ‘சமுதஹ’ எனும் சொல் உள்ளது.
இலங்கை குகைக் கல்வெட்டுக ளிலும் இந்தச் சொல் காணப்படுகிறது.
இதன்மூலம் தமிழகத்துக்கும் இலங்கை க்கும் பழங்காலம் முதல் தொடர்பு இருந் துள்ளதை அறியலாம். கிரேக்க கலை பாணி யில் ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப் போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில், மூன்று பெண் கள் விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர்.
இவை எகிப்து பிரமிடு களில் உள்ள வண்ண உருவங்களைப் போன்று உள்ளன.
அரேபியர்களுடன் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அரபி எழுத்தில் எதப்பட்ட சங்கு ஒன்று கிடைத்துள்ளது.
2016-17ல் 8 ஆம் கட்டமாக விரிவான அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம். கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 52 குழிகளுக்கும் மேல் தோண்டப்பட்டன.
இதில் 13,000 பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டன.
மனிதன் முதல்முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரைக்காசுகள், சதுர வடிவிலான செப்புக்காசுகள் என 50க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன.
கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருள்கள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல் மணிகள், சங்கு ஆபரணங்கள், கல் மணி கள், சங்கு ஆபரணங்கள், கண்ணாடி மணிகள் போன்றவையும் இதில் அடங்கும்.
தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
எனவே, இங்கு கண்டெடுக் கப்பட்டுள்ள குறியீடுகளை சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒப்பிட்டுப் படிக்கப்பட நட வடிக்கை எடுப்பதுடன், புதிய தொழில் நுட்பத்தில் மீண்டும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அழகன் குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான அசோகன், “உலகின் பல்வேறு நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்ட துறைமுகமாகவும், சங்க கால பாண்டியர் துறைமுகமாகவும் அழகன் குளம் இருந்துள்ளதை ஆய்வுகள் காட்டு கின்றன.
இங்கிருந்து மதுரை செல்லும் பெரு வழி, வைகையின் கரை வழியில் இருந்தி ருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் கீழடி உள்ளது. 1986 முதல் 1998ஆம் ஆண்டு வரையில் ஆறு கட்டங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெறும் 19 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன.
இதன் ஆய்வறிக்கை 2005ல் வெளியிடப்பட்டது. ஆனால் 7 மற்றும் 8ஆம் கட்டங்களில் 55க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டன. அதிகளவில் நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதன் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட வில்லை. இந்த ஆய்வுகளின் போது கண்டெ டுக்கப்பட்ட தொன்மையான பொருள்களை யெல்லாம் ஒருநாள் மட்டும் இங்கு பார்வைக்கு வைத்தனர். அகழாய்வுகள் நடைபெறும் இடங்களிலேயே அங்கு கிடைக்கும் தொன் மைப் பொருள்களைக் கொண்ட அருங்காட்சி யகங்களை, பல நாடுகள் அமைத்து வரு கின்றன.
ஆய்வுப் பொருள்களைக் காண வந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தொடர்ந்து ஆய்வு கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிச் சென்றார்.
ஆனால் அவர் வந்து சென்ற பிறகு தோண்டப்பட்ட அத்தனை குழிகளும் மூடப் பட்டதுடன், இங்கு கிடைத்த பொருள்களை யும் எடுத்துச் சென்று விட்டனர். அழகன் குளத்தில் தமிழக அரசு தனது அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடர்வதுடன், ஏற்கெ னவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை யும் வெளியிட வேண்டும்” என்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
மேலும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அடுத்து வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழையும், வடதமிழகத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து ராமநாதபுரம், விழுப்புரம், வேலூர் ,தூத்துக்குடி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது
பாகிஸ்தானுக்கு ஆதரவா
துருக்கி பயண ரத்து !
துருக்கி நாட்டுக்கு அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு அங்கரா நகரில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஞாயிறுக்கிழமை தகவல் வெளியாகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய துருக்கி அதிபக் தாயீப் எண்ட்ரோகன், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் 370 -ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டுள்ளதை விமர்சித்தும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், பிரதமரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நாளில்
முன்னால்
ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
1895 - ஜப்பான் ஆக்கிர மித்ததைத் தொடர்ந்து, ஐந்து
மாதங்கள்(152 நாட்கள்!) மட்டுமே இருந்த ஃபார்மோசா குடியரசு முடிவுக்கு
வந்தது.
ஃபார்மோசா என்பது தைவானுக்கு போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெயர்.
1542இல் தங்கள் வரைபடத்தில் இல்லாத இந்தத் தீவைக் கண்ட போர்ச்சுகீசிய மாலுமிகள், போர்ச்சுகீசிய மொழியில் அழகான தீவு என்ற பொருளுள்ள ஃபோர்மோசா என்ற பெயரைச் சூட்டினர்.
சுமார் ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்குமுன், சீனாவுடன் இணைந்தே இருந்த இப்பகுதி, பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல்மட்டம் உயர்ந்தபோதுதான் தீவாகியது.
இத்தீவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் குடியேறிய (பெரும்பாலும் சீன) விவசாயிகளே, தற்போது தைவானின் தொல்குடியினராக அறியப்படுவோரின் மூதாதையராவர்.
இந்தத் தொல்குடியினரின் மொழியில் அவர்களது பெயரான தாய்வோன் என்பதிலிருந்துதான் தற்போதைய பெயரான தைவான் உருவானது.
சீனாவின் ஆளுகையின்கீழிருந்த இப்பகுதியில் 1624இல் டச்சுக்காரர்களும், 1626இல் ஸ்பானியர்களும் காலூன்றினாலும், மிங் மரபின் வீழ்ச்சிக்குப்பின் 1662இல் வெளியேற்றப்பட்டு, டுங்னிங் முடியரசு உருவாக்கப்பட்டது. 1683இல் இதை வென்ற சீனா, மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டது.
முதல் சீன-ஜப்பானியப்போரில்(1894-95) சீனா தோற்றதையடுத்து, (போரின் பெரும்பகுதி சீனாவின் வடபகுதியில் நடந்திருந்தாலும், தென்பகுதியிலிருந்த) தைவானை விட்டுத்தரவேண்டும் என்று வற்புறுத்தி ஜப்பான் பெற்றுக்கொண்டது.
இம்மக்கள் ஜப்பானின் ஆளுகையை ஏற்க விரும்பாததால், 1895 மே 23இல் ஃபார்மோசா குடியரசு என்ற சுதந்திர நாடு உருவானதாக அறிவித்தனர்.
ஒரு வாரம் மட்டுமே பிரச்சினையின்றி செயல்பட்ட இந்த அரசு, அதற்குள் நாட்டின் கொடி, அஞ்சல்தலைகள், காகித நாணயம் உள்ளிட்டவற்றை வெளியிட்டுவிட்டது.
அப்போது தாக்கத் தொடங்கிய ஜப்பான், அக்டோபர் 21இல் தலைநகரைக் கைப்பற்றியதுடன், இக்குடியரசு முடிவுக்கு வந்தது.
1912இல் சீனாவின் முடியாட்சி முடிவுக்கு வந்து சீனக் குடியரசு உருவானது.
1945இல் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்தபோது, தைவான் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
1949இல் மா-சேதுங் தலைமையிலான பொதுவுடைமை இயக்கம் சீனாவின் ஆட்சியைக் கைப்பற்ற, கொமிங்டாங் கட்சியின் ஆளுகையிலிருந்த சீனக்குடியரசு முடிவுக்கு வந்து, சீன மக்கள் குடியரசு(மக்கள் சீனம்) உருவானது.
அங்கிருந்த தப்பி தைவானுக்கு வந்த ஓடிய சியாங் கை-ஷேக்கும், அவர் ஆதரவாளர்களும், (சீனாவையும் உள்ளடக்கிய!) அவர்களது சீனக் குடியரசின் தற்காலிகத் தலைநகரம் என்று அழைத்துக்கொண்டனர்.
மீண்டும் மக்கள்சீனத்தை அவர்களால் நெருங்கவே முடியாமற்போனலும், இன்றுவரை தைவான் தன்னை சீனக் குடியரசு என்றே அழைத்துக்கொள்கிறது!

- அக்., 27 (ஞா) தீபாவளி பண்டிகை
- அக்.,28 (தி) கந்தசஷ்டி ஆரம்பம்
- நவ.,02 (ச) சூரசம்ஹாரம்
- நவ.,02 (ச) கல்லறை திருநாள்
பகவானுக்கே வந்த சோதனை ?
ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்த சாமியார் கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பிஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல் பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்துக்கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.
கல்கி ஆசிரமங்களுக்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்ட ணம் வசூலிக்கப்பட்டது.
கல்கி விஜய குமாரின் மகன் பல தொழில் நிறுவனங் களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமங் களில் அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப் பட்டுள்ளதாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசி ரமங்கள் உள்பட 40 இடங்களில் வரு மான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சனிக்கிழமை யன்றும் கல்கி ஆசிரமத்தில் சோத னை நடத்தினர்.
இதில் ரூ.43 கோடியே 90 லட்சம் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர கற்கள், மேலும் கணக்கில் வராத ரூ500 கோடிக்கு மேல் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்கி பகவான் குழுமம் சார்பில் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சாமியார் கல்கி விஜயகுமார் ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வசிப்பதாக கூறப்படு கிறது.
சோதனையின் போது அவர் அங்கு இல்லை. ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரு கிறது. இதில் ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் சாமியார் கல்கி விஜயகுமாரிடம் விசாரணை நடத்த வரு மான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் சாமியார் கல்கி விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது குறித்து ஆசிரமத்தில் உள்ளவர் களுக்கு தெரியவில்லை.
அவரை பார்த்து 2 ஆண்டுகள் ஆகிறது என்று ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாமியார் கல்கி விஜய குமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பாஸ் போர்ட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக தேடினர்.
ஆனால் அது கிடைக்கவில்லை.
இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
மோடியின் பாஜக ஆட்சியில் தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாராய வியாபாரி விஜய் மல்லையா, வைர வியாபாரி நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வரிசை யில் சாமியார் கல்கியும் சேர்ந்துள்ளார் என்று அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் கூறுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க முதல்ல ஹெல்மெட் போடுங்க,
அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணலாம்”
வாகன பிரச்சாரத்தில் ஈடுபடும் போது புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் தொண்டர்கள் யாரும் தலைகவசம் அணியாமல் சென்ற படத்தைக் கையில் எடுத்துக்கொண்ட கிரண்பேடி வழக்க பதிவு செய்ய இருப்பதாக கருத்து ஒன்றை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
Kiran Bedi
✔
@thekiranbedi
Brazen violation of MV Act and directions of both Honorable Madras High Court & Supreme Court.
Rule of Law prevails.
DGP Puducherry, Balaji Srivastava, IPS, issues directions for legal action against the defaulters. @the_hindu Thanku for evidence as posted. @nitin_gadkari
Rule of Law prevails.
DGP Puducherry, Balaji Srivastava, IPS, issues directions for legal action against the defaulters. @the_hindu Thanku for evidence as posted. @nitin_gadkari
இதுதொடர்பாக கிரண்பேடி கூறியிருப்பதாவது,
”உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மோட்டார் வாகன
சட்டத்தை முதல்வர் மீறியிருப்பது தெரிகிறது. அதனால் தவறு செய்தவர்கள் மீது
சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புதுச்சேரி டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவாவிற்கு
உத்தரவிட்டுள்ளேன்” என தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.
கிரண்பேடியின் இந்த பதிவை எடுத்து, முதலவர் நாராயணசாமி ட்விட்டர் பதிவில்
கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து
செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, “பிறருக்கு உபதேசம் செய்யும் முன்பு,
தான் அதைக் கடைபிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பதிவுக்கு
சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.இந்நிலையில்
கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கும் படி, புதுச்சேரி யூனியன் பிரேதச
மாணவர் கூட்டமைப்பினர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றைக்
கொடுத்துள்ளனர்.
அதில், ”கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் சென்ற
புகைப்படத்தை இணைத்து, மாண்புமிகு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள்
மற்றும் மோட்டார் வாகன சட்டம் அத்துமிறீய விதிமுறல் ஈடுபட்டுள்ளது
நிருப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி நிலைபெறவேண்டும்.எனவே விதிமிறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளனர்.
/---------------------------------------------------------------------------------------------------------------------------------
முகநூல்
Kannan Rajan
ஆகா...ரெண்டு அரை லூசுகளும் அடுத்தவன் சட்டையை கிழித்து பிராண்ட தொடங்கிவிட்டதுகள்.
முகநூல்
Kannan Rajan
நாம அப்படிக்கா ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்
-----------------------------------------------------------
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் மன்மோகன் சிங் தான் என தன் மீது குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரின் பதவிக் காலம் தான் இந்திய பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(அக்டோபர் 16) கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மும்பையில் இன்று(அக்டோபர் 17) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, “நிர்மலா சீதாராமன் சொன்னது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால், பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதன் சரியான நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய மத்திய அரசுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. நான் பிரதமராக இருந்தபோது சில விஷயங்கள் நடந்தனதான்.
அப்போது சில சறுக்கல்கள் இருந்தன. ஆனால், எல்லாவற்றுக்கும் காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்ல முடியாது.
நீங்கள் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள்.
அனைத்தையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதே சுமத்த முடியாது.
பிஎம்சி வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிருஷ்டவசமானது.
என்ன நடந்து இருந்தாலும் அந்த வங்கியின் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகாராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு ஆகியவை இணைந்து பிஎம்சி வங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தற்போதைய பொருளாதார மந்தம் மற்றும் அதை சமாளிக்க திறமையற்ற அரசு ஆகியவை இணைந்து இந்த நாட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொருளாதார மந்தத்தின் காரணமாக, மகாராஷ்டிரா, அதிலும் குறிப்பாக மும்பை, நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மோசமான விளைவுகளை மகாராஷ்டிரா சந்தித்துள்ளது. மகாராஷ்டிராவின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா கடந்த 5 ஆண்டுகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதைக் கண்டது. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது” எனக் கூறியுள்ளார்.
370-ஐ ரத்து செய்ததிற்கு காங்கிரஸ் எதிர்க்கவில்லை, செய்த முறைக்குத் தான்
காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஆதரவாக தான் வாக்களித்தது. அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த முடிவு தற்காலிகமானது தான் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆனால் ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அது ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மதிப்போடு நிகழ வேண்டும். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விதத்திற்கு தான் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது” என்று கூறினார்.
பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு தெரியவில்லை