நெருக்கடிகள்,,,,,,.


நெருக்கடியில் அசாஞ்சே,

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என, "விக்கிலீக்ஸ்' தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய, பல்வேறு ரகசிய ஆவணங்களை, லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம், உலகின் கவனத்தைக் கவர்ந்தது "விக்கிலீக்ஸ்'. இதன் தொடர்ச்சியாக, "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது அவர் லண்டனில் ஜாமினில் உள்ளார். இந்நிலையில், "விக்கிலீக்சுக்கான' நிதி திரட்டும் வழிகளை, அமெரிக்கா அடைத்து விட்டது. விசா, மாஸ்டர் கார்டு, வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பே பால் போன்ற நிதி நிறுவனங்கள், "விக்கிலீக்சுக்கான' நிதி திரட்டும் வேலையை நிறுத்தி விட்டன. இதுகுறித்து, "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட அறிக்கையில், "கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இனி, ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி, முழு வீச்சில் நடைபெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                       .
விக்கிலீக்சிற்கு எதிரான பிரசாரம் குறித்து, பத்திரிகையாளர்களுக்கு வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசாஞ்சே லண்டனில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "விக்கிலீக்ஸ் நிறுவன தகவல்களால், பல்வேறு சர்வதேச நாடுகளிடையே பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. இதன்காரணமாகவே, அவர்கள் தங்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். தங்களது நடவடிக்கைகளை முடக்க பல நாடுகள் முயன்று வருவதாகவும்" அசாஞ்சே தெரிவித்தார்.
_______________________________________________________________________________________________________
சாமி வரம் கொடுத்தாலும்.
  நெருக்கடியில் கனிமொழியின் பிணை                     


2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்கவில்லை. இது தொடர்பான தீர்ப்பை வரும் நவ.3 ம் தேதிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. வெள்ளிக்கிழமை டில்லிக்கு சென்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜாமின் பெறும் கனிமொழியை அழைத்து கொண்டுதான் சென்னை திரும்புவார் என்ற நம்பிக்கையில் தி.மு.க.,வினரும், கனியின் குடும்பத்தினரும்  காத்திருந்தனர். இன்று ஜாமின் கிடைத்தால் கனிமொழி நாளைமறுநாள் ( புதன்கிழமை) தனது குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை கொண்டாடுவர் என்ற எதிர்பார்ப்பில் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக கனியின் தாயார் ராஜாத்தி, மகன் ஆதித்யா கணவர் அரவிந்தன் ஆகியோர் ‌கோர்ட்டுக்கு வந்திருந்தனர். இந்த மனு விசாரணை முடிந்ததும் தீர்ப்பு வரும் 3 ம் தேதிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்து விட்டார்.
முன்னதாக கனிமொழியின் வக்கீல் அல்தாப் அகம்மது தனது வாதுரையில் , எனது கட்சிக்காரர் மீதான வழக்கில் விசாரணை முடிந்து குற்றச்சாட்டும் பதிவாகி முடிந்து விட்டது. இதனால் சாட்சியக்களை அழிப்பார் என்றோ கலைப்பார் என்றோ என்பதில் கேள்வி எழவில்லை. மேலும் இவருக்கு எந்தவொரு நிபந்தனை வேண்டுமானாலும் கோர்ட் விதிக்கட்டும், எந்நாளில் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்நாளில் தவறாமல் ஆஜராகி விடுவார் என்றும் கூறினார்.
ஜாமின் மனு விசாரணை காலையில் வந்ததும் , கனியின் மனு தொடர்பாக மதியம் 2 மணிக்கு பதில் அளிப்பதாக சி.பி.ஐ.,வக்கீல்  தெரிவித்தார். இந்த விவாதம் மதியம் 2 மணிக்கு நடந்தது. இதில் கனிமொழி உள்பட 5 பேர் ஜாமி‌னையும் சி.பி.ஐ, வக்கீல் எதிர்க்கவில்லை. இவர்களுடன் ஜாமின் கேட்டிருந்த ஸ்வான் பிரமோட்டர் நிறுவனத்தை சேர்ந்த சாகித்பாவ்லா, ராஜாவின் தனிச்செயலர் ஆர்.கே., சந்தோலியா ஆகியோரது ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்தது. இதில் லைசென்ஸ் பெறுவதில் பல ஆயிரம் கோடி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது.

                
ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில் இந்திய தண்டனை சட்டம் கிரிமினல் செக்சன்கள் நம்பிக்கை மோசடி ( 409 ), (criminal breach of trust), 120 (பி) (criminal conspiracy), - 420 , (cheating) , 468, மற்றும் 471 (forgery) , 12, 13 (2), 13 (1பி), ஏமாற்றுதல், கூட்டுச்சதி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
 இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கனிமொழியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கனிமொழிஒரு பெண் , பட்டதாரி அவர் ஒரு எம்.பி., இதனால் இவருக்கு ஜாமின் வழங்க வேண்டும், மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது உள்ளிட்ட சரத்துக்களை வலியுறுத்தி இன்று ஜாமின் மனு விவாதத்தை அவரது வக்கீல்கள் எடுத்துரைத்தனர். இருப்பினும் ஜாமின் உத்தரவு வரும் 3 ம் தேதிக்கு தள்ளிப்போனது.
சி.பி.ஐ.வழக்கறிஞர் எதிர்க்காதபோது நீதிபதி ஷைனி நவம்பர் 3ம் தேதி வரை தள்ளி வைத்தது ஏன்?
உச்சநீதிமன்றமும்,சி.பி.ஐ ,நீதிமன்றமும்கனி மொழிக்கு பிணை கொடுக்கக்கூடாது என்பதில் சற்று பிடிவாதம் காட்டுவதாகத்தான் தெரிகிறது.
இப்போதைய தள்ளி வைப்பு தேவை இல்லாத ஒன்றாகத்தெரிகிறது.
கனிமொழி மட்டுமல்ல 2ஜி யில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் சட்டப்பூர்வமாக பிணை வழங்குவதில் என்ன இடர்பாடுகள் உள்ளது எனத்தெரியவில்லை.வேண்டும் என்றேதான் தாமதப்படுத்தப்படுவதாகத்தெரிகிறது.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காகித ஓடம் கடலலைமேலே போவது போலே

 <> படத்துக்குத்தான் தலைப்பு. மேலுள்ள செய்திக்கல்ல<>                  
                               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?