ஆசையே அலை போலே

2-ஜி,ஸ்பெக்ட்ரம்,முறைகேடுகள் என மிக பரபரப்பாக உள்ளது.முதலில் இருந்து நாம் சில விடயங்களை அறிந்து கொள்வது மேலும் நல்லதாக இருக்கும்.கண்ணுக்குத்தெரியாத-உலகெங்கும் பரவியுள்ள அலைவரிசையில் முறைகேட்டில் எங்கள் நிறுவனத்தை சேர்த்தது தவறு என குற்றம் சாட்டப்பட்ட அம்பானி நிறுவன வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
கண்ணுக்குத்தெரியாத அலைவரிசை ஊழல் நம் கண்களையே மறைத்து நிற்கிறது.சில விபரங்கலைப்பார்ப்போமா?
                   
     "ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்' என்ற பிரிட்டன் விஞ்ஞானி, மின்புலம் மற்றும் காந்த புலம் ஆகியவற்றின் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தால், "மின்காந்த அலைகள்' உருவாகும் என கண்டறிந்தார். இவை வேறு ஊடகத்தின் உதவி இல்லாமல், திறந்த வெளியில் பயணிக்கும் தன்மை கொண்டவை. நம் கண்ணுக்கு தெரியாத எக்ஸ் கதிர்கள், புறஊதா கதிர்கள் ஆகியவையும் மின்காந்த அலைகளே. மின்காந்த அலைகள், அதிர்வெண், அலைநீளம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. நாம் காணும் ஒளிக்கதிர்களின் அதிர்வெண் 430லிருந்து 750 டெராஹெர்ட்ஸ் இருக்கும். எப்.எம்., ரேடியோ வருவதற்கு முன் உபயோகத்தில் இருந்த, ஏ.எம்., ரேடியோவின் அதிர்வெண் 520 முதல் 1610 கிலோ ஹெர்ட்ஸ் தான். எப்.எம்., பண்பலை 87.5 முதல் 108 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். இதே போல் மொபைல் போன்கள் உபயோகத்திற்கும் அதிர்வெண்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகமான அதிர்வெண்கள் ஒதுக்கப்பட்டன. இந்தியாவில் 900, 1800 மெகாஹெர்ட்ஸ் ஆகிய இரண்டு அதிர்வெண்கள் ஒதுக்கப்பட்டன.
2ஜி
ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., ஆகிய வழிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மொபைல் போன்கள் செயல்படுவது, 2 ஜி (2 generation) என அழைக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் அலைக்கற்றைகளில் அதிர்வெண்ணின் நீளம் 1710 முதல் 1880 மெகா ஹெர்ட்ஸ். இதை 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பர். தற்போது 2 ஜியை பின்னுக்கு தள்ளும் வகையில் 3ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டது. இது 2100 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்டது.
ஸ்பெக்ட்ரம்.
அன்றாடம் நாம் பயன் படுத்தும் "டிவி', ரேடியோ, மொபைல் போன்கள் ஆகியவை, காற்று மண்டலம் வழியாக, மின்காந்த அலைகளாக பரவி செயல்படுகின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு அதிர்வெண்களில் (பிரிகியூன்சி) இயங்குகின்றன. இந்த அதிர்வெண்களுக்கு இடையிலான இடைவெளியை அலைக்கற்றை ("ஸ்பெக்ட்ரம்') என்கிறோம்.
                              
 "2ஜி'-இது வரையிலும்
 2004 - 2006: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தயாநிதி இருந்தார்.
                                2007, மே 18: தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆக., 18: டிராய் (மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை, தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆக., 28: ராஜா தலைமையிலான மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம், டிராய் பரிந்துரைகளை நிராகரித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 2001ல் பின்பற்றப்பட்ட, "முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது' என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ல், 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால், 2007 முதல், 2008 வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்கள் பயனடைந்து, அரசுக்கு வரவேண்டிய வருமானம் வராமல், பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இம்முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
2009, அக்., 21: "2ஜி' முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
2010, நவ., 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் வழங்கிய அறிக்கையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
நவ., 11: மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறவில்லை. எனவே, சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என தெரிவித்தது.
நவ., 14: ராஜா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா.
டிச., 24: டில்லியில் சி.பி.ஐ., அலுவலகத்தில் ராஜாவிடம் விசாரணை.
2011, பிப்., 2: ராஜா கைது.
பிப்., 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப்., 24: பல்வா, "கலைஞர் டிவி'க்கு, 200 கோடிக்கு சலுகை காட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
மார்ச் 11: சென்னையில் கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை.
ஏப்., 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப்., 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க., எம்.பி., கனிமொழி, "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி, கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு. கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைப்பு.,
ஜூன் 8: டில்லி ஐகோர்ட்டில், கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு.
ஜூன் 20: சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு.
ஜூலை 20: தயாநிதி, சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தை கட்டாயப்படுத்தி மேக்சிஸ் என்ற மலேசிய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கு உதவியுள்ளார் என, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., குற்றச்சாட்டு.
ஜூலை 21: தயாநிதி, அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா.
அக்., 10: தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மற்றும் சன் "டிவி' நிறுவனத்தில் சி.பி.ஐ., சோதனை.
                                                                தயாநிதி மாறன் -கலாநிதி மாறன்களுடன் அடிக்கடி அடிபடும்
                             "மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்' என்பது, மலேசியாவில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம். மொபைல் போன், பிராட்பேண்ட், செட்-டாப் பாக்ஸ், இன்டர்நெட் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது. இது 1993ல் தொடங்கப்பட்டது. 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2005ம் ஆண்டின் படி இதன் வருமானம் 9 ஆயிரத்து 555 கோடி ரூபாய்.இந்நிறுவனம் 012 , 017 மற்றும் 0142 ஆகிய போன் எண்களை கொண்டு இயங்குகிறது. இதன் பெருமளவு பங்குகளை மலேசிய தமிழரான அனந்த கிருஷ்ணன் வைத்துள்ளார். 25 சதவீத பங்குகளை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வைத்துள்ளது. 2010ம் ஆண்டு நிலவரப்படி 1 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. பசிபிக் - ஆசிய பகுதியில் இந்நிறுவனம் மொபைல் சேவையை வழங்குகிறது. இது தவிர தமிழகம் உள்பட இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் வைத்துள்ளது.
             இதுவரையிலும் சி.பி.ஐ.விசாரணை எப்படி சென்றதோ.ஆனால் இனி அதன் விசாரனியில் தொய்வைத்தான் காண இயலும்.காரணம் மத்திய அமைச்சரையின் கூட்டு முடிவுதான் ஏலம் விடாதது என சல்மான் குர்சித்து கூறியுள்ளார்.சிதம்பரம் அமைச்சரவை முடிவுபடிதான் [முன்வந்தவர்களுக்கு முன்னுரிமை] நிதியமைச்சகக் கடிதத்தை கண்டுகொள்ள வில்லை.எனவும் தெரிகிறது.
                                     
சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்பதிலும் முன்னுரிமை முடிவு ஒதுக்கீடு பற்றி அவருக்கும்,பிரதமருக்கும் தெரியும் என்பதுதான் இப்போது ஆ.ராசா,சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் வற்புறுத்தல்.
சி.பி.ஐ.சிதம்பரத்தை விசாரிக்க இப்போது மறுத்தாலும் உச்ச நீதிமன்றம் தலையிடும்போது விசாரித்தே ஆக வேண்டும்.டிராய் கடிதம் இழப்பீடு பற்றிய புது விளக்கம்  சொல்லுகிறது.இழப்பீடு இல்லை என்கிறது.
இத்தனை குழப்படிகளையும் தாண்டியும்  பிரதமர் காங்கிரசின் பெருந்தலைகளைக்காப்பாற்ற வேண்டும் என முயற்சிப்பதாலும் ’2ஜி’ வழ்க்கு திகார் வாசிகளுக்கு பிணை வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் தாமதம் உப்பு-சப்பற்ற சி.பி.ஐ ,வாதம் என திசை மாறி அமுக்கப் பட்டு விடும் என்றேத் தெரிகிறது.
                                                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?