தொடரும் தொ [ல்] லைத் தொடர்பு,,,

முதலில் 2-ஜி &  டி.டி.எச்
                                                     
2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண் டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைவரிசைக் கற்றைகளை, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச் சகம், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உரிமம் அளித்ததில் ஆ.ராசாவின் பதவி காலத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு நாட்டின் கருவூலத்திற்கு வந்து சேர வேண்டிய பணம் இழப்பாகிவிட்டதாக கணிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக துவங்கிய சி.பி.ஐ.விசாரணை, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் தொடர்கிறது. தயாநிதிமாறன், ப.சிதம்பரம் உள்ளிட் டோர் மட்டுமின்றி 2001ம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியிலிருந்த பாஜக கூட்டணி அரசின் தொலைத் தொடர்பு அமைச் சர்களாக பதவி வகித்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுகளும், அடுக்கடுக் கான புகார்களும் எழுந்துள்ளன. இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த ஊழலில் அரசியல்வாதி களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, அரசின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தை பயன்படுத்தி தனியார் பெரும் நிறு வனங்கள் கொள்ளைலாபம் அடித் திருப்பது ஒவ்வொன்றாக நிரூபணமாகி வருகிறது.

இந்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையின்போது சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டிடிஎச் சேவையை நடத்துவதற்கான விலை உயர்ந்த அலைக்கற்றைகளை பயன்படுத்தும் உரிமங்களையும் பெற்றிருப்பது சிபிஐயின் கவனத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக, டிஷ் டி.வி. இந்தியா லிமிடெட், ரிலையன்ஸ் பிக் டி.வி. பிரைவேட் லிமிடெட், பார்தி மல்டி மீடியா லிமிடெட், பார்தி பிசினஸ் சேனல் பிரைவேட் லிமிடெட், தூர்தர் ஷன், சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா ஸ்கை லிமி டெட் ஆகிய நிறுவனங்கள் இத்தகைய அலைக்கற்றைகளை பெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

மேற்கண்ட நிறுவனங்களில் தூர்தர்ஷன்,டிஷ் டி.வி தவிர,மற்ற நிறுவனங்கள் ஏற் கெனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறிப்பாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிமாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குழுமம் ரூ. 700 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்த நிறுவனத்திற்குதான், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை அதன் முதன்மை உரிமையாளரை மிரட்டி, தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி தயாநிதி மாறன் கைமாற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கைமாற்றலுக்கு கைமாறாகத்தான் ரூ.700 கோடியை சன் டி.டி.எச் நிறுவனத்தில் மேக்சிஸ் குழுமம் முதலீடு என்ற பெயரில்கலாநிதிமாறன் நிறுவனத்திற்கு வழங்கியது.

ஏற்கெனவே இந்த புகாரை தீவிரமாக விசாரித்து வரும் சிபிஐ, டிடிஎச் சேவைக்கான அலைக்கற்றை பெற்றதில் என்ன நடந்தது என்பதையும் விசாரிக்க துவங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, டாடா ஸ்கை நிறுவனத்திற்கும், ரிலையன்ஸ் நிறு வனத்திற்கும் டிடிஎச் சேவைக்கான அலைக்கற்றைகள் வழங்கியதில் பெரு மளவு முறைகேடுகள் நடந்திருப்பதற் கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவந்திருப்பதால், சிபிஐ தனது விசாரணையை மேலும் விரிவாக்கியுள்ளது
.
அடுத்து காமன் வெல்த் போட்டி
                                       
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்தியதில் நடந்த ஊழல் தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தனது விசாரணை வளையத்தை விரிவுபடுத்துகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக நடந்த 71 திட்டங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த மேற்கண்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.

71 திட்டங்களில், 23 திட்டங்கள் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்துடன் தொடர்புடையவை; 14 திட்டங்கள் காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக்குழுவோடு தொடர்புடையவை; 9 திட்டங்கள் தில்லி மேம்பாட்டு ஆணையத்துடனும், 6 திட்டங்கள் மத்திய அரசின் பொதுப்பணித்துறையுடனும் தொடர்புடையவை என தெரியவந்துள்ளது.

இவை தவிர தில்லி மாநில அரசு, தில்லி மாநகராட்சி, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை ஆகியவற்றால் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக கிடைக்கப் பெற்றுள்ளன.

மேற்கண்ட 71 திட்டங்கள் தவிர இதர 26 திட்டங்களும் காமன்வெல்த் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

71 திட்டங்களில் மட்டும் ரூ. 3 ஆயிரத்து 316 கோடி அளவிற்கு செலவிடப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அனைத்தையும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

இவை தவிர 26 திட்டங்களில் என்ன நடந்தது என்பது குறித்தும் தனியாக ஒரு ஆய்வு நடக்கிறது.

விளையாட்டு அரங்கம் கட்டியது, போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை அளித்தது, தொலைத்தொடர்பு சாதனங் களை வாங்கியது, இந்தத் திட்டங்களையெல்லாம் செயல் படுத்துவது தொடர்பாக நடந்த டெண்டர் ஏல நடைமுறைகள், வி.ஐ.பி. நபர்களுக்கு சிறப்பு நுழைவுச் சீட்டுகளை விற்பனை செய்தது, வீரர்களுக்கு தங்கும் இடவசதி, சுகாதார வசதிகளை செய்துகொடுத்தது, மருத்துவ ஏற்பாடுகளை செய்தது என காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றிலும் அதிகாரிகளும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும், ஒப்பந்ததாரர்களும் தங்கள் இஷ்டத்திற்கு புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்பது லஞ்ச ஒழிப்பு ஆணையம், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவற்றின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                       

இந்தப் பின்னணியில் 71 திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புது செய்தி
 ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. 2ஜி விவகாரத்தின் ஒருபகுதியாக, ஏர்செல் பங்குகளை மலேசிய நிறுவனமான மேக்சிஸ்க்கு விற்க தயாநிதி நிர்பந்தப்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு.

”ஆ.ராசா,தயாநிதிகளுக்கு கல்மாடி என்ன குறைந்தவரா?
சி.பி.ஐ.நியாயமாக விசாரித்து தேசிய அளவு ஊழலில்  


தெற்கா [சிதம்பரம்,தயாநிதி,ஆ.ராசா] ?


வடக்கா [கல்மாடி,அம்பானி,டாடா]? 
                           யார் முன்னிலை என்பதை விருப்பு,வெறுப்பின்றி சொல்ல வேண்டும்.
இன்னும் [வழக்கம் போல்]  20 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை!”


                          ------------------------------------------------------------

()சோதனை மேல் சோதனை.
                       

தி.முக., முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் அவரடைய சகோதரர் கலாநிதி வீடுகளில் சி.பி.ஐ.,தற்போது[10-10-11] காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அவர்களுடைய அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறது.

தயாநிதியின் வீட்டிற்கு, 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான பைல்களை, தொலைத்தொடர்புத் துறை சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., உத்தரவிட்டிருந்தது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன.

சன் "டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளைக் கொண்டிருந்தன. அதன் மூலம் சன் "டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் "டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன என்று சில தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

புகார் குறித்து, ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய சி.பி.ஐ., இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய தொலைத்தொடர்புத் துறையை கேட்டுக் கொண்டது. ஆனால், அந்தத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் முழுமையான விசாரணையை சி.பி.ஐ., துவக்கியது.
இதையடுத்து, சன் "டிவி' நிறுவனத்திற்கும், தயாநிதியின் வீட்டிற்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த கேபிள்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான விவரங்களைத் தரும்படி, தகவல் தொடர்புத் துறையை சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
                             
                            
இந்த நிலையில் இன்று[10-10-2011]காலை புதுடில்லி ம்ற்றும் சென்னையில் உள்ள தயாநிதி மற்றும் கலாநிதி வீடுகள், அலுவலகங்களில் சிபி.ஐ., சோதனை நடத்தி வருகிறது
________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?