அமைச்சரவையே குற்றவாளி - காட்டிக்கொடுத்தார் சல்மான் குர்ஷித்
                     

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீடு விவகாரத்தில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற சட்ட விரோதமான கொள்கை முடிவை மத்திய அமைச்ச ரவையே எடுத்தது என்றும், அமைச்சரவை எடுத்த முடி வை தனிப்பட்ட முறையில் ப.சிதம்பரம் தலையிட்டு எப் படி மாற்றிவிட முடியும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். 

இந்த விவகாரத்தில் ப. சிதம்பரத்தை பாதுகாப்ப தாக எண்ணி, மேற்கண்ட முடிவை ப.சிதம்பரம் எடுக்க வில்லை; அமைச்சரவையே எடுத்தது என உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் குர்ஷித்.

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தாப்பரின் ‘பிசாசின் வழக்க றிஞர்’ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற குர் ஷித், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக ப.சிதம்பரத்தின் செயல்பாடு குறித்து பிரதமர் அலுவலகத் திற்கு நிதியமைச்சகம் குறிப்பு அனுப்பியதன் கார ணமாக பிரணாப் முகர்ஜிக் கும் சிதம்பரத்திற்கும் முரண் பாடு முற்றியுள்ளது என் பதை ஒப்புக்கொண்டார்.

எனினும், ”ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஏலத்திற்கு விட வேண்டிய தில்லை என்ற முடிவை எடுத்தது மத்திய அமைச்சரவைதான் எனக் குறிப்பிட்ட குர்ஷித், பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் ஒரு குறிப் பிட்ட விஷயத்தில் ஒப்புதல் அளிக்காத போது தனிப் பட்ட அமைச்சர் மட்டும் அந்த கருத்தை மாற்றிவிட முடியுமா” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறையிலிருக் கும் ஆ.ராசா, சிதம்பரம் மட்டுமின்றி பிரதமரும் அமைச்சரவையும் குற்றவா ளிகளே என தொடர்ந்து கூறிவரும் நிலையில் குர்ஷித்தின் பேச்சு அதை உறுதிப்படுத்தியுள்ளது. 

ப.சிதம்பரம்மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சர வையும் இதற்குப் பொறுப் பாக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

--------------------------------------------------------------------------
  வறுமைக்கோடு இலக்கு மாறுமா?
-

தினசரி ரூ 32க்கு மேல் நுகர்பொருள் பெறும் நபர், வறுமைக்கோட்டு நிலையில் இருப்பதாக கருத முடியாது என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங்கை
திட்டக்குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஏற் பட்ட சர்ச்சைத் தொடர்பாக அவர், பிரதமரிடம் விவாதித்த தாககூறப்படுகிறது.

நகர்ப்புறத்தில் ரூ.32ம் கிராமப்புறங்களில் ரூ.26 வரை, தினமும் நுகர்பொருள் வாங்குபவர்கள் ஏழைகள் என்று திட்டக்குழு அறிவித் திருந்தது. திட்டக்குழுவின் அறிக்கைப்படி ரூ.32க்குமேல் அன்றாடம் நுகர்பொருள் பெறுபவர்கள் ஏழைகள் அல்ல எனக் குறிப்பிடப்பட் டிருந்தது.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடுமை யான எதிர்ப்பு தெரிவித்தன. திட்டக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைப்படி (ஜூன் மாதம் 2011 நிலவரம்) ரூ.4,284 செலவு செய்யும் 5 பேர் கொண்ட குடும்பத்தினர் நகர்ப்புறத்தில் வசிக்கும் பட் சத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக பட்டி யலிடப்படுகிறார்கள். அதே போன்று மாதம் ஒன்றுக்கு ரூ.3905 வரை செலவு செய்யும் கிராமப்புற குடும்பத்தினர் மட்டுமே வறுமைக்கோட் டுக்கு கீழே உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

அரசு சமர்ப்பித்த அறிக் கைப்படி வறுமைக்கோட் டுக்கு கீழே உள்ள பயனா ளிகள் எண்ணிக்கை 40.74 கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை மிக கூடுதலாக இருக்கும் பட்சத்தில் வறுமை ஒழிப்புத்திட்டத்தின் இலக்கு வீழ்த்தப்படும் என, திட்டக் குழு அதிகாரிகள் தெரிவித்த னர். வறுமைக்கோட்டுக் கான வரையறை குறித்து திட் டக்குழு மறு ஆலோசனை செய்ய வேண்டும் என, அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவ்விவகாரம் தொடர் பாக திங்கட்கிழமை அலு வாலியா, நகர்ப்புற மேம்பாட் டுத்துறை அமைச்சர் ஜெய் ராம் ரமேஷை சந்தித்து விவா திக்கிறார்.

தகவல் மற்றும் ஒலிபரப் புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி சனிக்கிழமையன்று கூறுகையில், வறுமைக்கோடு வரையறை தொடர்பாக நாங் கள் தகவல் கேட்டபோது திட்டக்குழு இந்த அறிக்கை யை தந்தது.

இது துவக்கக்கட்ட ஆவ ணம் என்றும் இறுதி வடிவ ஆவணம் அல்ல என்றும், எங் களிடம் தெரிவிக்கப்பட்டிருந் தது என்றார்.

எனவே வறுமைக்கோட் டுக்கான வரையறை அளவு கள் மாறலாம் என்றார். திட் டக்குழுவின் விளக்கத்திற்கு தேசிய ஆலோசனைக்குழு வின் உறுப்பினர் அருணா ராய் உள்பட இதர உறுப்பி னர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
            
                              

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?