தொகுதி மறுசீரமைப்பு

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,  “நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கங்களை அந்த துறை அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 

suran

அதனால் வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றிருக்கக்கூடிய  40 கட்சியினரை அழைக்க முடிவு செய்து அவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளோம்.  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்த அனைத்துக கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏனென்றால் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவுக்கு மேல்  ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. 

எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கக்கூடிய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவுள்ளது. 

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய போகிறது.  மக்கள் தொகையை கணக்கிட்டுதான் இது செய்யப்படும்.   மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் முக்கியமான இலக்கு.  அந்த இலக்கை பொறுத்தவரை தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது.

பல பத்தாண்டுகளாக குடும்ப கட்டுப்பாட்டை, பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முயற்சிகள் மூலம் நாம் சாதித்திருக்கிறோம். மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை குறைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைகிறதே என்ற கவலையில்லை, இது தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து, அரசியலை கடந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


படிக்கட்டுகளில் ஏறு

உடலில் இருக்கும் கூடுதல் கிலோவை குறைப்பது மிகவும் சவாலானது தான், ஆனால் சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் விரும்பும் பலன்களை உடற்பயிற்சி மூலம் பெறுவது சாத்தியமாகும். எடையை குறைக்க பெரும்பாலும் நடைபயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

அதே நேரம் படிக்கட்டுகளில் ஏறுவதால் ஏற்படும் கலோரி இழப்பு நன்மைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூடும் எனவே, எடை இழப்புக்கு இந்த இரண்டில் எந்த முறை சிறந்தது?

suran
பொதுவாக வாக்கிங் செல்லும் போது ஏற்படுவதை விட அதிக கலோரிகளை படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் குறைக்க முடியும்.ஏனெனில் படிக்கட்டுகளில் ஏறுவது என்பது நம் உடலை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுத்துகிறது, எனவே நடப்பதை விட படிக்கட்டுகளில் ஏறுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது, இதனால் நம் உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. படிக்கட்டுகளில் ஏறும் போது தசை உழைப்பு அதிகரிப்பதன் காரணமாக கலோரிகள் விரைவாக எரிக்கப்படுகின்றன. உதாரணமாக நீங்கள் வெறும் 15 நிமிடங்கள் மேற்கொள்ளும் படிக்கட்டு ஏறும் பயிற்சி, 45 நிமிட விறுவிறுப்பான நடைப்பயணத்திற்கு இணையான கலோரிகளை எரிக்கும்.

 நடைபயிற்சி என்பது கிடைமட்ட உடல் இயக்கத்தை உள்ளடக்கியது, அதே நேரத்தில் படிக்கட்டு ஏறுதல் என்பது செங்குத்து இயக்கம் கொண்டது. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை வேலை செய்ய வைக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது, இதன் விளைவாக அதிக கலோரி எரிக்கப்படுகிறது.

- படிக்கட்டு ஏறும் பயிற்சியானது கால்களை தவிர உடலின் பல பகுதிகளில் உள்ள தசைகளை ஈடுபடுத்துகிறது, கிட்டத்தட்ட முழு உடலையும் செயல்படுத்துகிறது. எனவே இது கீழ் உடல் தசைகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ள பயிற்சியாக இருக்கும்.

 நடைப்பயிற்சிக்கு பெரும்பாலும் வெளியே செல்ல வேண்டும் அல்லது டிரெட்மில் பயன்படுத்த வேண்டும். ஆனால் படிக்கட்டு ஏறும் பயிற்சியை உங்கள் வீட்டில், அலுவலகத்தில் அல்லது உங்கள் அடுக்குமாடி கட்டிடத்திலோ எளிதாக செய்யலாம். லிஃப்ட்களை தவிர்த்து படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இந்த பயிற்சியை உங்கள் ஒர்கவுட் ரொட்டீனில் எளிதாக சேர்க்கலாம்.

ஓய்வு அல்லது இடைவேளை நேரங்களுடன் கூடிய தொடர்ச்சியான உயர்-தீவிர உடற்பயிற்சிகள் Interval training என்று குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் படிக்கட்டு ஏறுவது என்பது interval training-ஐ இயல்பாகவே கொண்டுள்ளது. படிக்கட்டுகளில் ஏறுவது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் தசைகளை செயல்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏறிய பின் படிக்கட்டுகளில் இறங்குவது ரெக்கவரி பீரியட்டை வழங்குகிறது.

சில சூழலில் உள்ளவர்கள் படிக்கட்டு ஏறுவதை தவிர்க்க வேண்டும்.

70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது முழங்கால் வலியை கொண்டவர்கள்

கர்ப்பத்தின் இருந்து மாதங்களில் உள்ள பெண்கள்.

- சமீபத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டவர்கள் அல்லது இதய நோய்கள் உள்ளவர்கள்.

 காலில் காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்கள்

ஓடுவதை விட படிக்கட்டு ஏறுவது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சியாக கருதப்பட்டாலும், இது மூட்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும் பயிற்சியை மேற்கொள்ளும் போது சரியான நுட்பத்தை பின்பற்றுவது மூட்டுகளில் ஏற்படும் எதிர்மறை விளைவைக் குறைக்கும். இந்த பயிற்சயின் போது குதிகால் மற்றும் கணுக்காலுக்கு போதுமான ஆதரவு அளிக்கும் சரியான காலணிகளை அணிவது மிகவும் முக்கியமானது.

பயிற்சியை துவங்கிய முதல் 10 நிமிடங்களுக்கு மெதுவாக ஏறி இறங்குவதன் மூலம் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கலாம். அதே போல படிக்கட்டுகளில் ஏறும் போது உங்கள் கால்களை தரையில் வலுக்கட்டாயமாக அழுத்துவதை தவிர்க்கவும், ஏனென்றால் இது முழங்கால்களை சிரமப்படுத்தும்.


ரஷ்ய ஆதரவு அமெரிக்கா

 உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமித்து போரில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுடன் கூடிய ஐரோப்பிய நாடுகள் முன் மொழிந்த ஐநா தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் மூன்று ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

suran
இது டிரம்ப் நிர்வாகத்துக்கு முக்கியமான பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், ஐநா சபையின் தீர்மானங்கள் சட்டரீதியான அமல்படுத்துவதற்கு உரியதல்லை. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் குறித்த சர்வதேச கருத்தின் உணர்வாக மட்டுமே இது பார்க்கப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவுக்கு உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய ஆதரவு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. கடந்தவாரம் நடந்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலும் இவை தவிர்த்தன.


இதனிடையே ஐநா சபையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தன. உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், உடனடியாக உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை.

 உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. அமெரிக்கா உள்ளிட்ட 65 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு என்பது குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஐநா சபை கூட்டத்தில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனை அடுத்து அமெரிக்கா தம்முடைய தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனியாக கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக பலர் உயிரிழந்துள்னர். எனவே உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் இந்த தீர்மானத்தில் ரஷ்யாவை குற்றம் சாட்டும் வகையில் எந்தொரு வார்த்தையும் இடம் பெறவில்லை. இதற்கு 10 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், கிரேக்கம், சுலோவேனியா ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

 ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா  சீனாபங்கேற்கவில்லை.வும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?