பரவும் போராட்டம்,

-எஸ்.ஏ.பெருமாள்

                            

  கடந்த ஒரு மாத காலமாக ஆயிரக் கணக்கான அமெரிக்க மக்கள் வால் தெருவைக் கைப்பற்றுவோம் என்ற முழக் கத்துடன் அந்தத் தெருவை ஆக்கிர மித்துப் போராடி வருகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்கா வின் ஆளும் வர்க்கமாய் திகழும் முத லாளிகளின் தலைமையகமாய் திக ழுவதே வால்தெருவாகும். உலகையே நிரந்தரப் போர்க்களமாக்கிவரும் பதி னான்கு ஆயுத உற்பத்தி முதலாளிகள் குடியிருப்பது இந்தத் தெருவில்தான். இவர்கள்தான் அமெரிக்க அரசை ஆட்டிப்படைப்பவர்கள். 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளா தார நெருக்கடியின் போது அமெரிக்க வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங் களுக்கும் பல லட்சம் கோடி டாலர்களை அள்ளி வழங்கி அவர்களது நஷ்டத்தை ஒபாமா அரசு ஈடுகட்டியது. ஏழை, நடுத் தர, உயர் நடுத்தர மக்களுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார் கள். பொறுமையிழந்து தற்போது போராட் டத்தில் குதித்திருக்கிறார்கள். உலகைக் கொள்ளையடித்து, உலகமக்களை ஓட் டாண்டிகளாக்கும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு எதிராக அவர்கள் போர்க்குரல் கொடுக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுனிஷியாவில் துவங்கிய ‘மல்லிகைப் புரட்சி’ டுவிட்டர் மூலம் அரபு நாடு களுக்கும் வட ஆப்பிரிக்காவுக்கும் பர வியது. அங்கு ஆட்சி மாற்றங்களுக்கான போர் தொடர்கிறது. அங்கு நடைபெறும் புரட்சியானது நீண்ட நாள் ராணுவ சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரானதா கும். இப்போது வால் தெருவில் தோன்றி வளர்ந்து வரும் புரட்சி, கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்ததாகும். வால்தெருவைக் கைப்பற்றுவோம் என்று அமெரிக்கர்கள் அந்தத் தெரு வையே ஆக்கிரமித்துப் போராடிக் கொண் டிருக்கிறார்கள். இது அமெரிக்கா முழு வதும் பரவி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ் திரேலியாக் கண்டங்களில் பரவுகிறது. தற்போது 82 நாடுகளில் 951 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். லண்டன், பிரஸ்ஸல்ஸ், பிராங்க்பர்ட், ஏதென்ஸ், ரோம், ஆம்ஸ் டர்டாம், லிஸ்பன், மாட்ரீட், ஜெனிவா, பாரிஸ், வியன்னா, ஜூரிச், செர்பியா, டோக்கியோ, சிட்னி போன்ற நகரங்களில் இந்தத் தீ பரவியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகத் தொழிலாளிகளின் வயிற்றில் ஓங்கி மிதிக்கின்றன. இதை எதிர்த்து மக்கள் பேரெழுச்சியுடன் எழுந்து நிற்கிறார்கள். இந்தப் போராட்டத்தை உலகம் முழு வதும் பரப்புவதற்காக டுவிட்டரில் றறற.15டிஉவடிநெச.நேவ துவக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன், கேப்ட வுன், ஜோகன்னஸ்பர்க் முதல் தைவா னின் தாய்பெய்-தென்கொரியாவின் சியோல் வரை கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா விலும் புனே, மும்பை, கொல்கத்தா, தில்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்படப்போவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஆர்ப்பாட்டத்தில் விக்கி லீக்ஸின் தலை வர் அசாஞ்சே கலந்து கொண்டுள்ளார். உலகமயப் பொருளாதார முறை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைப் பேராசை, மக்களுக்கான உதவிகளையும், நலத்திட்டங்களையும் அரசுகள் வெட்டு வது, இவைகளுக்கு எதிராகவே ‘வால் தெருவைக் கைப்பற்று’ என்ற முழக்கம் உருவானது. இந்தப்போராட்டம் கால வரையற்றது என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்திலும், பரபரப் பான மன்ஹாட்டன் தெருக்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தி 88 பேரை கைது செய் தது. இந்தத் தாக்குதலை குதிரைப் படைப் போலீஸ் நடத்தியது. ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதால் போலீசாரைப் பார்த்து “நாங்கள் அமைதி யாக எதிர்ப்பைக் காட்டுகிறோம். உலகம் முழுவதும் இதைக் கவனித்துக் கொண் டிருக்கிறது” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். சிகாகோ நகரில் போலீஸ் 175 பேரை கைது செய்தது. வாஷிங்டன் நகரில் கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி, சுட்டுக் கொல்லப்பட்ட மார்ட் டின் லூதர் கிங்கின் மகன் ஜூனியர் மார்ட் டின் லூதர் கிங் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போது “எனது தந்தையார் உயிரோடு இருந்திருந்தால் அவரும் இன்று நம் மோடு இணைந்து நிற்பார்” என்று கூறினார். லண்டனில் செயிண்ட் பால் கதிட்ரல் சர்ச்சுக்கு எதிரிலும், லண்டன் பங்கு மார்க்கெட் அருகிலும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதர ஐரோப் பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்காகப் பல லட்சம் கோடி டாலர்களை கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு வாரிக்கொடுத்து விட்டுப் பொது மக்களை அரசு வயிற்றிலடிப்பதாக ஆர்ப் பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். மெக்சிகோ, பெரு, சிலி ஆகிய நாடு களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட் டம் செய்தனர். அநீதியான பொருளாதார அமைப்பையும், வேலையின்மையையும் கண்டித்து கோஷமிட்டனர். உலக மக்களின் பொருளாதார வாழ்வைச் சூறை யாடி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களை யும், சமூகப் பொருளாதார சமத்துவமின் மையையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் லஞ்சப்பணத்தைப் பெறும் அரசு களையும் எதிர்த்தே இந்த எழுச்சிமிகு போராட்டங்கள் 82 நாடுகளில் பரவி யுள்ளன. இந்தப் போராட்டக்காரர்கள் சதுக்கங்களில் டெண்ட் அடித்துத் தங்கி யுள்ளனர். போராட்டத்திற்கு பொதுமக்கள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். உதார ணமாக, வால்தெரு போராட்டக்காரர்க ளுக்கு இதுவரை மூன்று லட்சம் டாலர் களை அமெரிக்க மக்கள் நிதியாக வழங்கி யுள்ளனர். நியூயார்க்கில் நடைபெறும் இந்த இயக்கத்தில் 39 அமைப்புகள் இணைந்து நிற்கின்றன. இதில் நகரின் பெரிய தொழிலாளர் சங்கங்களும் இணைந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை, அராஜகவாதிகளின் போராட்டம் என்று அவதூறு செய் கின்றன. ஆர்ப்பாட்டச் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. ஆனாலும் போராட்டம் உலகம் முழுவதும் வேகமாய் பரவுகிறது. பொருளாதாரம் உலகமய மாகும் போது போராட்டங்களும் உலகமய மாகிறது. கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு மீட்சிக்காக என்ற பெயரில் கோடி கோடியாக அள்ளிக்கொடுத்த அரசுகள், அவர்களுக்குப் பெருமளவு வரிக்குறைப் பும் செய்துள்ளன. அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சலு கைகளைப் பறித்து வருகின்றன. இது வும் முக்கியக் காரணமாகும். இந்தியாவில் எந்தப்பாதிப்பும் இல்லா விட்டாலும் மத்திய அரசு 2008ம் ஆண்டு 4 லட்சம்கோடியும், 2009ல் 3.75 லட்சம் கோடியும் 2010ல் 76 ஆயிரம் கோடியும் பெருமுதலாளிகளுக்கு மீட்சிக்காக என்ற பெயரில் வழங்கியது. இடதுசாரிக் கட்சி கள் மட்டுமே மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளைக் கண்டித்தன. இவ்வாறு இந்திய அரசு 8.5 லட்சம் கோடி ரூபாய் களை வழங்கியதோடு, பெருமளவு வரிக் குறைப்பும் செய்துள்ளது. இவற்றில் பெரு மளவு ஆட்சியாளர்கள் கமிஷன் பெறுவ தாக தற்போதைய ஆர்ப்பாட்டங்களில் முழங்கப்படுகிறது. இந்திய அரசும் எதிர்ப் பலைகளிலிருந்து தப்ப முடியாது. இந்தி யாவிலும் போராட்டத்தைத் துவக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. உலகைச் சீரழித்துவரும் அமெரிக் காவின் திமிர்பிடித்த தலையில் பேரிடி யாய் இறங்கியுள்ளது வால்தெரு போராட் டம். பெரும் முதலாளிகளும் அவர்களது அரசுகளும் அழுது புலம்பி அதிர்வுகள் தாளாமல் கூக்குரலிடத் தொடங்கிவிட் டார்கள். இதிலிருந்து இந்திய பெரும் முதலாளிகளும் மத்திய அரசும் தப்ப முடியாது.

___________________________________________________________________________________

அணு மின்நிலைய ஆய்வுக்குழு.

 “அணு மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியா னது. அணுமின் நிலையத் தை மூடினால் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிக் கும். எனவே கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்படும்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். 

அதன்படி வியாழ னன்று 15 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது. 

இந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் விவரம் வருமாறு:-

வி. சாந்தா, அடையாறு புற்றுநோய் மையத் தலை வர்; ஏ. இ. முத்துநாயகம், நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர்; எம். ஆர். அய்யர், சர்வதேச அணு சக்தி கழகத்தின் கதிர்வீச்சு பாதுகாப்பு துறையின் முன்னாள் தலைவர்; சி. எஸ். பரமேஷ், மும்பை, டாடா நினைவு மருத்துவமனை யின் மருத்துவர் மற்றும் துணை பேராசிரியர்; எம். என். மத்யஸ்தா, ஓய்வு பெற்ற பேராசிரியர், மங்க ளூர் பல்கலைக்கழகம்( வெப்ப சூழலியல் நிபுணர்); என். சுகுமாறன், சென்னை, வேல்ஸ் பல்கலைக்கழகத் தில் உள்ள ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்சஸ் தலைவர்; ஏ. கே. பாய், பேராசிரியர், மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், மும்பை; ஹர்ஷ் கே. குப்தா, நிலநடுக்கவியல் நிபுணர், பேராசிரியர், தேசிய புவி இயற்பியல் ஆய்வு மையம், ஹைதரா பாத்; டி.வி. ஆர். மூர்த்தி, ஐஐடி சென்னை; கண்ணன் அய்யர், ஐஐடி மும்பை; எஸ். கே. மேத்தா, பாபா அணு ஆராய்ச்சி மையத் தின் உலைப் பிரிவு தலைவர்; எஸ்.கே.சர்மா, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்; கே. பாலு, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணுக்கழிவு மேலாண்மை பிரிவின் தலைவர்; எஸ். எம். லீ, பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம், கல்பாக்கம்; டபுள்யூ. ஸ்டீபன் அருள்தாஸ் கந் தையா, கன நீர் வாரியத் தலைவர், )(ஓய்வு) இந்த குழு வினர் கூடங்குளத்திற்குச் சென்று ஆய்வு செய்வார் கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

 கூடங்குளம் அணுமின்நிலையஎதிர்ப்பாளர்கல் இந்த குழுவிற்கும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?