தங்கமுலாம் பூசிய பொருளை தங்கத்தின் விலைக்கே விற்ற கதை.
தபன்சென்னுடனான பேட்டியில் ஒரு பகுதி:
                   
: தலைமை தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) இறுதி அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் (கேஜி படுகை) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமி டெட் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து ஒரு முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிடுமா? 

தபன்சென்: இந்த விவகாரத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருக்க வேண்டும். கடந்த 6 ஆண் டுகாலமாக நான் எந்த பிரச்சனைகளை எழுப்பி வந்தேனோ, அவற்றை தற்போது சிஏஜி உறுதிப்படுத்தியுள்ளது. கேஜி படுகை யில் உள்ள டி.6 பிளாக் பகுதியில் ஊழல் நடக் கவில்லை என்று சாதிப்பதற்கே ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு முயற்சிக்கிறது. இந்த படுகையில் நாட்டின் வளத்தை நேர்மையற்ற முறையில் உறிஞ்சியெடுத்து, அதன்மூலம் நாட்டின் கருவூலத்தை வற்றிப் போகச் செய் யும் விதத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ள ஒரு தனியார் நிறுவனத்தை பாதுகாக்கவே அரசு முயற்சிக்கிறது. இந்த நிறுவனத்தின் எரிவாயு விலையை மிகவும் அநியாயமான முறையில் உயர்த்தி நிர்ணயிப்பதற்கு அனைத்து வித மான உதவிகளையும் செய்தது முதல் ஒவ் வொரு நடவடிக்கையும் மேற்படி தனியார் நிறு வனத்தை திருப்திப்படுத்துவதற்காகவே அர சால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேஜி படு கையிலிருக்கும் எரிவாயு வளத்தை, அரசுக்கு மிக மிக சொற்பமான தொகையை கொடுத்து விட்டு, அகழ்ந்து எடுத்துக்கொண்ட மேற்படி நிறுவனம், தங்கமுலாம் பூசிய ஒரு பொருளை தங்கத்தின் விலைக்கே விற்பதைப் போல, வெளிச்சந்தையில் மிகப்பெரும் அளவில் விலை வைத்து விற்பதற்கு அனுமதிக்கப்பட் டது. இந்த தனியார் நிறுவனம் தான் எடுக்கும் இயற்கை எரிவாயுவின் விலையை எந்த அள விற்கு உயர்த்த வேண்டுமென்று விரும்பியதோ அந்த அளவிற்கு அரசே உயர்த்தி அறிவித் தது. இந்த குறிப்பிட்ட நடவடிக்கைதான் இந் நிறுவனத்திற்கும் அரசாங்கத்தின் உயர் மட் டத்தில் இருக்கும் கள்ளத்தனமான, மோசடித் தனமான, தீய கூட்டணி இருப்பதை உறு திப்படுத்துகிறது.

கேஜி படுகை ஊழல் விவகாரத்தில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சம் எதுவெனக் கருதுகிறீர்கள்?

தபன்சென்: இந்த விவகாரம் எரிசக்தி வளத்துடன் நேரடியாக தொடர்புடையது. மக் களின் வாழ்வோடும் நாட்டின் வளர்ச்சியோ டும் நெருங்கிய தொடர்பு கொண்டதும், மிக முக்கிய வாழ்வாதாரமும் ஆகும். இதை கை யாண்டிருக்கும் விதம், ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பையே கேள்விக் குள்ளாக்கியுள்ளது. எனவே கேஜி படுகை யில் உள்ள டி.6 பிளாக் எனும் பகுதியில் நடந் துள்ள முறைகேடுகள் முதன்மை முக்கியத்து வத்தோடு விசாரிக்கப்படவேண்டிய தேவை உள்ளது.

இங்கு எரிவாயு எடுக்கும் திட்டத்தில் முதல் நாளிலிருந்தே திட்டமிட்ட மோசடிகள் அரங்கேறியுள்ளன. இப்படுகையில் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி கோரும் விதமாக முத லில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ‘கள மேம்பாட்டுத் திட்டம்’ ஒன்றை உரு வாக்கி சமர்ப்பித்தது. இந்த திட்டத்தின்படி, மேற்கண்ட டி.6 பிளாக்கிலிருந்து நாள் ஒன் றுக்கு 40 மில்லியன் மெட்ரிக் கனஅடி என்ற அடிப்படையில் இயற்கை எரிவாயுவை, 2.47 பில்லியன் டாலர் செலவில் உற்பத்தி செய்ய அனுமதி கோரியது. பின்னர் திடீரென மேற் கண்ட ‘கள மேம்பாட்டுத்திட்டம்’ திருத்தப் பட்டது. அதில் உற்பத்திஇலக்கு என்பது இரண்டு மடங்காக அதாவது, 80 மில்லியன் மெட்ரிக் கனஅடி என உயர்த்தப்பட்டது. ஆனால், இதற்கு ஆகும் செலவு நான்கு மடங் காக, அதாவது 8.84 பில்லியன் டாலராக அதி கரித்துக்காட்டப்பட்டது. இந்த ஒட்டுமொத்த திட்டமும் எரிசக்தி துறையின் ஹைட்ரோ கார்பன் பிரிவின் பொது இயக்குநர் வி.கே.சிபல் என்பவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர் தான் தற்போது சிபிஐ விசாரணையை எதிர் கொண்டிருக்கிறார். வெறும் 33 நாட்களிலேயே இந்த ஒப்புதலை அவர் அளித்திருக்கிறார். இவ்வளவு மிகப்பெரும் தொகை மோசடியாக அதிகரித்து காட்டப்பட்டுள்ள திட்ட அறிக் கைக்கு அவர் எப்படி ஒப்புதல் அளித்தார் என் பதே நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யேயும் சந்தேகங்களை எழுப்புவதற்கு அடிப் படையாக அமைந்தது.

சர்வதேச அளவில் இயற்கை எரிவாயு விலை கள் குறைந்துகொண்டிருந்த தருணத்தில், 2007ம் ஆண்டில், அதிகாரமளிக்கப்பட்ட அமைச் சர்கள் குழுவானது ரிலையன்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட எரிவாயுவின் விலை ஒரு யூனிட்டுக்கு (இயற்கை எரிவாயுவை மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்ற அலகில் அள விடுகிறார்கள். இங்கு ஒரு யூனிட் என்பது மேற் கண்ட மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டில் 1 பங்கு என்று பொருள் கொள்ளலாம்) 4.2 டாலர் என நிர்ணயித்தது அநியாயமானது என கருதுகிறீர்களா?

தபன்சென்: துரதிருஷ்டவசமாக இன் றைக்கு ஒட்டுமொத்த அரசுநிர்வாகமே கார்ப் பரேட் நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள் ளது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன விலை நிர்ணயிக்கவேண்டுமென்று சொன் னதோ, அந்த விலையையே அரசு நிர்ணயித்து ஒப்புதலும் அளித்தது. அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம், தாங்கள் எடுக்கும் எரிவாயுவின் விலையை யூனிட் ஒன்றுக்கு 4.3 டாலர் என நிர்ணயிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வற் புறுத்தியது. ஆனால் ஏற்கெனவே பொதுத் துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழ கம் (என்டிபிசி) சர்வதேச அளவிலான டெண் டரில், ஒரு யூனிட் எரிவாயு உற்பத்தி செய்து கொடுப்பதற்கு 2.34 டாலரே செலவாகும் என குறிப்பிட்டுள்ளது என்பதை நினைவுகூர வேண்டும். லாபம் இல்லாமல் வெறுமனே யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்று என்டி பிசி நிறுவனம் விலை நிர்ணயித்திருக்க முடியாது. ரிலையன்ஸ் நிறுவனமே கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பதில் மனுவில், ஒரு யூனிட் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான அடிப்படைச் செலவு 2 டால ருக்கும் குறைவானதே என்று ஒப்புக்கொண்டி ருக்கிறது. இந்தப்பின்னணியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப, ஒரு யூனிட்டிற்கு 4.2 டாலர் என எரிவாயுவிற்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று பெட்ரோலியத்துறை தொடர்பான செயலாளர் களின் குழு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போ தைய மின்சாரத்துறை அமைச்சரும், உரத் துறை அமைச்சரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர்களது கருத்துக்கள், மேற்படி அதிகார மளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலை வரான பிரணாப் முகர்ஜிக்கு எழுத்துப்பூர்வமா கவும் அளிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிர்ப்பந் தத்திற்குப் பணிந்து, யூனிட் ஒன்றுக்கு 4.2 டாலர் என விலை நிர்ணயம் செய்துவிட்டால், அதற்கு முன்னதாக சர்வதேச அளவிலான டெண்டரில், யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்று என்டிபிசி நிறுவனம் குறிப்பிட்டிருப் பதன் அடிப்படையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இரண்டுபெரும் திட்டங் களான கந்தார் மற்றும் கவாஸ் ஆகிய எரிவாயு உற்பத்தி திட்டங்களில் ரூ.24 ஆயிரம் கோடி யை பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி இழக்க வேண்டிய ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் கூட, கொஞ்சமும் வெட்கமின்றி, ரிலையன்ஸ் நிறுவனம் கூறிய அதிகபட்ச விலைக்கு ஒப் புதல் அளித்தது அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு.

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்படும் எரிவாயுவுக்கு மிக அதிக விலை நிர்ணயித்து, தங்க முலாம் பூசிய பொருளை தங்கத்தின் விலைக்கே விற்ற கொடுமை எந்த அளவிற்கு கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமோ, அதே அளவிற்கு அமைச்சர்கள் குழுவே கூடி எரிவாயு விலையை நிர்ணயித்த விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனத்திற்காக எரிவாயுவின் விலை மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டு, அதன் சுமைகள் அனைத்தும் ஏற்றப்பட்ட இந்த நாட்டின் மக்களிடம் உண்மை உரத்துச் சொல்லப்படவேண்டும். இந்த தருணத்தி லும் கூட நான் அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பினேன். எந்த அடிப்படையில் ரிலை யன்ஸ் நிறுவனம் எரிவாயுவின் விலையை யூனிட் ஒன்றுக்கு 4.3 டாலர் என்று நிர்ண யித்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது என விளக்கமளிக்க வேண்டுமெனக்கோரி கடிதம் எழுதினேன். ஆனால் அதிகாரமளிக் கப்பட்டக்குழு 4.3 டாலர் அல்ல; 4.2 டாலர் என்றுதான் விலை நிர்ணயிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது எனக்கூறி நாட்டு மக்களை முட்டாளாக்கும் பதிலை தெரிவித்தது.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் பிரதமரின் பங்கும், பிரதமர் அலுவலகத்தின் பங்கும் இருக் கிறது என எப்படிக்கூறுகிறீர்கள்? 

தபன்சென்: இந்த விவகாரத்தில் பிரதம ருக்கும் அவரது அலுவலகத்திற்கும் நேரடி யாக பங்கு இருக்கிறது என நான் கூறுகி றேன். பல்வேறு வழக்குகளில் விவரங்கள் பிர தமருக்கும் தெரியும் என்று கூறப்படுவதைப் போல அல்ல இந்த வழக்கு. இந்த விவகாரத் தில் பெட்ரோலிய அமைச்சகம் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியாது; ஒட்டு மொத்த நடவடிக்கைகளிலும் இவருக்கு பங்கு இருக்கிறது என்று பிரதமரை நோக்கி விரல் நீட்டாமல் இருக்க முடியாது. ஏனென் றால் இவ்வளவு மிகப்பெரிய காரியத்தை தனிப்பட்ட முறையில் செய்வதற்கான அதிகா ரம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் இல்லை. இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறி மற்றவர்கள் கைகழுவிவிட்டுப் போக முடியாது. 2007ல் இந்த முறைகேடுகள் குறித்து பிரத மருக்கே நேரடியாக கடிதம் எழுதினேன். நான்கு முறை ஐந்து முறை கடிதங்கள் எழுதினேன். ஒரே ஒரு கடிதத்திற்கு மட்டும், உங்கள் கடிதம் கிடைத்தது என்று பதில் வந்தது.

கிருஷ்ணா-கோதாவரி படுகையின் டி-6 பிளாக்கில் எரிவாயு உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?
தபன்சென்: ரிலையன்ஸ் நிறுவனம், மேற்கண்ட கே.ஜி.படுகை டி-6 பிளாக்கில் எத்தனை பெரிய ஊழலில் ஈடுபட்டது என் பது, அந்நிறுவனம் தனது பங்குகளில் குறிப் பிட்ட சதவீதத்தை பாரத் பெட்ரோலியத்திற்கு விற்றபோதுதான் முழுமையாக தெரியவந்தது. நாளொன்றுக்கு 80 மில்லியன் மெட்ரிக் கனமீட்டர் என்ற அடிப்படையில் எரிவாயுவை உற்பத்தி செய்ய, 8.84 பில்லியன் டாலர் அள விற்கு உற்பத்திச் செலவு ஆகும் என்ற தங்க ளது திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதற்குப் பின்னர் இந்த உற்பத்தியில் 30 சதவீதத்தை 7.2 பில்லியன்டாலர் என்ற அடிப்படையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு விற்றி ருக்கிறார்கள். எனவே உண்மையில் உற்பத் திச்செலவு எவ்வளவு என்பது அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அதுமட்டுமின்றி, இந்த உடன்பாட்டின் அடிப்படையில் அரசாங்கத் திற்கு வந்து சேரவேண்டிய பங்கு கிடைப்ப தற்கே 10 ஆண்டுகள் ஆகும். ஆனாலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் பாரத் பெட் ரோலியம் நிறுவனத்திற்குமான உடன்பாட் டை அரசு அவசர அவசரமாக மேற்கொண் டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் விலை நிர் ணயங்களில் முரண்பாடுகள் இருக்குமா னால், இந்த உடன்பாட்டையே மறுபரிசீல னை செய்யவேண்டுமென மீண்டும் அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இந்த உடன் பாடு முழுமையடைந்ததன் காரணம் என்ன வென்றால், தனது பாதையில் எந்த ஒரு தடைக்கல்லும் வந்துநிற்கக்கூடாது என்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணமே. தற்போது எரிவாயு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவ னம் தனது திருத்தப்பட்ட கள மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் எண்ணெய் கிணறுகளை தோண்டாததன் விளைவாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பெட் ரோலிய அமைச்சகமே கூறுகிறது. மேற்கண்ட திட்டத்தின்படி 80 மில்லியன் மெட்ரிக் கன மீட்டர் அளவிற்கு உற்பத்தி செய்வோம் என ரிலையன்ஸ் நிறுவனம் அரசுக்கு உறுதியளித் திருந்தாலும், இன்றுவரையிலும் சுமார் 40 மில்லியன் மெட்ரிக் கன மீட்டர் அளவிற்கே உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த அளவிற்குத் தான் அந்நிறுவனம் கட்டமைப்பு ஏற்படுத்தி யிருக்கிறது. எனவே இது அப்பட்டமான முறைகேடு; மோசடித்தனம். இப்போது அவர் கள் மீண்டும் எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்ற கருத்துக்களை பரப்பத் துவங்கிவிட்டார்கள். யூனிட் ஒன்றுக்கு 5.2 டாலர் அல்லது 5.3 டாலர் என விலையை உயர்த்த வேண்டுமென்று வற்புறுத்துகிறார் கள். இதற்காகவே உற்பத்தியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டு நிர்ப்பந்தத்தை ஏற் படுத்துகிறார்கள். 


இந்து நாளேட்டில் இருந்து தமிழில் எஸ்.பி.ராஜேந்திரன்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?