இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்
அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியல்களை அவ்வப்போது வெளியிட்டுவருகிறது. அதன்படி, தற்போது, இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 5ம் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடத்திலேயே இருக்கிறார்.
பிடித்துள்ளார்.
உலகின் பணக்கார அம்மாக்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும் ஆசிய அளவில் முதலிடத்தையும் சாவித்ரி ஜின்டால் பிடித்துள்ளார். ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலராகும் (ரூ. 55 ஆயிரம் கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.
பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தாய்மார்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதை ஒட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952-ல் உருவாக்கினார். 2005-ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார். ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.
பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம்பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர். இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரோலிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.
பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான விதவைத் தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.
வால்மார்ட் சங்கிலித் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250 கோடி டாலராகும்.
உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோ ரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட் ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸôரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
________________________________________________________________________________________________________
கிரண் பேடி ' அறக்கட்டளை நிர்வாகி விலகியுள்ளார்.
0 கிரண் பேடி நடத்தி வரும் "இந்தியா விஷன் ஃபவுண்டேஷன்' அறக்கட்டளையில் அதன் முக்கிய நிர்வாகி அனில் பால் விலகியுள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கிரண் பேடி கூடுதலாகப் பயணக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக அனில் பால் தெரிவித்துள்ளார்.
"இந்த விவகாரத்தால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அறக்கட்டளை நிர்வாகி பொறுப்பை உடனடியாக ராஜிநாமா செய்கிறேன். கிரண் பேடியின் பயணத் திட்டங்களுக்கு வேறு நிறுவனத்தை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டிய தொகையை எவ்வித பாக்கியும் இன்றி காசோலையாக அளித்து விட்டேன். அறக்கட்டளைக்கும், எனக்கும் இனிமேல் தொடர்பு இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.
கிரண் பேடிக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் 4 பேர் அவதூறு பிரசாரம் செய்வதாக அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி மீது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியூருக்கு விமானங்களில் பயணம் செய்யும் போது, எகானமி கிளாசில் பயணம் செய்துவிட்டு பிசினஸ் கிளாசுக்கான கட்டணத்தை அவர் விழா அமைப்பாளர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார். அதிலும், ஏர் விமானத்தில் பயணம் செய்யும்போது குறைந்த வகுப்பு கட்டணத்திலும்,
வீரதீர செயல்களுக்கான விருது பெற்றதால் கிடைக்கும் 75 சதவீத கட்டண சலுகையையும் பெற்றிருக்கிறார். அந்த பணத்தை தான் நடத்தும் சேவை அமைப்புக்கு கொடுத்ததாக முதலில் விளக்கம் அளித்த கிரண் பேடி, பின்னர் கூடுதலாக பெற்ற தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி தருவதாக அறிவித்தார். இந்நிலையில், அன்னா ஹசாரே தனது இணைய தளத்தில் எழுதியிருப்பதாவது:
ஜன் லோக்பால் மசோதாவுக்காக போராட்டம் நடத்திய என் ஆதரவாளர்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. விமானப் பயணத்துக்காக கூடுதலாக பெற்ற தொகையை கிரண்பேடி தனக்காக பயன்படுத்தவில்லை. அப்படி அவர் பயன்படுத்தி இருந்தால், அது பற்றி விசாரணை நடத்தி கிரண் பேடி மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.
ஆனால், என் குழுவினரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த 4 மத்திய அமைச்சர்கள் செயல்படுகின்றனர். அந்த கும்பல்தான் இப்போது, கிரண்பேடிக்கு எதிராக நடக்கும் அவதூறு பிரசாரத்துக்கு பின்னணியில் இருக்கின்றனர். ஜன்லோக்பால் அமைந்தால் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்று அந்த அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். மத்திய அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ஜன் லோக்பாலை ஆதரிக்கின்றனர்.
இதுபோன்ற சிலர் மட்டும் எதிர்க்கின்றனர். ஒன்றிரண்டு குண்டர்கள் இருந்து கொண்டு, கிராம மக்களை மிரட்டுவதுபோல், ஒரு சில முரட்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக மற்ற அமைச்சர்கள் வாய் திறக்கமுடியவில்லை. தீய செயலில் ஈடுபட்டுள்ள இந்த அமைச்சர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அன்னா ஹசாரே எழுதியுள்ளார்.
இது பற்றி, டுவிட்டர் இணைய தளத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், கிரண் பேடிக்கு ஆதரவாக அன்னா ஹசாரே குரல் கொடுத்துள்ளார். 4 பேர் கும்பல் என்று குறிப்பிட்டு சாடியுள்ளார். யார் அந்த அதிர்ஷ்டகாரர்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்Õ என்று கூறியுள்ளார்.
"பிளைவெல் டிராவல்ஸ்' உரிமையாளரான அனில் பால், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியின் பயணத் திட்டங்களை கவனித்து வந்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
"கூடுதல் கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பித் தரும்படி எனது பயணத்துக்கு ஏற்பாடு செய்த டிராவல் ஏஜெண்டுக்கு அறக்கட்டளை நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்' என்று கிரண்பேடி தெரிவித்திருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததைத் தொடர்ந்து அனில் பால் அறக்கட்டளையிலிருந்து விலகியுள்ளார்.
___________________________________________________________
பாகிஸ்தான்_தலிபான் உறவு,,,!