பயணிகளைக்கொன்ற பேருந்து ஒட்டுநர்.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, ஓட்டுநர் ஒருவர் தான் ஓட்டி வந்த பேருந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இறங்கி ஓடச் சொன்னார். சாலையில் அவர்கள் சென்றபோது, அவர்கள் மீது வேகமாக பேருந்தை ஓட்டி வந்து ஏற்றிக் கொன்றார்  ஓட்டுநர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் ராஜாஸ்தான் மாநிலம் கருவாலி மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பன்னிரண்டு பேரில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
                              

அந்த ஓட்டுநர் பெயர் ராஜூ என்றும், அந்த சுற்றுலாப் பேருந்தில் வந்தவர்கள் எரிபொருளுக்கான பணத்தைத் தர மறுத்ததால் கோபம் அடைந்து ஓட்டுநர் ராஜூ, ’அவர்கள் அனைவரையும் கீழே வலுக்கட்டாயமாக இறங்கச்’ சொல்லி, பின்னர் அவர்கள் மீது பேருந்தைஏற்றிக் கொன்றதாகமற்ற பயணிகள் கூறியுள்ளனர்.
இந்தப் பேருந்து ஆக்ராவில் இருந்து கருவாலியில் உள்ள கேலாதேவி கோயிலுக்குச் சென்றது. இந்தபடு கொலைக்குப்பின் அந்த ஓட்டுநர் அந்த இடத்தை விட்டு ஓடிதலைமறைவாகிவிட்டார்.
இது மகாபடுகொலை.பேசி தீர்க்கலாமே?அல்லது முன் செய்தது போல் அவர்களி இறக்கி விட்டு சென்றிருக்கலாமே. அவர்கள் கும்பிட சென்ர தெய்வம் காப்பாற்றவில்லையே.அதன் பெயர் கேலாதேவி என்றிக்கும் போது இவர்கள் அபயக்குரல் எப்படி கேட்டிருக்கும்/.
இனி ஓட்டுநர் உரிமம் கொடுக்கும் போது அவ்வப்போது மனநல பரிசோதனை அறிக்கையையும் கேட்க வேண்டும். முன்பும் இதே போல் இரு ஓட்டுநர்கள் சண்டையின் போது இருவரும் மாறி,மாறி பேருந்துகளுக்கு தீவைத்ததில் பயணிகள் பலர் உயிருடன் கருகி சாம்பலாகினர்.அதுவும் வட மாநிலத்தில் நடந்ததுதான்.தமிழக ஓட்டுநர்கள் பரவாயில்லை.சிற்றுந்து[மினி பஸ்]ஓட்டுநர்களைத்தவிர.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?